இடுகைகள்

கருந்துளையால் ஈர்க்கப்படும் மனிதன், பூமியின் அடுத்தபக்கம் - அறிவியல் பேச்சு - மிஸ்டர் ரோனி

படம்
              அறிவியல் பேச்சு மிஸ்டர் ரோனி காற்று இல்லாத சூழலில் மனிதரொருவர் பூமியின் குழி ஒன்றில் விழுகிறார். அவர் மறுமுனையை அடைய எவ்வளவு நேரமாகும்? 43 நிமிடங்கள். முதலில் சில பிட்ஸ்களைப் பார்ப்போம். பூமியின் விட்டம் தோராயமாக 12, 470 கிலோமீட்டர்கள். குழியில் விழுபவர் நொடிக்கு 7,900 மீட்டர் வேகத்தில் விழுவார். வேகமாக மறுபக்கம் வந்து விழுந்தால் நல்லது. இல்லையெனில் மீண்டும் கீழே விழுமாறு சூழல் ஏற்படக்கூடும். பூமியின் நடுப்பகுதியில் குழியைத் தோண்டி அதில் குதிப்பது சாதாரண காரியம் கிடையாது. முதல் பிரச்னை குழியின் நூறு மடங்கு பெரிதாக இருக்கவேண்டும். அடுத்து அதில் உள்ள அதீத வெப்பத்தை எதிர்கொள்ள பயணிக்கு உதவ வேண்டும். இல்லையெனில் குழியில் இறங்கி பயணிக்கும் பாதி வழியில் பொசுங்கிப் போய்விடுவார். இதுவெல்லாம் இல்லாமல் நிலநடுக்கம், எரிமலை ஆபத்துகளை கடந்து சென்றால் மட்டுமே மறுமுனைக்கு செல்ல முடியும். பூமியின் நடுப்பகுதி என்றில்லை. பூமியின் அடுத்த பக்கத்திற்கு எளிதாக செல்ல ஒருபுறமிருந்து குழி தோண்டுவது என்பது குறுக்குவழி போன்று அமையவேண்டும். அதிலும், ஈர்ப்புவிசை, உரா...

கருமியா, கயவனா - உண்மையில் சிவசிதம்பரம் செட்டியார் யார்?

படம்
      மலபார் ஹோட்டலில் மர்மப் பெண்மணி மேதாவி பிரேமா பதிப்பகம் மர்மநாவல். வேகமாக வாசித்துவிடக்கூடிய நூல். சென்னையில் சிவசிதம்பரம் என்ற செட்டியார் இருக்கிறார். வசதியானவர். பாழடைந்த பேய் பங்களா ஒன்றில் வாழ்கிறார். கஞ்சன் என்று பெயரெடுத்த அவரின் செயல்பாடு, சொத்து என அனைத்துமே மர்மமாக உள்ளது. திடீரென ஒருநாள் அவர், தனது பங்களாவின் பாதாள அறையில் முதுகில் சுடப்பட்டு இறந்து கிடக்கிறார். அறைச்சாவி அங்குள்ள மேசையில் உள்ளது. உண்மையில் இந்த கொலைக்கு காரணம் தேடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராஜ் துப்பறிகிறார். கூடவே, பத்திரிகையாளர் மணிவாசகம் உதவி செய்கிறார். கொலைகாரன் யார் என்பதுதான் இறுதிப்பகுதி. இன்ஸ். சிவராஜ், மணிவாசகம், நடிகை பரிமளா, சங்குண்ணி நாயர், சூரிய மூர்த்தி, சண்முக சுந்தரம், பங்காரு ஆகியோர்தான் முக்கியப் பாத்திரங்கள். இவர்களில்தான் கொலைகாரனும், கொலையைத் தேடுபவர்களும் உள்ளனர். கதையில் கொலை, கொலைக்கான மர்மம் என்பதைவிட சிதம்பரம் செட்டியார் எப்படிப்பட்ட ஆள் என்பதை எழுத்தாளர் வெகுநேரம் மறைத்து வைத்து ஆர்வத்தை தூண்டுகிறார். அவருக்கு ஒரு மோசமான கடந்தகாலம் இருக்கிறது. அதில் பரிமளாவின் பெ...

time 100 - கென்ய மக்களை உயர்த்தும் லட்சிய மனிதன், மரங்களின் தகவல்தொடர்பு ரகசியம்!

படம்
              கென்னடி ஒடிடே kennedy odede தனிப்பட்ட மனிதர்கள் தங்கள் சிந்தனையால் சமூகத்தில் மாற்றங்களை சாத்தியப்படுத்த முடியும். மக்கள் கூட்டம் அதை நோக்கி ஈர்க்கப்பட்டு பின்தொடரும். அப்படியான ஒரு கதையே கென்னடியுடையது. கென்யாவின் கிபேராவில் அகதியாக வாழ்க்கையைத் தொடங்கியவர், கென்னடி. முறையான பள்ளிக்கல்வியும் அமையவில்லை. கென்யாவில் உள்ள சேரிகளில் ஒன்றான கிபேராவில் வளர்ந்த கென்னடி, அங்குள்ள மக்களின் தேவைகளை புரிந்துகொண்டார். இதற்குப் பிறகு அவர் செய்த செயல்பாடுகள் அவருக்கு மரியாதையை, பெருமையைத் தேடித் தந்தன. அவரைச் சுற்றி உள்ளவர்களும் அவரை ஏற்றுக்கொண்டனர். வறுமை நிலையில் உள்ள சிறுமிகளுக்கு பள்ளி, குடும்ப வன்முறையை எதிர்க்க, தடுக்க தற்காப்புபயிற்சி, வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான காப்பகங்கள், மக்கள் நூலகம், வேலைவாய்ப்புத் திட்டங்கள், சுகாதாரமான குடிநீர் எந்திரம். மக்கள் கூட்டுறவு வங்கி என பலவற்றையும் அமைத்து இயங்கி வருகிறார். பொதுநல செயல்பாட்டில் இறங்கிய அவர் எதிர்கொள்ளாத சவால்களே இல்லை எனலாம். இருபதாண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய கென்னடியின் லட்சியக் ...

பூமிக்கு எத்தனை நிலவுகள் உள்ளன? - மிஸ்டர் ரோனி

படம்
            பூமிக்கு எத்தனை நிலவுகள் உள்ளன? இதற்கான பதிலை பலரும் அறிந்திருப்பார்கள். பதில் சொல்வதும் எளிதுதான். ஆனால் அதன் பின்னணிதான் இங்கு முக்கியம். சூரியக் குடும்பத்தில் உள்ள வியாழன் கோளுக்கு 67 நிலவுகள் உள்ளன. இதில் பெரிய நிலவின் பெயர், கனிமெட். 2600 கி.மீ. சுற்றளவு கொண்டது. இதுவே பிற கோள்களுக்கும் நிலவு இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ள தகவல். இதுபற்றிய டிவி வினாடி வினா நிகழ்ச்சியில் நிறைய வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. ஜீரோ தொடங்கி பதினெட்டாயிரம் நிலவுகள் வரை பதில் தரலாம் என கூறப்பட்டது. ஆனால் பொருத்தமான உண்மைக்கு அருகில் உள்ள பதில் ஒன்று. பூமிக்கு ஒரு நிலவு உள்ளது. பூமியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு ஏராளமான பாறைக்கோள்கள் வட்டப்பாதைக்கு வருகின்றன. பல்லாண்டுகளாக சுற்றி வருகின்றன. அவற்றை நாம் நிலவு என்று கூறுவதில்லை. இதற்கு காரணம் இரண்டே விஷயங்கள்தான். துல்லியமாக சொன்னால் அறிவியலாளர்கள் வகுத்த இரண்டு விதிகள். அவை ஆயிரம் ஆண்டுகளாக வட்டப்பாதையில் சுற்றிவர வேண்டும். அதன் அளவு ஐந்து கி.மீ. என்ற அளவு அல்லது அதற்கு மேல் இருக்கவேண்...

அறிவியலுக்கு அங்கீகாரம் அளிக்கும் பிரெட் காவ்லி பரிசு! - 2024ஆம் ஆண்டு எட்டு நபர்கள் தேர்வு

படம்
                  பிரெட் காவ்லி பரிசு - எட்டு நபர்கள் தேர்வு  fred kavli prize பிரெட் காவ்லி என்ற நார்வே - அமெரிக்க தொழிலதிபரின் நினைவாக பிரெட் காவ்லி பரிசு வழங்கப்பட்டு வருகிறது. நார்வேயில் 1927ஆம் ஆண்டு எரெஜ்போர்ட் என்ற இடத்தில் பிறந்தவர் பிரெட். 1956ஆம் ஆண்டு, பொறியியல் பட்டம் பெற்றபிறகு அமெரிக்காவின் கலிபோர்னியாவுக்கு இடம்பெயர்ந்தார்.  ஏவுகணைகளுக்கு சிப், சென்சார்களை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்தார். ஓராண்டில் அங்கு தலைமை பொறியாளராக உயர்ந்து சாதித்தார். 1958ஆம் ஆண்டு, காவ்லிகோ என்ற பெயரில தனி நிறுவனம் ஒன்றை உருவாக்கினார். இதன் வழியாக விமானம் தொடங்கி வீடுகளில் பயன்படுத்தும் மின்சாதனங்கள் வரையிலான பொருட்களுக்கு அழுத்த சென்சார்களை தயாரித்து விற்றார். பிரெட்டின் நிறுவனம் தயாரித்த சென்சார்கள், துல்லியமானவை, நிலையானவை, நம்பிக்கையானவை என்ற பெயரைப் பெற்றன. 2000ஆம் ஆண்டில் பிரெட், காவ்லிகோ நிறுவனத்தை 340 மில்லியன் டாலர்களுக்கு விற்றுவிட்டார். கிடைத்த பணத்தை வைத்து காவ்லி பவுண்டேஷன் என்ற அமைப்பை உருவாக்கி, உலகம் முழுக்க மக்களின் வாழ...

சீனாவின் சிந்தனைகளை எண்ணவோட்டங்களை அறிய உதவும் கட்டுரை நூல்!

படம்
           கிழக்கும் மேற்கும்: பன்னாட்டு அரசியல் கட்டுரைகள் கட்டுரை நூல் ஆசிரியர்: மு.இராமனாதன் ♦ ♦ முதல் பதிப்பு: டிசம்பர் 2022 ♦ வெளியீடு: காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629001 இந்த கட்டுரை நூல் மொத்தம் 34 கட்டுரைகளைக் கொண்டுள்ளது. இதன் வழியாக சீனா, ஹாங்காங், மியான்மர், அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற்ற பல்வேறு அரசியல் நிகழ்ச்சிகள், அதன் பின்னணி ஆகியவற்றைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக சீனாவில் தணிக்கை முறை அமலில் உள்ளதால், அதைப்பற்றிய கட்டுரைகள் அங்குள்ள சமூக சூழல், அரசியல் அமைப்பு, கட்டுப்பாடுகள், விதிகள், கலாசாரம் ஆகியவற்றைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. இந்த நூலில் அமெரிக்கா, மியான்மர், ஹாங்காங்கை விட சீனாவைப் பற்றிய கட்டுரைகள் கவனம் ஈர்த்தவையாக இருந்தன. இந்தியாவும் சீனாவும் ஒரே ஆண்டில்தான் சுதந்திரம் பெற்றன என்றாலும் சீனா இன்று வல்லரசு நாடுகளில் ஒன்றாக உயர்ந்துவிட்டது இதை அமெரிக்கா ஏற்கிறது ஏற்காமல் போகிறது என்பது விஷயமல்ல. பல்வேறு தடைகள் இருந்தாலும் உள்நாட்டிலேயே அனைத்து பொருட்களையும் தயாரித்து அதை வெளி...

நாவலை திரைப்படமாக எடுக்க ஆசைப்படுபவர்களுக்கான வழிகாட்டி நூல்!

படம்
            நாவலும் சினிமாவும் தொகுப்பு - திருநாவுக்கரசு நிழல் வெளியீடு நிழல் என்பது சினிமா தொடர்பான பத்திரிகை. இந்த பத்திரிகையில் பல்வேறு எழுத்தாளர்கள் சினிமா தொடர்பாக எழுதிய கட்டுரைகளை தொகுத்து நூலாக்கியிருக்கிறார்கள். நூலின் மையப்பொருள், நாவலை அடிப்படையாக வைத்து எப்படி திரைப்படங்களை உருவாக்குவது, அப்படி உருவாக்கியதில் சிறந்த திரைப்படங்கள் உள்ளனவா, அந்த பணியில் சொதப்பிய படங்கள் எவை, எந்த இடத்தில் பார்வையாளர்களை கவராமல் போயின என்ற விளக்கமாக கூறியுள்ள நூல். நூலின் இறுதியில், திரைப்பட இயக்குநர்கள் எந்தெந்த நாவல்களை திரைப்படமாக எடுக்கலாம் என குறிப்பிட்டு முருகேச பாண்டியன் அவர்கள் ஒரு பட்டியலைக் கொடுத்துள்ளார். அதை வாசிக்கும் ஆர்வமுள்ளவர்கள் நூல்களாக வாங்கி வாசித்து பயன்பெறலாம். மற்றபடி கதை, திரைக்கதை என அனைத்துமே தான் என்று போட்டுக்கொள்ள விரும்பாத பெருந்தன்மை கொண்ட இயக்குநர்கள் கதைகளை படித்து உரிமை வாங்கி திரைப்படமாக மாற்றிக்கொள்ளலாம். நாவல்களை படித்தால் கூட அதை திருடி தன்னுடைய படத்தில் வைத்து ஜெயிக்க முயல்பவர்களே அதிகம். அதையும் மீறி யோக்கிய இயக்குநர்கள் இரு...