இடுகைகள்

எதிர்காலத்தை சொல்லும் சிறுவனால் தீரும் கொலை மர்மம்!

  மறுவாசிப்பு 2(2025) சித்திரமும் கொல்லுதடி டிடெக்டிவ் ராபின் - மார்ட்டின் முத்து காமிக்ஸ் க்ரைம் திரில்லர் காமிக்ஸ் விலை ரூ.10 கருப்பு வெள்ளை காமிக்ஸ். அமெரிக்காவின் நியூயார்க்கில் மழைபெய்யும் நாளன்று ஒரு பெண் கதவைத் திறக்கிறாள். யாரோ ஒருவர் உள்ளே நுழைகிறார். அத்தோடு அந்த காட்சி முடிந்துவிடுகிறது. மர்மக் கதைக்கு பொருத்தமான காட்சி. அடுத்த நாள், பின்னி என்ற கட்டை குட்டை தோற்றத்தோடு தொழிலதிபர், கிம் என்பவளைப் பார்க்க பூங்கொத்தோடு வருகிறார். லாஸ்கி என்ற கார் மெக்கானிக், கிம் காசுக்காக என்னவேண்டுமானாலும் செய்வாள், உங்களிடம் உள்ள காசுதான் அவளை மயக்குகிறது என வன்மத்தோடு பேசுகிறான். பின்னியைப் பொறுத்தவரை அவர் நியூயார்க்கிற்கு தொழில் விஷயமாக வந்தாலும் கிம் என்ற பெண்ணோடு கொண்டுள்ள காதல், பாலுறவு ஒரு போதையாக மாறியிருக்கிறது. அவளை மணந்துகொள்ளலாமா என்று கூட யோசித்துக்கொண்டே நடைபோடுகிறார்.  அவர் கிம்மின் வீட்டுக்கு படியேறுகிறார். லாஸ்கி பொறாமையில் பேசுவதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. திறந்திருந்த கதவை தள்ளியபடி உள்ளே நுழைகிறார். படுக்கை அறைக்கு சென்று பார்த்தால் கிம் தலையில் அடிபட்டு இறந்து க...

ஒன்றாகச் சேர்ந்து காதலிக்க என்ன தேவை?

 ஒன்றாக சேர்ந்து... உறவுகளைப் பொறுத்தவரை எதுவுமே உறுதி கிடையாது. உறவே எளிதாக உடையக்கூடியது என ஜே கிருஷ்ணமூர்த்தி கூறியிருக்கிறார். இருவர் ஒன்றாக வாழ்கிறார்கள் என்றால் அவர்கள் சில தவிர்க்க முடியாத தேவைகளுக்காக அப்படி இருக்கலாம். மனப்பூர்வமாக ஒன்றாக இணைந்து இருக்கிறார்களா என்றால் சந்தேகமே. உடல் அளவில் ஒன்றாக இருந்தாலும் மனம் என்ற அளவில் பல கி.மீ. தொலைவில் உள்ள மனிதர்கள் ஏராளமானோர் உண்டு. ஒரே வீட்டில் வசித்தாலும் வேறு வேறு உலகில் இருப்பார்கள்.  டேட்டிங் விஷயத்தைப் பொறுத்தவரை ஆணும், பெண்ணும் மனம் என்ற அளவில் நெருங்கி வருவதையே முக்கியமாக கருதலாம். அப்படியான நெருக்கம், விருப்பங்களின் ஒற்றுமை அளவில் நட்பு உருவாகி பின்பு காதலாக மாறி திருமணமாக அடுத்த நிலைக்கு செல்லலாம். உங்களுடைய உறவில் நட்புத்தன்மை இருக்குமாறு பார்த்துக்கொண்டால் பின்னாளிலே அதில் சிக்கல் வந்தாலும் தீர்த்துக்கொள்ள முடியும். உடல், மனம் சார்ந்த ஊக்கம் பரவசம் என்பது மாறக்கூடியது. எப்படி பருவகாலங்கள் மாறும்போது அதையொட்டி நமது உணவு மாறுகிறதோ அதைப்போலவேதான். காதலில் ஏற்படும் காயங்கள் ஆறுவது கடினம். ஆனால், நட்பில் அப்படி பெரிய...

வளம் தரும் மரங்கள் பாகம் - 1 - விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவும் மரங்களைப் பற்றிய கையேடு

 நூல் விமர்சனம் வளம் தரும் மரங்கள்  பாகம் 1 தோட்டக்கலை இயக்குநர் மணி , கமலா நடராஜன் என்சிபிஹெச் வெளியீடு விவசாயம் செய்யும் நண்பர் வளம் தரும் மரங்கள் ஐந்து பாகங்களை வாங்கி வைத்திருந்தார். என்சிஹெச் புக் இப்படியெல்லாம் நூல்களை வெளியிடுகிறதா என ஆச்சரியப்பட்டு அவர் வாசித்த முதல் பாகம் மட்டும் இரவல் வாங்கி வந்து படித்தேன். நூல் சிறப்பான கருப்பொருளைக் கொண்டுள்ளது. நூலில் முப்பது வகையான பல்வேறு தாவரங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.  நூலை தோட்டக்கலை இயக்குநராக பணிபுரிந்த மணி என்பவரும், அவருடைய மகளும் சேர்ந்து எழுதியிருக்கிறார்கள். நூலிலுள்ள தகவல்கள் ஆச்சரியப்படுத்தும் விதமாக உள்ளன. ஏராளமான அறிந்திராத தகவல்கள் உள்ளன என்பது உண்மை. அதை வாசிக்கும் யாருமே ஒப்புக் கொள்வார்கள். ஆனால் காலத்திற்கு ஏற்ப நூலில் மரங்கள் பற்றிய வண்ணப்புகைப்படம் ஏதும் இணைக்கப்படவில்லை. நூலின் விலை ரூ.230 என நினைவு. இந்த விலையில் கூட சிறிது தொகை கூடுதலாக சேர்ந்தாலும் நூலில் வண்ண புகைப்படங்களை இணைத்திருந்தால் மரங்களை எளிதாக அடையாளம் கண்டுகொள்ள முடியுமே? கருப்பு வெள்ளையில் இலையை, மரக்கன்றுகளை வரைவது எதற்கு? அதில் எந்த...

ஊசி மூலம் புதிய உறவு அமைப்போம்!

 நல்ல சேதி ஊசி மூலம் உறவுகளை இணைப்போம்! நம் அன்புக்கு உரியவர்கள், தையல்காரர்களாக, தச்சு வேலை செய்பவர்களாக, மண்பாண்டங்களில் ஏதேனும் பொருட்களை சுயமாக உருவாக்குபவர்களாக இருக்கலாம். இப்படியானவர்கள் பலரும் நோய் காரணமாக, வயது மூப்பு காரணமாக தாங்கள் பொழுதுபோக்காக அல்லது தொழிலாக செய்து வந்த வேலைகளை செய்யமுடியாமல் போவதுண்டு. தீவிரமாக இயங்குபவர்கள் திடீரென தங்கள் செயல்பாட்டை முடக்கிக்கொண்டு சக்கர நாற்காலியில் வலம் வந்தால்... அல்லது மரணமடைந்து விட்டால் அவர்களுடைய குடு்ம்பத்தினருக்கு எப்படியிருக்கும்? அதுபோன்ற அதிர்ச்சியைக் குறைக்க லூஸ் எண்ட்ஸ் என்ற தன்னார்வ நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த தொண்டூழிய நிறுவனம், துணிகளை தைப்பவர்கள் யாராவது முடிக்காமல் விட்ட துணிகள் பற்றி தகவல் கொடுத்தால், அவற்றை வாங்கி தைப்பவர்களிடம் கொடுத்து அதை நிறைவு செய்து வழங்குகிறது. இதில், நிறைவு செய்யாத துணிகள், அதை நிறைவு செய்து கொடுப்பவர்கள் என யாரும் யாருக்கும் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. முற்றிலும் இலவசம். இதில் இணைபவர்கள் அனைவரும் மறைந்த தம் அன்புக்குரியவர்களின் நினைவாக, துணிகளைத் தைக்கிறார்கள். தைக்கும் கோரிக்கையை...

டாடா - தேசத்தை வளர்ந்த நிறுவனத்தின் கதை - ஆர்எம் லாலா தமிழில் பிஆர் மகாதேவன்

 மறுவாசிப்பு நூல்கள் டாடா - நிலையான செல்வம்  ஆங்கிலத்தில் ஆர்எம் லாலா தமிழில் பிஆர் மகாதேவன் கிழக்கு பதிப்பகம் மூல நூல் -கிரியேஷன்ஸ் ஆப் வெல்த் வணிக நூல் டாடா குழுமம், நூறாண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் இயங்கி வருகிறது. அதாவது அதன் குழுமத்தில் உள்ள பல நிறுவனங்கள் நூற்றாண்டுகளாக இந்தியாவில் தொழிலை நடத்தி வருகின்றன. பார்சி இனத்தவர்களே டாடா குழுமத்தின் இயக்குநர்கள், தலைவர்கள்.  365 பக்கங்களைக் கொண்ட இந்த நூலை ஒருவர் வாசிக்கும்போது முதல்முறையிலேயே டாடா குழுமத்தினர் எந்தளவு உயரிய கொள்கை கொண்டு உழைக்கிறார்கள், வணிகம் செய்கிறார்கள் என்ற எண்ணத்திற்கு ஆட்படுவார்கள். நூலை எழுதிய நூலாசிரியர் லாலாவின் நோக்கமும் கூட அதுதான். ஆனால், அவர் டாடா நிறுவனத்தில் வேலையைப் பெற்றுள்ளதும், இந்த நூலுக்கு ரத்தன் டாடா உரை எழுதிக் கொடுத்ததும் நூலை சற்று பின்னுக்கிழுப்பது போல தோன்றுகிறது. இதை நூலை வாசிப்பவர்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.   ஒரு பத்திரிகையாளராக லாலா நூலை எழுதி இருந்தால் அந்த நூலில் டாடா குழுமத்தில் உள்ள பிரச்னைகள், செயல்பாட்டில் உள்ள தவறுகள், அவர்கள் மீது மக்கள் கூறிய புகார்கள், ...

சோனம் வாங்சுக் எனும் கல்வியாளர் லடாக்கை எப்படி மாற்றினார்? - லடாக்கில் உதிக்கும் சூரியன்

படம்
லடாக்கில் உதிக்கும் சூரியன் தன் அறிவைக் கொண்டு சமூகத்திற்கே புதிய பாதை அமைக்கும் மனிதநேய மனிதர்களுக்கு மகுடம் சூட்டி உச்சிமுகர்ந்து பாராட்டும் ரோலக்ஸ் அவார்ட்ஸ் நிகழ்ச்சி(லாஸ் ஏஞ்சல்ஸ் 2015) அது. கண்கவர் மேடையில் இந்தியாவிற்கான தனித்துவ கனவை தன் மூளையில் சுமந்துகொண்டு அமர்ந்திருந்தார் சிறிய மனிதரொருவர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள லடாக்கின் ப்பே என்ற கிராமத்தைச் சேர்ந்த அம்மனிதர், பாரம்பரிய உடையில் மக்கள் பங்களிப்புடன் தான் கட்டிவரும் சுற்றுச்சூழலுக்குகந்த பல்கலைக்கழகம் பற்றிக் கூறியது அங்கிருந்த பலரது புருவத்தையும் உயர வைத்தது. கண்டுபிடிப்பாளர் சோனம் வான்சுக் என்றால் யாருக்கும் தெரியாது. ஆனால் 3 இடியட்ஸ் ஹிந்தி திரைப்படத்தின் அமீர்கான் கேரக்டரான புன்சுக் வாங்குடுவின் அசல் இவர்தான் என்றால் உங்களுக்கும் புரிந்திருக்குமே! 1988 ஆம் ஆண்டு லடாக்கில் அப்பகுதி மாணவர்களுக்காக செக்மோல்(Student's Educational and Cultural Movement of Ladakh(SECMOL)) என்ற பள்ளியை தொடங்கி நடத்திவரும் சோனம் வாங்சுக், மெக்கானிக்கல் எஞ்சினியரிங் பட்டதாரி. பட்டம் பெற்றவுடன் அமெரிக்கா செல்ல விசாவுக்காக க்யூவில் ந...

உயிர் உண்ணும் கண் - எக்ஸ்டென்டன்ட் எடிஷன் டேட்டிங் விதிமுறைகள்

படம்
  உயிர் உண்ணும் கண் - எக்ஸ்டென்டன்ட் எடிஷன் டேட்டிங் விதிமுறைகள் ஆண் பெண் என இருவரும் திருமணம் செய்வது குடும்பம் என்ற அதிகாரப்பூர்வ அமைப்பிற்குள் வருவதற்கு உதவி புரிகிறது. அதேசமயம், காதலித்து பழகி பிறகு திருமணம் செய்வது இன்று முக்கியத்துவம் பெறுகிறது. டேட்டிங் என்பது மேற்கு நாடுகளில் மட்டுமல்ல ஆசிய நாடுகளிலும் பிரபலமாக உள்ளது. பலரும் அதை நேரடியாக இல்லையென்றாலும் மறைமுகமாக செயல்படுத்த முயல்கிறார்கள். நேரடியான சந்திப்பு என்பது காதலில் நுழைபவர்களுக்கான வாசல். அதற்கு முன்னதாக டின்டர், பம்பிள் என ஆப்கள் மூலம் பேசி அறிமுகமாகி பிறகு டேட் செய்து காதலித்து மணந்தவர்களே புதிய தலைமுறையினர்.  இணையத்தின் வசதியால் சிலர் தங்களது ஆளுமையை, முழுமையான குண இயல்பை மறைத்துக்கொள்ள முடியலாம். ஆனால், நேரடியான சந்திப்பில் அது சாத்தியமில்லை. டேட் செய்வது திருமண வாழ்க்கைக்கான ஒரு பயிற்சி என்றே வைத்துக்கொள்ளலாம்.  எப்படி டேட் செய்வது, அதற்கென ஏதாவது வயது தகுதி உண்டா என்று எல்லாம் கேள்வி வருகிறது.  இன்று கணவரை இழந்தவர்கள், மனைவியை இழந்தவர்களும் கூட டேட் செய்கிறார்கள். டேட் செய்வது பற்றி இது சரி இத...