காதல் மீட்டர் 3 ஒருவரை மணம் செய்து வைக்க இந்துமதம் சார்ந்து நிறைய தகுதிகள் பார்க்கிறார்கள், பிற மதங்களிலும் இதுபோன்ற தகுதிகள் பொருந்தும். அவையெல்லாம் பொதுவானவைதான். அடிப்படையாக மனப்பொருத்தம் தவிர அனைத்தையும் பார்க்கிறார்கள். உடல் தோற்றம், சமூக அந்தஸ்து, புத்திசாலித்தனம், பொருளாதார தகுதி. இதுதான் சமூக தகுதிகள். இந்த நான்கு விஷயங்களை சமூகம் கவனிக்கிறது. இதன் அடிப்படையில்தான் பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணங்கள் நடைபெறுகின்றன. பெரும்பாலான திருமணங்கள், விவாகரத்தில் வந்து நிற்கும்போதுதான் பொதுவான சமூக தகுதிகள் வேலைக்கு ஆகவில்லை என பெற்றோருக்கு உறைக்கும். சில சமயங்களில் திருமணங்கள் காசு பறிக்கும் செயலாக மாற, மணமகனோ, மணமகளோ தற்கொலை செய்துகொள்வது அல்லது சித்திரவதை செய்து கொல்லப்படுவது கூட நடைபெறுகிறது. அரசியல் வணிக திருமணங்களில் புகார்கள் எழுவதில்லை. அவர்களே சமாதானம் பேசிக்கொண்டுவிடுகிறார்கள். யார் தரப்பு அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் வலிமையாக இருக்கிறதோ, அவர்கள் நடைபெற்ற தவறுக்கு காரணகர்த்தா. இன்று எழுச்சி பெற்றுள்ள பார்ப்பன பாசிச மதவாத அமைப்புகள், அதிகாரத்தை குறிவ...