இடுகைகள்

ஹோமியோபதிக்கும் அலோபதிக்கும் உள்ள வேறுபாடு என்ன?

படம்
          அறிவுப்பற்று மிஸ்டர் ரோனி ஹோமியோபதிக்கும் அலோபதிக்கும் உள்ள வேறுபாடு என்ன? அலோபதி, வேதியியலை அடிப்படையாக கொண்டது. இதில், நோயின் அறிகுறிகளை அழுத்த பல்வேறு வேதி சேர்மானங்கள் உதவுகின்றன. ஹோமியோபதி, இயற்பியலை அடிப்படையாக கொண்டது. ஆற்றல் கொண்ட மருந்துகளை பயன்படுத்துகிறார்கள். இந்த மருந்துகள் சித்த மருத்துவம் போலவே தாவரம், விலங்கு, கனிமங்களிலிருந்து பெறப்படுகிறது. அலோபதி நோய் அறிகுறிகளை உடலுக்குள் அழுத்துகிறது என்றால், ஹோமியோபதி அதை முற்றாக அழிக்க தீர்க்க முயல்கிறது. ஹோமியோபதியில் உள்ள மருந்துகளின் பக்கவிளைவுகள் என்னென்ன? ஆயுர்வேத மருந்துகளில் நேரடி விளைவு நோய் குணமாவது என்றால், அதை உண்ணும்போது வேறு பாதக விளைவுகளும் ஏற்படும் என மறைந்துவிட்ட மருத்துவர் எல் மகாதேவன் கூறியுள்ளார். அலோபதியில் கொடுக்கப்படும் மருந்துகள் கல்லீரலுக்கு செல்கின்றன. அங்கிருந்து பாதிக்கப்பட்ட உடல் பகுதிக்கு சென்று அறிகுறிகளை தீர்க்கிறது. ஹோமியோபதி நரம்பு மண்டலத்திற்கு சென்று சேர்கிறது. இப்படி நோய்க்கு குணம் வருகிறது. ஹோமியோபதியில், எந்த நோய்க்கு மருந்து சாப்பிடுகிறீர்களோ அந்த நோய் பலமடங...

ஒரு எல்லை இரண்டு வேறுபட்ட அரசு அமைப்புகள்!

படம்
      ஒரு எல்லை இரண்டு வேறுபட்ட அரசு அமைப்புகள் சீனா, சோசலிச கருத்தை அடிப்படையாக கொண்ட சர்வாதிகார நாடு. அதை யாரும் மறுக்க முடியாது. இந்தியா, இப்போதைக்கு தேர்தல் நடத்தப்பட்டு ஜனநாயகம் என்பது பெயரளவுக்கேனும் உள்ளது. சீனாவுடன் இந்தியாவுக்கு எல்லைப் பிரச்னைகள் சுதந்திரமடைந்த காலம் தொட்டே உண்டு. இப்போது சீனா, திபெத்தை முழுக்க கையகப்படுத்தி, அங்கு அவர்களின் அரசியல் கருத்துக்கு ஏற்ற தலாய் லாமா ஒருவரை நியமித்து ஆட்சி செய்து வருகிறது. திபெத்திற்கு பார்வையாளர்கள் வரவோ, அங்குள்ளவர்கள் இந்தியாவில் உள்ள ஆன்மிக தலைவரான அசல் தலாய் லாமாவைப் பார்க்கவோ செல்ல முடியாது. அதற்கு சீன அரசு அனுமதி அளிப்பதில்லை. சீனாவில் சோசலிச அரசுக்கு, கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக மக்கள் எந்த விமர்சனத்தையும் வைக்க முடியாது. டெக் நிறுவனங்கள் மூலம் சமூக வலைத்தளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அரசை விமர்சிக்கும் பதிவுகள் உடனே காவல்துறையால் நீக்கப்பட்டு வருகின்றன. நடப்பு காலமான 2024ஆம் ஆண்டு, திபெத்தில் மக்கள் சீன குடியரசு உருவாகி எழுபத்தைந்து ஆண்டு ஆனதையொட்டி கொண்டாட்ட நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளன. உண்மையி...

கட்டற்ற மென்பொருட்களை எஃப்ட்ராய்ட் மென்பொருள் வழியாக பெறுங்கள்!

படம்
        எஃப் ட்ராய்ட் ஆப் பற்றி, மெட்டா மங்கீஸ் யூட்யூப் சேனலில் திரு. விஜய் வரதராஜ் பேசியிருந்தார். அந்த வகையில் பிளே ஸ்டோர் போன்ற அந்த மென்பொருளை முதலில் தரவிறக்கி இசை, வானொலி போன்ற ஆப்களை சோதித்துப் பார்த்ததில் சிறப்பாகவே இயங்கியது. முக்கியமாக எளிமையாக இருந்தது. அந்த வகையில், அசலான கட்டற்ற மென்பொருள் வணிக அடிப்படையில் வெளியிடும்போது சில தீர்க்க முடியாத பாதுகாப்பு குறைபாடுகளைக் கொண்டுள்ளது. ஆனால், எஃப்ட்ராய்டில் சில நிறுவனங்கள் அந்த மென்பொருள்களின் பாதுகாப்பு சிக்கல்களை தீர்க்கிறார்கள். தனிநபர் கணினி நிபுணர்களும் உண்டு. மென்பொருட்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், அதை உருவாக்கியவர்களுக்கு நிதியுதவியை வழங்கலாம். இல்லையென்றாலும் சரிதான். பயன்பாட்டு வகையில் சிறப்பாக உள்ளது.வாசகர்களும் எஃப்ட்ராய்டைப் பயன்படுத்தலாம்.  ஓப்போ போனில் கூகுள் ஆப்ஸ்கள் இன்றி, அதில் ப்ரீ இன்ஸ்டாலாக உள்ள கட்டற்ற மென்பொருட்களை வைத்தே இயக்க முடியும். ஆனால் அந்த மென்பொருட்கள் பயன்படுத்த அந்தளவு வசதியானவை அல்ல.  வானொலிக்கு ட்ரான்சிஸ்டர், கேமராவுக்கு ஓப்பன் கேமரா, ஆர்ஐ மியூசிக், டெலிகிராம் எ...

போலி அறிவியலை, மத அடிப்படைவாதத்தைத் திணிக்கும் கல்விக்கொள்கை!

படம்
      போலி அறிவியலை, மத அடிப்படைவாதத்தைத் திணிக்கும் கல்விக்கொள்கை! மக்களுக்கு வழங்கப்படும் கல்வியே, நாட்டின் மேம்பாடு, வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைகிறது. இதை ஐ நா அமைப்பும் அங்கீகரித்து ஏற்றுள்ளது. நவீன காலத்தில் தொடக்க கல்வி, தேசிய மேம்பாட்டுக்கு பங்களிக்கும் வகையில் மாறியுள்ளது. இதற்கு எதிராக 2020ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய கல்விக்கொள்கை அமைந்துள்ளது. இந்திய கலாசார தன்மைக்கேற்றபடி கல்வி என்ற போர்வையில், தேர்தல் வெற்றியை கருத்தில் கொண்டு கல்விமுறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இக்கல்விக்கொள்கை, உண்மையான வரலாற்றை மாற்றி மாணவர்களை தவறான திசைக்கு வழிகாட்டுகிறது. இளங்கலை, முதுகலை பாடத்திட்டங்களில் இந்திய அறிவுத்திட்டம் என்பதை ஒன்றிய அரசு செயல்படுத்துகிறது. ஜோதிடம், ஜவுளித்துறை, நகரங்கள் திட்டமிடுதல், வேத கணிதம் என வெளிப்படையாக பொதுவாக பார்த்தால் மாணவர்களுக்கு நன்மை தருவதுபோல தோன்றும். ஆனால், பகுத்தாய்ந்து பார்த்தால் வலதுசாரி கருத்துகளை உள்ளே திணித்து குறிப்பிட்ட சில இனக்குழுவினருக்கு சாதகமான கல்வி மாறியிருப்பதை அடையாளம் காணலாம். இதை பிரசாரம் செய்ய இலக்கியங்கள், நூல்கள், போஸ...

உணர்வு ரீதியாக பிறருக்கு அடிமையாக இருப்பது சுதந்திரத்தை தொலைத்துவிடும்!

      பிறரின் மகிழ்ச்சிக்குப் பொறுப்பேற்றுக்கொள்ளாதீர்கள்! லின்சிஸ்தான் என்ற நாட்டில் சமூக வலைதளத்திற்கு புதிய விதி நடைமுறைக்கு வந்தது. நீங்கள் பதிவிடும் கருத்தால் யாராவது ஒருவருக்கு மனம் புண்பட்டால் அபராதம், சிறைதண்டனை உண்டு என அரசு கூறியது. உண்மையில் நமது கருத்து அனைவருக்கும் மகிழ்ச்சியை தர முடியுமா, அதற்கு வாய்ப்புள்ளதா? நிச்சயம் இல்லை. முன்னமே கூறியபடி தண்டனையை கூறி, ஒருவரை மிரட்டி வழிக்கு கொண்டு வருவதில் இதுபோன்ற அறிவிப்புகள் வரும். நீங்கள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். அதிலேயே, நீங்கள் எடுக்கும் முடிவுகள், கூறும் கருத்துகளுக்கு பலரும் ஆமோதிப்பை வெளிப்படுத்த மாட்டார்கள். எதிர்ப்பார்கள். அப்படி சொல்லக்கூடாது. பேசக்கூடாது என்பார்கள். இந்த லட்சணத்தில் காழ்ப்பும் வெறுப்பும் கொண்ட சமூக வலைத்தளத்தில் பதிவிடும் கருத்துகளுக்கு பூமாலை மட்டுமே கிடைக்குமா என்ன? மாட்டுச்சாணியைக்கூட அள்ளி வீசுவார்கள். அப்படியானால் என்ன செய்வது? விதிக்குட்பட்டு அரசின் விளம்பரம், பிரசார திரைப்படங்கள், அரசு ஆதரவு ஆட்கள் மட்டுமே சமூக வலைத்தளத்தில் இயங்க முடியும் என்பதே விதிகள் மூலம் அரசு மறைமுகமாக கூ...

உண்மைகளை வெளிப்படையாக பேசும் பிரபாகரனின் நேர்காணல் நூல்! - தமிழீழம் என் தாகம்

படம்
      தமிழீழம் என் தாகம் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் பேட்டி தமிழீழ விடுதலைப்புலிகள் வெளியீடு இந்தியாவில் வெளியாகும் சண்டே என்ற பத்திரிகைக்காக பத்திரிகையாளர் அனிதா பிரதாப் எடுத்த நேர்காணல் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் இருபது பக்கங்களைக் கொண்ட நூல். பிரபாகரன் அவர்களே கேள்விகளுக்கு பதில் கூறியதால் நூல் முக்கியத்துவம் பெறுகிறது. மற்றபடி பத்திரிகையாளர் அனிதா பிரதாப் கேட்ட கேள்விகள் அனைத்துமே அரசு, ராணுவத்திற்கு விடுதலைப்புலிகள் அமைப்பு பற்றிய தகவல்களைக் கொடுப்பது போலவே உள்ளது. கேள்விகள் தெளிவாகவும் இல்லை. நேர்மையாகவும் இல்லை. கெரில்லா போர் முறையைப் பற்றி கேள்வி கேட்டுவிட்டு இயக்கத்தின் கொள்கை என்னவென்று ஒரு கேள்வி. விடுதலை அல்லது புரட்சி இயக்கங்கள் பெரும்பாலும் இடதுசாரி கொள்கையை மையமாக கொண்டவை. இதைக்கூடவா பத்திரிகையாளர் அறியாமல் இருப்பார்? இல்லை அதை வேண்டுமென்றே கேட்கிறாரா என்று தெரியவில்லை. இன்னொரு இடத்தில் இயக்கத்திற்கு நிதி, ஆயுதம் கொடுத்து உதவும் அமைப்புகளைக் கூறச்சொல்கிறார். அதற்கு பிரபாகரன் பதில் கூற விரும்பவில்லை என்று கூறி கடக்கிறார். விடுதலை இயக்...

பாய்சன் ஐவி தாவரம் ஏற்படுத்தும் ஒவ்வாமை பாதிப்புகள்!

படம்
        அறிவுப்பற்று மிஸ்டர் ரோனி சல்பைட்டுகளால் ஏற்படும் ஒவ்வாமை பாதிப்பு என்ன? உலர் பழங்கள், புதிதாக பறிக்கப்பட்ட காய்கறிகள், ஒயின் வகைகள் ஆகியவற்றில் சல்பைட்டுகள் சேர்க்கப்படுகின்றன. சல்பைட்டுகள், பொருட்கள் கெட்டுப்போகாமல் காக்கின்றன. நுண்ணுயிரிகளை அழிக்கின்றன. ஒவ்வாமை உள்ளவர்களுக்கு சல்பைட்டுகள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சல்பைட்டுகள், உடலுக்குள் செல்லும்போது மூச்சு திணறல் ஏற்படும். சுயநினைவை இழந்து கீழே வீழ்வார்கள். அனபைலாடிக் ஷாக் பாதிப்பு ஏற்படும். உடனே மருத்துவ உதவிகளை செய்யவேண்டும். மாரடைப்பை மருத்துவத்தில் எப்படி குறிப்பிடுகிறார்கள்? மையோகார்டியல் இன்ஃபார்க்சன். இதய தசைகளுக்கு ரத்தம் செல்லாமல் தடுக்கப்படும்போது, அந்த செல்கள் இறந்துபோகின்றன. இதனால் உண்டாவதே மாரடைப்பு. அமெரிக்காவில், ஒருமுறை மாரடைப்பு வந்துவிட்டால் நோயாளிகளில் 33 சதவீதம் பேர் அடுத்த இருபது நாட்களில் மரணித்து விடுகிறார்கள். உடனே இறந்துபோகிறவர்களின் எண்ணிக்கையும் இப்போது அதிகரித்து வருகிறது. உடலை குறிப்பிட்ட இடைவேளையில் சோதித்துக்கொள்வது நல்லது. மாரடைப்பு அபாயத்தை முன்னரே கண்டறிந்தால் சிகிச்சை ...