சேட்டன் பகத் இளைஞர்களின் இந்தியா (அரசியல்)

















                  சேட்டன் பகத்


                               இளைஞர்களின் இந்தியா
    (அரசியல்)



தமிழில்
வின்சென்ட் காபோ, ஷான் ஆரோன்












சேட்டன் பகத் 'இளைஞர்களின் இந்தியா' (what young india wants) நூலின் அரசியல் பகுதி கட்டுரைகளின் தமிழ்மொழிபெயர்ப்பு இவை.

தமிழில்:வின்சென்ட் காபோ,ஷான் ஆரோன்
 காப்புரிமை: மூல ஆசிரியரான சேட்டன் பகத் அவர்களுக்கு.
 தொகுப்பு உதவி: ஜார்ஜ் பரிக்குட்டி, நிலோஃபர் ரஹ்மான், ஜிதில் ஜாஸ்
 பதிப்பாசிரியர்: அன்பரசு ஷண்முகம், ஆனந்த் ராமசாமி 
 மின்னூல் பதிப்புரிமை & வலைப்பூ வெளியீடு: தி ஆரா பிரஸ், Komalimedai.blogspot.in
 மின்னஞ்சல்: sjarasukarthick@gmail.com

 அட்டைவடிவமைப்பு மற்றும் நூலழகு: Creative tribunal

காப்புரிமை மூல ஆசிரியரைச்சார்ந்தது. எனவே இந்நூலை படிக்கலாம். ஆனால் எவ்வகையிலும்  வணிகரீதியில் பயன்படுத்தக்கூடாது.




















திருவண்ணாமலையில் மலையைச்சுற்றி சேர்ந்திருக்கும் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் நேச்சர் 360 அமைப்பைச்சேர்ந்த பாஸ்கர் ஆறுமுகம் மற்றும் அவரைச்சேர்ந்த  நண்பர்கள் குழுவினருக்கு....










 இனிய பொழுதினில்....

அன்புத் தோழமைகளுக்கு இனிய வணக்கங்கள். சேட்டன் பகத்தின் பத்து கட்டுரைகளைக் கொண்ட அரசியல்பகுதியினை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறோம். மொழிபெயர்ப்பு குறித்த ஏகப்பட்ட வரையறைகளை ஏதேனும் வாய்ப்பு கேட்கும் போது பல பதிப்பக அதிபர்கள் ஏகத்திற்கும் அள்ளிவிடுகிறார்கள். அவர்கள் ஒரட்டாங்கையா, சோத்தாங்கையா என்பதில் எங்களுக்கு பெரிய வேறுபாடுகள் தெரியவில்லை. இந்த கட்டுரைகள் மூலத்திலிருந்து அதிக சேதாரங்கள் இல்லாமல் மொழிபெயர்க்க முயற்சி செய்திருக்கிறோம். சேட்டன் பகத்தின் அரசியல்ரீதியான கருத்துகளை ஓரளவு அடையாளம் காண இந்த கட்டுரைகள் உதவும் என்று நம்புகிறோம். 

சேட்டன் பகத் மக்களை எப்படி புரிந்துகொள்கிறார் என்று எங்களுக்கு இக்கட்டுரைகளை மொழிபெயர்க்கும் போது ஆச்சர்யமாக இருந்தது ஏனெனில் அவர் சில எச்சரிக்கைகளை முன்னமே கூறியிருந்தவை பின்னர் சமகாலத்தில் நடந்திருக்கின்றன. குறிப்பாக தலைவன் இவனொருவன் எனும் கட்டுரையில் தலைவர் எப்படி இருக்கவேண்டும் என்பதைக்கூறலாம். தெருக்களில் இந்தியா என்ற கட்டுரையும் நாம் எதில் இனி கவனம் செலுத்தவேண்டும் என்பது குறித்த கவனம் ஏற்படுத்துகிற ஒன்றாகும். மேலும் பல கட்டுரைகள் எந்த கட்சி என்று குறிப்பிடாமல் எழுதப்பட்டிருந்தாலும் அவை மக்கள் எவ்வளவு விழிப்புணர்வாக இருக்கவேண்டும் என்பதை அறிவுறுத்துபவையே.

வரையறைகளைத்தாண்டி வளர்வது இலக்கியப் பயிற்சிக்கு மிக அவசியம். இறுக்கமான கட்டுப்பாடுகள் கொண்டுள்ள அமைப்புகள் நாளடைவில் காலப்போக்கில் உயிர்ப்பில்லாத அந்த கொள்கைகள் போலவே மனிதர்களையும் உயிரற்ற ஜடமாக்கி படைப்பில் கருத்துகளை தேடவைத்துவிடுகிறது. கட்டுரை என்பதில் உண்மை, புனைவு என்பதில் வாழ்வனுபவம் என்பதுதான் யதார்த்தம். அரசியல் இருந்தாலும் அவற்றோடு வாழ்வனுபவத்தினை ஏற்பது சிக்கலானது. எதையும் அறிந்துகொண்டு அதற்கான கருத்தை வாசகர்கள்தான் தீர்மானிக்கவேண்டும். மற்றபடி மொழிபெயர்ப்பு குறித்து சரளம் என்பதைத்தவிர்த்து வேறு எதாகிலும் கருத்து இருந்தால் நிச்சயம் தெரிவியுங்கள். நன்றி!

வின்சென்ட்காபோ
ஷான் ஆரோன்












1. வாக்குவங்கி எனும் சூழ்ச்சி
2. நிலம் எனும் நல்லாள்
3. இந்தியாவின் ஜனநாயக இளவரசர்கள்
4. வசந்தகாலத்தூய்மைக்கு தயாரா?
5. சிறுபிள்ளைத்தனமான காலம்
6. தலைவன் இவனொருவன்
7. நம்பிக்கை போதாமையை நீக்குவது எப்படி?
8. தெருக்களில் இந்தியா
9. பாதுகாப்பு பிரயத்தனங்கள்
10. அமைதிக்கும் அன்பிற்குமான குழப்பங்கள்










அரசியல்












    14
வாக்கு வங்கி எனும் சூழ்ச்சி

வாக்குவங்கி அரசியல் சமகாலத்தின் நவீன பிரித்தாளும் கொள்கையாகும்.

சில சமயங்கள் தொடர்ந்து அடக்குமுறைக்கு ஆட்படுத்தப்படும்  சிறுபான்மை இனக்குழுவில்  இருப்பது  குறித்து எண்ணி ஆச்சர்யமுறுவேன். நான் முஸ்லீமோ (அ) தலித்தோ அல்ல. பெண்ணும் அல்ல. வடகிழக்கு பகுதியைச் சேர்ந்தவனும் இல்லை. இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களைவிடவும் அப்பகுதி சார்ந்தவர்கள் பெரிதும் வேறுபடுகிறவர்கள் ஆவர். வங்கியில் வெளிநாட்டில் வேலை செய்தபோது, இந்தியர்களை வித்தியாசம் பாராட்டும் தன்மை என்னை சிறுபான்மையினராக உணரச்செய்தது. இன்றும் அது அற்பத்தனமானது என்றே நினைக்கிறேன்.

சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்தவர்களது உணர்ச்சிகளை முழுமையாக என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இன்றும் இந்தியாவைச் சேர்ந்த சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு அறிவுரை கூற அதி துணிச்சல் தேவைப்படுகிறது. அவர்களின் சூழலை உணர்ந்து பேச நம்மில் பெரும்பான்மை இனக்குழு சார்ந்தவர்களுக்கு கூட முழுமையான தகுதி இல்லை.

சிறந்த இந்தியாவினை உருவாக்கத் தேவை சிறந்த தலைவர்கள் ஆவர். நாம் அனைவரும் இணைந்து உழைக்கவேண்டும். வாக்களிப்பது குறித்து நாம் மேலும் சிறப்பாக கற்கவேண்டும். அதனை சரியாக செய்யாத நிலையில்தான், சமூகத்தின் மிக மோசமான அறமே இல்லாத மனிதர்கள் மேலே உயர்த்தப்பட்டு உள்ளார்கள். இதற்கு காரணம் நாம் மோசமான அமைப்பை கொண்டிருக்கிறோம் (அ) வாக்களிப்பது குறித்த நமது அறியாமை என்று கூறலாம். பெரும்பாலும், வேட்பாளர்கள் நம்மை முட்டாள்களாகவே வைத்திருக்க கற்றுக்கொண்டு விட்டார்கள்.

வாக்குவங்கி அரசியலின் மூலம் சில அரசியல்வாதிகள் நம்மை முட்டாள்களாக்குகிறார்கள். சிறுபான்மை சமுதாயத்தின் மீதுள்ள வேறுபாட்டினைப் புரிந்துகொண்டு அச்சமுதாயத்தின் காவலர்களாக தம்மை அறிவித்துக்கொண்டு, அச்சமுதாயத்தினரை தமக்கு வாக்களிக்க அறிவுறுத்துகிறார்கள். சிறுபான்மை சமுதாய உறுப்பினர்கள் தாம் வாக்களிக்கும் வேட்பாளர் மற்றும் கட்சி தம்மை அதிகாரம் வந்தபின் காத்துநிற்கும் என்று நம்புகின்றனர். துரதிர்ஷ்டவசமாக அந்த எண்ணங்கள் நிறைவேறுவதில்லை. திறமையும், நேர்மையும் இல்லாத தவறான ஒருவரை தேர்ந்தெடுத்தால் என்ன நிகழும்? சிறுபான்மை சமுகத்தின் நம்பிக்கை அடையாளமாக அவர் கருதப்படுவதால்தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

பல்லாண்டுகள் கடந்துபோனபின்னும் சிறுபான்மை சமுதாயம் தொடர்ந்து வித்தியாசமாகவே நடத்தப்பட்டு வருகின்றனர். அனைத்து சிறுபான்மை சமுதாயத்தினரும் ஆசைகாட்டி போலித்தனமாக வாக்குவங்கி அரசியல் மூலம் ஏமாற்றப்படுகிறார்கள். முஸ்லீம் சமுதாயத்தினர்தான் இதில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஏனெனில் அவர்களின் எண்ணிக்கை சிறுபான்மையினரில் அதிகமாகும். இனக்குழுரீதியாக அவர்களும் வேற்றுமை பாராட்டுவதில் தவிர்க்கப்பட முடியவில்லை. இந்த அநீதியை எதிர்க்க அனைத்து சிறுபான்மையினரும் ஒன்றாக அணிதிரண்டால், அரசியல்வாதிகளின் வாக்குவங்கி அரசியலை நம்மிக்கையுடன் தடுத்து நிறுத்த முடியும்.

எனது அன்பிற்குரிய முஸ்லீம் சகோதர சகோதரிகளே உங்களால்  முடியும். ஆம். நீங்கள் அரசியல்வாதிகளால் காலம்தோறும் ஏமாற்றப்பட்டு வாக்குறுதிகள்  நிறைவேற்றப்படாமல் தொடர்ந்து வித்தியாசம் பாராட்டப்படும் நிலையில் வைக்கப்படுவது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அவர்கள் பல இலவசங்களை உங்களுக்கு வழங்கி, நாட்டினை தொடர்ந்து வறுமையில் வைத்து இருப்பதோடு, மிக மோசமான நிர்வாகத்தின் கீழே தள்ளுகின்றனர். அடிப்படை மற்றும் முறையான கட்டுமானங்கள், நீர்ப்பாசன வசதிகள், தேவையான பள்ளிகள், கல்லூரிகள் (அ) மருத்துவ வசதிகள் என ஒவ்வொரு குடிமகனுக்கும்  மதிக்கத்தக்க வாழ்வை அவர்கள் உருவாக்கவே இல்லை. ஆம். அவர்கள் ஒட்டுமொத்த தேசத்தையுமே ஏமாற்றுகிறார்கள். அவர்கள் தங்களின் மோசமான நிர்வாகக் குறைபாடுகளை, நாட்டின் பல்வேறு பிரச்சனைகளிலிருந்து கவனத்தை   திசை திருப்ப இந்து - முஸ்லீம் விவாதங்களை ஏற்படுத்தி அதில் மக்களாகிய நம் கவனத்தை சிதறடிக்கின்றனர். ஒரு மாணவனுக்கு சிறந்த கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. அவன் இந்துவாக (அ) முஸ்லீமாக இருப்பதில் என்ன பிரச்சனை?, இடம் கிடைக்கவில்லை என்பது ஏற்படுத்தும் பாதிப்பு ஒன்றுதான். அரசு மருத்துவமனைகள் நோயாளிகளை விலங்கினும் கேவலமாக நடத்துகிறபோது நோயாளியின் மதம் என்பது முக்கியமானதல்ல. 90% இந்தியர்கள் புதிய நல்ல  தேவையான பழங்களை பணவீக்கத்தினால் வாங்க முடியவில்லை என்பது குறிப்பிட்ட இனக்குழுவை மட்டுமே பாதிக்கக்கூடியதா என்ன?

நாம் அனைவரும் இந்த நேரத்தில் பிரச்சனைகளின் தீர்வு குறித்து அரசியல்வாதிகளைக் கேள்வி கேட்கவேண்டும். அவர்கள் அதற்கு பதிலாக செயற்கையான பிரச்சனைகளை உருவாக்குவதன் முன்னமே இந்தியாவின் முஸ்லீம்கள்  அரசியல்வாதிகளை வேலை செய்ய துரிதப்படுத்தவேண்டும் என்று விரும்புகிறேன். தங்களின் ஒட்டுகளை (அ) கௌரவத்தை எந்த அரசியல் கட்சிகளும் தீர்மானிக்க அவர்கள் அனுமதிக்க கூடாது. காலம் அவர்கள் கூறியதை உங்களுக்கு வழங்கச் செய்யும். தொடர்ந்து நிலையில்லாத வாக்குகளின் மூலம், இறுதியில் சிறந்த (அ) தீமைகள் குறைவாக உள்ள கட்சிக்கு வாக்களிக்க முயலலாம். காலம் கடந்தும் உங்களின் வாக்குகள் மிகவும் மதிப்பு வாய்ந்தவையாகும்.

சிறுபான்மை சமுதாயத்தின் மீது குறிப்பிட்ட வடிவங்களில் (அ) பிறரால் வித்தியாசம் பாராட்டப்படும்போது, மேலே உள்ள காரணத்தை தொடர்ந்து எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. சட்டரீதியாக வேற்றுமை பாராட்டுதலை தவிர்த்தும் கலாசாரரீதியாக நாம் தாராள மனதைக் கொண்டிருக்காத போது, இந்தியா வளர்ந்த நாடு என்பது கனவில் வரும் ஒன்றுதான்.

இந்திய வரலாற்றில் முக்கியமான புள்ளியில் நாம் நிற்கிறோம். குறிப்பிடத்தக்க பகுதியைச் சேர்ந்த மக்கள் மாற்றம் வேண்டிய தாகத்துடன் நிற்கிறார்கள். வாக்குவங்கி அரசியல், மதவெறுப்பு அரசியல் ஆகியவை இந்தியர்களல்லாதவர்கள் என அடையாளப்படுத்தவேண்டும். மேலும் நமது மதங்களுக்கு இது சோதனையான காலம். இது நமது நாடு; தங்களுடையதும் என்னுடையதுமானது. அதனை சிறந்ததாக உருவாக்கவேண்டாமா? நீங்கள் அதற்கு தயாராக இருக்கிறீர்களா?








15

நிலம் எனும் நல்லாள்

சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகளாகியும் ப்யூடலிசத்தை ஏன் கைவிடக்கூடாது?

மத்திய கிழக்கு மும்பையில் வடாலாவில் உள்ள 6 ஏக்கர் நிலமானது விற்கப்பட்டது வானியல் கணக்கு போல ஒரு தொகைக்கு. வடாலா வளர்ந்துவருகிற பகுதி என்றாலும் குறிப்பாக நவநாகரீக பகுதி என்று கூறிவிடமுடியாது. அதிர வைக்கும் தொகை சாத்தியமானது ப்ளோர் ஸ்பேஸ் இன்டக்ஸ்(FSI) தன்மையின் மூலம் இருபது மடங்கு அந்த பகுதியின் நிலமதிப்புக்கு கூடுதலாக அந்த நிலத்தை விற்றுள்ளார்.

ஆகஸ்ட் 2010, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் பல கூடுதல் படிகள், ஓய்வூதியம் தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட, அவர்களின் சம்பளம் ரூ. 10000 லிருந்து மாதத்திற்கு ரூ. 50000 எனும் அளவிலும், பல்வேறு படிகள் எனுமளவில் இரட்டிப்பாக உயர்த்தப்பட்டன. இந்திய எம்.பிகளுக்கு உலகளவிலுள்ள மற்ற பகுதிகளைக் காட்டிலும் குறைவான தொகையே வழங்கப்பட்டு வந்தது  (அ) திறமை தேவைப்படும் புத்திசாலித்தனம், தலைமைத்துவ தனித்துவம், குடிமைச்சேவை அதிகாரிகளின் பணியினால் இவர்கள் சிறிது துறை பற்றிய புரிதலோடு இருக்கிறார்கள்.

எம்.பிகளுக்கு சம்பளம் மற்றவர்களை விட குறைவாக தரப்படுகிறது என்பதால் நமது சட்டங்களை உருவாக்குபவர்களும், அரசு நிர்வாகமும் நிதிப்பிரச்சனையில் தவிப்பதாக அர்த்தமல்ல. பெரும் அசையா சொத்துகளை அரசு தன்னகத்தே கொண்டிருக்கிறது. லுட்டின்ஸ் டெல்லி தவிர்த்து முக்கியமான ஆயிரம் ஏக்கர்களில் பெரிய பங்களாக்கள், எம்.பி வீடுகள், பல்வேறு அலுவலகங்கள், அரசு நிறுவனங்கள் அமைந்துள்ளன. மேலும் கூடுதலாக டஜன் கணக்கான  சிந்தனைக்குழுக்களின் ஆக்கிரமிப்பும் கூடுதலாக. இவர்கள் தம் அறிவினால் சமூகத்திற்கு அளித்த பங்களிப்பு குண்டூசி துவாரத்தின் அளவா இல்லை என்று கூறுவது கடினம் என்றாலும் ஒன்று (அ) இரண்டு வலுவான பங்களிப்புகளை கடந்த காலங்களில் செய்துள்ளதாக அவர்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

என்ன காரணமாகவேனும் இருக்கட்டும். நான் அவர்களை கீழே இறக்கவேண்டும் என்று கூறவில்லை. அரசு வீடுகள், முக்கியமற்ற அரசு அலுவலகங்கள், முக்கியமான அரசு நிலங்களில் இருந்து குர்கான் (அ) நொய்டா போன்ற தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளிலிருந்து வெளியேற வேண்டும். அந்த வெளியேற்றம்  மூலம் எம்.பிகள் அதனை குடிசைப்பகுதி ஆக்குவதல்ல (நமக்கு தெரியும் அவை நடக்காது) புதிய அரசு கட்டிடங்கள் குளிர்சாதனவசதி, வை-பை வசதிகளைக்கொண்டிருப்பவையாகும். வீடுகள் வசதி, அளவு, கட்டுமானம் ஆகியவற்றின் சொகுசானவை ஆகும். எம்.பிகள் தமது தனிப்பட்ட கௌரவம் பொறுத்து அவர்கள் விரும்புகின்ற அறைகளைக்கொண்ட வீடுகளைப்பெற முடியும். அவர்கள் கேட்கும் அளவிலான பணத்தையும் உயர்த்திப்பெற முடியும்.

நமது அன்பிற்குரிய சிந்தனைக்குழு அறிவுஜீவிகள் புதிய கட்டிடங்கள் வெளியே நீரூற்று கொண்டவற்றின் வெளியே அமர்ந்து, தலையை சொறிந்துகொண்டு நாள் முழுவதும் ஒன்று செய்வார்கள். மன்னிக்கவும், எதுவும் செய்யமாட்டார்கள். ஆனால் சிந்திப்பார்கள். குர்கான் (அ) நொய்டாவில் செய்தது போலவே டெல்லியிலும் செய்வார்கள். நிச்சயமாக அடுத்து கோல்ப் லிங்க்ஸ், கான் மார்க்கெட் ஆகிய இடங்களிலும் இப்போது போலவே மக்கள் நலவாழ்வு குறித்த சிந்தனைகளோடு இவர்கள் இருக்கக்கூடும்.

செலவுக்கணக்கொன்றினை கணக்கிடுவோம். ஒரு ஏக்கர் அளவிலான லுட்டிஸ் டெல்லியில் உள்ள பங்களா ரூ. 100-150 கோடிகளுக்கு விற்கப்படுகிறது. ஆயிரம் ஏக்கர் அளவில்(FSI) எனும்போது, இதைவிட பத்துமடங்கு அதிகம். இதில் பாதியாக பார்த்தால் 5,00,000 கோடி ரூபாய் வருகிறது. இவ்வளவு முதலீடுகளைக் கொண்டுள்ள நிலங்களை நமது  அரசு அற்பமான தொகைக்கு எம்.பிகளுக்கு வழங்குகிறது. குர்கானில் உள்ள இடத்தில் இந்த அமைப்பு முழுவதையும் மாற்றினால், நவீன வீடு, அலுவலகம் நீருற்றுகளோடு சிந்தனைகுழுக்களுக்கு என்று தரும்போது 20000 கோடிக்கு மேல் வருகிறது (அ) 4% முதலீட்டுத் தொகையில் இதுபோன்ற தொகையினை பயன்படுத்தினால், தள்ளாடிக்கொண்டிருக்கும் அரசின் கடன் தொகையை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் அரசு செலுத்த வேண்டிய வட்டி கணிசமாக குறைக்க முடியும். (4,80,000 கோடி தொகை குறைந்தால், 40,000 கோடி வட்டியை ஒவ்வொரு ஆண்டும் குறைக்கலாம்) 

இது டெல்லிக்கு மட்டுமேயான வாய்ப்புகள் எனலாம். இதுபோல ஒவ்வொரு மாநில தலைநகரிலும் எண்ணற்ற அரசு நிலங்கள் பல்வேறு உதவிகளுக்காக உறுதி செய்யப்பட்டு உள்ளன. ரயில்வே, ராணுவத்திற்கான நிலங்கள் என்பதை அடுத்தபடியாக கொள்ள முடியும். இதுபோல நிலங்கள் அனைத்தும் முதலீடாக மாறும்போது நாட்டின் நிதிநிலைமை ஆரோக்கியமாக மாறும். சாதாரண மனிதனை அச்சமூட்டும் பணவீக்க பிரச்சனையும் நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.

இந்தியாவைப் போன்ற குறைந்த வருவாய் கொண்டுள்ள ஜனநாயக நாட்டில் அரசு ஊழியர் மற்றும் அவரது குடும்பத்திற்கு இரண்டு ஏக்கர் பங்களா ஏறத்தாழ 200 கோடி மதிப்பில்  இருப்பது தவறானதாக தோன்றுகிறது. 21 ம் நூற்றாண்டில் நாற்றம் கொண்ட காலனியாதிக்கத்திற்கு இடமில்லை. புதிய பகுதிகளில் அலுவலகங்கள் வீடுகள் அமைவது அந்தப்பகுதி விரிவடைய உதவுகிறது. புதிய கட்டிடங்கள் நவீனபாணி கட்டிடங்களாக மாறி அமைவது அரசின் திறமையை கூர்மையாக்கும். இதுபோன்ற நடவடிக்கைகள் நிலங்களின் மீதான அழுத்தத்தை குறைத்து, விலை சரியான அளவில் இருக்க இவை உதவுகிறது.

சில எச்சரிக்கைகளும் தேவைப்படுகிறது. குறிப்பிட்ட பாரம்பரிய கட்டிடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். பல்வேறு இடங்களில் உள்ள நிலங்கள், அத்தனை பழைய கட்டிடங்களையும் பாதுகாப்பது அவ்வளவு சுலபமான ஒன்றல்ல; அதிக நிதிப்பற்றாக்குறை, அதிக பணவீக்கம் கொண்ட பொருளாதாரம் உள்ள சமகாலநிலையில். பழமையான கட்டிடங்களை பாதுகாப்பது வீண் ஆடம்பரமாகவும் இருக்கும். அவற்றை அரசு விற்பது என்பதைவிட சில காலத்திற்கு வாடகைக்கு  என்று தந்துவிடலாம். மேலே கூறிய வடாலா நிலமானது அதிக காலத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டதே. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பும் குறைவாக இருக்கும்.

இந்த நடவடிக்கையை தவறு என்று கூட சிலர் கூறலாம். ஆனால் இதுவே நிலைமையை சமாளித்து செல்வதற்கான வழி. வெளிப்படையாக கூற வேண்டுமானால் 7% பணவீக்க பொருளாதார நிலைமையில் ஏழைகள், நடுத்தரவர்க்கம் என பணவீக்க நிலையை எதிர்த்துப் போராடி வருகிறபோது இந்த நடவடிக்கைகள் நடைமுறைக்கானது, இவற்றை நாம் ஏற்றுக் கொள்ளவில்லையென்றால் உண்மையான செல்வத்தை நாம் என்றுமே பெறமுடியாது. அறுபது ஆண்டுகளைக் கடந்த நிலைமையில் சொத்துக்களின் மீதான செலவுகள் மக்கள் தலையில் விழுவது ப்யூடலிசம் எனப்படும்.



 சட்டத்தினை உருவாக்குபவர்களுக்கு சரியானதாக இருக்காது என்றாலும் இது முடியாததில்லை. இது மக்களுக்கான நலனை உத்தேசித்த சிந்தனைகள் ஆகும். நமது மதிப்பிற்குரிய அரசியல்வாதிகளும் அப்படியே நினைத்து செயல்படுத்த வேண்டுமே?    சரிதானே!















 
16
 இந்தியாவின் ஜனநாயக இளவரசர்கள்

காட்சிக்கு மட்டுமில்லாமல் செயல்படக்கூடிய இளவரசர்கள் நமக்குத்தேவை.

இந்தியாவின் வளர்ச்சி வேகம் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற முடியாது போனதற்கு காரணம் சரியான நபரை முக்கியமான வேலைகளுக்கு தேர்ந்தெடுக்க முடியாத நுட்பமில்லாத தன்மையே காரணம். குறிப்பாக அரசியல் தளத்தில். ஏன் நாம் இப்படி இருக்கிறோம்? அரசியல்வாதி ஒருவரின் மகனை அடுத்த தலைவர் என்று ஏன் சமாதானம் செய்துகொள்கிறோம்? இதற்கு காரணமாக மூன்று சிக்கல்களைக் கூறலாம். ஒன்று, உணர்ச்சிரீதியாக சிந்தித்து முடிவுகளை எடுப்பது. ஒரே மாதிரியான எப்போதும்போலான மன்னிப்புகளை கேட்பது. ஆனால் இந்திய மக்கள் உணர்ச்சிகரமானவர்கள். நமது திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வரும் நிகழ்ச்சிகளே இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்த தன்மை பொதுவான மனிதர்களை தேர்ந்தெடுக்கும்போது, முன்வருவதால் முடிவுகள் எப்போதும் நியாயமானதாக, பகுத்தறிவுக்குரியதாக இருப்பதில்லை. நாம் பிக் பி யோடு உணர்வுபூர்வமாக இணைந்துள்ளதால், ஜூனியர் பிக்கும் வாய்ப்பினை அளிக்கிறோம். சினிமா என்ற வகையில் இந்த முடிவுகள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்திவிடப்போவதில்லை. ஆனால் நாட்டினை நடத்தி செல்பவர்கள் என்ற வகையில் இவை பெரிய கொடும்விளைவை பின்னாளில் ஏற்படுத்திவிடும். 

அரசியலில் தேர்ந்தெடுப்பது குறித்து வாக்காளர்கள் பகுத்தறிவோடு சிந்தித்து முடிவு செய்யவேண்டும். பரம்பரையாக யாரும் இதனை சரியாகச்செய்யவில்லை என்று நான் கூறவில்லை. ராகுல்காந்தி காங்கிரஸை உயிர்த்தெழச்செய்ய முயன்றுகொண்டு இருக்கிறார். நன்றாகப்பேசுகிறார்; அமைதியாக செயல்படுகிறார்; மையமான பதவிக்கு உடனே தாவிவிடவில்லை. அவரை சில காரணங்களுக்காக தேர்ந்தெடுக்கலாம். ஆனால் ராகுல்காந்தி தன் தந்தையை உங்களுக்கு நினைவு படுத்தியதற்காக அல்ல. நாட்டின் நிதிநிலைமையை மானியங்கள் குலைக்கின்றன என்று ராகுல்காந்தி பேசியதால், அவருக்கு வாக்களிப்பது குறித்து பரிசீலனை செய்யலாம். உங்கள் ஓட்டு என்பது நாட்டிற்கு முக்கியமான பங்காற்றக்கூடிய ஒன்று, உங்களது அன்பை வெளிக்காட்டக்கூடியதல்ல.

இரண்டாவது, அரசியல்திறமையை வளர்ப்பதற்கான அமைப்புகளை வளர்ப்பதில் நம்நாட்டில் பற்றாக்குறை போதாமை உள்ளது. நாம் மருத்துவர்களை, பொறியாளர்களை உருவாக்கி வருகிறோம். ஆனால் கலை அறிவியல் படிப்புகளை தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவே கல்லூரிகள் சிறப்பாக இருந்தாலும், அவை கடும் பற்றாக்குறையில் தடுமாறி இயங்கி வருகின்றன. அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம் போல, மாணவர்களுக்கு அரசியலை தங்களது வாழ்க்கையாக, குறிக்கோளாக கொள்ளுமாறு கற்றுத்தர இந்தியாவில் எந்த கல்விக்கழகங்களும் இல்லை. நம்மிடையே உள்ள பாடங்கள் காலாவதியானவை. அரசியல் அறிவியல் மாணவர்களை தற்போதைய இந்திய அரசியலின் நிலைமை குறித்து அவர்களின் தனிப்பட்ட கருத்துகளை அறியவும், என்ன மாற்றங்களை இங்கே சாத்தியப்படுத்தமுடியும் என்பதை அறியவும் சந்தித்தேன். கல்வியைத்தாண்டி நமது அரசியல் கட்சிகளிடம் இளைஞர்களை ஈர்க்கும்படியான திட்டங்களோ (அ) பயிற்சி வகுப்புகளை நடத்துவதோ (அ) சிறந்த திறமையாளர்களை மேன்மைபடுத்தும் திட்டங்களோ கிடையாது.

இந்த இல்லாமைகளைத்தாண்டி கட்சிகள் சில கவர்ச்சிகரமான மனிதர்களைக் கொண்டே சமாளிக்கின்றன. பிறகு அவர்கள் இல்லாமல் போகும்போது, வெறுமையைத் தவிர்க்க அதுபோலவே ஒரு நகலை உருவாக்கி நல்ல தலைவர் உருவாகிவிட்டதாக நிலைநிறுத்துகின்றனர். இதனால் திறமையுள்ள மனிதர்கள் தம் வாழ்வென  அரசியலைத் தேர்ந்தெடுக்க தயங்குகின்றனர். தேர்ந்தெடுத்து உழைத்தாலும் முக்கியமான பதவிக்கு என்றுமே வரமுடியாது என்று அறிகிறபோது அயர்ச்சி, மன உளைச்சலும் கொள்கின்றனர். தேவைப்படும் நல்ல மனிதர்கள் கிடைப்பதையும் இந்த நகல் செயல்பாடுகள் மோசமாக்குகின்றன.
அரசியல் விழிப்புணர்வும் பற்றாக்குறையாக இருக்கிறது. ஜனநாயகம் குறித்த மிகச்சுருக்கமான அறிமுகமாக மக்களுக்கு, மக்களால், மக்களே நடத்துவது என்று பள்ளியில் படித்திருப்போம். பலகோடி இந்தியர்களில், பொருளாதாரத்தில் பலவீனமான பகுதியினர் ஜனநாயகத்தின் சக்தியை முழுமையாக புரிந்துகொள்ளவில்லை. ஏகாதிபத்திய வரலாற்றில் ஜனநாயகம் என்பது இந்தியா அண்மையில் பெற்ற ஒன்றாகும். இதன்படி பல நூற்றாண்டுகளாக ஜாதி அமைப்புகள் இருந்த நிலையில் திறமை இருக்கும் யாரும் சமூகத்தில் உயர்ந்து நல்ல நிலைக்கு வந்துவிட முடியும் என்பது நினைக்கவே சிரமமான கருத்தேயாகும். இந்த நிலைமையில் அரசியல் தலைவர்கள் மன்னர்கள் போலவும், அவர்களது சிறிய இளவரசர்களும் தானியங்காக  வரிசைக்கு வந்துவிடுகின்றனர்.

நாம் இந்த பிரச்சனைகளில் கவனம் செலுத்த முயன்றால் வலுவுள்ள அரசியல் அமைப்பை உருவாக்கி, சிறந்த அரசியல் தலைவர்களையும் பெறுவதோடு, இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் திறமையையும் நுட்பங்களையும் இவர்களின் வழியே பெறமுடியும். சிறிய இளவரசர்கள் பாலிவுட் வழியாக பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும். பாரம்பரியம் என்பது உங்களுக்கு வாய்ப்பினைத் தந்திருக்கலாம். ஆனால் தொடர்ந்து இங்கே நிலைபெற்று இருக்க செயல்பாடுகளில் தீவிரம் தேவை. தோல்விகள் பல பெற்றாலும் தந்தை பெயர் ஆதரவிற்கு நிற்கும். இளவரசராக சிலர் உருவாக்கினாலும், சமாளித்து உண்மையான நாயகனாக மாற, நீங்கள் தலைவராக வேண்டும். ஒளிவிளக்குகளும், கேமராவும் தயாராகி விட்டன. பார்ப்போம் நீங்கள் என்ன வெளிப்படுத்தப்போகிறீர்கள் என்று. ஆக்சன்!














17

வசந்தகால தூய்மைக்கு தயாரா?

நமது குழந்தைகளை அசுத்தத்தினால் ஏமாறச்செய்து நாம் அவர்களின் பின்னிருப்போமா (அ) அதனை நாமே சுத்தம் செய்வோமா இப்போதே?

பல காங்கிரஸ் அமைச்சர்கள் ஊழலில் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்கள். 2ஜி ஊழல் என்பது இதில் முக்கியமாக குறிப்பிடலாம். ஊழலில் ஈடுபட்ட அரசியல்வாதிகளைக் காப்பாற்ற காங்கிரஸ் பெருமளவு விவாதங்களில் ஈடுபட்டுவருகிறது. இதில் ஈடுபட்ட சிலரைக்காப்பாற்ற பெரும் தலைவர்களின் அறிக்கைகள் போதுமானதல்ல. இதோடு நின்றுவிடப்போவதுமில்லை. சராசரி இந்தியர்களுக்கும் அரசியலில் அறமின்மை புகுந்தது கண்டு வெறுப்பு கொள்வதற்கான காரணமாக இவை அமைந்துவிட்டது. ஊடகங்களின் சம்மட்டி அடி போன்ற ஊழல்களின் மீதான செய்திதொகுப்புகள் தெருவில் உள்ள கடைசி மனிதர் வரைக்குமான விழிப்புணர்வை தந்துவிட்டிருக்கிறது. 

உண்மையில் ஊழல்களை டி.வியில் பார்ப்பது பெரும் பொழுதுபோக்காக மாறிவருகிறது. சேனல்களுக்கான நிகழ்ச்சிக்கருக்களை அரசியல்வாதிகளே தந்துதவுகிறார்கள். டி.வி பார்க்கும் பார்வையாளர்கள் யாரும் குற்றம் சாட்டப்பட்ட தலைவரை அப்பாவி என்று நம்புவதில்லை. அரசியல்வாதிகள் யார்தான் குற்றம் செய்யவில்லை என்று கூறப்படும் வழக்கமான செவ்வியல் வாக்கியத்தோடு மெதுவான நீதி மன்ற நடவடிக்கைகளில் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் தம்மை காத்துக்கொள்ளும் அவர்களின் முனைப்பு வேடிக்கையாகத்தான் உள்ளது. இன்றுவரையிலும்  கவனத்தை இழுக்கும் யதார்த்தமாக டி.வியில் தளர்வறியாத நம்பிக்கைச் சிரிப்பு மற்றும் கர்வமான அவர்களது நடவடிக்கைகள் உலகத்திற்கு அவர்களின் குற்றத்தை அவர்களே ஒப்புக்கொள்வது போல இருக்கிறது.  நிச்சயமாக, நான் ஏன் பதவி விலகவேண்டும்? என  அகந்தையுடன் கேட்பது கூட அவர்களின் செயல்களாக விரைவில் மாறக்கூடும்.  இது ஈராக் வெற்றியை அந்நாட்டு செய்தித்துறை அமைச்சர் அறிவித்துக் கொண்டிருக்கும்போது, அமெரிக்க டாங்கிகள் வலதுபுறம் சென்றுகொண்டிருக்கும் நிகழ்ச்சியை நினைவுபடுத்துகிறது. அப்போரில் மிகச்சிறந்த பொழுதுபோக்கு பகுதிக்கு உறுதி அளித்தவர் அவர்தான்.

ஆம், காங்கிரஸ் கட்சியின் பாதுகாப்பு முயற்சிகள் அக்கட்சியினை மேலும் மோசமாக்கவே செய்யும். குற்றங்கள் குறித்து பெருமளவு மறுப்பு என்பது பல்வேறு செய்திக்கதைகளை வாழச்செய்து, டி.ஆர்.பி அதிகரிக்கச்செய்யும் விதமாக ஊழல்வாதி ஊடகவெளியில் பெரிதுபடுத்தப்பட்டு வறுபடும் வரை நீடிக்கிறது.

இதுபோன்ற பதவி விலகல்கள் ஊடகங்களில் ஏற்படும் செய்திகளை குறைக்கப் போதுமானதில்லையா? பழைய இந்தியாவின் வளர்ந்து வரும் தருணத்தில் கடைபிடிக்கப்பட்ட உத்தியே அது. ஒரு உதாரணத்தைப் பார்ப்போம், கொலையாளி ஒருவனை சுட்டுக்கொல்கிறான். அவனைப் பிடித்துவிட்டபின் தனது துப்பாக்கியை ஒப்படைத்துவிடுவதாக (அ) தன் உயிர் நண்பனுக்கு தந்துவிடுவதாக கூறுகிறான். இதுபோலத்தானே இந்திய அரசியல்வாதிகள் தண்டிக்கப்படுகிறார்கள். இன்னொரு உதாரணமாக, தன் மனைவியை கடுமையாக தாக்கிய ஒருவனை பிடித்துவிட்டபின், தான் அந்த அறையை விட்டு வெளியேறிவிடுவதாக கூறுகிறான். இதனைக்கொண்டு எப்படி அவர் சீர்பட்டவர் என்று கூற முடியும்?  எதிர்காலத்தில் மனைவியைத் தாக்குதலுக்கு உட்படுத்தும் கணவர்களுக்கு சொல்ல வலுவான கருத்து இதில் என்ன இருக்கிறது?

ராஜினாமாக்கள் பழைய இந்தியாவில் தூர்தர்ஷன் பார்த்துக்கொண்டு இருந்தவர்களை சாந்தப்படுத்த முன்னர் கையாண்ட முறைகளாகும். ஆனால் விஷயங்கள் இன்று பெருமளவு மாறிவிட்டன. ஊடகங்கள் நெருப்பு போல செயல்படுகின்றன. குற்றத்திற்கான தண்டனை மற்றும் வெற்றுப்பேச்சுகள் குறித்த வேறுபாட்டை இளைய தலைமுறையினர் புரிந்துகொண்டிருக்கின்றனர். மேலும் அவர்கள் முந்தைய தலைமுறையைக் காட்டிலும் தொடர்பு கொள்வதில் முன்னேறியுள்ளனர். ஆட்சி செய்யும் கட்சி குற்றத்திற்கான தண்டனையை அளிக்காமல், பதவி விலகல் என்பது கட்சிக்கு எதிரான விளைவையே உருவாக்கும்.

காங்கிரஸ் அரசு கடினமான முடிவாக தன் ஆட்சியை முற்றிலும் விட்டுக்கொடுத்துவிட்டு தன்னை சுத்தமாக்கிக்கொண்டு அடுத்த தேர்தலில் போட்டியிட முயற்சிக்கலாம். அதிகாரத்தில் தொடர்வது அவர்களுடைய சுதந்திரம் என்றாலும், அது கடுமையான சுமையாகவே இருக்கக்கூடும். எடை தூக்குபவர் காயமுற்றார் என்றால், தன்னை குணமாக்கிக்கொண்டுதான் மீண்டும் எடை தூக்கும் பயிற்சியில் ஈடுபடுவார். ஊழலில் ஈடுபட்ட மனிதர்களை வைத்துக்கொண்டு அதிகாரத்தில் இருப்பதும், தொடர்வதும் பாதுகாப்பானது அல்ல. ஊழல் செய்த அமைச்சர்கள் அனைவருமே வெடித்துச் சிதறக் காத்திருக்கும் வெடிகுண்டுகளைப் போன்றவர்கள்.

இறுதியாக எதிர்க்குழுக்களுக்கு ஒரு வார்த்தை கூறவேண்டும். ஊழலுக்குப்பிறகு செய்யக்கூடிய சரியான செயல்பாடுகள் குறித்தவைதாம் அவை. ஆனால் அது காங்கிரஸ் கட்சி முழுவதையும் ஒவ்வொரு முறையும் பழிகூறுவதோ, குற்றம் சாட்டுவதோ என்றில்லாமல் தீர்வை நோக்கிச்செல்வதாக இருக்கவேண்டும். குற்றத்திற்கான தண்டனை நோக்கி கவனத்தை திருப்பவேண்டும். தீவிரவாதிகளுக்கு மதமில்லை என்பது போல ஊழல் அரசியல்வாதிகளுக்கும் கட்சி பேதமில்லை. நிகழ்காலத்தில் தேவைப்படுகிற நடவடிக்கை இதுவேயாகும். அனைத்து கட்சிகள், ஊடகங்கள், குடிமகன்கள் என நமது கடமையை சரியாக செய்தால் நாட்டினை தூய்மைப்படுத்த முடியும். குழந்தைகள் ஊழல் என்பதை தங்கள் தாத்தா பேசிக்கொண்டிருக்கும் போது கேட்டதாக கூறும்படியான சிறந்த இந்தியாவை அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்ல முடியும்.















18

சிறுபிள்ளைத்தனமான காலம்

அடுத்தமுறை தேர்தலில் நாம் நமது எண்ணத்தை வெளிப்படுத்துவோமா (அ) காத்திருப்போமா?

வசந்தகாலத்தில் சில பூக்கள் மலர்வதைப்போலவே, இந்தியாவின் அரசியல் தேர்தல் காலங்களில் மட்டுமே உண்மையான நிறத்துடன் உயிர்ப்பு பெறுகிறது. இந்தியர்கள் எப்படி வாக்களிக்கிறார்கள் என்று அரசியல் கட்சிகள் குறிப்பிட்ட நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட அபத்தமான, சர்ச்சைக்குரிய (அ) கொள்கைகளற்ற ஆழ்ந்த அகன்ற அறிவோடு சராசரி வாக்காளனின் மனதை எப்படி வசீகரம் செய்வது என்பது போன்ற விஷயங்களை 2012 உ.பி அரசியல் கட்சிகள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். பகுத்தறிவு, நவீன சிந்தனைமுறைகளைக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் கூட புராதன, பின்னோக்கிய அளவீடுகளை பின்பற்றி வாக்காளர் சமூகத்தினை தவறான செயல்பாட்டிற்கு பழக்குகிறார்கள்.  அவர்கள் இதனை ஒரே ஒரு காரணத்திற்காகத்தான் செய்கிறார்கள் - வெற்றிக்காக மட்டுமே. நாடு மற்றும் சமூகத்தின் மீதான தாக்கத்தை நினைவு கொள்ள (அ) மறக்க கால நோக்கில் ஏற்படுத்தும் அளவு, பதவிக்கு அவர்கள் தகுதி பெற வெற்றி உண்மையில் மிக அவசியம்தான்.

இரண்டு உதாரணங்களை எடுத்துக்கொள்வோம். பெரும் கட்சிகளைச் சார்ந்தவைதான் இரண்டும். இந்திய அரசியல் எவ்வளவு விசித்திரமானவை என்பதை நமக்கு புரியவைக்கும். பிஎஸ்பி கட்சியிலுள்ள பாபு சிங் குஸ்வாகா என்பவரை சிறிது வெளிப்படையாக ஊழலில் ஈடுபட்டவர் என்று பி.ஜே.பி குற்றம்சாட்டியது. இந்த செயல் பி.ஜே.பி யின் ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டிற்கே எதிராக திரும்பியது. ஊடகங்கள் பி.ஜே.பி தன் கருத்தை திரும்பபெறவேண்டும் என்று அக்கட்சி பூரண முட்டாள்தனமாக எதையும் செய்யாதபோதும் கடுமையாக வற்புறுத்தின. உ.பி மக்கள் தொகையில் குஸ்வாகா இனம் சார்ந்த ஓபிசி பிரிவினர் 10% ஆவர். ஜாதி சார்ந்த வாக்குகள் வாக்கு சதவீதத்தில் முக்கியமான பாதிப்பு ஏற்படுத்தும் என்பதை எளிதாக புரிந்துகொள்ளமுடியும். குஸவாகா மீதான குற்றச்சாட்டு அவரை ஓரிரவில் பெரும் கதாநாயகனாக்கிவிட்டது. அலைகழிப்பு ஏற்படுத்தும் உ.பி வாக்குவங்கி மிகவும் எதிரான தன்மையிலானது. அஜீரணத்திற்கு உள்ளான பி.ஜே.பியை பார்த்தாலே அதன் வசீகரத்தை உணரமுடியும்.

இதனளவு அதிகமாக கூறமுடியாவிட்டாலும், இரண்டாவதாக, காங்கிரஸ் அரசு அறிவித்த ஓபிசி பிரிவில் முஸ்லீம் மக்களுக்கான இட ஒதுக்கீடு பற்றியதாகும். காங்கிரஸ் தலைவர்கள் உ.பியெங்கும் சென்று முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து பேசுகிறார்கள்.
இவ்விரண்டும் இந்திய சமூகத்திலும், இந்திய மதிப்புகள் குறித்தும் மோசமான தாக்கத்தையே ஏற்படுத்துகிற செயல்பாடுகளாகும். முதல் பிரச்சனையில் சரியான ஜாதியில் ஒருவர் பிறந்திருந்தால் அவர் செய்யும் ஊழல்கள் மன்னிக்கப்படும் என்ற உண்மையைத் தெரிவிக்கிறது. இனம், ஜாதிக்கு மேலானதல்ல நேர்மை என்று மக்கள் தீர்மானித்து செயல்படுவதாக நினைக்கவும் வாய்ப்புள்ளது.

இரண்டாவது சட்டமான முஸ்லீம்களின் இட ஒதுக்கீடு என்பது பெரிதும் வஞ்சனையான தாக்கத்தைக்கொண்டது. இது இந்துக்கள், முஸ்லீம்கள் என இரு மதத்தினரையும் வேறுபடுத்துகிறது. மதத்தின் அடிப்படையிலான கூடுதல் விஷயங்களான சுயேச்சையான, சுதந்திரமான  செயல்பாட்டினை இது அனுமதிக்கிறது. மதரீதியான இட ஒதுக்கீடு மோசமானது. இதைப்பாருங்கள், ஜாதியிலிருந்து மாறாமல் ஆண் மற்றும் பெண்கள் மதம் மாறுகிறார்கள் என்று கொள்வோம். இந்துப்பையன் எதிர்காலத்தில்  வேலை (அ) கல்லூரியில் படிக்க இட அனுமதி கிடைக்காததால் இஸ்லாம் மதத்திற்கு மாறுகிறான் என்றால் அவனுக்கு இட ஒதுக்கீடு கிடைக்குமா? நாம் தூண்டப்பட்டு, உற்சாகமாக  மதம் மாறுகிறோமா? நாம் இதுபோன்ற சட்டங்களை விளைவு அறியாமல் அறிக்கையாக (அ) திட்டமாக எப்படி அறிவிக்கிறோம்? இவை சிறிய அளவில் முஸ்லீம்களுக்கு சிறந்த கல்வி, தொழில்வாய்ப்பு, அதிகாரமளித்தல் என அவர்கள் சமூகத்தில் உயர உதவுகிறது. தேசிய அளவில் உயர்ந்த முக்கியமான முஸ்லீம் தலைவர்கள் அனைவரும் சுயமான அவர்களின் மனோதிடம், உண்மை, திறமை ஆகியவையே காரணமாகும். முஸ்லீம்களின் திறமைகளை வளர்த்தெடுப்பதற்கான சூழ்நிலையை உருவாக்கி வளர்த்தெடுப்பதே தேவையே ஒழிய தேர்தல்நேர இலவசங்கள் அவசியம் இல்லை. தன் மகன் மகிழ்ச்சியாக இருப்பான் என பள்ளி செல்வதற்கு புத்தகங்கள் வாங்கித்தருவதை விட மிட்டாய்கள் வாங்கித்தரும் தந்தையை சிறந்தவர் என்று யாரும் கூறுவார்களா? மேற்கண்ட விஷயங்களின் தன்மைக்காக நான் எந்த அரசியல்வாதிகளையும் குற்றம் கூறவில்லை. மேலும் நாம் அதுபோன்ற  சூழலில் எந்தவாய்ப்புமில்லாத நிலையில் அதையேதான் தேர்ந்தேடுப்போமோ என்னவோ? பிரச்சனை அரசியல்வாதிகளிடம் இல்லை. அவர்கள் கண்ணாடி போல சூழலுக்கு பொருந்திப்போகிறவர்கள்தான். வாக்காளர் சமூகமான நம்மிடம்தான் பிரச்சனை உள்ளது. இந்தியாவின் சிறப்பு வாய்ந்த மூளைகளில் தவறான எண்ணங்கள் நிறைந்திருக்கின்றன. பல நூற்றாண்டுகளாய் இருந்த துன்பங்கள், வேறுபாடு காண்பது இன்றுவரையிலும் தொடர்ந்து வருகிறது. ஆனால் ஒருவரின் தனிப்பட்ட மேன்மைகளே இந்த தவறானவற்றை கடந்துசெல்ல உதவியிருக்கிறது. நம்புங்கள், தற்செயலாக நமக்கு கிடைத்த ஜனநாயகம் சமநிலையைவிட மோசமான சூழலையே ஏற்படுத்தியிருக்கிறது. நாடாளுமன்றத்தில் நிகழும் கலவரம், கூச்சல் குழப்பங்கள் இந்தியனின் மனதில் என்ன மாதிரியான காட்சியாக பதிவாகும். நாம் உண்மையில் யார் என்பதை எளிதாக அறியும்படிதானே!

அதிகம் கல்வி கற்றோரும் தீமை விளைவிக்கும் தீங்கான எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள். எளிய சோதனைதான். உங்களது சகோதர, சகோதரிகளை (அ) குழந்தைகளை உங்களது ஜாதி தாண்டி, மதம் தாண்டி,  திருமணம் செய்து கொடுப்பீர்களா? பதில் இல்லை என்று கூறினால், இந்திய அணியை உற்சாகப்படுத்தினாலும், தேசிய கீதத்திற்கு நிமிர்ந்து நின்றாலும், இந்தியக்கொடிக்கு மரியாதை செலுத்தினாலும் நீங்கள் தவறான எண்ணங்களால் வழிநடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்றே அர்த்தமாகும். பலரும் தவறான எண்ணத்தில் வாழ்வதால் இப்போது குழப்பமான, இரண்டாந்தர தலைமையை நாம் கொண்டிருக்கிறோம். நாம் எத்தனை உண்ணாவிரதப்போராட்டங்களை தொடங்கினாலும் (அ) பொருளாதார வல்லுநர்கள் நல்ல கொள்கைகளைத் தீட்டினாலும் நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற எண்ணம் வராதவரை அனைத்து செயல்பாடுகளும்  நீர்த்துபோனவைதான் மேலும் நாம் நம்தேசத்தையே ஏமாற்றிக்கொண்டிருக்கிறோம் என்பதே அவலமான உண்மை. தலித்துகள் முன்னர் கொடுமைப்படுத்தப்பட்டது போல இன்றுவரையும் அப்படியே தொடர்கின்றனர். முஸ்லீம்கள் மேலும் தொடர்ந்து வேறுபடுத்தப்படுகின்றனர். தவறான எண்ணங்களை கைவிட்டால் செயல்பாடுகள் மேம்படும். தவறான எண்ணங்கள் இல்லை என்றால் பி.ஜே.பி அசுத்தமான மனிதரான குஸ்வாகா பற்றி எதுவும் கூறவேண்டியில்லை. காங்கிரஸ் இடஒதுக்கீடு குறித்து எதுவும் அறிவிக்க தேவையிராது. நம்மை மாற்றிக்கொள்ளாவிட்டால் பேரழிவை காலப்போக்கில் சந்திக்கநேரும்.

தீர்மானிப்பதில் போதாமை, திறமையின்மை, செயல்பாடு வளர்ச்சி ஆகியவற்றில் மந்தம் ஆகியவை ஏற்படும். நல்ல கல்வி, வேலைவாய்ப்புகளை கண்டறிய இளைய தலைமுறை போராட வேண்டிய நிலை ஏற்படும். நாம் நமக்கான தலைவரை அவர் நமக்கு கொடுக்கும் இனிப்பு மிட்டாய்க்காக தேர்ந்தெடுத்தால் விதியை நம்பியேதான் இருக்கவேண்டும். அதுதான் ஒரே வழி. ஆனால் அனைத்தையும் இழக்கவில்லை. அடுத்த வாய்ப்பினை வரும் தேர்தல் நமக்கு அளிக்கத்தான் போகிறது. அப்போது நாம் தவறான எண்ணங்களை கைவிடுவோமா (அ) அதனை தொடர்வோமா. தேர்வு செய்வது நம் கையில்தான் உள்ளது.














19

தலைவன் இவனொருவன்

அமைதி அதிக காலம் உதவாது அரசியல்வாதிகள் பேசத்தொடங்கவேண்டும் இப்போதே!

சுவாரசியமான போக்கு நம் நாட்டின் அரசியலில் தொடங்கியிருக்கிறது. பிடிவாதமும், போர்க்குணமும் கொண்ட அரசியல்வாதிகள் உருவாகி வருவதுதான் அது. இந்தியாவின் பெரும்பாலான முக்கிய முன்னாள் இந்நாள் முதலமைச்சர்களான நரேந்திரமோடி, நிதீஸ்குமார், ஜெயலலிதா, மாயாவதி, மம்தாபானர்ஜி, ஷீலா தீக்ஷித் ஆகியோர் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்ற தனித்தன்மையான, கருத்துகளைக்கொண்ட ஆளுமைகள் எனலாம்.
ஒரேமாதிரியான எப்போதும் பேசாத (அ) கட்டாயப்படுத்தினால் பேசக்கூடிய அதனை யாரிடமும் கலந்து பேசாத ராஜதந்திர தன்மைக்கு முழுமையாக எதிராக உள்ளது இக்கால  நிலைமையாகும். காங்கிரஸ் கட்சியில் இந்த ஒரேமாதிரியான தன்மை வெற்றிகரமான மர்ம நிலைப்பாடாக கடந்த இருபது ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட தலைவர்கள் இதனை மறுபரிசீலனை செய்யவேண்டிய நேரம் இதுவே. மிகச்சிறந்த முதல்வர்களில் ஒருவராக இந்திய வாக்காளர்களை ஒன்றிணைக்க நினைத்தால் வெளிப்படையாக பேசவேண்டும்.

இதற்கான மிகச்சிறந்த செவ்வியல் உதாரணமாக காலங்கடந்த மௌனத்தலைவராக ஐந்து ஆண்டுகள் பதவி வகித்த பி.வி. நரசிம்மராவ் அவர்களைக்கூறலாம். இதன் அர்த்தம் அவர் ஆட்சிலிருந்த போது இந்தியாவை சலிப்படைய வைத்தார் என்பது அர்த்தமல்ல. பொருளாதார தாராளமயமாக்கம், வங்கிகள் திவால், பாபர் மசூதி இடிப்பு, ஊழல் விவகாரங்கள் என அவரின் பதவிக்காலத்தில் பரபரப்பான பெரும் நிகழ்வுகள் நடந்தன. அவரைச்சுற்றி இருந்தவர்களிடம் அவரது குரல் நினைவிலிருக்கிறதா என்று கேட்கவேண்டும். அவருக்குப்பின் பிரதமர் பதவியை ஏற்க தயக்கத்துடன் கூடிய மௌனத்தை சோனியாகாந்தி பின்தொடர்ந்தார். பிறகு, மன்மோகன் சிங் போராட்டகுணம் (அ) சாதுரியமான பேச்சாற்றல் போன்றவற்றிக்கு அரிதாக நினைவுகூரப்படுகிறவர். பேசுவதும் இல்லை; விளக்கம் அளிப்பதும் இல்லை; எதிர்வினை புரிவதும் இல்லை; எந்த நிலைப்பாட்டினையும் எடுப்பது இல்லை என இவை முன்பு சிறப்பாக வேலை செய்திருக்கலாம். ஆனால் இனி அவ்வாறு இருக்க வாய்ப்பில்லை.

2012 ஆம் ஆண்டு இந்தியாவில் அமைதி என்பது பெருந்தன்மை, ஆளுமை (அ) நிதானம் ஆகியவற்றினை கூற பயன்படுத்தப்படாது. அரசியல்வாதிகளின் அமைதி என்பது குற்றம் செய்தவர், திறமை இல்லாதவர், முக்கியமான பிரச்சனைகள் குறித்து கவனம் இல்லாதவர் என்று மக்கள் நினைக்கத்தொடங்கியுள்ளனர். கணக்கேயில்லாத பல அரசுகளால் ஏமாற்றப்பட்ட மக்களின் மனநிலை மாறியுள்ளதற்கு இதுவே சான்றாகும். முதலில் அமைதி கொண்ட தலைவர்களை வணங்கினாலும், போர்குணம் கொண்ட பிடிவாதம் இணைந்த தலைவர்களை சிறிது அசட்டு நம்பிக்கையுடன் தேடத்தொடங்கிவிட்டார்கள். 

அமெரிக்காவில் ஜார்ஜ் புஷ், கவர்ச்சியும் பேச்சாற்றலும் கொண்ட பில் கிளிண்டனுடன் ஒப்பிடப்பட்டு சிறந்த அதிபர் இல்லை என்று பரிகாசம் செய்யப்பட்டார். முன்னிருந்த அதிபர் போல ஊழலில் சிக்காமல் குறைந்த வசீகரம் கொண்டிருக்கும் ஒருவர் என்றால்கூட அமெரிக்கமக்கள் மகிழ்ச்சியடைகின்றனர். அதுபோலவே இந்தியர்களும் பெருந்தன்மையாக மக்களிடம் பேசாமல் இருக்கும் தலைவரை விட பேசும் தன்மை கொண்ட ஆக்ரோஷமான தலைவருக்கு வாய்ப்பளிக்க நினைக்கிறார்கள்.
இதில் கட்சிகள் கற்றுக்கொள்ள பல  பாடங்கள் உள்ளன. கடந்த காலங்களில் பலனளித்த செயல்முறைகள் இனி பயனளிக்காது. தலைவராக இருக்கும் ஒருவருக்கு குறிப்பிட்ட செயல்திட்டங்கள், பார்வைக்கோணங்கள், பிரச்சனைகள் குறித்து மக்களிடம் பேசும் தன்மை, திறமை நிச்சயம் தேவை. ஒவ்வொரு அடிப்படையில்லாத குற்றச்சாட்டு (அ) செய்திக்கட்டுரைகளுக்கு எதிர்வினை ஆற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் மக்களுக்கு தொடர்பான பிரச்சனைகள் குறித்து நிச்சயம் பேசவேண்டும். அரசு அதிகாரிகளிடமும் (அ) அறிக்கை வழியே பேசப்படுவது வெளிப்படையான பேச்சு என்பதற்கு இணையாது.  இந்த விஷயத்தை ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறும் அறிக்கைகள் எல்லாம் முட்டாள்தனமானவை. நேரடியாக எதையும் நேர்மையாக இதனைச்செய்யமுடியும், முடியாது என்று கருத்துகளைக் கூற பயப்படக்கூடாது.

நமக்கு நிலையான போராட்டகுணம் கொண்ட தலைவர்கள் தேவை. கட்சிகள் வாக்காளர்களின் தன்மைக்கு ஏற்ப சிறந்த நபர்களை தேர்ந்தெடுத்து சரியானவர்களாக உறுதிபடுத்தி தேர்ந்த பயிற்சியளிக்க வேண்டும். சிறப்பாக பேசத் தொடங்கவில்லை என்றால் மக்களும் உங்களைப்பற்றி பேசுவதை நிலையாக   கைவிட்டுவிடுவார்கள்.



20

நம்பிக்கை போதாமையை நீக்குவது எப்படி?

நாடாளுமன்றத்திற்கு சரியான மனிதர்களைத்தான் தேர்ந்தெடுத்து அனுப்புகிறோமா?

அன்னா ஹசாரே உலகில் அணுக முடியாத அரசுகளின் அணுகுமுறையின்மீது  நேர்மறையான தனது நடவடிக்கைகளின் மூலம் மாற்றத்தை தூண்டியுள்ளார். இளைய தலைமுறை மூலம் மாற்றத்திற்கான வழியினை கண்டறியும் ஆர்வத்திற்கு ஒளிபாய்ச்சியுள்ளார். இந்தியாவின் தரமான மதிப்புகளை மீண்டும் புதுப்பிக்க முயற்சித்துள்ளார். ஆம், நம்மில் பலரும் ஊழலினை அமைப்பு (அ) வேறு வகையில் தூண்டப்பட்டு செய்தாலும் நம்மில் ஒரு பாகம் சரியானதாகவே இன்றும் மாறாமல் இருக்கிறது. அதனை வலுபெறச் செய்தல் வேண்டும். ஜன்லோக்பால் மசோதா என்பதைத்தாண்டி அன்னா குழுவினரது நீதிக்கான போராட்டம் என்பதை சமூகத்திற்கான முக்கியமான பங்களிப்பு என்று கூறமுடியும்.

இந்த சாதனைகளுக்கும் விலை உண்டு. நீண்டகாலமாக தீர்க்கப்படாத பல்வேறு குழப்பங்களைப் பார்க்கிறோம். அழகற்ற, மகிழ்ச்சியற்ற விஷயங்கள் பிடிவாதம், கர்வம், விட்டுக்கொடுக்காதவை என பொதுமக்களுக்கான பார்வையில் இவை தெரிகிறது. கருத்தியல் உலகில் மக்களுக்கு பொருத்தமான காரணத்தோடு தனது பதவி (அ) அதிகாரம் கொண்டு சரியானதை செய்ய முடியும். நாம் கருத்தியல் உலகிலிருந்து விலகி உண்மையில் குறையாத வாழ்வை வாழ்கிறோம். இளைஞர்கள் இம்முறை வெளியே வந்தது வேறு மதத்தினைச்சேர்ந்த (அ) ஜாதியினைச்சேர்ந்த மக்களை தாக்குவதற்காக அல்ல. அவர்கள் சமூகம் அழகானதாக, அமைதியானதாக மாறவேண்டும் என்று எளிய கோரிக்கையை முன்வைக்கவே வந்தார்கள். இது நாம் பெருமை கொள்ளும் தருணம் ஆகும். இந்தியாவின் தற்போதைய தலைமுறைக்கு மரியாதை செலுத்த வேண்டும்; உண்மையில் அவர்கள் வேறுபட்டவர்கள்.

ஆங்கிலம் பேசும் அறிவுஜீவிகளின் விமர்சனங்கள் அன்னா குறித்து எதிராக எழுந்தது எனக்கு அதிர்ச்சியானதாகவும், நம்ப முடியாததாகவும் இருந்தது. மேல்தட்டு வர்க்கம் அன்னாவின் பின்னால் வலுவாக நின்றால் நமக்கு விரைவாகவும், உவப்பான உடன்பாடு கிடைக்கலாம். தங்கள் கருத்தை வெளிப்படுத்த மக்கள் அனைவருக்கும் உரிமை உண்டு. அன்னாவின் பின்புலம், கையாண்ட போராட்ட முறைகள் (அ) வேகமாக புகழ்வெளிச்சம் பெற்றது என நாம் முன்னெடுக்கும் விஷயத்திற்கு பொருத்தமில்லாத பல கருத்துகளை எதிர்மறையாக வெளிப்படுத்தப்பட்டதை பார்க்க நேர்ந்தது. 
அன்னாவின் மீதான எதிர்கருத்து குழுக்கள்  நாடாளுமன்றம் என்பது அழிக்கப்படக்கூடாது என்று கூறுகின்றனர். நாடாளுமன்றம் மற்றும் சட்ட அமைப்பு ஆகியவை முக்கியமும், மரியாதை அளிக்கப்பட வேண்டியவையுமாகும். இவை அடிப்படையான மக்களின் நம்பிக்கையைப் பொறுத்தவை. மக்களின் நம்பிக்கையை இழந்துபோகும்போது அமைப்பு பயன்படாது. எனவே நாடாளுமன்றத்தினை புனரமைத்து பிறகு மக்களை மரியாதை செலுத்தக்கூறலாம். 

மக்களுடைய நம்பிக்கைக்கு ஒரு உதாரணம்: நாம் காகிதத்தாள்களை பணம் என்று சட்டைப்பையில் வைத்திருக்க காரணம் மக்கள் அவற்றுக்கான மதிப்பை தருவதாலும், நம்புவதாலும்தான். பல்வேறு நாடுகளின் மக்கள் அந்நாட்டின் பணத்தில் நம்பிக்கை இழந்த நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. இது எப்படி நிகழ்கிறது என்றால், அரசு எந்த கவனமும் இல்லாமல் பணத்தினை அச்சிட்டு வெளியிட்டால் அவற்றின் மதிப்பு ஜிம்பாவே நாடு போலவே குறைந்துவிடுகிறது. 2008 ஆம் ஆண்டு ஜிம்பாவேயில் ஒவ்வொரு 24 மணிநேரத்திற்கும் விலையானது இருமடங்காக அதிகரித்து கொண்டே சென்றது. நெறியில்லாத அரசு அதிகளவு பணத்தினை அச்சடிக்க, ஒரு பாக்கெட் ரொட்டி விலை பத்து பில்லியன் ஜிம்பாவேயன் டாலர்களாக உயர்ந்துவிட்டது. மக்கள் பணத்தினை கைவிட்டு அதற்கு பதிலாக பண்டமாற்று முறையினை கையில் எடுத்தார்கள். மேல்தட்டு அறிவுஜீவிகள் டி.வியில் அரசு கண்காணிப்பு அமைப்பு, அரசு, பணம் இவற்றினை மதிக்கவேண்டும் என்று கூறினால் எப்படி இருக்கும்? இதனை யாராவது ஏற்பார்களா? நம்பிக்கையினை சரியான நேரத்தில் ஏற்படுத்தவேண்டும். அரசு தன் நிலைமையினைப் புரிந்துகொண்டு இருப்பை உத்தேசித்து பணத்தினை அச்சிடச்செய்தல் வேண்டும். ஜிம்பாவே அதனைச் செய்யவில்லை. எனவே மக்கள் வெளிநாட்டு பணத்தினை பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.

இதுபோலவே இந்திய அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கையும் அழிவைச் சந்தித்து வருகிறது, குறிப்பாக அரசின் மீதான எதிர்பார்ப்பும், நம்பிக்கையும். அவர்களின் தொடர்ச்சியான பொய்கள் நிலைமையினை மேலும் மோசமாக்குகின்றன. ஊழல் தீர்க்கப்படும் என்று கூறிக்கொண்டு அதற்கான முயற்சிகளில் சிறிதளவே ஈடுபடுகிறார்கள். பிரதமர் கூட கூட்டாட்சி சமரசங்கள் என்று கூறுகிறார். என்ன சமரசம்? உண்மை மீதான சமரசம் இல்லையா?

பொய் கூறுவது அரசியல்வாதிகளின் நீண்டகால செயல்பாடாக இருக்கிறது. அதன் விளைவாக அவர்கள் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார்கள்.லோக்பால் மசோதா அரசு மீதான நம்பிக்கையை திரும்ப மீட்க கூடும். மக்களின் தேவை என்பதைவிட அரசு வெளிப்படையாகவும், அணுக முடிவதாகவும் இருக்க லோக்பால் மசோதா தேவை. கட்சிகளின் பேச்சாளர்கள் தம்மை சுயவிமர்சனம் செய்துகொண்டு தம் கட்சி செய்த தவறுகளை ஒப்புக்கொள்ளவேண்டும். 

அரசியல்வாதிகளின் பொறுப்பு குறித்து பேசும் மக்களாகிய நாம் நம்பிக்கையை சிறிது தக்க வைத்திருக்கவேண்டும். நாம் ஒரு வேட்பாளர் குறிப்பிட்ட ஜாதி, மதம், பகுதி என்பதற்காக வாக்களிக்கக்கூடாது என்பதை திரும்ப திரும்ப கூறிவருகிறேன். வேட்பாளர் அவன் (அ) அவள் தகுதி, திறமை, நேர்மை கொண்டவரா என சரிபார்த்து அனுப்பினால் தகுதியும், மரியாதையும் திரும்ப கிடைக்கும்.
 














21

தெருக்களில் இந்தியா

நம்பிக்கை கொள்ளவில்லை என்றால் சிடுமூஞ்சி மாமாவின் தவறை நம்மால் என்றுமே நிரூபிக்கமுடியாமல் போய்விடும்

நம் அனைவரிடமும் உள்ள சிடுமூஞ்சி மாமா ஒருவர் இந்தியா எவ்வளவு மோசமானது என்று தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்கிறார். ஆர்.டி.ஓவிலிருந்து நியாயவிலைக்கடை, நகராட்சி வரை ஒவ்வொரு அரசு அமைப்பும் லஞ்சம் பெறுவது குறித்து நம்மிடம் கூறுகிறார். உடைந்துபோன சாலைகள், சீர்கெட்டுப்போன அரசுப் பள்ளிகள், மோசமான கல்வி என தனது கூற்றுக்கு பலபுறமும் ஆதரவு தேடிக்கொள்கிறார். அவரது தரப்பு சரியாக இருக்கிறபோது, அவரிடம் வாதம் புரிவது மிக கடினமானதாக இருக்கிறது. சில விஷயங்கள் வேலை செய்யாது; நீதி கிடைப்பதில்லை; அதிகாரம் பேசுகிறது; சமநிலை அழிந்துபோனது. அனைத்தும் கேட்க சிரமமாக, கசப்பாக இருந்தாலும் உண்மை அவையாகத்தான் இருக்கிறது.

மேலும் மாமா கூறுவார்: இங்கு எதுவும் மாறப்போவதில்லை. நமது சமூகம் சரிசெய்யமுடியாத அளவு பாதிக்கப்பட்டு இந்தியாவே துக்கத்தில் வாழ்ந்துகொண்டு இருப்பதாக விளக்குவார். சிடுமூஞ்சி மாமா அனைவரையும் சந்தேகத்திற்கு உள்ளாக்கி மோசமான மனிதர்கள் என முத்திரை குத்தி நாட்டினை மேம்படுத்த திட்டத்தோடு யாரோ ஒருவர் இயங்குவதாக கூறுகிறார். இங்குதான் சிடுமூஞ்சி மாமா மோசமான தவறை செய்கிறார். பிரச்சனைகளை ஒருவர் சுட்டிக்காட்ட மற்றொருவர் அதனைத் தீர்ப்பதற்கான வழிகளை கண்டு பிடிக்கலாம். குற்றம்சாட்டுவது என்பது ஒரு வாதம் போன்றதல்ல. அது ஒரு குணம். உண்மையில் நம் சமூகத்தில், அரசுத்துறையில், என பல நல்ல மனிதர்கள் உள்ளனர். தொடர்ந்து குற்றம் சாட்டுவதால் அவர்களின் இருப்பு மெல்ல அழிந்துபோகிறது. 

அன்னா ஹசாரேவை நீங்கள் ஏன் ஆதரிக்கவேண்டும் என்பதற்கான காரணத்தை நான் கூறப்போவதில்லை. தன்னை கீழாக வைத்துக்கொண்டு நம்மை ஏமாற்றிவரும் அரசு ஆட்சிமுறையின் ஊழல்முறைகளை உங்களுக்காக வும் எதிர்த்து நிற்க நம்மிடம் ஆதரவு கோரி அன்னா செயல்படுகிறார். இதற்கான நிகழ்வுகள் முன்கதைச்சுருக்கமாக வேகமாக மனதில் ஓடுகிறது.

2011 ஆம் ஆண்டு ஏப்ரல்மாதம் அன்னா தேசம் தழுவிய உண்ணாவிரதம் தொடங்கினார்; அது தொடர்ந்து வேகமாக பரவியது. போராடுபவர்களின் கருத்துகளை இணைத்து வலுவான மசோதாவாக மாற்ற அன்னா கூறும் கோணம் குறித்தும் அரசு பரிசீலிக்கவேண்டும் என்பதே அவர்கள் நினைத்தது. ஆனால் இன்றுவரை அரசு அன்னாகுழுவினரின் கோரிக்கைகளை நிராகரித்து தானே உருவாக்கிய வலுவில்லாத கொள்கைகள் கொண்ட லோக்பால் மசோதாவினை மக்களவையில் நிறைவேற்றியது. ஆனால் மாநிலங்களவையில் மசோதா நிறைவேற வழியின்றி தடுமாறி நிற்கிறது. நாடாளுமன்றத்தில் அரசு சமர்ப்பித்த அறிக்கை ஊழலைத் தீர்க்கும் அளவு வலிமையானது அல்ல. 0.5% (அ) இருநூறில் ஒரு பங்கு என்ற அளவு அதிகார மையங்கள் இச்சட்டத்தின் வரம்பில் வருகின்றனர். நியாயவிலைக்கடை (அ) பாஸ்போர்ட்  அலுவலகம், பஞ்சாயத்து அலுவலகம் (அ) நகராட்சி அதிகாரமையங்கள் என எவையும் இதன் உள்ளே வராது. ஏன் பிரதமரும் கூட இதற்கு கட்டுப்படமாட்டார். ஊழல் எதிர்ப்பு மசோதா என்பது குறிப்பிட்ட மக்களுக்குத்தான் என பிரித்துவைப்பதில்  ஜனநாயகம் எங்கே இருக்கிறது?
  
அரசு கல்வியறிவற்றவர்கள், புறக்கணிப்பட்டவர்கள் என வித்தியாசம் அறியாதபடி மந்திரப்பொடியை நம் அனைவரின் கண்களிலும் தூவி வருகிறது. இதைப்படிக்கிறீர்களே நீங்கள் கல்வியறிவு பெற்றவர். உங்களுக்குத்தெரியும் தவறு எங்கே என்று. ஊழலை எதிர்கொண்டுதான் உங்களது தினசரி வாழ்வு நடைபெறுகிறது. ஆனால் அது தொடர்ந்து உங்களது மகனுக்கும் தொடர்வதை விரும்பமாட்டீர்கள். பலவீனமான லோல்பால் மசோதா இன்று உங்களைப் பாதிக்காது ஆனால், நாளை உங்களது மகனுக்கு கல்லூரி இடம் கிடைக்காது; மருத்துவசிகிச்சை போதுமானதாக, தரமாக கிடைக்காது; அரசு வேலை கிடைக்காது என நடக்கலாம். நாம் ஏழையான நாட்டில் வாழ்கிறோம். ஏழை என்பதற்கு  நாடு காரணமல்ல. நாட்டில் உள்ளவற்றைக்கொண்டு அதனை வளர்த்து வளமாக மேம்படுத்தி வைத்துக்கொள்ள தெரியாத மோசமான தலைவர்களினால் விளைந்த கேடு இது.

அரசியல்வாதிகளுக்கு அதிகளவு அதிகாரத்தை கொடுத்துவிட்டதால் அவர்கள் மக்களது வாக்குகளை எளிதாக போட்டியிடமுடியாதபடி திருட முடியும் என்று நினைக்கிறார்கள். பொறுப்பை வெறுக்கின்றவர்கள் அவர்கள். பொறுப்பில்லாதபோது நமது நாட்டின் முன்னேற்றமே தடைபட்டு விடும். பல நாடுகளில் சராசரி தனிமனித வருவாய் இந்தியாவில் இருப்பதைவிட ஐம்பது மடங்கு அதிகமாக உள்ளது. அவர்களைப்போல நாமும் முன்னேற்றம் அடையவேண்டாமா?

அன்னா குறித்த தனிப்பட்ட பார்வை உங்களுக்கு என்னவாக இருக்கிறதென்று எனக்கு தெரியாது. ஆனால் இந்தப்பிரச்சனையில் போராடும் அவருக்கு நாம் ஆதரவு அளிக்கவேண்டும். ஊழல்எதிர்ப்பு குறித்து அன்னா எந்த கருத்தையும் உருவாக்கவில்லை. அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முனைந்திருக்கிறார். அன்னாவை அழிப்பது என்பது கருத்தை மட்டும் அழிக்காது. அது குறித்த நிகழ்வுகளை அதிகரிக்கக்கூடும். இப்போது அந்த அமைப்பு கட்டுக்குள் இருக்கிறது. ஆனால் அரசு தொடர்ந்து அதன் நடவடிக்கைகளை கவனமாக ஆராய்ந்து வருகிறது. ஊழல் மிதமிஞ்சிப் பெருகிய நிலையில் நாட்டினை பெரும் குழப்பம், கலவரம் ஆக்கிரமிக்கும். 

இறுதியாக இந்திய மக்கள் சிடுமூஞ்சி மாமாவினை தவறென நிரூபிக்கவேண்டும். எதுவும் இந்தியாவில் மாறாது என்பதில் பெரும் உண்மை உள்ளது. பகவத் கீதையில் எதுவும் நிரந்தரமில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் பானை எப்போது நிரம்பி வழிகிறதோ. அப்போது அதனை புதுப்பிக்கவேண்டும். இப்போது பானை நிரம்பி வழிகிறது எனும்போது நாம் தர்மத்தினை செய்யவேண்டும். இப்போது நீங்கள்தான், நீங்கள் மட்டுமே தெருக்களில் எப்போது இறங்கவேண்டும் என்று தீர்மானிக்கவேண்டும்; முடிவு உங்கள் கையில்தான் இருக்கிறது.













22

பாதுகாப்பு பிரயத்தனங்கள்

தோட்டாக்களுக்கு செய்யும் செலவு திரும்பிவரப்போவதில்லை. ஆனால் அடிப்படை கட்டமைப்புகளுக்கு செய்வது நிச்சயம் பிறகு பயனளிக்கும்.

ஒருவகையில் பாகிஸ்தான் நாட்டுடன் உறவுகள் மேம்படுவதாக  இருந்தாலும், இன்னொருவகையில் அந்நாட்டுடன் சுமூகமான உறவு ஏற்படக்கூடாது என்று விரும்புகிறோம். நமது பிரதமர் பாகிஸ்தான் பகுதிகளைப் பற்றிப்பேசும்போது நாடாளுமன்றத்தில் பல அணிகளாகப் பிரிந்து நின்று பேசுவதும், ஊடகங்களில் கடும் கூச்சல் இடுவதுமாக இரு நாட்டு உறவுகள் சமநிலையடையும் நிலையில், இவை அதனை குலைத்துப்போட்டுவிடுகின்றன.

நமது செயல்பாடுகள் பாகிஸ்தானுடனான ஒற்றுமையை உண்மையில் நாம் விரும்புவதில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது. உறுதியாக, நாம் உறவுகளை சிறந்ததாகவும், ஆழமானதாகவும் கொள்ள முயற்சித்தும் அங்கே மனக்கசப்பும், கோபமும்தான் இறுதியில் மிஞ்சுகிறது. அனைத்தையும் விட பாகிஸ்தானுக்கு சரியான பாடத்தை கற்பிக்கவேண்டும்; அவர்களை சரியான இடத்தில் வைக்கவேண்டும்; எனவும், பாகிஸ்தானை இகழ்ந்து பேசுவதுதான் தேசபக்தி என்று கூறுவதில் பெரும் அரசியல் உள்ளது.

மும்பை தீவிரவாதத் தாக்குதல் பிரச்சனைகளை தீர்க்காமல் பிரதமர் பாகிஸ்தானோடு பேசுவது சரியானதல்ல என்று நாம் எண்ணுகிறோம். பாகிஸ்தானுடன் பேசுகிறோமோ இல்லையோ மிக அதிகமாக அந்நாட்டுடன் இணைந்துள்ளோம். அனைத்து தொடர்புகளையும் துண்டிக்கவேண்டும் என்று கூறியபடி அரசியல்வாதிகள் அழுக்கான பார்வையை பகிர்ந்தபடி ஏதோ செய்வது போன்ற பாவனையோடு இருப்பார்கள். ஒவ்வொரு இந்தியரின் வாழ்வும் பாகிஸ்தானோடு இணைந்துள்ளது. அங்கு நடத்தப்படும் போரில் நமது மக்களின் பணம் பெருமளவு செலவிடப்படுகிறது. காரணம் நமது பாதுகாப்புத்துறை நிதிஅறிக்கைதான். பாகிஸ்தான் நாட்டிடமிருந்து பாதுகாப்பு என்ற வகையில் அரசு இதற்காக பெருமளவு செலவு செய்கிறது. 

தேசபக்தி என்ற போர்வையில் பாதுகாப்புத்துறை தொடர்பான செலவுகள் எந்த கேள்வியும் கேட்க முடியாதவை ஆகிவிட்டன. எல்லையில் உயிரைப்பயணம் வைத்து நாட்டைப் பாதுகாக்கும் வீரர்களுக்கான செலவை எப்படி கேள்வி கேட்கமுடியும்? நீங்களே கூறுங்கள். இதில் உள்ள கேள்வி என்னவெனில் உயிர்கொடுப்பது என்பதுதான் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது, பிரச்சனையை சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும். பாதுகாப்பிற்காக இவ்வளவு செலவு செய்கிறோம், இதற்காக பிறகு நாம் என்ன பெறுகிறோம்?

ஆம். கருத்தியலாக வலுவான ராணுவம் உருவாகிறது எனலாம். ஆனால் நாம் ஏழை நாடாயிற்றே. ஏழைகளாக இருந்தால் நடைமுறையை சிந்திக்கவேண்டும் அல்லவா. அனைத்து இந்தியர்களும் பாதுகாப்போடு இணைந்துள்ள மூன்று பகுதிகளை சரியாக புரிந்துகொண்டால் இதனோடு உடன்பாடு கொள்ளமுடியும். 

வெளிநாட்டுக்கொள்கை

நமது வெளிநாட்டுக்கொள்கை நமது நாட்டின் ஆத்மாவினைக் கூறுவதாக இல்லை. வெளிநாடுகளுடன் உறவுகளை ஏற்படுத்திக்கொண்டால் நாட்டிற்கு கிடைக்கும் நன்மைகளை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்படும் கொள்கைகளைக் கொண்ட அறிக்கைகளே இவை. அரசியல்வாதிகளை மறந்துவிடுங்கள். சக இந்தியர்களைக்கேட்கிறேன். நமக்கு இவ்வளவு சிரமப்பட்டு கிடைக்கும் காஷ்மீர் ஏன்  தேவை?  அங்கு செலவிடும் தொகையில் இளைய தலைமுறையினருக்கான கல்லூரிகளை நாடு முழுவதும் ஏற்படுத்தலாம் அல்லவா? விவசாயிகளுக்கான புதிய திட்டங்களை ஏன் உருவாக்கக்கூடாது? சாலைகளை, மின்நிலையங்களை ஏன் அமைக்கக்கூடாது? அதீத பணவீக்க நிலைமையில் ஏன் எப்போது இருக்கவேண்டும்? இவை அனைத்தும் சிறந்தவையாக இல்லையெனினும் இணைந்து உள்ளன. பாதுகாப்பு என்பதனைத் தாண்டி மேற்கூறிய துறைகளின் திட்டத்தொகையினை ஒன்றாக சேர்த்தாலும் கூட அவ்வளவு தொகை அவற்றினை உருவாக்க கிடைப்பது இல்லை. அரசிடம் அதிகளவு நிதி இல்லாத நிலையில் தொடர்ந்து சண்டையிடுவது நாட்டின் முக்கிய செயல்பாடுகளை முடக்கும். எனவே இதனைக் காக்க அமைதி நடவடிக்கைகளை எடுத்தால் அப்பணத்தினைக் கொண்டு  ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை செய்யமுடியும். வெளிநாட்டுக்கொள்கை இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பாதுகாப்பு கூட்டுறவு

உலகமயமாதலின் விளைவாக பொருளாதாரம் முன்னெப்போதையும் விட அதோடு ஊடும் பாவுமாக இணைந்துள்ளது. யாரும் எதையும் செய்வது என்பதை சுயமாக செய்துகொள்ளவேண்டும். இன்னொரு நாட்டுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு நம் நாட்டு எல்லைகளை பாதுகாக்க முயற்சிக்கலாம். உதாரணமாக, அமெரிக்காவிற்கு தன் நாட்டு எல்லைகளை கவனமாக பாதுகாக்கும் தேவையிருப்பதோடு, உலகளாவிலான பயங்கரவாதத்தினையும் தடுக்கும் அவசியம் உள்ளது. நாம் அவர்களோடு இணைந்து பணிபுரியலாம். நமது நாட்டின் சில பகுதிகளை அவர்களுக்கு அணுக வாய்ப்பளிக்கலாம். நம்மைக் காத்துக்கொள்வதில் செலவும் மிச்சமாகிறது. பாலைவனப்பகுதிகளில் சிறப்பாக காவல் காத்த அனுபவமும் அவர்களுக்கு உண்டு. அமெரிக்கா நமது நாட்டின் பாதுகாப்பு குறித்த முனைப்பு காட்டுவது என்பதில் நம்மில் சிலருக்கு நடுக்கம் ஏற்படக்கூடும். ஆனால் வெளிப்படையாக கூற வேண்டுமானால், நமது எல்லைகளை காத்து நிற்பதால் அவர்களுக்கு கூடுதலாக என்ன விஷயங்கள் கிடைத்து நமக்கு எதிராக செயல்படுவார்கள்?  தொழில்நுட்ப யுகத்தில் இந்தியாவைத் தாக்கும்  அளவு தகவல்களோ (அ) திறமையோ அவர்களுக்கு கிடையாதா என்ன? நம்மை அவர்கள் தாக்குவதற்கான தேவையில்லை. இந்தியா அவர்களுக்கு முக்கியமான வணிக சந்தையாகவும், குறைந்த கட்டணத்தில் வேலைகளைச் செய்துதரும் இடமாகவும் விளங்குகிறது. நமது பாதுகாப்பு வேலைகளை அவர்களிடம் கொடுத்து பணத்தினை மிச்சம் செய்யலாம். வளமான, வலிமையான நண்பன் அரிதாகவே யாரையேனும் காயப்படுத்துவான்.


பழமைநாகரிகமான அமைதி

புத்தர் மற்றும் காந்தி பிறந்த தேசமான நம்நாடு அமைதி என்ற லட்சியத்தை இழந்து வெகுகாலமாகிறது. பாகிஸ்தானுடன் பேசவேண்டும்தான் ஆனால் அவர்களை சரியான இடத்தில் வைத்து நமது கருத்தை அவர்களது தொண்டையில் திணித்து அதனை செய்யவேண்டும் என்கிற நிலைமை உள்ளது.  வெளிப்படையாக கூறினால், இந்த எதிர்ப்பு சினிமா போல கைத்தட்டல்களைப் பெற்றுத்தரலாம் ஆனால் அமைதியைப் பெறமுடியாது. பாகிஸ்தான் எப்போது தவறு செய்கிறது என்கிற முன்முடிவோடு காஷ்மீர் இந்தியாவிற்கானது என்று கருதுகிறோம். அப்பகுதி எப்போதும் நமக்கு இடைஞ்சலாகவே இருந்து வருகையில் மற்றவர்களின் கருத்திற்கும் வாய்ப்பு அளிக்கலாம். பலருக்கு இதில் மகிழ்ச்சி இல்லாமல் இருக்கலாம். ஆனால் அங்கு வாழ்வது குறித்து கற்பது நிலைமையை தெளிவாக்க உதவக்கூடும்.

நமக்கு அமைதிவேண்டும் எனபது அது சிறந்தது என்பதற்காக மட்டுமல்ல நாம் தொடர்ந்து சண்டையிட (அ) அதற்கான முன் தயாரிப்புகளிலோ அடுத்த இருபது ஆண்டுகளை வீணடிக்கவேண்டாம் என்பதும் காரணமாகும். வீட்டிற்கு வெளியே பல பாதுகாப்பிற்கென பல நபர்களை  நிறுத்திவைத்தால் பிறகு பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப பணம் ஏதும் இருக்காது. பாதுகாப்பு குறித்த செலவுகள் கட்டுப்படுத்தப்பட்டு சரியான அரசியல் மற்றும் செயல்பாடுகளை உருவாக்க நாம் முயலவேண்டும். தோட்டாக்களுக்கு செலவு செய்யும் பணம் திரும்பாது. ஆனால் அடிப்படை கட்டமைப்பிற்கு செலவு செய்வது திரும்பும்.
 

23

அமைதிக்கும்         அன்பிற்குமான குழப்பங்கள்

அமைதிக்கு வாய்ப்பளித்து நாடு வளர உதவுவோம்.

பாகிஸ்தானில் முன்பிருந்த அரசுகள் அங்கிருந்து வரும் தாக்குதல்களை தடுக்க சிறிதளவே முயற்சிகளை எடுத்தன. காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தான் எந்த ஒரு நடைமுறைத்தீர்வையும் முன்வைக்கவில்லை. இன்றுவரையிலும் கூட வளைந்து கொடுக்காத தன்மையில் அமைதிப்பேச்சுவார்த்தைக்கு எந்த பதிலும் இல்லாதநிலையில் நாம் தொடர்ந்து அதனை முன்னெடுத்து வருகிறோம்.

பாகிஸ்தானுடன் விரோதம் வளர்க்க நம்மிடம் பல்வேறு காரணங்கள் இன்றும் உயிரோடு உள்ளன. இது கடினமானதாக இருந்தாலும், அமைதி அழைப்பு என்பது முக்கியமானதாக உள்ளது. ஆண்மையுடன் தொடர்புபடுத்தாத வரையில் வாழ்க்கையில் இது முக்கியமானதுதான். வன்மம் வளர்ப்பதைவிட இந்தியர்களுக்கு நல்ல வாழ்விற்கான உறுதி தருவது அமைதி என்பதால் அதனை தேர்ந்தெடுக்க முடியும். 

பாதுகாப்பு நிதியறிக்கையில் 40 பில்லியன் டாலர்களுக்கும் மேலாக இரு நாடுகளில் இந்தியா மூன்று மடங்கு அதிகமாக ஆண்டிற்கு ஆண்டு செலவழித்துவருகிறது. கோல்டன் குவாட்டிரிலேட்டரல் சாலை திட்டம் எனும் பெரிய திட்டத்தினை அரசு நிறைவு செய்துள்ளது. 10பில்லியன் டாலர் செலவில்  அமைக்கப்பட்டுள்ள இந்த சாலை 5000 கி.மீ நீளமானதும், அதிக கால பயன்பாட்டிற்குரியதுமாகும். இப்படியல்லாமல் நாம் செலவு செய்யும் பணம் என்னவாகும்? அமைதி நடவடிக்கைகள், ராணுவச்செலவுக்களை குறைத்திருக்கவேண்டுமே? அமைதிக்கு பொருளாதார மதிப்பு உண்டா?

நமக்கு அமைதி தேவை என்பது அது சிறந்த ஒன்று என்பதோடு, அது நடைமுறையில் செயல்பட வேண்டும். நாம் கொண்டிருக்கும் வரம்புகொண்ட ஆற்றலை சண்டையில் வீணடித்துக் கொண்டிருக்க முடியாது. அமைதி வேண்டும் ஏனெனில் இந்தியாவில் நடைபெறும் நல்ல செயல்பாடுகளை இழக்க விரும்பாததினால்தான். இதில் பலவீனம் ஏதுமில்லை.

பாதுகாப்பு தொடர்பான செலவுகள் தொடர்ந்து அதிகரிக்கின்றன. மேலும் இரு நாடுகளும் அணுசக்தி ஆற்றலைக்கொண்டிருக்கின்றன. எந்த தரப்பும் அதிக ஆற்றல் கொண்டிருக்கிறது என்று கூறாத போதும், பாதுகாப்பு தொடர்பான செலவுகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தம்மிடம் உள்ள சக்தியை இருவரும் பயன்படுத்தவே போவதில்லை. இதில் அறிவுக்கு ஏதாவது விஷயம் எட்டுகிறதா?

அமைதி என்பதை தவறாக புரிந்துகொண்ட அதற்கு எதிரானவர்களைப்பற்றி கூறவிரும்புகிறேன். பலரும் அமைதி என்பதை அன்போடு இணைத்து தவறாக புரிந்துகொள்கிறார்கள். நம்மில் பெரும்பாலும் அமைதியைத் தேர்ந்தெடுக்கிறோம் காரணம் நாம் இந்தியாவை விரும்புகிறோம்; பாகிஸ்தானை வெறுக்கிறோம். அமைதி என்பது ஃப்ரீ ஹக் போன்ற செய்கையல்ல. அமைதி என்பது வாழு, வாழவிடு என்ற கொள்கையுடையதுதான்.

அமைதி என்பதை உருவாக்குவதாக முடிவெடுத்தபின் அடுத்ததாக அருகிலுள்ள நாடு அது குறித்த செய்முறை எதையும் வெளிப்படுத்தாது இருக்கையில் எப்படி அதனை உருவாக்குவது? என்ற கேள்வி நம் மனதில் எழும். மறுபடியும் இந்த புள்ளி வலுவாகிறது. அமைதி உருவாக பாகிஸ்தானில் ஜனநாயகம் வலுப்பெறவேண்டும். ஜனநாயக ஆட்சி உருவாகி வளர்ந்து வலுப்பெற்றால்  அத்தேசத்தினை  நம்பலாம். அதுவரை அத்தேச தலைவர்களை நம்புவது கடினம். ராணுவ சர்வாதிகார ஆட்சியில் அமைதி முயற்சிகள் அசாத்தியமானவையே ஆகும். பாகிஸ்தான் ராணுவம் அமைதிக்கான எந்தவித முயற்சியையும் பொருட்படுத்தாது அவர்களின் அபிமான எதிரியான நம்மைக் குறிவைத்து துப்பாக்கி முனையினை வைத்துக் கொண்டிருப்பார்கள்.

பாகிஸ்தானில் ஜனநாயகம் உருவாக இந்தியா முன்னெப்போதும் இல்லாதவகையில் வலுவான முயற்சிகளை எடுத்துவருகிறது. சுயமான சுதந்திரமான அரசு என்பதை உருவாக்க மக்களின் ஆதரவை இவை பெறக்கூடும். பாகிஸ்தானிய மக்களின் ஜனநாயக ஆதரவு ராணுவத்தினை பலவீனமாக்கி, இந்தியாவின் மதிப்பை உயர்த்தலாம். இவை ஓரிரவில் நிகழக்கூடியவை அல்ல. இதனை எவ்வளவு விரைவில் தொடங்குகிறோமோ அவ்வளவு பாகிஸ்தான் நிலையானதாக மாறினால் இந்தியாவின் விவகாரங்களில் பின்வரும் ஆண்டுகளில் அது தலையிடாது.

ஜனநாயக அரசு, ராணுவ ஆட்சி மற்றும் அதற்கு ஆதரவான அரசுகளை வீழ்த்தும் வகையில் அதற்கான முயற்சிகளை நாம் செய்யவேண்டும். கடந்த காலங்களில் அமைதிப்பேச்சுவார்த்தை, தீர்வு கொள்ள விரும்பிய பாகிஸ்தானிய தலைவர்கள் அனைவருமே யாராவது ஒருவரின் மேல் துப்பாக்கி முனையை வைத்துதான் அதிகாரத்திற்கு வந்தவர்களாவர் என்பதை பின்னோக்கி பார்க்கும்போது அறியமுடிகிறது.


வெறுப்பை அழிக்காமல் அமைத்திக்கான நம்பிக்கையை எப்போதும் பெறமுடியாது. வெறுப்பு நன்மையை என்றும் அளிக்காது. அமைதி என்பது இளையதலைமுறைக்கு போரைவிட அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தி தரக்கூடும்.

இறுதியாக அமைதி முயற்சிகள் சிரமமானதாக இருந்தாலும், அவற்றினை நாம் சந்தேகப்படக்கூடாது. அவை வெற்றியடையலாம் (அ) தோல்வியடையக்கூடும். ஆனால் முயற்சி செய்யவில்லை என்றால் எந்த நம்பிக்கையும் உருவாகாது.  ஜான் லெனான் பாடிய இந்த வரிகளைப்போலத்தான் நாம் கோருகிறோம்.
''அனைவரும் அமைதிக்கு வாய்ப்பளிக்கத்தான் கூறுகிறோம்''
 


துணைநின்றவை
லினக்ஸ் மின்ட் 17
லிப்ரே ஆஃபீஸ் 4
ஐபஸ் தமிழ் மென்பொருள்

நன்றி: த. ஸ்ரீநிவாஸன், கணியம் மற்றும் Freetamilebooks.com ஆசிரியர், நிறுவனர்.

                             fine

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்