''வெளிப்படையான தாராளமான விவாதங்களுக்கான நெருப்பை எங்களது தொண்டர்களிடையே தூண்டவேண்டும்''


நேர்காணல்


''வெளிப்படையான தாராளமான விவாதங்களுக்கான நெருப்பை எங்களது தொண்டர்களிடையே தூண்டவேண்டும்''


சஞ்சய் காவ்
தமிழில்: வின்சென்ட் காபோ

காங்கிரஸ் தலைவரும், டெல்லி முன்னாள் முதல்வருமான ஷீலான தீக்ஷித் சஞ்சய் காவ்-ம் ராகுல்காந்தி கட்சித்தலைவராக எப்படி செயல்படுவார் என்று அனுமானிக்க தான் ஒரு ஜோதிடர் அல்ல; கட்சியின் முழுப்பொறுப்பையும் ஏற்கும் தருணத்தில் அவரின் செயல்பாட்டினை முடிவுசெய்ய முடியும் என்ற தனது அண்மைக்காலப்பேச்சு குறித்து விரிவாகப்பேசுகிறார்.

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரான ராகுல்காந்தி கட்சியின் தலைவராக வருவார் என்றரீதியிலான தங்களது பேச்சு பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறதே?


காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியாகாந்தி அவர்களின் தலைமையில் பணியாற்றுவதே சிறப்பானதாக இருக்கிறது என்றுதான் கூறினேன். நிலம் கையகப்படுத்துதல் சட்டம் தொடர்பான பிரச்சனையில் அவரின் நிலைப்பாடு பாராட்டும்படி அமைந்திருந்தது. 

நிலம் கையகப்படுத்துதல் சட்டத்திற்கு எதிராக அனைத்து கட்சிகளையும் திரட்டும் அவரது முனைப்பான தன்மை, விவசாயிகளை சந்தித்து உரையாடுவது ஆகியவை நாட்டிலுள்ள அனைவரின் இதயத்தையும், ஆன்மாவினையும் தொடுவதாக உள்ளது. கட்சித்தலைவர் பதவிக்கு திரு. காந்தியை உயர்த்துவது என்பதை அவர்தான் முடிவு செய்யவேண்டும்.

திருமதி. காந்தியை காங்கிரஸ் கட்சித்தலைவராக எப்படி மதிப்பிடுவீர்கள்?


அவர் எளிமையான அற்புதமான பெண்மணி ஆவார். இரண்டு மக்களவை தேர்தல்களில் கட்சியினை வெற்றிபெறச்செய்தும் பிரதமர் பதவியை தான் ஏற்காமல் மன்மோகன்சிங்கினை அதற்காக பரிந்துரை செய்து அப்பதவியினை அவர் ஏற்கச்செய்தார். அவரது தலைமையிலான காங்கிரஸ் கட்சி பல மாநிலங்களில் அரசு அமைத்திருக்கிறது. திருமதி.காந்தி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கட்சியினை கொண்டு சென்றவர் ஆவார்.

திரு. காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்பது குறித்த என்ன நினைக்கிறீர்கள்?


வாய்ப்பளித்தால் அவர் அப்பணியினை சிறப்பாக செய்வார் என்றே நம்புகிறேன். ஆனால் காலம்தான் அவர் தலைவராக எப்படி பணிபுரிவார் என்பதை தீர்மானிக்கும். எதிர்காலத்தில் ஒருவர் எப்படி செயல்படுவார் என்று கணிக்க நாம் ஜோதிடர் இல்லையே! அரசியலில் இருப்பதால், கருத்துகளை வெளிப்படையாகவும், ஆராய்ந்தும் சரியாக வெளிப்படுத்த வேண்டியதிருக்கிறது. ஆனால் திரு. காந்திக்கு முழுப்பொறுப்பையும் கொடுத்துப்பார்த்தால்தான் அவரின் செயல்பாடுகள் குறித்து முடிவெடுக்க முடியும்.

திரு. காந்தி எப்படி செயல்புரிவார் என்று நினைக்கிறீர்கள்?


அவரின் செயல்பாட்டிற்கு முன்னதாக அதை கூறுவதாக இந்த பதில் அமையும். இரண்டாவது மக்களவை தேர்தலுக்கு முன்னதாக அசோகா ஹோட்டலில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் நல்ல புத்திசாலி என்று கூறியிருக்கிறேன். கட்சி (அ) தனிநபர் வெற்றி தோல்விகள் குறித்ததல்ல. அரசியலில் நீங்கள் வெற்றியும் பெறலாம். தோல்வியும் பெறலாம்.


திரு. காந்தி கட்சி அலுவலக பொறுப்பாளர்கள் ஜனநாயக முறையில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்று தொடர்ந்து கூறிவருகிற நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவராக அவரை எப்படி நிறுத்துவீர்கள்?

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு உரித்தான தேர்தலில் யார் வேண்டுமானாலும் நிற்கலாம். ஒருங்கிணைந்த காங்கிரஸ் தலைமையை தேர்ந்தெடுக்கும் முடிவுதான். கட்சியின் துணைத்தலைவராக ராகுல்காந்தி இருக்கிறார். மற்றவர்கள் பொதுசெயலாளராக இருக்கிறார்கள். கட்சியில் அவர்தான் இரண்டாவது இடம் பெற்றிருக்கிறார். வேறென்ன வாய்ப்பு உள்ளது?

முந்தைய காலத்தில் நீங்கள் தீவிரமான அரசியலில் ஈடுபட்டு இருந்தீர்கள். ஆனால் இப்போது அந்த தீவீரத்தன்மையை காண முடியவில்லையே?


காலம் மாறிவிட்டது. ஒருவர் ஒன்றை செய்யும் திறமையோடு இருப்பது செய்வது என்பது காலமாற்றத்தோடு கடந்துவிடுகிறது. அனைத்தும் காலம் தொடர்பானதுதான். புதிய தலைவர்கள் வந்து விட்டார்கள். அவர்களது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அதுவே டெல்லியின் ஒரு ஆண்டு கட்சியில் இருக்க வைத்தது. பின் 15 ஆண்டுகள் நகர நிர்வாகத்தில் ஈடுபட்டிருந்தேன். கட்சியில் எப்போதும் எளிதில் அணுகும்படியாக இருந்துள்ளேன். எனது செயல்பாடுகளை கட்சி விரும்பினால் நான் இதற்கு தயாராகவே இருக்கிறேன். 

பாக்கியதாரி திட்டத்தில் நீங்கள் மக்களை முடிவு எடுப்பதில் ஈடுபடுத்தினீர்கள். இப்போது ஆம் ஆத்மி கட்சியும் மொகல்லா கமிட்டியினை நகர நிதியறிக்கையில் முடிவெடுக்க திட்டமிட்டுள்ளதே?


கூடுதல்ஆணையர்களின் மூலம் நிதி ஒதுக்கீடு ஆகியவற்றில் மக்களது பங்களிப்பை அளிக்கச்செய்தோம். இன்று ஆம் ஆத்மி நகர நிதி திட்டத்தில் மக்களை பங்காற்றச்செய்வதாக கூறுவது எப்படி என்று பார்ப்போம். முதலில் இலவச குடிநீர் அளிப்பதாக கூறியவர்கள் அதன் கட்டணத்தை 10% விழுக்காடாக உயர்த்திவிட்டார்கள். அவர்கள் அளிக்கும் மின்சார மானியத்தில் புதுமை ஏதுமில்லை. இதனை நாங்களும் அளித்தோம். ஆம் ஆத்மி கட்சியினர் தொடர்ந்து போலியான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். ஊழல் குறித்து பேசுகிறார்கள். மூன்று நாட்களில் ஒரு தொலைபேசி அழைப்பு மூலம் ஊழலை ஒழிக்க முடியுமா? அவர்களின் பகல் கனவுகள் நிறைவேற வாழ்த்துகிறேன். அவர்கள் இதில் தோற்றால் அவர்களின் நிலைப்பாடு தெரிந்துவிடும். அவர்களது 70% வாக்குறுதிகள் அடித்தட்டு மக்களின் வாக்குகளைப் பெறும் அரவிந்த் கெஜ்ரிவால் தன்னை சிறந்த நிர்வாகியாக நிரூபிப்பாரா (அ) தன்னை எப்போதும் போல காட்டிக்கொள்ளும் கலகவாதி தோற்றமா? என்றுதான்.

காங்கிரஸ் முன்னே இருக்கும் பாதை என்ன?

கட்சியினை சரியான தன்மையில் அமைக்கவேண்டும். 68 ஆண்டுகளில் வளர்ச்சி என்பதாக பயணப்பட்டு வந்திருக்கிறோம். உலகத்தரம் கொண்ட நாடாக வளர்க்க ஒருங்கிணைக்க சிந்தனைகளை திட்டமிட்டிருக்கிறோம். மதச்சார்பற்ற சமூகத்தோடு வளர்ச்சியை இணைத்து பயணிப்பது குறித்து சிந்திக்கவேண்டிய தேவை உள்ளது. பி.ஜே.பியின் லல் ஜிகாத், கார் வாப்ஸி ஆகிய இந்தியாவின் ஒற்றுமை பல்வேறு இனக்குழுக்களிடையேயான வேற்றுமையில் ஒற்றுமை எனும் தன்மைகளை அழிக்கும் சிந்தனைகளை எதிர்க்கும் செயல்பாடுகளை மேற்கொள்வோம்.

பிரதமர் நரேந்திரமோடியின் செயல்பாடுகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?


இன்னும் 5 மாதங்கள் காத்திருக்கவேண்டும். பாரதிய ஜனதாக்கட்சி மீதான மாயைகள் விலகத் தொடங்கிவிட்டது. தேர்தல் அறிக்கையில் கூறியவை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. நமது வியாபாரிகள் சிரமப்பட்டது சந்தைகளில் விலைகள் கூரை தொட்டு நிற்கின்றன. எங்கே மோடிஜியின் 'ஸ்வட்ச் பாரத்' நிறைய பேச்சுதான் உள்ளதே தவிர செயல்பாடு ஏதும் இல்லை.

காங்கிரஸின் நிலை என்ன?

இந்தியாவை உருவாக்கும் கொள்கைகள் மீது கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. சமூக நலத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் தேவை உள்ளது. ஜனநாயகக்கட்சி என்பதால் மக்களின் கருத்தை வரவேற்று அதனை பிரதிபலிக்கும் தேவை உள்ளது. இந்தியா முழுவதும் உள்ள சிந்தனைகளை ஒன்றிணைக்கும் தேவை உள்ளது. எங்களது தொண்டர்கள் எழுச்சி பெற்றவர்களாகவும், உற்சாகம் கொண்டவர்களாகவும் மாறவேண்டும்.

காங்கிரஸின் பலவீனம் என்ன?

காங்கிரஸ் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. மூத்தவர்களின் அனுபவத்தினை செயலாக்க இளமையான கரங்கள் தேவைப்படுகின்றன. தாராளமான, வெளிப்படையான விவாதங்களை உருவாக்க தொண்டர்களை நெருப்பைத் தூண்ட வேண்டும்.

நன்றி: டெக்கன் கிரானிக்கல் 19.4.2015

கருத்துகள்