போபால் விஷவாயு விபத்தின் வயது 30: தொடரும் வேதனைகள்


போபால் விஷவாயு விபத்தின் வயது 30:                  தொடரும் வேதனைகள்



Bhopal Gas Tragedy,After 30 years என்ற அண்மையில் வெளியான புத்தகத்தில் சுனிதா நரைன், சந்திரா பூஷன் ஆகியோர் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி. 




                                                                                                                                         தமிழில்: வின்சென்ட் காபோ



                   1984, டிசம்பர் 2 ம்தேதி, இரவு போபால் நகரம் பல மில்லியன் மக்களின் இறப்புகளை கண்டது. 

யூனியன் கார்பைடு இந்தியா லிட்.(UCIL) உரத்தொழிற்சாலையிலிருந்து வெளியே கசிந்த 
வேதிப்பொருளான மெத்தில் ஐசோ சயனைட் வாயுவினால் (MIC) நகரமே பரந்த விஷவாயுவின் 
சோதனைக்களமாக ஆனது. தெருவில் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிய மக்கள் வாந்தி எடுத்தபடியே கீழே விழுந்து இறந்தனர். நகரம் முழுவதுமே சுடுக்காட்டு திடலானது. இதுவே இந்தியாவின் முதல், 
ஒரே பெரும் தொழிற்சாலைப் பேரழிவு என்றும் கூறலாம். இன்றுவரை அரசு வெள்ளம், புயல்கள், 
நிலநடுக்கம் போன்றவற்றினைக்கூட சமாளித்து இருக்கிறார்கள். ஆனால் இந்த பிரச்சனையில் அரசு 
செயல்பட்டதற்கான எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை. அமெரிக்காவைச்சேர்ந்த பன்னாட்டு 
நிறுவனமான யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன்(UCC) க்கு சொந்தமான இந்திய துணைநிறுவனமான 
யுசிஐஎல் நிகழ்ந்த விபத்தில் மக்கள் இறந்துபோனதற்கு உதவிபுரிவதாக ஒப்புக்கொண்டது. முப்பது 
ஆண்டுகளுக்குப் பின்னும் எந்த முடிவும் எடுக்கப்படவேயில்லை. கடினமான அந்த இரவு குறித்து 
மட்டுமில்லாமல் இவ்விஷயத்தில் நமது அரசின் எதிர்வினை மோசமானதாகவும், கருணையற்றதுமாக 
இருக்கிறது. 



போபால் இரண்டு விபத்துகளால் தடுமாறி நிற்கிறது. ஒன்று, உடனடியாக நிகழ்ந்துவிட்டது, 

இரண்டாவது, முடிவுறாது தொடர்ந்து பின்தொடர்ந்து வருகிறது.


பிரச்சனை என்னவென்றால், நச்சு குறித்தும் (அ) நச்சுமுறிவு குறித்தும் இந்த மக்கள் ஏதும் 

அறியாதவர்கள் ஆவர். சிலவாரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் இறந்துவிட, பிரச்சனை தீர்ந்தது 
என பலரும் நினைத்திருக்க, நச்சு வாயுவின் விளைவுகளால் மீதி உயிர்பிழைத்திருந்த இருந்த ஏழை 
மக்களில் பலரும் காசநோய், ரத்தசோகை ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டனர்.



ஆனால் இன்றைய தேதிவரை எம்ஐசி(MIC) ஆல் ஏற்படும் உடல்நல பாதிப்புகளையும், அதற்கு 

நோயாளிகளுக்கு எப்படி சிகிச்சை அளிக்கவேண்டும் என்பது யாருக்கும் தெரியாது. உடல் 
நலப்பிரச்சனைகளில் இரண்டு பகுதிகள் இதோடு இணைந்துள்ளன. ஒன்று, நச்சுவாயு 
பேரழிவுவிற்குப்பிறகு பிறந்த குழந்தைகள் குணப்படுத்தமுடியாத பிறப்புக்குறைபாடுகளுடன் உள்ளனர். 
இதன் காரணம் நச்சுவாயுவானது தாயின் கருப்பையிலிருந்த குழந்தைகளையும் கடுமையாக 
பாதித்துள்ளது என்பதேயாகும்.



இரண்டாவதாக, வேதிப்பொருட்களின் கழிவுகள் யுசிஐஎல் தொழிற்சாலையிலும், அதன் 

சுற்றுப்புறமெங்கும் தேங்கி கிடப்பதால் அந்த நிலத்திலும், நீரிலும் கழிவுகளின் நச்சு கலந்துவிட்டது 
என்பதாகும்.



அரசு வேதிப்பொருட்களைப்பற்றிய தகவல்களையும், அதற்கான சிகிச்சை முறைகளையும் முழுமையாக 

அறிந்திருந்தால் பிரச்சனைகள் அனைத்தையும் சமாளிக்க முடிந்திருக்கலாம். ஆயினும் கூட அதற்குப் 
பதிலாக 2014 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்(ஐசிஎம்ஆர்) ';'; 
போபால் நச்சுவாயு நோயிற்கான துல்லியமான காரணம் எதுவென அறியப்படாமல் உள்ளது';'; ஏன் என்று 
கேள்வியை எழுப்பியது.



யூனியன் கார்பைடு நிறுவனம் வெளியே கசிந்த வாயுக்களின் துல்லியமான கலவைகள் குறித்து அது 

வணிக ரகசியம் என்றும், அதை வெளியிடுவது தனிப்பட்ட உரிமை சார்ந்தது என்று அத்தகவல்களை 
வெளியிட மறுத்துவிட்டது. நமக்கு அறியவரும் எம்ஐசி, நீருடன் அதிக வெப்பநிலையில் வினைபுரிந்து 
300 க்கும் அதிகமான கொடும் நச்சு வேதிப்பொருட்களை வெளியிடுகிறது. விலங்குகளின் மீது 
சோதித்துப் பார்த்ததன் அடிப்படையில் தூய எம்ஐசி ன் நச்சுத்தன்மையினை மட்டுமே இது குறித்து 
செய்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிப்படுத்தின. எனவே சிகிச்சை என்பது அறிகுறிகளைச் சார்ந்ததே. இது 
குற்றத்திற்குரிய அலட்சியம் என்று கொள்ளலாம். இதற்கான ஆதாரமாக முதல் சில நாட்களில் 
சயனைட் நச்சினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, நச்சுமுறிவு மருந்தாக சோடியம் தையோசல்பேட் 
நிவாரணத்திற்காக செலுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் விரைவிலேயே இந்த சிகிச்சை இடையிலே 
நிறுத்தப்பட்டது. இதற்கு பலரும் காரணமாக யுசிசி நிறுவனமும், அதன் தரப்பு வழக்குரைஞர் குழுவும் 
கொடுத்த அழுத்தமே காரணம் என்று கூறுகிறார்கள்.



நச்சுவாயுவினால் ஏற்பட்ட நோய்களினைத்தீர்க்கவும், நீண்ட காலநோக்கில் அதனால் ஏற்படும் 

விளைவுகளையும் கண்டறிய மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட ஐசிஎம்ஆர் க்கு அரசினால் அனுமதி 
தரப்பட்டது. இதற்காக இந்த அமைப்பு 24 ஆராய்ச்சிகளை தொடங்கியது. நோயாளிகளை ஆராய்ந்த சில 
ஆய்வுகளிலேயே நுரையீரலில் ஏற்படும் கடும் பாதிப்புகள், கண்நோய்கள் ஆகியவை கண்டறியப்பட்டன. 
1994 ஆம் ஆண்டு இந்த ஆய்வுகள் திடீரென நிறுத்தப்பட்டன. அனைத்து ஆய்வு வேலைகளும் 
மத்தியப்பிரதேசத்தின் அரசு மறுவாழ்வு ஆய்வு மையத்திற்கு மாற்றப்பட்டு முனைப்பில்லாத சில 
ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன. 



தனிப்பட்டதாக செய்யப்பட்ட சில ஆராய்ச்சிகளின் அடிப்படையில் தீவிரமான உடல்நலக்கோளாறுகளான 

புற்றுநோய், மனநலச்சிக்கல்கள், பிறப்புக்குறைபாடுகள் வரை கண்டறியப்பட்டன. ஆனால் இன்றுவரை 
இதற்கான விரிவான நோய்கள் குறித்த ஆராய்ச்சி செய்யப்படாததால், இந்த நோய்களை வறுமை, 
சுகாதாரமின்மை காரணமாக ஏற்படுவதாக திசைதிருப்பும் வாய்ப்புகளும் உள்ளன. நச்சுவாயுவினால் 
ஏற்படும் உடல்நலக்கேடுகளைப் பற்றிய ஆய்வுகளை உறுதி செய்ய நோயாளிகள் குறித்த விபரங்களைக் 
கணினிமயப்படுத்தவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தொடர்ச்சியாக கூறிவருகிறது.







நிவாரணத்திற்கான போராட்டங்கள்




1989 ஆம் ஆண்டு, யுசிசி 470 மில்லியன் டாலர்களை இழப்பீட்டுத்தொகையாக தந்தது(ரூ. 750 

கோடி அந்த ஆண்டின் மதிப்புபடி, பிறகு ரூபாய் மதிப்பு குறைந்து வட்டியோடு சேர்த்து 3,058.40 
கோடியாக 2009 ஆம் ஆண்டு இருந்தது). இந்தியா கோரிய தொகையில் இது 1.7 விழுக்காடு ஆகும். 
இதற்குப்பதிலாக, உச்சநீதிமன்றத்தில் நிறுவனத்திற்கு எதிரான குடிமை மற்றும் குற்றவியல் வழக்குகள் 
முடித்துக்கொள்ளப்பட்டன. மேலும் உச்சநீதிமன்றம் இழப்பீட்டினைப்பெற சில விதிகளையும் 
வரையறுத்தது: இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 1 - 3 லட்சம் வழங்க கூறி, இது வாகன 
விபத்துகளால் இறந்தவர்களுக்கு தருவதைவிட 3 மடங்கு அதிகம் என்றும் கூறியது நீதிமன்றம். 
முழுமையாக, பாதி என பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 50,000 - 2 லட்சம் வரையும், 
குணப்படுத்தக்கூடிய தற்காலிக பாதிப்புகளைக் கொண்டவர்களுக்கு ரூ. 25,000 - 1 லட்சம் வரை 
அளிக்கவும் கூறியது.



வழக்கின் தொடக்கத்தில், 3,000 இறப்புகள் மற்றும் 30,000 நபர்களுக்கு மட்டுமே பாதிப்பு என்பதாக 

அரசு கூறியது. பிறகு நச்சுவாயுவினால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகம் என்று உணரப்பட்டு, வழக்கில் 
கிடைத்த இழப்பீட்டுத்தொகையினை நகரம் முழுக்கவுமே பங்கீடு செய்துதர முடிவு செய்யப்பட்டது. 1980 
ஆண்டு மக்கள் தொகையில் 70% மக்களில் பல மடங்கு மக்கள் இழப்பீடு கேட்டுக்கொண்டு காத்து நிற்கு, 
5,73,588 நபர்களுக்கு மட்டும் நச்சுவாயுவினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அட்டவணைப்படுத்தப்பட்டு 
இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டது. 5,295 நபர்கள் இறந்துபோனதாக கணக்கிடப்பட்டு, அற்பமான 
இழப்பீட்டுத்தொகையாக ரூ. 2 - 3 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. மீதியுள்ள 5,68,293 நபர்கள் 
பாதிக்கப்பட்டவர்கள் என்று பட்டியலில் சேர்க்கப்பட்டனர். ஆறு ஆண்டுகளை இடைக்கால 
நிவாரணத்தொகைக்கானவையாக அரசு முடிவு செய்து, இறுதி இழப்பீட்டுத்தொகை 
பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ. 15,000 என்று அறிவித்தது. 



நோயாளிகளின் மருத்துவச்செலவுகளைப் பொறுத்தவரையில் இந்த இழப்பீட்டுத்தொகை 

ஒன்றுமேயில்லை. மேலும் அதிகளவிலான இறப்புகள் கணக்கில் கொள்ளப்படவில்லை என்று 
கூறுகிறார்கள். நீதிமன்றங்களும், அரசுகளும் இழப்பீடு தொடர்பான வழக்கை மீண்டும் 
விசாரிக்கக்கோரும் மனுக்களை தொடர்ந்து தள்ளுபடி செய்து மறுத்துவருகின்றனர். 2010 ஆம் ஆண்டு 
அமைச்சர் குழு ஒன்று போபால் நச்சுவாயு பிரச்சனையில் கணக்கிடப்பட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு 
இழப்பீட்டுத்தொகையை அதிகரிக்க ஒப்புக்கொண்டனர். இறந்துபோன 5,295 நபர்களுக்கு கூடுதலாக ரூ.10 
லட்சமும், சிறுநீரகம், புற்றுநோய் போன்ற நோய் பாதிப்புகளைக் கொண்டவர்களுக்கு ரூ. 1-5 லட்சம் 
வரையிலும் தருவதாக கூறினர். ஆனால் பிறகு இத்தொகையினை ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டதாக 
கூறிவிட்டனர். நச்சுவாயுவினால் பாதிக்கப்பட்டு தம் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் இழந்த 
அம்மக்கள், அமைச்சர் குழு தங்களது புண்ணில் உப்பை மட்டுமே தடவுகிறார்கள் 
இழப்பீட்டுதொகையினை பாதிக்கப்படாதவர்களுக்கு வழங்கிவிட்டு, ஒவ்வொரு நாளும் பாதிப்புகளால் 
அவதிப் படுபவர்களையும், தீவிரமான உடல்குறைபாடுகளையும், நிரந்தரமாக ஊனமானவர்களையும் 
பட்டியலில் சேர்க்காமல் ஏமாற்றிவிட்டார்கள் என்று கூறுகிறார்கள்.



போபால் பேரழிவு 2.0




போபாலைச் சேர்ந்த மக்கள் யுசிஐஎல் தந்த இன்னொரு சொத்தினாலும் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

இத்தொழிற்சாலையில் மூன்று வகையான உரங்களைத் தயாரிக்கிறார்கள். கார்பரில் (வணிகப்பெயர் 
செவின்), அல்டிகார்ப் (வணிகப்பெயர் டெமிக்), கார்பரில் மூலக்கூறு மற்றும் காமா - 
ஹெக்ஸாகுளோரோசைக்ளோ ஹெக்ஸேன்(g-HCH) செவிடோல் எனும் வணிகப்பெயரில் விற்பனை 
செய்யப்படுகிறது. பேரழிவிற்குப்பின் 15 ஆண்டுகள் இவை உற்பத்தி செய்யப்பட்டன. கழிவுகள், 
உற்பத்திப்பொருட்கள், கரைப்பான்கள், உப பொருட்கள், உள்ளே மற்றும் வெளியே உள்ள 
இயந்திரக்கழிவுகள், மாசடைந்த கழிவுநீர் ஆகியவை இன்னும் அபாயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. 
மேலும் 350 டன் கழிவுகள் நச்சுவாயு கசிந்த பகுதியில் மிச்சமுள்ளது. இக்கழிவுகள் தொடர்ந்து 
நிலத்தையும், நீரையும் மாசுபடுத்தி வருகின்றன. போபால் பேரழிவு 2.0 எனும் இந்த கழிவுகள் 
முதல் விபத்து ஏற்படுத்தியதை விட அதிக அளவிலான பாதிப்புகளை மக்களுக்கு ஏற்படுத்தும் என்று 
அஞ்சப்படுகிறது. தேக்கிவைக்கப்பட்ட வேதிப்பொருட்கள் தம் நச்சுத்தன்மையினை இழக்க பல 
நூற்றாண்டுகள் தேவைப்படும். கழிவுகளை அவ்விடத்திலிருந்து நீக்கினால்தான் அந்த இடத்தை 
மாசடையாமல் காக்கமுடியும். அல்லாதவரை கழிவுகளிலிருந்து நச்சுக்கள் பரவிக்கொண்டேதான் 
இருக்கும்.



இதில் மோசமான பகுதி என்னவென்றால், கழிவுகளை அகற்றி, மாசடைதலைத் தடுப்பது குறித்து 

பல்வேறு குழப்பங்கள் சட்டரீதியான வாதங்களாக மேலெழுகின்றன. இடத்தினை தூய்மை செய்வது 
எப்படி?, அகற்றும் கழிவுகளை என்ன செய்வது?, இதற்கான செலவுத்தொகையினை யார் தருவது? - 
மாநில அரசா, மத்திய அரசா, தொழிற்சாலையினை பிறகு வாங்கியவரா, டவ் கெமிக்கல் நிறுவனமா, 
குப்பைகளை வெளியேற்றும் நிறுவனங்களா, ஆராய்ச்சிஅமைப்புகளா (அ) லாபநோக்கில்லாத 
அமைப்புகளா???



கடந்த சில ஆண்டுகளில் டெல்லியைச்சேர்ந்த லாப நோக்கில்லாத அறிவியல் மற்றும் சூழல் மையம் 

மற்றும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை வெளியிட்ட ஆராய்ச்சி அறிக்கை 
சர்ச்சைக்குள்ளானது. மேலும் இன்னொரு சர்ச்சையாக மாசுபடுதல் நிலத்தடி நீருக்கு பரவியதா, 
இல்லையா என்று கிளம்பியது. பல்வேறு ஆராய்ச்சி முடிவுகளின் படி, யுசிஐஎல் ன் சுற்றுப்புற நிலத்தடி 
நீரில் குளோரினேட்டட் பென்ஸேன்ஸ், HCH ஐசோமெர்ஸ் ஆகியவை கலந்திருப்பதாக அதன் 
அறிக்கையில் கூறியது.



கார்பரைல், அல்டிகார்ப், கார்பன்டெட்ராகுளோரைடு, குளோரோபார்ம் ஆகியவையும் 

கண்டறியப்பட்டதாக சில ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன. இந்த விஷயங்கள்தான் நேரடியாக யுசிஐஎல் 
ல் உள்ள கழிவுகளோடு இணைகின்றன.



2010 ஆம் ஆண்டு, தேசிய சூழலியல் ஆராய்ச்சி மையம் (NEERI) மற்றும் புவியியல் ஆராய்ச்சி 

மையம் ( NGRI) வெளியிட்ட ஆய்வுகளின் படி, நிலத்தடி நீர் மாசடைவதற்கான ஆதாரம் இல்லை என்று 
கூறின. மழைக்காலத்தின் போது அதைக்காரணமாக கொண்டு, நீர் அரித்துபோன தனியாக பிரிக்கப்பட்ட 
மாசுபடுத்துதலுக்குள்ளான நீரை சோதித்தார்கள். பிறகு மிகக் குறைந்த பரவும் தன்மை கொண்ட கருப்பு 
மற்றும் மஞ்சள் வண்டல் மண்ணை, மிகக்குறைந்த இயக்கங்களே நிலத்தடி நீரில் காணப்படுவதாக 
முடிவு செய்தார்கள். சுவாரசியமான செய்தியாக, இந்தவகை மண் யுசிஐஎல் ன் நிலத்தில் மட்டும் 
கிடைப்பதாகும். சுற்றியுள்ள பகுதிகளில் செய்யப்ட்ட மற்ற பகுதிகளில் மண்ணில் அதிக அளவு பரவும் 
தன்மை காணப்பட்டது. என்இஇஆர்ஐ மற்றும் என்ஜிஆர்ஐ ஆகிய அமைப்புகளின் ஆய்வுக்கருத்து 
பெரியது. தொழிற்சாலை இடமானது தனித்துவமாக நிலத்தடி நீர் மாசுபடாமல் இருக்கும்போது, அதனை 
குறைந்த செலவில் எளிமையாக சுத்திகரிக்க முடியும். ஆனால் நிலத்தடி நீர் மாசுபட்டிருக்கும் சூழலில், 
அதனை சுத்திகரித்து தூய்மை செய்ய அதிக அளவு செலவு செய்யவேண்டியிருக்கும்.



இந்தப்பிரச்சனையில் யுசிசி முதலிலிருந்தே தனது இந்திய துணை நிறுவனத்தில் நிகழ்ந்த விபத்தில் 

தான் எதுவும் செய்யமுடியாது என்று கூறி வாதிட்டு வருகிறது. அண்மையில் ஆகஸ்ட் 2014 ல் 
அமெரிக்க நீதிமன்றங்கள் யுசிசி(டவ் கெமிக்கல்ஸ்) இந்திய துணைநிறுவனத்தின் நிர்வாகத்திற்கு 
பொறுப்பானதில்லை என்று தீர்ப்பு அளித்தன. ஆனால் ஒரு வழக்கு இன்றும் தொடர்கிறது. 2004 ஆம் 
ஆண்டு, போபாலைச்சேர்ந்த ஆலோக் பிரதாப்சிங் என்பவர் மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றத்தில் டவ் 
கெமிக்கல்ஸ் நிறுவனம்தான் மாசுபாட்டிற்கு காரணம் என்று கூறி, அதற்கு அந்நிறுவனமே 
பொறுப்பேற்கவேண்டும் என்று வழக்கு பதிவு செய்தார். இதை அரசு ஏற்று, வழக்கிற்கு ஆதரவளித்து 
சூழல் மாசுபாட்டினை சரிசெய்வதற்காக 100 கோடி ரூபாயினை டவ் நிறுவனம் டவ் நிறுவனம் 
வைப்புத்தொகையாக செலுத்த கூறியது. டவ் நிறுவனம் தொடர்ந்து தன்மீதான புகாரை அரசு திரும்ப 
பெற வேண்டும் என்று மூர்க்கமான வேகத்தில் ஆதரவைத்தேடி - தொழிலதிபர் ரத்தன் டாடாவிலிருந்து, 
முன்னாள் திட்டக்குழு துணைத்தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா, முன்னாள் நிதியமைச்சர் ப. 
சிதம்பரம் என பலரையும் வளைத்து தனது சார்பாக பேசவைக்கிறது.



ஆனால் இன்றுவரை உயர்நீதிமன்றம் விபத்திற்கு பொறுப்பானவர்களின் பட்டியலிலிருந்து டவ் 

நிறுவனத்தினை நீக்கவில்லை. எனவே இந்த வழக்கில் குறைந்தபட்சம் அகற்றப்படாமல் 
குவிந்துகிடக்கும் அபாயகரமான கழிவுகளே அந்நிறுவனத்தின் பொறுப்பு குறித்து நிரூபிக்கும். டவ் 
நிறுவனமானது இதனை சரிசெய்வது (அ) புதுப்பித்தல் ஆகியவற்றினையேனும் சரிசெய்யும் 
தொகையினை வழங்கவேண்டும். இவை நடைபெற்றால் 30 ஆண்டுகளுக்குப்பிறகு இதனால் 
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதேனும் நல்ல முடிவு கிடைக்கக்கூடும்.






முடிவு கிடைக்காதது ஏன்?




இந்த விபத்து எனும் தவறு நடந்த தொடக்க ஆண்டுகளிலிருந்தே அனைத்தும் தவறான 

செயல்பாடுகளாக சென்றுவிட்டன. இதன்பின், அனைத்து மக்களும், செயல்பாட்டாளர்களும் இணைந்து 
தவறான செயல்பாடுகளை திருத்திக்கொள்ள முயன்று சிறியளவிலான வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். 



இந்திய நீதிபதிகள் நிறுவனத்திற்கு இசைவானவர்களாக, அற்ப இழப்பீட்டினை பெற்றுக்கொண்டு 

நிறுவனத்தின் பொறுப்புமீதான குடிமை மற்றும் குற்றவியல் வழக்குகளை தீர்த்துக்கொள்ளுமாறு 
கூறுகிறார்கள். பிறகு அந்நிறுவனம் உறுதியளித்த வாக்குறுதிகள், பொறுப்புகள் அனைத்தும் 
நீர்த்துப்போகச்செய்யப்படும். வேதிப்பொருட்கள் பற்றி பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் 
மருத்துவர்களிடம் கூட நிறுவனம் தகவல்களைத் தெரிவிக்க மறுத்தது இதற்கு உதாரணமாகும். 
ஐசிஎம்ஆர் பாதிக்கப்பட்ட நோயாளிகள் குறித்த ஆய்வுகளை இறுதி செய்வதில் தோல்வியுற்றதால், 
அவர்களுக்கு நேர்ந்த குறைபாடுகள் குறித்தும், அதற்கான சிகிச்சை முறைகளைப் பற்றியும் குறிப்பிட 
முடியாமல் முறையான ஆவணத்தைப்பதிவு செய்யமுடியாமல் போனது. எனவே போபால் வாயு 
நோய்கள் என்று பொதுவாக பெயரிடப்பட்டாலும், பாதிக்கப்பட்டவர்கள் யார் (அ) சிகிச்சை முறைகள், 
நிலைமை ஆகியவற்றினை கண்டறியமுடியவில்லை. மத்திய அரசு தொடர்ந்து வாதாடி 5,295 
மக்கள்தான் இறந்துபோனார்கள் என்றும், அதன்பிறகு அதுபோல நிகழவில்லை என்று கூறியதோடு, 
6,199 நபர்கள் நிரந்தரமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது. விபத்தினால் பாதிக்கப்பட்ட எண்ணற்ற 
மரணங்கள் மற்றும் பாதிப்புகளைக் கொண்டவர்கள் தொழிற்சாலை அருகேயுள்ள ஒவ்வொருவீட்டிலும் 
இருந்தபோதிலும், மருத்துவ அறிக்கை இல்லை என்று கூறி அவர்களை பட்டியலில் சேர்க்க அரசு 
தொடர்ந்து மறுத்துவருகிறது.



மாநில அரசு தனது பணியாக இழப்பீட்டினை பலருக்கும் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களாக இல்லையா 

என்று கூட அறியாமல் வழங்கி தன் கடமையை முடித்துக்கொண்டது.



ஆனால் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. முதலில் இதில் அதிகள வு அமைப்புகள் 

இணைந்து, பிரச்சனையை தீர்க்க சிறிதளவு ஆர்வம் காட்டிவருகிறார்கள். மருத்துவ நிவாரண உதவிகள் 
காகிதங்களைப் பொறுத்தவரையில், அனைத்து மக்களுக்கும் உரியநேரத்தில் தரம்மிக்க சிகிச்சைகள் 
வழங்கப்பட்டுவிட்டன. வசதிகள் கொண்ட சிறப்பு மருத்துவமனை உருவாக்கப் பட்டிருக்கிறது. பணம் 
வாங்காமல் சிகிச்சை அளிக்க உறுதிமொழி அளிக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் இரு கமிட்டிகளை 
நியமித்தது. ஒன்று, மருத்துவச் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும், இரண்டாவது குழு, 
பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு கவனம் கொண்டு என்ன செய்யவேண்டும் என்பதை கூறும் விதமாகவும் 
அமைக்கப்பட்டது. மாநில அரசில் தனியாக நச்சுவாயு நிவாரணத்திற்கு என தனித்துறை ஒன்று 
அமைக்கப்பட்டு வழக்கம்போல மூத்த அமைச்சர் ஒருவர் அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். 
அதுபோலவே மத்தியிலும் உரம் மற்றும் வேதிப்பொருட்கள் துறை அமைச்சர் இவை அனைத்தையும் 
மேற்பார்வை செய்வதாக முடிவானது. இன்றுவரையிலும் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட 
மருத்துவசிகிச்சை என்பது மிகவும் மோசமானதாகவே இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து 
தமக்கு அவர்கள் குடிக்கத்தண்ணீர் கூட தரவில்லை என்று கூறுகிறார்கள்.



தொழிற்சாலை இடத்தை தூய்மைப்படுத்தும் பிரச்சனையை எடுத்துக்கொள்வோம். இந்த வழக்கு 

உச்சநீதிமன்றம் மற்றும் மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றத்திற்கு வந்தபோது, வழக்கமான திசைகளே 
இதிலும் காட்டப்பட்டன. தொழிற்சாலை இடத்திலுள்ள நச்சுக்கழிவுக்களை அகற்ற ஒரு குழு 
அமைக்கப்பட்டு அதன் தலைவராக, வேதிப்பொருட்கள் மற்றும் பெட்ரோலியப்பொருட்கள் துறையின் 
செயலாளர் நியமிக்கப்பட்டார். கழிவுகளை அகற்றித் தூய்மைப்படுத்துவது, புதுப்பித்தல் ஆகியவற்றினை 
கண்காணிப்பது மற்றும் ஒருங்கிணைத்தல் பணிகளைச்செய்ய மேற்பார்வைக் கமிட்டி ஒன்று 
உருவாக்கப்பட்டது. மாநில அரசின் சுற்றுச்சூழல் அமைச்சர் அந்த கமிட்டியில் இடம்பெற்றார். 
இறுதிப்படிகளாக மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் தொழிற்சாலை இடத்தினை 
கண்காணிக்கவும், தூய்மைபடுத்துவதற்குமான தொழில்நுட்ப உதவிகளை தருவதாக முடிவு 
செய்யப்பட்டது. பல்வேறு அமைப்புகள் இதில் இருந்தாலும், எந்த ஒரு அமைப்புமே மாசுபாட்டிற்கு 
உள்ளான நிலத்தை தூய்மைப்படுத்தும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவில்லை.



இரண்டாவது அதிக காலம் செலவாவது. நகரத்தில் ஏற்பட்ட விபத்திற்குப்பிறகு மக்கள் அங்கிருந்து 

காலி செய்து வேறிடம் நோக்கி சென்றுவிட்டனர். குடிமைச்சமூக க்குழுக்கள் தொடர்ந்து அநீதி மற்றும் 
நடவடிக்கை போதாமை குறித்து தம்மை ஆழ்ந்து ஈடுபடுத்திக்கொண்டு போராடி வருகிறார்கள். ஆனால் 
அரசுக்கும், போபால் பகுதி செயல்பாட்டாளர்களுக்கும் இடையே தோன்றிய அவநம்பிக்கை காரணமாக 
அனைத்தும் நடவடிக்கைகளும் செயல்படத்தயாராகி பின் தடை செய்யப்பட்டுவிடுகின்றன. இதன் 
காரணம் ஒவ்வொரு விஷயத்தையும் நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்வதேயாகும். உலகளாவிய, 
தேசிய ஊடகங்கள் இந்த வழக்கில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருவதால் ஒவ்வொரு நிகழ்வுகளுமே 
தொலைக்காட்சி, நாளிதழ்களில் வெளிவந்து வினை - எதிர்வினை என்று செயல்பாடுகள் 
பயணிக்கின்றன. இதனால், அனைத்து விஷயங்களும் நீதிமன்றங்கள் கூறினால்தான் செயல்பாட்டிற்கு 
வருகிறது. மத்திய, மாநில அரசுகள் அமைதியாக பின்னிருக்கையில் அமர்ந்துகொண்டு விட்டார்கள்.



1989 ஆண்டின் முடிவிற்குப்பின், யுசிசியின் குற்றப்பொறுப்பு நீதிமன்ற சட்டங்களினால் 

விடுதலை அளிக்கப்பட்டபின், சட்டத்தினை மறுதிருத்தம் செய்துகொள்ளுமாறு மாறியதோடு, 
நீதிமன்றங்கள் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு குறித்த திசைகளைக் கண்டறிந்தது. ஆனால் ஒரே 
பார்வையினை வேறுபட்ட சூழல்களில் காண்பது அவர்களது நோக்கங்களை பலனில்லாமல் 
போகச்செய்தது. கடந்த கால ஏமாற்றங்களிலிலிருந்து என்ன கிடைத்தது என்பதையும், எவை 
நிறைவேற்றப்பட்டன என்பது குறித்த புரிதலின்மையின் சிறுபகுதிதான் இவை. பல்வேறு 
முரண்பாடுகளோடு கையாலாகாத்தனத்துடன் செயல்பட்டு வரும் இந்திய அமைப்புகளை என்ன கூறுவது? 
லாபநோக்கில்லாத அமைப்புகள் மற்றும் செயல்பாட்டாளர்கள் இதில் கற்றுக்கொள்ள பாடங்கள் உண்டு. 
பிரச்சனை தீரும் இறுதிக்கட்டம் வரை விட்டுக்கொடுக்காத சலிப்படையாத போராட்டம்தான் 
இறுதியானது. வேறுவழியே இல்லை.



பேரழிவு ஏற்படுத்திய விளைவுகள் மோசமான விதி கொண்ட நகரமக்களை எல்லைகளைக்கடந்து 

பாதித்துள்ளது. இது உலகளவில் வேதிப்பொருட்கள் மற்றும் அபாயகரமான கழிவுப்பொருட்களை 
மேலாண்மை செய்வது குறித்த சிந்தனைகளை புதுப்பிக்க கோரியுள்ளது. பணியாட்களின் பாதுகாப்பு 
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மேலாண்மை 
குறித்த சட்டங்கள் வலுப்படுத்தப்பட்டு உள்ளன. இதன் காரணமாகத்தான் போபால் நச்சுவாயு நிகழ்வு 
நடந்த 30 ஆண்டுகளுக்குப்பின்னும் அதுபோல மற்றொன்று நிகழவில்லை. 



ஆனால் வேலை இன்னும் முடிந்துவிடவில்லை. இந்தியாவில் நாம் தொடர்ச்சியாக சிறிய 

தொழிற்சாலை விபத்துகள் சிறு போபால்நிகழ்வு போல நடப்பதை காண்கிறோம். அபாயகரமான 
கழிவுப்பொருட்கள் பல்வேறு இடங்களில் குவித்து வைக்கப்படுவதால், நிலம், நீர், மாசடைவதோடு நம் 
வாழ்வும் அழிவிற்கு உள்ளாகிறது. ஆனால் நாம் இதன் பொருளையோ (அ) நச்சுக்களால் பாதிக்கப்பட்ட 
நிலத்தை மறுநிர்மாணம் செய்யும் முறைகளையோ அறியவில்லை. அடுத்த போபால் (அ) சிறிய 
போபால் போல நிகழ்ந்து பாதிக்கப்படாமல் இருக்க எப்படி நம்மை காத்துக்கொள்ளப்போகிறோம்?



விதிகள் மாறிவிட்டன, பின்பற்றுவோர் யாருமில்லை 




முதல்பெரும் சட்டம் போபால் நிகழ்விற்கு பின்பு 1986 ல் சூழல்(பாதுகாப்பு) சட்டம்(EPA) 

உருவாக்கப்பட்டது. இபிஏ சட்டமானது, சட்டசபையினரின் உடனடி கவனத்தை போபால் நிகழ்விற்கு 
பெறவேண்டுமானால், அபாயகரமான தொழில்கள் மாசுபடுத்துதலை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றிற்கான 
ஒழுங்குமுறை விதிகளை வலுப்படுத்தவேண்டும் என வழக்குரைஞர்கள் ஸ்யாம் திவான், அர்மின் 
ரோஸன்க்ரான்ஸ் ஆகியோர் தமது கருத்துகளை சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் கொள்கைகள் குறித்து 
எழுதினார்கள். இபிஏ இந்தியாவின் முதல் சட்டமாக மத்திய அரசிற்கு தொழிற்சாலையை நேரடியாக 
மூட, தடுக்க (அ) முறைப்படுத்த அதிகாரமளிக்கிறது. இது தற்போதும் நடைமுறையிலிருக்கிறதாகவும், 
பல்வேறு வேறுபட்ட பிரச்சனைகளில் விதிகளை ஏற்படுத்தும் வண்ணம் பரந்த 
ஆற்றலைக்கொண்டுள்ளது. அபாயகரமான கழிவுகளை மேலாண்மை செய்வது தொடர்பாக, விதிகள், 
முறைப்படுத்தும் விதங்கள் ஆகியவை இபிஏவிலிருந்து பல்வேறு அளவில் உருவாக்கப்பட்டு உள்ளன.



1989 ஆம் ஆண்டு, அபாயகரமான வேதிப்பொருட்களை சேமிப்பது, இறக்குமதி செய்வது 

குறித்து, அபாயகரமான கழிவுகளை(மேலாண்மை மற்றும் கையாள்வது) மேலாண்மை செய்வதற்கான 
விதிகள் இயற்றப்பட்டன. கடற்கரை, துறைமுகப்பகுதிகளைப் பாதுகாக்கவும் இபிஏவின் விதிகள் 
இயற்றப்பட்டுள்ளன. 1987 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தில்(1948) திருத்தங்கள் செய்யப்பட்டு 
மாநிலங்கள் நில மதிப்பீட்டு கமிட்டிகளினை உருவாக்கி, அவற்றின் மூலம் அபாயகரமான கழிவுகளை, 
பொருட்களை பயன்படுத்தும் தொழிற்சாலைகளுக்கான இடங்கள் குறித்து அறிவுறுத்தல் செய்ய அதிகாரம் 
தரப்பட்டுள்ளது.



இவ்விதிகள் அவசரகால பேரழிவு தடுப்புத்திட்டங்களாக பணிபுரியும் ஆட்கள் மற்றும் அருகிலுள்ள 

வீடுகள் ஆகியவற்றினை காக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. 1991 ஆம் ஆண்டு 
பொதுமக்களுக்கான பொறுப்பு காப்பீட்டு சட்டம் அபாயகரமான பொருட்களை கையாளும்போது ஏற்படும் 
விபத்துகளுக்கான இழப்பீட்டினை பாதிக்கப்பட்டவர்களுக்கு, உடனடியாக வழங்க உதவி புரிகிறது. 
இச்சட்டத்தின் கீழ் சூழல் நிவாரணத்தொகை பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈட்டுத்தொகையாக 
வழங்கப்படுகிறது. ஆயினும், இந்தியா சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அபாயகரமான கழிவுகளை 
மேலாண்மை செய்வது எனும் போராட்டத்தில் வேகமாக தோற்றுவருகிறது என்பதுதான் உண்மை.



தொழிற்சாலை சட்டங்களை எடுத்துக்கொள்வோம். 2011 ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு மற்றும் 

தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்ட தகவல்களின் படி, 2011 ஆம் ஆண்டு மரணமடைந்தவர்கள் 
மற்றும் காயமடைந்தவர்கள் 10,441 நபர்கள் ஆவர். இதே ஆண்டு 1,000 பேர் தொழிற்சாலை 
விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். தொழில்மயமான குஜராத், ஆந்திரப்பிரதேசம், மகராஷ்ட்ரா ஆகிய 
மாநிலங்களில் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு குறித்த பதிவுகள் மோசமாக இருப்பதில் ஆச்சர்யம் 
ஏதுமில்லை. இதில் குஜராத் மிக மோசமானதாக 200 நபர்கள் மரணமடைந்தும், 3,000 நபர்கள் 
காயமடைந்தும் உள்ளார்கள் என்று அறிக்கை குறிப்பிடுகிறது. கடந்த ஆண்டுகள் குறித்த மதிப்பீட்டில், 
நாளிதழ்களின் செய்தி அறிக்கை அடிப்படையில் நாடு முழுவதும் தொழிற்சாலை விபத்துகள் 
முக்கியமான இடத்தைப்பிடித்துள்ளது. 2014 ஆம் ஆண்டின் 10 மாதங்களில் நிகழ்ந்த எட்டு 
தொழிற்சாலை விபத்துகளில் பல தொழிலாளர்கள் இறந்தும் (அ) காயமாகி மருத்துவமனைகளில் 
சிகிச்சை பெற்றும் வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. விபத்துகள் பலவற்றைக்குறித்து 
அறிக்கைகள் வெளியிடப்படாமல் போவதும் நடைபெறுகிறது.



கூடுதலாக, தொடர்ந்து வளர்ந்துவரும் நச்சுப்பொருட்களினால் நிலம் மற்றும் நீர் மாசுபடுதல் பெரும் 

பிரச்சனையாக உள்ளது. அபாயகரமான கழிவுகள் மேலாண்மை சட்டங்களில் 
நச்சுவேதிப்பொருட்களுக்கான பட்டியல், சேமித்தல் மற்றும் அவற்றினை பாதுகாப்பாக அகற்றுதல் 
ஆகியவை குறித்து பல விதிகள் வரையறுக்கப்பட்டு இருந்தாலும் இந்தப்பணியில்தான் பெரும்பாலான 
விதிமீறல்கள் நடைபெறுகின்றன. தொடர்ந்து சேமித்து தேக்கி வைக்கப்படும் கழிவுகளால் பல பகுதிகளும் 
மாசடைகின்றன. 



2010 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம்(MOEF) அபாயகரமான கழிவுகளால் 

மாசடைந்த இடங்களை கண்டறிந்து அவற்றினை புதுப்பித்து சீர் செய்யும் திட்டத்தினை அறிவித்தது. 
நாடு முழுவதும் ஆராய்ந்து மொத்தம் 10 நச்சுத்தன்மை கொண்ட இடங்கள் கண்டறியப்பட்டன. 
ஆலோசகர்கள் புதுப்பித்தலுக்கான திட்டத்தினை வடிவமைக்கும்விதமாக அமர்த்தப்பட்டதோடு, 
அத்திட்டம் நின்றுபோனது. இந்த மாசடைந்த இயக்கங்கள் ஆயிரம் டன்களுக்கு மேலான கொடும் 
நச்சுத்தன்மை கொண்ட கழிவுகளை போபாலில் உள்ள யுசிஐஎல் தொழிற்சாலை போலவே 
கொண்டிருக்கின்றன.



போபாலைப்போலவே எதிர்காலத்தில் பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ள இடங்கள்



மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் அபாயகரமான கழிவுகளினால் மாசடைந்த 10 இடங்கள் 

அடையாளம் காணப்பட்டுள்ளன.


1. எல்லூர் - எடையார் பகுதி, கேரளா



2,00,000 டன்கள் பெரும் அபாயகரமான வேதிப்பொருட்கள், உரக்கழிவுகள் உள்ளன.



2. ராணிப்பேட்டை குரோமியத்தினால் பாதிக்கப்பட்ட பகுதி, தமிழ்நாடு



2,20,000 டன்கள் குரோமியக்கழிவுகள், 2-4 மீட்டர் உயரத்தில் மூன்று ஹெக்டேரில் 

நிறைந்துள்ளது.



3. ரட்லம் தொழிற்சாலைப்பகுதி, ரட்லம், மத்தியப்பிரதேசம்



மருந்துகள் தயாரிப்பதில் எஞ்சும் கேடான திரவம், ஹெச் - அமிலம் தயாரிப்பதினாலும் உருவாகும் 

மாசுக்கள்.


4. குரோமியத்தினால் மாசடைந்த பகுதி, சுந்தர்கார், ஒடிஷா



திறந்தவெளியில் 50,000 டன்கள் குரோமியக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.



5. தல்சேர் குரோமியத்தினால் பாதிக்கப்பட்ட பகுதி, தல்சேர், ஒடிஷா.



குரோம் உப்பு தயாரிக்கும் தொழிற்சாலை மூடப்பட்டுவிட்டதால் 60,000 டன்கள் கழிவுகள் 

திறந்தவெளியில் உள்ளது.


6. கன்ஜம் பாதரசத்தினால் பாதிக்கப்பட்ட பகுதி, கன்ஜம், ஒடிஷா



வெவ்வேறு இடங்களில் உள்ள மூடப்பட்ட காஸ்டிக் சோடா தொழிற்சாலைப்பகுதிகளில் மிஞ்சியுள்ள 

50,000 டன்களுக்கும் மேலே கழிவுகள் உள்ளன. 


7. ஜூஹி-பாபுரய்யா, ரஹி மண்டி, கான்பூர், உத்திரப்பிரதேசம்



சுமாராக 10,000 டன்கள் ஹெக்சாவலன்ட் குரோமியம் வேதிப்பொருளினால் 2 ஹெக்டேர் நிலங்கள் 

மக்கள் குடியிருப்பு பகுதியில் மாசுபட்டுள்ளது. இதனை வாங்கியவர்கள் யாரென தெரியவில்லை.


8. ரணியா, கான்பூர் டெஹத், உத்திரப்பிரதேசம்



45,000 டன்கள் ஹெக்சாவலன்ட் குரோமியம் கழிவுகள் 200 ஹெக்டேர் தனியாரின் நிலத்தில் 

தேக்கி வைக்கப்பட்டுள்ளது.



9. நிப்ரா கிராமம், மேற்குவங்கம்



4,400 டன்கள் குரோமியக்கழிவுகள் உள்ளன. உரிமையாளர்கள் யாரெனத்தெரியவில்லை.



10. உரமாசுபடுத்தலால் பாதிக்கப்பட்ட பகுதி, லக்னோ



இந்தியன் உரத்தொழிற்சாலை லிட். நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட 36,432 டன்கள் 

ஹெக்சாகுளோரோசைக்ளோஹெக்ஸேன்(HCH) கழிவுகள்.


இங்கே பிரச்சனை என்பது அமைப்புகளின் சட்டம் தொடர்பான மேலாண்மை இன்னும் காகிதங்களில் 

மட்டுமே உள்ளது. உதாரணத்திற்கு, வேதிப்பொருட்கள் விபத்து சட்டப்படி, மத்திய ஆபத்துகால குழு 
ஒன்று உருவாக்கப்பட வேண்டும். சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம்(MOEF) இதற்குப்பொறுப்பானது. 
ஆனால் மக்களின் மேல் இவர்கள் எவ்வளவு கவனமாக இருக்கிறார்கள், செயல்படுகிறார்கள் என்பதை 
இவர்களின் இணையதளத்தினை பார்த்தாலே அறியமுடியும். ஆபத்துகால மத்திய குழுவின் தலைவர் 
மற்றும் தொலைபேசி குறித்த தகவல்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. 1990 ஆண்டின் மத்தியில் இருந்த 
செயலாளரான டி.கே.ஏ. நாயர் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. காகிதம் தவிர வேறெங்கும் இக்குழு 
உயிருடன் இல்லை. இதுதான் இந்தியாவின் உண்மையான சீரழிவு ஆகும். நாம் ஒரு அமைப்பை 
வேகமாக உருவாக்கினாலும், அதில் பணிபுரிய யாரையும் நியமிக்கமாட்டோம்.



நிகழ்ச்சிநிரல்: 30 ஆண்டுகளுக்குப்பின் இன்றுவரை.....




அட்டவணைப்படுத்துவதன் முன் நாம் இன்றைய சூழ்நிலையை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். 

மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஒரு தொழிற்சாலைக்கு அனுமதி தந்தால்தான் அவை தொடங்கவும், இயங்கவும் முடியும். மேலும் கூடுதலாக வெவ்வேறு இபிஏ விதிகளின் கீழ் பிளாஸ்டிக், மின்கலன்கள், 
நகராட்சிக்கழிவுகள் மேலும் பல. இப்போது புதிதாக இ-கழிவுகள் வரை கையாள்வதற்கு அனுமதியும் 
அங்கீகாரமும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமே தரவேண்டும். ஆனால் அனைத்து மாசுக்கட்டுப்பாட்டு 
வாரியங்களும் மாசுக்கட்டுப்பாட்டிற்கான நிலைப்பாடு ஆகியவற்றினை கவனித்தோ (அ) விதிகளை 
நிறைவேற்றக்கூறியோ வற்புறுத்த நேரமில்லாமல், உடனே அனுமதியும், அங்கீகாரமும் 
கொடுத்துவிடுகிறார்கள். அனுமதி கொடுக்கும் விண்ணப்பங்கள் வழியாகத்தான் அவர்களது முக்கிய 
வருவாயே கிடைக்கிறது.



எங்களுடைய ஆய்வுப்படி, தோராயமாக ஒரு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஒரு தொழிற்சாலைக்கு ஒரு 

நீர் மாதிரி என்று எடுத்துக்கொண்டு குறைந்தது 25% பிரிவுகளில் காற்றுதர சோதனை 
செய்யவேண்டியிருக்கிறது. உண்மையில் சுற்றுச்சூழல் கண்காணிப்பினை தொழிற்சாலை சுயமாக 
மேற்கொண்டால் மாதிரி கழிவுநீர் தனியார் சோதனைக்கூடத்தில் பரிசோதனை செய்யப்பட்டு அந்த 
அறிக்கை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் சமர்ப்பிக்கப்படுகிறது. இதில் உள்ள சிக்கல் 
என்னவென்றால், அந்த தனியார் சோதனைக்கூடங்கள் பலவும் மிகவும் பற்றாக்குறையான திறமை 
இல்லாதவகையில் அமைந்தவை ஆகும். மேலும் இந்த அறிக்கைகளை கண்கொண்டு பார்க்கவும், 
வாரிய அதிகாரிகளுக்கு நேரமில்லை. இது முற்றிலும் விண்ணப்பவேலை, மாசுபடுத்தலை 
கட்டுப்படுத்துதல் பற்றியதல்ல; விதிகளை நிறைவேற்றுவது பற்றியதல்ல.



உண்மையில் இதில் வேதனைப்படுத்துவது என்னவென்றால், சுயகண்காணிப்பு மாதிரிகளில் கூட 

விதிமுறைகள் அமுல்படுத்தப்படுவதில்லை. தொழிற்சாலை சமர்ப்பிக்கும் அறிக்கையில் விதிகளுக்குப் 
புறம்பான அளவு இருந்தாலும் வாரியம் அந்நிறுவனத்தைக் கண்டித்து தீர்மானமாக விதிகளை 
நிறைவேற்றக் கூறுவதில்லை. பதிலாக மாதிரிகளில் மிக அதிக அளவு மாசுபடுதல் இருக்கும்போது, 
வாரிய உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு இதனை அறிவித்து, தாம் சோதனைக்கு 
வரும் நாள், நேரம், இடம் முதலியவற்றை அறிவித்து இம்முறையில் விதிகளை நேர்மையாக 
கண்சோராது நிறைவேற்றுகிறார்கள். எனவே 2% விளக்க அறிவிப்புகள் மட்டுமே சட்ட நடவடிக்கைக்கு 
செல்கின்றன என்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. இந்த அமைப்பில் தவறுகளை தடுக்கக்கூடிய அளவு 
எச்சரிக்கைகள் இல்லை. மிக அதிகளவு அபராதமாக நீதிமன்றங்கள் நீர்சட்டத்தின்படி(மாசுபடுதலை 
தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்) ரூ. 10,000 இபிஏவின் கீழே 1 லட்சரூபாயும் விதிக்கலாம். 
இவற்றை நீதிமன்றங்கள் மட்டுமே வசூலிக்கமுடியும். எனவே அனைத்து மாசுக்கட்டுப்பாட்டு 
வாரியங்களும் தொழிற்சாலை இயங்க அனுமதி மறுப்பதோ (அ) பிரச்சனையை தீர்ப்பதற்கான 
காலக்கெடுவாக 30 நாட்களை அறிவிக்கின்றன. இரண்டுமே பெரும்பாலும் சாத்தியப்படக்கூடியவை 
அல்ல. மாசுபடுத்தலைச் செய்பவருக்கு எதிராக இது சிறிய அளவிலான அளவிலேதான் செயல்படும். 
அமைப்பு முறையில் கடுமையாக விதிகளை நிறைவேற்றாவிட்டால் அமுல்படுத்த தவறினால், 
விண்ணப்பங்களாக நிரப்ப ப்பட்டு கோப்புகளாக வைக்கப்படும் காகிதத்தின் மதிப்பு கூட 
நடவடிக்கைகளுக்கு இருக்காது. 



சுற்றுச்சூழல், வனம், துறைமுகம், வனம் சார்ந்த வாழ்வு ஆகியவற்றில் திட்டங்களைத்தொடங்க 

முறையான அனுமதி பெறவேண்டும். இந்த அனுமதி சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கேடுகளைக் குறைக்கும் 
உறுதியைத்தருகிறது. இந்த விதிகள் நடைமுறைக்கு ஒரு புதிர்போலவே தோன்றினாலும், இவை ஒன்று 
கூட நிறைவேற்றப்படுவதில்லை. தொழிற்சாலை தொடங்குவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி 
வழங்குவதில் விண்ணப்ப நிராகரிப்பு என்பது 0% ஆக உள்ளது. இவ்விதிகள் அனைத்தும் அனுமதி 
கிடைக்கும் தொடக்கச் சம்பிரதாயங்கள்தான். தொழிற்சாலை இயங்கத்தொடங்கியபின் அவை தொடர்ந்து 
கண்காணிக்கப்படுவதோ (அ) விதிகளை நிறைவேற்றுகிறார்களா என்று சோதனை செய்வதும் இல்லை.



காடுகளில் வழங்கப்படும் அனுமதி என்பது பெரும் காகிதப்புலி போலத்தான். 94% திட்டங்களுக்கு 

திட்டத்தின் மதிப்பீடு சார்ந்து காட்டில் செய்யும் பணிகள், அங்குள்ள பல்லுயிரினச்சூழல் பாதுகாப்பு (அ) 
இதனைச்சார்ந்து வாழ்வாதாரமாகக்
கொண்டு வாழும் மக்கள் ஆகியவை குறித்து எதுவும் ஆராயப்படாமல் அனுமதி கொடுக்கப்படுகிறது. பின் 
நிபந்தனைப்படி, சூழல் கேட்டினை ஈடுசெய்ய நஷ்ட ஈடாக காட்டினை வளர்க்க சில ஹெக்டேர் நிலங்கள் 
மாறுதல் செய்யப்படுகின்றன. மரங்கள் தனியாக நின்று தாக்குப்பிடித்து வாழ்ந்து வளர்ந்துவிடுமா என்று 
பலரும் அறியமாட்டார்கள். அரசு தொடர்ந்து நடவடிக்கை எனும் கேலிக்கூத்தினை நிறைவேற்றி 
வருகிறது. சட்டமும், நடைமுறையும் பேரளவில் வேறுபட்டு இருக்கும்போது எப்படி சரியான 
செயல்பாடு சாத்தியம்? இதனைத் தீர்க்க அமைப்புகளை வலுவாக்கவேண்டும். போபால் நிகழ்வு நடந்து 
30 ஆண்டுகளுக்குப்பிறகு சுற்றுச்சூழல் நிர்வாகம் என்பதற்கு இதுதான் நிகழ்ச்சிநிரலாக அமைய 
வாய்ப்புள்ளது.




இன்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களில் அதிகளவு பணியிடங்கள் காலியாக உள்ளன. 

ஆந்திரப்பிரதேசம், ஹரியானா, ஒடிஷா ஆகிய மாநிலங்களில் 30% ம், பீகார், கர்நாடகா ஆகிய 
மாநிலங்களில் 60%ம் காலியாக உள்ளன. மத்திய மாசுக்கட்டுப்பாட்டுப்பாட்டு வாரியம் முழுநேரத்தலைவர் 
இல்லாமல் கடந்த சில ஆண்டுகளாக இயங்கிவருகிறது. இந்த அமைப்புகள் நாடெங்கும் இயங்கும் 
விதமும் பற்றாக்குறையாக, மோசமாக இருக்கிறது. ஆனால் அரசுகள் இது பற்றியெல்லாம் கிஞ்சித்தும் 
கவலைப்படுவதில்லை. தவறான விஷயங்களை சரிசெய்வதை தவிர்த்துவிட்டு, புதிய அமைப்புகளை 
உடனே உருவாக்கி, பல விஷயங்களை அதில் இணைத்து குழப்பமாக்குவது என்றே செயல்படுகின்றன.



மற்றொரு நிகழ்ச்சிநிரலாக ஒப்புதல் மற்றும் விதிமுறைகளை அமுல்படுத்துவது குறித்த 

செயல்பாடுகளை மேலும மேம்படுத்தவேண்டிய தேவையிருக்கிறது. தற்போதைய சட்டங்களை குற்றம் 
சாட்டாமல் இருக்க கடினமான முடிவுகளை எடுத்து, விதிமுறைகளை கடைபிடிப்பது குடிமை 
நிர்வாகத்தினை எளிமையாக்கும். முடிவிற்காக எப்போதும் நீதிமன்றங்களையே நாடிச்சென்று 
கொண்டிருக்க முடியாது. ஆனால் அதே தருணம் அபராதத்தொகை அதிகரிக்கப்படுவதோடு, 
நடைமுறைகள் தெளிவானதாகவும் உருவாக்கப்படவேண்டும். உண்மையென்று நம்பும்படியான 
கடுமையான அமைப்பு கழிவுநீர் மாதிரிகளை தொகுக்கும் வரையில் இவை எவையும் நிறைவேறாது. 
உரிய ஆதாரமில்லாது மாசுபடுத்தலை செய்தவர் என ஒருவரையும் பொறுப்பேற்க வைத்துவிட 
முடியாது.



இறுதியாக, ஆனால் பெரும் சிக்கலானதாக போபாலின் கடந்த 30 ஆண்டுகளாக செய்கின்ற 

செயல்பாடுகளில் உள்ளூர் மக்களின் பங்களிப்பை சுற்றுச்சூழலில் கடும் பாதிப்பையும், நச்சுத்தன்மையும் 
ஏற்படுத்தியது குறித்தவற்றில் அதிகளவு பார்க்க முடியும். இதனை தெளிவான விசாரணை மூலமும், 
அதிக மக்கள் தரவுகளை பரவச்செய்வதின் மூலமும் கவனிப்பது என்றில்லாமல் விசாரணையில் 
பங்கேற்க வைக்கலாம்.



இறுதியாக, இந்தியாவின் சூழல்மேலாண்மை அமைப்பு பாதிவேலையையே செய்துள்ளது. இதனை 

நிறைவு செய்ய வளர்ச்சியின் சவால்களை எதிர்கொண்டு சட்டப்படி செல்லும்படியான வழியாகவும், 
அடக்கமானதாகவும் இருத்தல் வேண்டும். இதன்பின்னரே உலகின் பெரும் கொடூரமான தொழிற்சாலை 
பேரழிவு நடந்த போபாலிலிருந்து ஏதாவது பாடங்களை உண்மையாகவே நாம் கற்றுக்கொண்டோம் 
என்பது பொருளாகும்.



பொறுப்பு என்று மறக்கப்படக்கூடாது




30 ஆண்டுகளைக்கடந்தபின்னும் இந்திய அரசு யுசிஐஎல் நிறுவனத்தினை பொறுப்பு குறித்து, 

அதன் தாய் நிறுவனமான யுசிசி அதனை வாங்கிய நிறுவனமான டவ் கெமிக்கல்ஸ் ஆகியோரிடம் 
தொடர்ந்து வலியுறுத்தி போராடி வருகிறது. அவமானம்.



வேறுபாட்டை இந்த உதாரணத்தில் பாருங்கள். 2009 ஆம் ஆண்டு, பெரிய பெட்ரோலியநிறுவனமான 

பிரிட்டிஷ் பெட்ரோலியம்(BP) எண்ணெயை துளையிட்டு எடுக்கும்போது பல பீப்பாய் எண்ணெய் 
மெக்சிகோ வளைகுடாவில் கடலில் சிந்தி வீணானது. பேச அவசியமில்லை என்ற போதும், அமெரிக்க 
அதிபர் '';முட்டாள் அவனை உதைக்கவேண்டும்';'; என்று கூறியதோடு, அந்த சேதாரத்திற்கான 
தொகையையும் கணக்கிட்டு இழப்புத்தொகையாக வழங்கியது. 1989 ஆம் ஆண்டு எக்ஸன்(EXXON) 
எனும் நிறுவனம் பல கேலன் எண்ணெயினை அலாஸ்கா துறைமுகப்பகுதியில் கொட்டி, சூழலைக் 
கெடுத்தது. பொருளாதார இழப்பு மற்றும் மிகக்கடுமையான சூழல் கேடு ஆகியவற்றிக்காக அமெரிக்க 1 
பில்லியன் டாலர் அபராதம் விதித்தது. இதற்கு எதிராக போபால் நிவாரண உதவிக்காக அமெரிக்கா 470 
மில்லியன் டாலர்கள் மட்டுமே தருகிறது. அட்லாண்டிக் கடலில் இறந்துபோன சீல்களின் 
உயிர்மதிப்பைவிட, போபாலில் இன்றுவரையிலும் தொடர்ந்து உடல்நலக்கோளாறுகளால் 
பாதிக்கப்பட்டும், ஆயிரக்கணக்கில் இறந்தும்போன மனிதர்களின் உயிர் மற்றும் தொலைந்துபோன 
வாழ்வாதாரம் ஆகியவை மதிப்பு குறைந்ததா? 



போபாலில் அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான யுசிசி நச்சுவாயு கசிந்து விபத்து ஏற்பட்டதை 

நாசவேலை என்று வாதிட்டது. இந்திய அரசு இதில் நிறுவனத்தின் அலட்சியம் (அ) முறைப்படுத்தும் 
அமைப்பின் தோல்வி (அ) தரக்கட்டுப்பாடுகளின் போதாமை என எதையும் நிரூபிக்க 
(விரும்ப)வில்லை. நிறுவனத்தின் பொறுப்பு குறித்து எதுவும் கூறப்படாததில் சிறு பகுதி அறியாமை 
அதோடு சேர்ந்த ஆற்றல் போதாமையும் காரணமாகும். இன்று அரசு, யுசிஐஎல் விட்டுப்போன 
கழிவுகளைக்குறித்த பொறுப்பை அந்நிறுவனம் ஏற்க வலியுறுத்தாததால்
அந்த நிலத்தை நச்சுத்தன்மையற்றதாக மாற்றி புதுப்பிக்கும் பணிக்கான செலவுகளை அரசே ஏற்க 
வேண்டிய நிலைமை உள்ளது. இதற்காக அமைச்சர் குழு, முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் 
அவர்களைச்சந்தித்தது. இது குறித்து அவர், ';';அரசு நீதிமன்றங்களிடம் வேண்டுகோள் விடுத்து யார் 
பொறுப்பை ஏற்றுக்கொள்வது என்பதை டவ் நிறுவனம் (அ) யுசிஐஎல் (அ) யுசிசி என அதனைப் பிறகு 
வாங்கியவர்களிடம் விரைவாக கேட்க முயலலாம்';'; என்று கூறினார். இதன் அர்த்தம் என்னவென்றால், 
அரசு நடந்த விளைவுகளை காணத்தயாராக இல்லை. மாசுபடுத்துதலுக்கு காரணமான நிறுவனமே 
அபாயகரமான கழிவுகளுக்குப் பொறுப்பேற்று அவற்றை சுத்தப்படுத்த வேண்டும் என்பதேயாகும்.



இந்த விவகாரத்தில் நீதிமன்றங்களும் கூட நிர்ணயமற்று இருந்தன. வழக்குரைஞர்களான திவான், 

ரோசன்க்ரான்ஸ் இது குறித்து விரிவாக விளக்குகிறார்கள். பூரண பொறுப்பு என்பதை உச்சநீதிமன்றம் 
மரபான பொறுப்பு குறித்த கொள்கைகளை மாற்றிக்கொண்டுவிட்டது. ஸ்ரீராம் வாயு கசிவு வழக்கில் 1986 
ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்திற்கு வந்தபோது, தலைமை நீதிபதி பி.என். பக்வதி, பெரும் நிறுவனங்கள் 
அதற்கு பொருட்களை தயாரித்து விநியோகிக்கும் நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து விற்பனை 
செய்யும் பொருட்களின் தரம், கொள்கைகள், அதில் ஏற்படும் அபாயம் ஆகியவற்றுக்கான பொறுப்பு 
பற்றிய கேள்விகள் பெரும் முக்கியத்தும் கொண்டவையாகும். எனவே உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் 
';';நிறுவனத்திற்கு அதன் கீழ் உள்ள அபாயகரமான பொருட்களினால் கெடுதல்கள் (அ) இயற்கையான 
அதன் தன்மை ஆகியவை மக்களுக்கு ஆபத்து விளைவித்தால் அதற்கான பூரண பொறுப்பு அதற்கு 
உண்டு';'; என வரையறுத்தனர். ';';ரைலான்ஸ்வ் ஃப்ளைச்சர் சட்டத்தின் கீழ் நிறுவனமானது, அதனால் 
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்க பொறுப்பானது, இந்த பொறுப்பு விதிவிலக்கு 
இல்லாதபட்சத்தில் முறையற்றதான கொள்கை எனவும் கூறப்படலாம்';'; என்று கூறினர். இந்தவிதியின் 
கீழ் உரிய பொறுப்பு என்பதற்கு பல்வேறு விலக்குகளும் உள்ளன. விதியின் வாதியின் தவறுகள், 
நாசவேலை ஆகியவை பொறுப்பு குறித்த நம்பிக்கையை தகர்க்கிறது. இந்தவிதியே மத்தியப்பிரதேச 
உயர்நீதிமன்றத்தில் போபாலில் நச்சுவாயுவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இடைக்கால 
நிவாரணத்தொகை வழங்கும் வழக்கில் பயன்படுத்தப்பட்டது. நீதிமன்றம் நிறுவனத்தின் மீதான பொறுப்பு 
குறித்து ';கேள்வியே இல்லாதது'; என்று கூறியது.



ஆனால் பூரணபொறுப்பு என்பதை கேள்விகளைக்கேட்டும் பின்தொடர்ந்து அதனை குறைத்தும் வருகிற 

உச்சநீதிமன்றம் நகைமுரணாக போபால் தீர்மானம் குறித்த மதிப்பீடுகளையும் கேட்டது. நீதிபதிகள் 
ரங்கநாத் மிஸ்ரா, எம்.என். வெங்கடாச்சலய்யா ஆகியோரினால் பூரணபொறுப்பு என்பது மறுக்கப்பட்டு 
யுசிசிக்கு பிரதிவாதங்களில் அந்நிறுவனம் விரும்பினால் விசாரணை செய்யவும், சோதிக்கவும் உரிமை 
உண்டு என்று கூறினார்கள். உண்மையில் யுசிசி போன்ற உறுதியான நிறுவனத்தின் பொறுப்பு குறித்து 
முன்னே கூறப்பட்டவற்றின் அடிப்படையில் நாம் மேலே இதனை தொடரமுடியாது. யுசிசி நிறுவனம் 
தனது அடிப்படை பொறுப்புகள் குறித்து தீவிரமாக வாதிடுகிறது. யுசிசிக்கான உரிமைகளை ஆதரித்து, 
பிரதிவாதங்களை துரிதப்படுத்துகிறது நீதிமன்றம் என்று திவான், ரோஸன்க்ரான்ஸ் ஆகியோர் 
கூறுகின்றனர். விதிவிலக்கு அற்ற என்பதிலிருந்து விலகி நின்ற தன்மை மாறி பூரணபொறுப்பு 
அண்மையில் ஏற்கப்பட்டிருக்கிறது.



நிறுவனங்களுக்கு பொறுப்பு அவசியம்




போபால் நிகழ்வு நமது ஒட்டுமொத்த அவமானங்களை உள்ளடக்கியது. தொழில்சட்டங்கள் அதிக 

பாதுகாப்பற்றதாகவும், புதிரானதாகவும் உலகை மாற்றிவரும் நிலையில், அதனை செயல்படுத்தும் 
பன்னாட்டு நிறுவனங்களின் மிச்சமுள்ள பெரும் போதனைகளைக் கொண்ட பொறுப்புணர்வு பற்றியதும் 
கூட.



அணு சேதாரச்சட்டம் 2010ல் சமூக பொறுப்பு என்பது, ஆபத்தான தொழில்நுட்பத்தினால் பல்வேறு 

விபத்துகள் நேரிடும் வாய்ப்புள்ள இதனை யார் தொடங்கிவைப்பது என்பது சிக்கலாக உள்ளது. 
இன்றுவரையிலும் அணுசக்தி சேதம் என்பதில் அதனை இயக்குபவர் அதற்கான பொறுப்பேற்பாரா என்பது 
இந்திய – அமெரிக்க பேச்சுவார்த்தையில் குறையாத வீண்பயமாக உள்ளது.



ஏன் நாம் அணுஉலையை இயக்குபவர்களிடம் நமது பாதுகாப்பிற்காக குறிப்பிட்ட தொகையை 

செலவிடக்கோரிக்கை விடுப்பதில்லை. இதனால் நமது காப்பீட்டுத்தவணைத்தொகை அதிகரிக்கிறது, 
மின்சக்திக்கான தொகை அதிகரிக்கிறது, அணுசக்தி என்பது திரும்பமுடியாத பாதையாகும். பாதுகாப்பு 
மற்றும் உண்மை என்பதில் தலைமுறைக்கான விலை என்றும் கூறலாம்.
அதனை வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், அதிக ஆபத்தான தொழில்நுட்பங்களை 
பயன்படுத்தும்போது, தொழில்நுட்பங்களை மலிவானதாக இவை மாற்றாதபோதும் அதற்கான 
விபத்துகளை தவிர்ப்பதற்கான அதிக விலையுயர்ந்த சாதனங்களை ஏன் நாம் கோரிப்பெறுவதில்லை? 
போபால் நிகழ்வை கடந்துவந்த காலத்தில் அனைத்து தொழில்நுட்பங்களுக்கும் ஆன உண்மையான 
விலை நிகழ்காலம் மற்றும் எதிர்கால ஆபத்துகளில்தான் உள்ளது என்பதை உணரலாம். ஒன்று நம்மால் 
சாத்தியமாகலாம்; ஒரு சமூகமாக, ஆபத்துகளை முயன்று சிறப்பாக புரிந்துகொள்வதும் சரியான, 
பொருத்தமான தொழில்நுட்பத்தை தேர்ந்தெடுப்பதும் நமது பொறுப்புகள்தான்.



மரபணு மாற்றப்பட்ட பொருட்களின் அறிமுகம் என்பதின்போதே, உலகநாடுகள் பலவும் பூரணபொறுப்பு 

கொள்கையை எடுத்துக்கொண்டுவிட்டன. Cartagena protocol biosafety(பல்லுயிரின 
வேறுபாட்டுத்தன்மை ஒப்பந்தம்) என உலகத்தில் முதல்முறையாக தொழிற்சாலை இயக்குபவர்களே 
புதிய தொழில்நுட்பங்களால் திடீரென நேரும், சூழல்பிரச்சனைகள் என சேதாரம் முழுக்கவுமான 
பொறுப்பாளி என்று கூறுகிறது.



முக்கியமாக, நிறுவனத்திற்கான பொறுப்பு என்பது கடினமானதாக இருந்ததனால் சக்தி வாய்ந்த 

நிறுவனங்கள் தமது இச்செய்கைகளால் அடுத்த தலைமுறை என்ன கருத்தினை தம்மீது கொள்வார்கள் 
என்று கவலைப்பட்டன. ஆனால் இன்று வேதிப்பொருட்கள், மரபணு மாற்றப்பட்ட பொருட்கள், 
அணுசக்தி (அ) சுரங்கம் மற்றும் எண்ணெய் எடுப்பது என எந்த வழியிலேனும் குறுகிய காலத்தில் 
பெரும் சம்பாதித்துவிட்டு வேறிடத்திற்கு ஓடிவிடுவது வழக்கமாகி வருகிறது. நிறுவனங்களின் பொறுப்பு 
குறித்த விதிகள் கடுமையானதாக நம்மிடம் இருந்தால் மட்டுமே இருமுறையேனும் சிந்தித்துப்பார்த்து 
நிறுவனங்கள் மக்களுக்கு ஆபத்து விளைவிப்பது குறித்து பயப்படுவார்கள். அவர்கள் எரிச்சல் 
கொள்ளட்டும். ஆனால் நமக்கு நிம்மதியான தூக்கம் தேவை அல்லவா?



ஏன் போபால் என்றும் மறக்கப்படக்கூடாது என்பதன் பதிலாக இவையே பதிலாக உள்ளது. 

கைவிடப்பட்ட தொழிற்சாலையில் டவ் நிறுவனம் பொறுப்பேற்க வேண்டிய கழிவுகள் இன்னும் 
தேங்கிக்கிடக்கின்றன. அந்த தொழிற்சாலைக்கான நிலம் புதுப்பித்தலுக்கான கட்டணத்தையும் 
அந்நிறுவனம் தரவேண்டியிருக்கிறது.

இச்செயல்பாட்டினை வேகமாக செய்யவில்லை என்றால், நச்சுத்தன்மையானது நிலத்தடி நீர் வழியாக 
மக்களின் உடலுக்கும் வேகமாக பரவிவிடும். எனவேதான் போபால் என்பது சாதாரணமான ஒன்றல்ல. 
நமது ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மக்களுக்கு நீதியைப்பெற்றுத்தரவும், உலகில் சூழலுக்கு 
உகந்ததைச் செய்யவுமானதாக மாறட்டும்! 



நன்றி: www.downtoearth.com






துணைநின்றவை



லினக்ஸ் மின்ட் 17

லிப்ரே ஆஃபீஸ் 4
ஜிம்ப் 2.8
இன்க்ஸ்கேப் 0.48 



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்