மதிப்பிற்குரிய தமிழ் இ – புக்ஸ் தள தோழர்களுக்கு, பள்ளிக்கு வெளியே வானம் எனும் மொழிபெயர்ப்பு என் ஒரு மாத கடின உ.ழைப்பின் பயனாக உருவானது. மொழிபெயர்க்கும்போதே இந்நூலை எவ்வளவு விரைவாக வெளியிட முடியுமோ அவ்வளவு விரைவாக வெளியிட வேண்டுமென்று நினைத்தேன். நூலின் மையம் பள்ளிக்கல்வி பற்றிய கடும் விமர்சனங்களடங்கியது. கல்விமுறை பற்றிய ஆதங்கம் கொண்டிருக்கும் அனைவரும், ஏன் கற்கின்ற மாணவர்கள் அனைவரையும் பள்ளிக்கு வெளியே வானம் நூல் வசீகரிக்கும் என்று உளமார நம்பினேன். காப்புரிமை இயல்வாகை பதிப்பகம் பெற்றுள்ளது உண்மை. ஆனால் நிதி நெருக்கடியால் புத்தக உருவாக்கம் தள்ளிச்சென்ற நிலைமையில் நான் அனைவரையும் சென்று சேரும் வழியான இணையத்தை ஆராய்ந்தபோது, தங்களுடைய இணையதளம் வரம் போல் கிடைத்தது. வெளியிட மட்டும்தான் நான் நினைத்தேன். காத்திருந்து அச்சிட்டு அதைக்கொண்டு பெரும் பணம் சம்பாதிக்க என்னுடைய பைத்தியக்காரத்தன இதயத்திற்கு தெரியவில்லை. கடும் உழைப்பில் விளைந்த பலவற்றை நமக்காக பல உன்னத மனிதர்கள் விட்டுச்சென்றிருக்கிறார்கள். நான் என் உழைப்பை, அறிவை மக்களுக்காக செலவழிக்க முயற்சித்தேன்...