பெண்களுக்கு எதிரான அநீதிகளை மிரட்டலுக்கு அஞ்சாமல் தட்டிக் கேட்கும் யோகிதா பாயனா!
யோகிதா பாயனா, வட இந்தியாவில் நடைபெறும் பல்வேறு பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் பற்றி பேசி வருகிற குரல்களில் ஒருவர். பேச்சு மட்டுமல்ல. களத்திலும் செயல்பட்டு ஆதரவாக நிற்பவர். அவருடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகிறார். அதிலும் இந்தியா போன்ற மதவாத நாட்டில் வல்லுறவுகள், பாலியல் வல்லுறவு தாக்குதல், சுரண்டல்களுக்கா பஞ்சம்.அதனால் அவருடைய ட்வீட்களைப் பார்த்தால், ஒரு குற்றம் அடுத்த குற்றம் என அப்படியே மாறி மாறி சென்று கொண்டே இருக்கிறது. பார்ப்பன தர்மத்தில் பெண்களுக்கு இடமில்லை என்பதால், அவர்களை அமைப்பு ரீதியாக சுரண்டுவதற்கு அரசு அனுமதிக்கிறது. எனவே, அவர்களுக்கு நீதியும் கிடைப்பதில்லை. பெரும்பாலும் பெண்கள் தொடர்பான வல்லுறவு, தாக்குதல், மிரட்டல் விவகாரங்கள் ஊடகங்களில், அரசின் புள்ளிவிவரங்களில் தவிர்க்கப்படுகின்றன. யோகிதா பாயனா - பீப்பிள் அகெய்ன்ஸ்ட் ரேப் இன் இந்தியா -பாரி எனும் அமைப்பை நடத்தி வருகிறார். பெண்களுக்கு தெருவில் நடக்கும் தாக்குதல்கள், கணவர் குடும்ப வன்முறைக்கு உட்படுத்துவது ஆகியவற்றையும் கூட வெளியே கூறுமாறு வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று பிரசாரம் செய்து வரு...