ஜெர்மனியில் கொரோனா இறப்பு குறைவு? காரணம் என்ன?

ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு குறைவாக இருக்க காரணம் என்ன?

அமெரிக்க அதிபர் முதலில் மக்களை விட பெயர் கெட்டுபோய் விடுமே? தன்னைக் காப்பாற்றும் முதலாளிகளை முதலில் காப்பாற்றுவோம் என இறங்கினார். சீனா வை கண்டபடி வசைபாடினார். இன்று சீனாவிடம் மருந்துப் பொருட்களை வெட்கம், மானம் பார்க்காமல் வாங்கி விநியோகித்துக்கொண்டிருக்கிறார். ஐரோப்பிய நாடுகள் அனைத்துமே கொரோனா பாதிப்பில் திணறிப்போய் உள்ளன. குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், நெதர்லாந்து ஆகியவை வைரஸின் வேகத்தை கணிக்கத் தவறி நிறைய மக்களை தினமும் பலி கொடுத்தவாறு உள்ளன. 

இந்தியாவில் வைரசிற்கு என்ன மதம் என்று பார்த்து ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள்.சமூக வலைத்தளங்களுக்கான தீனியா பிரதமர் மோடி வாராவாரம் தந்துகொண்டே இருக்கிறார். தம் உயிரையும் பொருட்படுத்தாமல் நோயாளிகளை காக்க போராடும் மருத்துவர்கள் மீது கல்லெறியப்பட்டாலும் மோடி அவர்கள் பற்றி எதுவுமே பேச தயாராக இல்லை. இந்தியாவில் தற்போது ஊரடங்கு காலம் என்றாலும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இடம்பெயர்ந்து வந்த தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு, சோதனை போன்றவற்றை உறுதியாக செய்தால் மட்டுமே மேலும் கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வதை தடுக்க முடியும். 

ஜெர்மனியில் ஜனவரியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறியதும், தடுப்பு நடவடிக்கையில் இறங்கி விட்டனர். அதிபர் ஏஞ்சலா மேர்கலின் மருத்துவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் பிரதமரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இப்போது வரை அவருக்கு நோய் பாதிப்பு இல்லை. ஜெர்மனியில் வயதானவர்களை பார்ப்பதற்கான அனுமதி தற்போது  நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இங்கு நோய் தொற்றும் அளவு 3 சதவீதமாக உள்ளது. இது எண்பது வயதிற்கும் மேற்பட்டவர்களின் அளவு ஆகும். அங்குள்ளவர்களின் மக்கள்தொகையில் ஏழு சதவீதம் ஆகும். மத்திய வயதில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 எனில் இத்தாலியில் இதன் எண்ணிக்கை 63 ஆக உள்ளது. 


ஜெர்மனியின் பொது சுகாதார அமைப்பு சிறப்பாக செயல்படுகிறது. ஆனாலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றே பல்வேறு வல்லுநர்கள் கருதுகிறார்கள். இத்தாலியில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறக்கின்றனர் எனில் அவர்களுக்கு தீவிரமான அறிகுறிகள் இருக்கலாம். ஆனால் ஜெர்மனியில் அதுபோல இன்னும் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. அவை கிடைக்கும்போது இறப்புகளின் எண்ணிக்கை இத்தாலி, ஸ்பெயினை விடக் கூட அதிகமாக இருக்கலாம். 

நன்றி - நியூயார்க் டைம்ஸ் - அன்னா சாவ்பெரி





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்