சீனாவின் ஜீனியஸ் எனும் தேர்வுமுறை - அறிவியல் தொழில்நுட்பத்தில் சாதனை புரியும் சீனா!



2022 ஆம் ஆண்டு மருந்து நிறுவனம் ஒன்றின் மேலாளாராக உள்ள பெண்மணிக்கு, தொலைபேசியில் அழைப்பு ஒன்று வந்தது. அதில், உங்கள் மகனை ஜீனியஸ் தேர்வு ஒன்றை நடத்துகிறோம். அதற்கு அனுப்ப முடியுமா என்று அழைத்த குரல் கேட்டது. கேட்ட நேரம் கொரொனா வைரஸ் பரவிக்கொண்டிருந்த நேரம். அழைத்த குரல், சீனாவில் உள்ள உயர்தர மேல்தட்டுப்பள்ளி. அதை, மேலாளர் புரிந்துகொண்டு மகனை அந்த ஜூனியஸ் தேர்வுக்கு அனுப்பி வைத்தார். ஏனெனில் அந்த தேர்வு முப்பது ஆணடுகளுக்கு அந்த தாயும் எழுதித்தான் பீகிங் பல்கலைக் கழகத்தில் படிக்க வாய்ப்பைப் பெற்றார். அதன் வழியாக நல்ல வேலைக்குச் சேர்ந்தார். உயர்ந்த கௌரவமான சம்பளத்தைப் பெறுவதற்கு அந்த தேர்வும், அதில் பெற்ற வெற்றியும்தான் காரணம். இன்று அதே தேர்வு, தன் மகனுக்கு கிடைக்கிறது என்றால் அதை புறந்தள்ளுவாரா. இல்லை அதை நோக்கிச் செல்வாரா?




அதுதான் அவரது மகனுக்கான பொன்னான வாய்ப்பு. அதை எப்படி அவர் வீணடிக்க முடியும்? சீனாவில் மிகச்சிறந்த உயர்கல்வி நிறுவனங்களை எப்படி ஊதாசீனப்படுத்த முடியும்? அந்த மேலாளரின் மகன் அன்றை ஆண்டுக்கான சிறந்த அறிவுத்திறன் கொண்ட மாணவர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இப்படி நாடு முழுவதும், ஒரு லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். பல பத்தாண்டுகளாக ஜீனியஸ் தேர்வு மூலம், சீனாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறைகள் முக்கியத்துவம் பெற்றது. குறிப்பாக செய்யறிவு, ரோபாட்டிக்ஸ், மேம்பட்ட உற்பத்திஆகி துறைகள், கவனம் பெற்றன.




சீனாவில் உள்ள மிகப்பெரிய ஆன்லைன் விற்பனை நிறுவனங்களான தாவோபாவோ, பிடிடி, உணவு விநியோக சூப்பர் ஆப்பான மெய்துவான். டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸின் நிறுவனர், அதன் மேம்பாட்டாளர்கள் அனைவருமே ஜீனியஸ் தேர்வு எழுதி அதன் வழியாக வெளிச்சம் பெற்று படித்து நாட்டின் முன்னணி நிறுவனங்கள் உருவாக்கியிருக்கிறார்கள். உலகளவில் பெரிய பன்னாட்டு நிறுவனமான என்விடியாவை எதிர்த்து நிற்கும் சீன உள்நாட்டு நிறுவனமான கேம்பிரிகான் என்ற நிறுவனத்தை இரு சகோதரர்கள் தொடங்கினர். இவர்களும், டீப் சீக்கின் சாட்பாட்டைப் பயன்படுத்தி பார்த்திருப்பீர்கள். அலிபாபாவின் க்வென், பிறகு, டென்சென்ட் நிறுவனத்தில் இருந்து ஓபன் ஏஐ மூலம் கைப்பற்றப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர் ஆகியோரும், மேற்சொன்ன நிறுவனங்களில் உள்ள மூல பொறியாளர்களும் கூட இப்படியான ஜீனியஸ் தேர்வு மூலம் உருவாகி வளர்ந்தவர்கள்தான். இந்தப்பட்டியல், இப்போதைக்கு நீளம் காரணமாக சிறியதாகி உள்ளதே தவிர எழுதினால் நீண்டுகொண்டே போகும்.




ஜீனியஸ் எழுதி தேர்வாகும் மாணவர்கள் பதினாறு வயது தொடங்கி பதினெட்டு வயது வரை தீவிரமான பாடங்களை படித்து வாசிக்கிறார்கள். இவர்களுக்கு சிறப்பான பயிற்சி வழங்கப்படுகிறது. இதே நேரத்தில் பிறர், காவோ தேர்வை நினைத்து பயந்து அல்லது எதிர்கொள்ளும் முயற்சியை செய்துகொண்டு இருப்பார்கள். மேற்குலகில் ஆண்டுக்கு அரை மில்லியன் மாணவர் அறிவியல் தொழில்நுட்ப (அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், கணிதம்)பட்டதாரிகளாக வெளிவருகிறார்கள் என்றால், சீனாவில் ஐந்து மில்லியன் மாணவர்கள் பட்டதாரிகளாகி வெளியே வருகிறார்கள். இதை சீனாவின் அரசு ஊடகமான ஷின்குவா கூறியுள்ளது. ஜீனியஸ் தேர்வில் வந்தவர்களுக்கு காவோ தேர்வு ஒரு பொருட்டில்லை. அதை அவர்கள் எழுத வேண்டியதில்லை. சிங்குவா பல்கலைக்கழகம், ஷாங்காய் ஜாவ்டாங் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மேம்பட்ட கணினி பொறியியல் பாடங்களை அவர்கள் படிக்கலாம்.




என்விடியாவின் இயக்குநராக உள்ள ஜென்சென் ஹூவாங் தைவான் அமெரிக்கர். அவர் சீன ஆராய்ச்சியாளர்கள் உலகத்தரம் மிக்கவர்கள் என அங்கீகரித்து பேசியிருந்தார். சீனாவில் உருவான டீப்சீக் சாட்பாட், ஹூவாய் என இரண்டு உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களும் கூட ஜீனியஸ் எனும் திட்டத்தின் அடிப்படையதில் உருவானவர்கள்தான். இப்படியான மிகச்சிறந்தவர்களி உழைப்பு, அதனால் உருவான படைப்புகள் என்னை ஆச்சரியப்படுத்தவில்லை என்று கூறினார். ஓராண்டுக்கு முன்னதாக, சீன ஸ்டார்ட் அப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட டீப்சீக், உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சிறிய நிறுவனம் அமெரிக்காவின் செய்யறிவு ஜாம்பவான் நிறுவனங்களை பீதியில் உறையச் செய்தது. குறைந்த செலவின் திறமூல அடிப்படையில் உருவாகியிருந்த செய்யறிவு வசதி அது. இதற்கு ஜீனியஸ் தேர்வு முறை, முக்கியமான காரணம் என்று கூறலாம். குறைந்த செலவில் சிறிய குழுவை வைத்தே டீப்சீக் சாட்பாட் ஆர்1 மாடலை உருவாக்க முடிந்திருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

மொழிபெயர்ப்பின் சிறுபகுதி... 




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!