இடுகைகள்

181 - குடும்ப வன்முறையைத் தடுக்கும் அரசின் உதவிக்கரம்!

படம்
          181 - குடும்ப வன்முறையைத் தடுக்கும் அரசின் உதவிக்கரம்! இதன் செயல்பாட்டைப் பார்ப்போம். ஒருவர் உதவி தேடி 181 என்ற எண்ணுக்கு அழைத்தால், அவர் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவரோ அங்கு அழைப்பு திசைதிருப்பப்படும். இப்படியான மாவட்ட மையத்தை ஒன் ஸ்டாப் சென்டர் - ஓஎஸ்சி என்று அழைக்கிறார்கள். என்ன மாதிரியான பிரச்னை என்று கேட்டு, ஆள் உதவி தேவையெனில் குறிப்பிட்ட இடத்திற்கு பணியாளர்கள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இப்படி மீட்கப்படும் பெண்கள் உதவி மையத்தில் அல்லது மாநிலத்தில் உள்ள 33 பெண்கள் காப்பகத்தில் ஏதாவது ஒன்றில் சேர்க்கப்படுவார்கள். 181 என்ற எண்ணில் பெண்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளும் வழங்கப்படுகிறது. கூடுதலாக ஆலோசனை, சட்டரீதியான உதவி, ஆதரவு, கல்வி உதவிகள், காவல்துறையினரின் தலையீடு தேவையிருந்தால் அதையும் பெறுகிறார்கள். வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தன்னார்வ அமைப்புகளின் உதவிகளைப் பெற்றுத் தருகிறார்கள். 2018ஆம் ஆண்டு தொடங்கி 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 181 உதவி மையம் ஒன்பது லட்சத்திற்கும் அதிகமாக அழைப்புகளைப் பெற்றுள்ளது. பெண்களுக்கான திட்டங்கள் பற்றி அற...

இயக்குநரின் ஃபெட்டிஷ் பேன்டசிகளைக் கொண்ட ஆள்மாறாட்டக்கதை!

படம்
        அல்லரி புல்லோடு நிதின், திரிஷா, ரதி இயக்கம் கே ராகவேந்திர ராவ் பெரிய தொழிலதிபர், அவரின் எதிரிகளால் விபத்துக்குள்ளாக்கப்படுகிறார். இதனால் அவரின் மூத்த மகள் வெளிநாட்டிலிருந்து நிறுவனத்தைக் கவனித்துக்கொள்ள வருகிறாள். அவள், நிறுவனத்திற்கு விசுவாசமான மேலாளர் நாராயண ராவ் என்பவரை தவறாகப் புரிந்துகொண்டு பணிவிலக்கம் செய்கிறாள். இதற்கு நிறுவனத்திலுள்ள சதிகாரர்களே காரணம். மேலாளரின் மகன், எதிரிகளின் சதிகளை முறியடித்து திரிஷாவின் நிறுவனத்தை எப்படி காப்பாற்றுகிறான் என்பதே கதை. இரண்டு நாயகிகள் என்பதால், ஒரு நாயகன் ஆந்திராக்காரர், பாலு. பொறியாளர். இன்னொருவர், தெலங்கானாக்காரர், ராஜூ. ரௌடி. படத்தில் திரிஷா, ரதி என இரண்டு பாத்திரங்களுமே லூசுத்தனமானவை. பாலு, ராஜூ ஆகிய பாத்திரங்களை சார்ந்து அண்டி வாழ்பவை. எனவே இவர்கள் சார்ந்த காட்சிகள் எல்லாவற்றிலும் நாயக துதியே அதிகம். இயக்குநர் ராகவேந்திர ராவ், நாயகியின் உடலில் எண்ணெய் ஊற்றுவது, பழங்களை வயிற்றில் உருட்டுவது, தொப்புளில் தண்ணீர் ஊற்றுவது என பலவித ஃபெட்டிஷ்களை செய்வார். இந்த சோதனைக்கு இப்படத்தில் ஆளாகுபவர், நடிகை ரதி. அவரின் வயிற்...

கல்யாண வீடியோ தரத்தில் பழிக்குப்பழி கதை!

படம்
        ஜெய்ஶ்ரீராம் உதய்கிரண், ரேஷ்மா நேர்மையான இன்ஸ்பெக்டர் ஒருவரை அரசியல்வாதிகள், ரவுடிகள், போலீஸ் கமிஷனர் என அனைவரும் கூட்டாக ரவுண்ட் கட்டி அடித்து ஒரு இடத்தில் சிறைப்படுத்துகிறார்கள். அங்கிருந்து தப்புபவர், எப்படி வில்லன்களை பழிவாங்குகிறார் என்பதே கதை. படம் பரிதாபமான தரத்தில் உள்ளது. ஏறத்தாழ கல்யாண வீடியோ என்றே கூறலாம். இதில் வரும் எடிட்டிங்கை விட தரமாக இன்று கல்யாண வீடியோவை எடிட் செய்கிறார்கள். உண்மையில் இது படமா, அல்லது டெலி ஃபிலிமா, சீரியலா என்று கூட பார்வையாளர்களுக்கு சந்தேகம் வரும். சன்டிவி சீரியலில் மையப் பாத்திரத்திற்கு அதிர்ச்சி ஆனால், அந்தக் காட்சி அப்படியே ஒருவரின் சட்டையைப் பிடித்து உலுக்கியது போல குலுங்கும் அல்லவா, அதே டெக்னிக்கை இப்படத்திலும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதுபோன்ற கண்றாவியைப் பார்த்து  என்ன சொல்வது என்று தெரியாமல், உதய் கிரணின் ரசிகர்கள், அவர் இறந்துபோனதற்கு யார் காரணம், அவர் எப்படிப்பட்ட மனிதர் என்றெல்லாம் பேசி கமெண்டில் அஞ்சலி செலுத்தியிருந்தனர். படத்தில் ஹரிஷ் கல்யாண் வில்லன்களில் ஒருவராக வருகிறார். அவர்தான் நாயகனின் அப்பா, தங...

பட்ஜெட் 2024 இல் தமிழ்நாட்டிற்கு பயன்தரும் விஷயங்கள்!

படம்
      பட்ஜெட் 2024 இல் தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு எந்த நிதி ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை. அறிக்கையில், அறிவிக்கப்பட்ட மற்ற திட்டங்களில் இருந்து ஏதேனும் பயன்கள் உண்டா என்று பார்ப்போம். வேளாண்மை இத்துறையில் உள்ள ஆவணங்கள், தகவல்கள் அனைத்தும் டிஜிட்டல் வடிவில் மாற்றப்படவிருக்கின்றன. இதன் மூலம் விவசாயிகள் தங்கள் நில ஆவணங்களை வைத்து எளிதாக விவசாய கடன்களைப் பெறலாம். 102 வீரிய பயிர் ரகங்கள், காலநிலை மாற்றத்தை தாங்கும் 32 தோட்டப்பயிர் ரகங்கள் அறிமுகமாகியுள்ளன. பருப்பு, எண்ணெய் வித்துகள் ஆகியவற்றை பயிரிடவும் ஒன்றிய அரசு முனைந்துள்ளது. இயற்கை விவசாய பிரசாரமும் இதில் கூடுதலாக இணைந்துள்ளது. இவற்றை தமிழ்நாடு பயன்படுத்திக்கொள்ளலாம். சிறுகுறு தொழில்கள் நாட்டிலேயே இரண்டாவது மாநிலமாக சிறு, குறு தொழில்கள் அதிகம் கொண்டதாக தமிழ்நாடு உள்ளது. வேலை சார்ந்த ஊக்கத்தொகையை ஒன்றிய அரசு வழங்கவிருப்பதால், புதிய பணியாளர்கள் சிறுகுறு தொழில்துறையில் அதிகம் சேரக்கூடும். புதிதாக படித்துவிட்டு தொழில்துறைக்கு வரும் அனுபவமில்லாதவர்களுக்கு பணி வாய்ப்பை வழங்குவது சிறுகுறுதொழில்துறை மட்டுமே. அண்மைக்கா...

நாவித காதலனுக்கு தங்கையைத் திருமணம் செய்துகொடுக்க மறுக்கும் ரவுடி அண்ணன்!

படம்
                    விய்யாலாவாரி கய்யாலு உதய் கிரண், நேகா ஜூல்கார ஶ்ரீஹரி நகரத்தில் படிக்கும் இளம்பெண்ணான நாயகி, நாயனை காதலிக்கிறாள். ஆனால் திருமணம் தனது ரவுடி அண்ணனின் சம்மதத்துடன் நடக்க வேண்டும் என விரும்புகிறாள். இதற்காக நாயகன், அவளது அண்ணனை சந்திக்க செல்கிறான். அவனால், திருமணத்திற்கான சம்மதத்தைப் பெற முடிந்ததா இல்லையா என்பதே கதை. பொதுவாக, தெலுங்குப்படங்களில் நிலப்பிரப்புத்துவ இயல்பை, ஆண்டான் அடிமை சமாச்சாரங்களை விசுவாசம், நேர்மையுடன் தொடர்புபடுத்தி பெருமையாக கூறுவார்களே ஒழிய, சாதி, வர்ணாசிரமம், சனாதன படிநிலையின் கொடூரங்களைக் காட்ட மாட்டார்கள். காதல் படத்தில் இருந்தாலும் அதை பெற்றோருக்கு கூறி அவர்களை ஒப்புவித்து திருமணம் செய்வதற்கு பாடுபட்டு இரண்டரை மணிநேர படத்தை ஓட்டுவார்கள். டூ ஸ்டேட்ஸ் நாவலில் சேட்டன் பகத், இந்திய சமூகத்தில் ஆண், பெண்ணைக் காதலிப்பதோடு முடிந்துவிடாது. அவனை பெண் வீட்டாருக்கு பிடிக்கவேண்டும். பெண்ணை, ஆண் வீட்டாருக்கு பிடிக்கவேண்டும். பிறகுதான் திருமணம் நடைபெறும் என பகடியாக எழுதியிருப்பார். அதேதான் இங்கும் நடக்கிறது. அ...

பாகுபாடு இல்லாத பார்வையில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் வழங்கப்படவேண்டும்!

படம்
                  பெண்களுக்கு பணியில் சமத்துவம் வேண்டும் சென்னையைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனம், திருமணமான பெண்களை பணியில் சேர்ப்பதற்கு எதிரான விதிகளை உருவாக்கி வருவதாக செய்தி வெளியானது. இதுபற்றி அரசு அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். பல லட்சம் பெண்கள் உள்ள வேலைவாய்ப்பு சந்தையில், இப்படியான செய்திகள் முக்கியமானவை. அரசியலமைப்பு ரீதியாக பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்புக்கு உறுதி உள்ளது. ஆனால் நடைமுறையில் சட்டங்கள் பெரிதாக பயன்தருவதாக இல்லை. நிறைய இடங்களில் பெண்கள் பாகுபாடாக நடத்தப்படுகிறார்கள். குறிப்பாக தொழில்துறை சார்ந்த பணிகளில்...வேலைவாய்ப்பு, பதவி உயர்வு ஆகியவற்றில் பாரபட்சம் காட்டப்படுகிறது. இதில், பெண்களின் குடும்ப வாழ்க்கையும் முக்கிய பங்கு வகிப்பதை கூறியாக வேண்டும் 2021-2022 காலகட்டத்தில் 32.8 சதவீத பெண்கள் வேலைவாய்ப்புச் சந்தையில் பணியைத் தேடி வருகிறார்கள் என ஆய்வுத்தகவல் கூறுகிறது. பதினைந்து வயதுக்கு மேலுள்ள பெண்கள்  இதில் உள்ளடங்குவார்கள். உலகளவில்  47 சதவீதமாக உள்ளது. காலம்தோறும் பெண்களின் வேலைவாய்ப்பு சதவீதம் அதிகரித்து...

காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது! - அரசியல் கட்சிகளின் வருமானம்

படம்
            காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது! இந்தியாவில் தேர்தல் நன்கொடைகளை கட்சிகள் பெறுவது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கென வலதுசாரி மதவாத ஆளும்கட்சி, தனியாக சட்டம் ஒன்றை உருவாக்கியது. தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக பயன்களைப் பெற்றது. அதே சட்டங்களை பிற கட்சிகளும் பயன்படுத்தின. மதவாத ஆளும்கட்சி, இன்னும் சற்று மேலே போய் நிதி அளிப்பவர்களை, தொழில் நிறுவனங்களை அமலாக்கத்துறை, வருமானத்துறை, தேசிய புலனாய்வு முகமை வைத்து மிரட்டி பேரளவிலான நிதியைப் பெற்றது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதில் ஒரு பார்முலா உருவானது போல, ரெய்டு நடந்த சில வார, மாதங்களில் கட்சிக்கு நிதி வரவு அதிகரித்தது. இதைப்பற்றிய உண்மையான செய்திகளை அறிய நியூஸ்மினிட், நியூஸ் லாண்ட்ரி, தி வயர், கேரவன் ஆகிய ஊடகங்களை அணுகலாம். தேர்தல் பத்திரம் மூலம் பேரளவிலான நிதியை ஆளும் கட்சி திரட்டியபிறகு, அதுவரை மீளாத உறக்கத்திலிருந்த நீதிமன்றம் எழுந்தது. தேர்தல் பத்திரம் அச்சிடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அதற்கு பிறகு நடந்ததெல்லாம் சன்டிவி சீரியல் திருப்பங்களை விட நகைச்சுவையானது. இரண்டு தேர்தல்கள...