இடுகைகள்

''பாலியல் வல்லுறவு பற்றி உலகம் ஏற்படுத்தி வைத்திருக்கும் அவமான முத்திரை என்னைத் தடுத்தது''

படம்
  ' ''பாலியல் வல்லுறவு பற்றி உலகம் ஏற்படுத்தி வைத்திருக்கும் அவமான முத்திரை என்னைத் தடுத்தது'' -எழுத்தாளர் நீஜ் சின்னோ ---------------------------------------------------------------------------------- எழுத்தாளர் சின்னோ, 'சேட் டைகர்'(SAD TIGER-NEIGE SINNO) எனும் சுயசரிதை நூலை எழுதியுள்ளார். இந்த நூல் பிரெஞ்சில் எழுதப்பட்டது. பின்னர், அதை ஆங்கிலத்தில் நடாஷா லெஹ்ரர் மொழிபெயர்த்திருக்கிறார். இந்த நூலின் மையம், சின்னோவின் வளர்ப்பு தந்தை அவரை எப்படி பாலியல் ரீதியாக சுரண்டினார் என்பதே. சின்னோவின் ஏழு வயதிலிருந்து இத்தகைய பாலியல் சுரண்டல் இளையோராக மாறும்வரை நீண்டிருக்கிறது. ஒரு குழந்தை பாலியல் ரீதியாக சுரண்டப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்டவரின் நிலைமை, அந்த சம்பவத்தை, அவரை சமூகம் எப்படிப் பார்க்கிறது என்பதை பதிவு செய்திருப்பதே நூலின் முக்கிய அம்சம். 2023ஆம் ஆண்டு பிரெஞ்சில் வெளியான நூல், அந்த நாட்டில் பெரும் இலக்கிய விருதுகளை வென்றது.  ___________________________________________________________________________________ உங்களுடைய வாழ்பனுபவத்தை இந்த முறையில் எழுதுவது இ...

பெரியார், அண்ணா, கலைஞர் பற்றிய சுவையான சம்பவங்களைக் கொண்ட நூல்!

படம்
  பேச வைத்த பெரியார் செந்தலை ந.கவுதமன் பெரியார் திராவிடர் தமிழர் பேரவை கட்டுரை நூல் ரூ.250 இந்த நூல் பெரியார், அண்ணா, கலைஞர், பாரதிதாசன் ஆகியோரது வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கட்டுரைகளைக் கொண்டுள்ளது. நூலை எழுதியவரான கவுதமன், திராவிடர் கழகத்தைச்சேர்ந்தவர். அவருக்கு கவுதமன் என்று பெயர் வைத்ததே பெரியார்தான். பின்னாளில் தமிழில் புலவர் படிப்பு படித்தாலும் கூட அவர், திராவிடக் கொள்கைக்காக உழைத்திருக்ககிறார். உழைத்தும் வருகிறார். நூலின் இறுதியில் சைக்கிள் மட்டுமே அவருடன் இருக்கிறது என்று கூறுகிறார்கள். அதாவது சொத்து சேர்க்கும் எண்ணம் இல்லாதவர் என்று கூறுகிறார்கள். மகிழ்ச்சி.  நூலில் இருந்து நாம் பெறுவது என்ன என்றால், பெரியார் பற்றிய பல்வேறு கருத்துகள் நூல் முழுக்க உள்ளன. இதில் ஈர்ப்பது பார்ப்பனரான பாரதியின் தாசன் என்று கூறிக்கொண்ட கனக சுப்புரத்தினம் எப்படி பாரதிதாசனாக மாறி, அவரது குரு பேசவிரும்பாத, தயங்கிய கைம்பெண் மறுமணம், சாதி, இந்தி திணிப்பு பற்றியெல்லாம் பேசினார் என்பதுதான். பாரதிதாசன் வாழ்க்கையே சுருக்கமாக பதிவு செய்திருக்கிறார்கள். கொண்ட கொள்கைக்காக அவர் பட்ட பாடுக...

கோட்டை மாரியம்மன் கண்நோய் தீர்ப்பாளா? - மாயாதீதம் - என். ஶ்ரீராம்

படம்
மாயாதீதம் என். ஶ்ரீராம் தமிழ்வெளி ப.104 இது ஒரு குறுநாவல். இதில் வரும் பாத்திரங்கள் வடகிழக்கு பகுதியில் இருந்து தாராபுரம் வருகிறார்கள். பிறகு அங்கே நடக்கும் என் ஶ்ரீராமின் உலக வழக்கங்கள்தான் கதை. இந்த எழுத்தாளரின் பலமே, அசாம், குவகாத்தி என செல்வதல்ல. தாராபுரம், நல்லிமடம், ஒற்றம் புற்கள், ஊசிப்புற்கள், கிளுவை மர வேலி என மண்ணோடு இணைந்து எழுதுவதுதான். இதுவும் கூட அவருக்கு சிறுவயதில் தெரிந்த வாழ்க்கையாக இருக்கக்கூடும். கதைக்குச் செல்வோம். அசாமைச்சேர்ந்தவர், தன்னுடைய மகனின் கண்நோயைக் குணப்படுத்த முயல்கிறார். நவீன மருத்துவமனைகளுக்குச் செல்கிறார். ஆனால், எதுவும் பயனளிக்கவில்லை. இதனால், அவர் அசாமிலிருந்து புறப்பட்டு தாராபுரத்திற்கு வருகிறார். அங்கு அவரின் தம்பி வாழ்கிறார். அவரிடம் பிள்ளையை ஒப்படைக்கிறார். சித்தப்பா, தனது அண்ணன் மகனை கோட்டை மாரியம்மன் கோவிலில் தங்க வைத்து கண் சிகிச்சையை அளிக்கிறார். ஆனால், அம்மன் மனமிரங்கவில்லை. பல மாதங்கள் இப்படியே கழிகின்றன. அந்த சிறுவனுக்கு கண்ணில் வலி அதிகரிக்கிறது. அந்த சூழலில் தேசாந்திரக்காரன் என்ற பாத்திரம் வந்து வழிகாட்ட, சித்த வைத்தியரின் முகவரி கிடைக்...

புகைப்படக்காரர் வினோத் அவர்களுக்கு வாழ்த்துகள்!

படம்

சமூகநீதி பேசும் கலகக்காரி - வோக் - டைட்டானியா மெக்ரத்

படம்
  வோக் டைட்டானியா மெக்ரத் கட்டுரை நூல் ப.103 இந்த நூல் சமூக நீதியை எந்த சமரசமும் இல்லாமல் பாசாங்கு இல்லாமல் பேசுகிறது. எழுத்தாளர் டைட்டானியா மெக்ரத் நூல் முழுக்க தனது வசை கவிதைகளை எழுதியிருக்கிறார். அவை அவரது கருத்துகளை முழுமையாக சுருக்கமாக புரிந்துகொள்ள உதவக்கூடும். ஃபயர் பிராண்டு என்பார்களே, அதேதான். கட்டுரையோ, கவிதையோ, பிற எழுத்தாளர்களின் மேற்கோள்களோ அனைத்திலும் நெருப்பு பொறிகள் பறக்கிறது. இது ஒரு கட்டுரை நூல்தான். தொடக்கத்தில் இந்த நூலை படிக்கும்போது வோக் - சமூக நீதியைப் பேசுபவர்கள். இன்றைக்கு இந்த சொல்லை அமெரிக்காவில் ஒலிகார்ச் எனும் பணக்கார குழுவினர் கெட்ட வார்த்தை போல உச்சரிக்கிறார்கள். ஆனால், அப்படி ஒரு சொல்லை வைத்து என்னென்ன விஷயங்களை செய்யலாம், தான் செய்தேன் என்பதை எழுத்தாளர் டைட்டானியா மெக்ரத் கூறியுள்ளார்.  காலம் மாறும்போது சிந்தனைகளும் மேம்பாடு அடையவேண்டும். பாலை கற்களின் மேல் ஊற்றிவிட்டு மூத்திரத்தைப் பிடித்து குடிக்க கூடாது. அந்த வகையில், பழைமைவாத சிந்தனைகளை முதலில் கூறிவிட்டு அதற்கு எதிர்ப்பாக தனது சிந்தனைகளை டைட்டானியா முன் வைக்கிறார். இதில், வசைக்கவிதைகளை அவர...

பற்கள், செரிமானம், தூக்கம் - அறிவியல் அறிவோம்.

 முத்துப்பல் வரிசை இந்தியாவில் உள்ள ஊடகத்தினர் பலருக்கும் பற்கள் பறிபோய்விட்டது. முதுகெலும்பும் இற்றுவிட்டது. அதனால்தான் ஊடகத்தினர் தாங்கள் சமூகத்தில் காவல் நாய்கள் என்பதை மறந்துவிட்டு அதிகாரத்திற்கும் பணத்திற்கும் வாலை குலைத்து நிற்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் பெல்ட்டில் சிகிச்சை தேவைப்படுகிறது. சரி இருக்கட்டும். நாம் அறிவியல் பக்கம் நிற்போம். பற்களைப் பற்றி பேசுவோம்.  குழந்தையாக இருக்கும்போது ஒருவருக்கு இருபது பற்கள் இருக்கும். பிறகு, இவற்றுக்கு கீழேயே பெரிய பற்கள் முளைக்கும் தருவாயில் குழந்தை பற்கள் விழுந்துவிடும். ஈறுகளுக்கு குழந்தை பற்கள் பொருத்தமாக இருக்காது. எனவே, பெரிய பற்களே உணவை அரைக்க உதவும்.  ஒருவரின் ஆறு முதல் பனிரெண்டு வயது வரையிலான காலத்தில் குழந்தை பற்கள் விழுந்துவிடுகின்றன.  தினசரி பட்டாணி அளவு பற்பசையை பல்துலக்க பயன்படுத்தலாம். அதை இருமுறை பயன்படுத்த வேண்டுமா என்பதை, நீங்கள் சாப்பிடும் உணவில் இறைச்சி உண்டா, மாவுப்பொருட்கள் உண்டா என்பதை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கலாம். அமெரிக்க தயாரிப்பான கோல்கேட், இங்கிலாந்து நாட்டின் தயாரிப்பான பெப்சோடென்ட் ஆ...

கண்கள் சொல்லும் காதல் சேதி

  கண்கள் சொல்லும் காதல் சேதி கண்கள் காதல் சேதியை சொல்வது பிறகு, முதலில் அதன் அடிப்படை பார்வைதான். பார்வையால் பொருட்கள் தட்டுப்படும். பழக்கம் காரணமாக கண்கள் வழியாக மூளை அதன் தகவல்களை அறிந்துகொள்ளும். மேற்படி தேவையான தகவல்களை பகுத்தாய்ந்து பார்த்து கட்டளைகளை வழங்கும். நீங்கள் ஒன்றை வாசிக்கும்போது, கணிதம் போடும்போது, தீவிரமாக யோசிக்கும்போது உங்கள் கண்களில் உள்ள பாப்பா அதற்கு ஏற்ப மாறுபாடுகளை அடையும்.  ஒருவரின் கண்களின் நிறம் நீலம், பச்சை, கரும்பழுப்பு, காப்பிக்கொட்டை நிறம் என அமையலாம். இதற்கு மெலனின் என்ற நிறமியே காரணம்.  கண்கள் நீருக்குள் உள்ள ஒரு கேமரா போல. கண்களைச் சுற்றி நிறைய நீர்மங்கள் உள்ளன. கண்கள் செயல்பட ஆறு தசைகளின் உதவி தேவை.  தினசரி நாம் 9400 முறை இமைக்கிறோம். ஆறு தசைகளும் தினசரி 1 லட்சம் முறை அசைகின்றன.  இரு கண்களும் இருவேறு நிறங்களில் இருக்கிறதா? வாழ்த்துகள் உங்களுக்கு ஹெட்ரோகோமியா உள்ளது.  கண்களில் பார்க்கும் காட்சிகளில் உள்ள நிறங்களை பிரித்தறியும் வசதி உள்ளது. கண்களிலுள்ள நிறமிகள் வேலை செய்யாதபோது, நிறக்குருடு ஏற்படுகிறது. மனைவியின் அக்குள் மணம...

நாளைய நாயகர்கள் - கார்டியன் நாளிதழ் தொகுப்பு

 நாளைய நாயகர்கள்  பெண்களுக்கான அரசியல் பங்கேற்பு உரிமை - எம்பாம்பரா உகாண்டா நாட்டில் அடுத்த மாதம் பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில், போட்டியிடுபவர் நாற்பது ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள முசெவானி. அவர் வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அதிபர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் அனைவரும் ஆண்கள். பெண்கள் கிடையாது. ஒரே ஒரு பெண் மட்டுமே, தன் உடல், பாலினம் மீதான அவதூறுகள், திட்டமிட்ட கேலி கிண்டல் ஆகியவற்றைக் கடந்து போட்டியிடுகிறார். அவர்தான் நம்முடைய நாயகர். வழக்குரைஞர் எம்பாம்பரா. உகாண்டா நாட்டில் அரசியல் என்பது முழுக்க ஆண்களுக்கானது. அங்கு முசெவானிக்கு எதிராக போட்டியிடுபவர்கள் பலரும் ஆண்கள்தான். மொத்தம் எட்டுப்பேர். இதில் எம்பாம்பரா மட்டும்தான் பெண். எனவே, அவரை அரசியலில் முன்னேற பிற அரசியல்வாதிகளோடு உடலுறவு கொண்டார் என வதந்திகளை ஊடகங்கள் வழியாக இழிவான பிறவிகள் பரப்பி வருகிறார்கள். இதெல்லாம் எம்பாம்பராவை பாதிக்காமல் இல்லை. ஆனால், அவர்தான் அந்த நாட்டிலுள்ள பெண்களுக்கான முன்னோடி தலைவர். ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை என்பதை வலியுறுத்தி போராடி வருகிறார். பெண்களை உறுப்பினர்களாக கொண்ட கட்ச...

வளர்ச்சியடைந்த இ(ஹி)ந்தியா!

பொறுமையின் சிகரமாக வாழும் இந்தியர்கள்! டெல்லியில் விடுமுறைக்கு மக்கள் தயாராகிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் அங்குள்ள காற்றில் மாசுபாடு 10-2.5 என்ற அளவில் அதிகரித்தது. இரண்டு வார விடுமுறையை மக்கள் பலரும் தீர்மானித்துக் கொண்டிருந்தனர். என்னுடைய பத்திரிகையாள நண்பர் கூட பாகிஸ்தானில் உள்ள தனது நண்பர்களோடு சேர்ந்து துருக்கிக்குச் சென்றுவிட்டார். இன்னொருவர் பின்லாந்துக்கு சென்று சான்டா கிளாஸின் ஊரான லேப்லாண்டில் இருக்கிறார். அவர் சான்டா கிளாஸை நம்பாதபோதும், அப்படி வேகமாக, ஒரு வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார்.  வெளிநாடுகளுக்குச் சென்று வாழ முற்படும் இந்தியர்களின் ஆர்வத்தை ஈடுபாட்டை எதற்கு என்றே புரிந்துகொள்ள முடியாது. அதெல்லாம் பத்தாண்டுகளுக்கு முன்னர். அப்போது புரியவில்லை. இப்போது தெளிவாக புரிகிறது. இந்தியா ஒரு ஏழை நாடு.அதன் அடிப்படைக் கட்டமைப்பு படுமோசமாக உள்ளது. ஓடிபி என்பது மிக குறைவாகவே உள்ளது. பல கோடி ஏழை மக்கள் இருக்கிறார்கள். எனவே, மக்கள் இயற்கையாகவே வெளிநாடுகளுக்குச் சென்றுவிட முயல்கிறார்கள். வெளிநாடுகளுக்குச் சென்று முன்னேறிய நாட்டின் வளமை, ஆனந்தத்தை அனுபவிக்கிறார்கள். ஆனால், அ...

29 நாடுகளின் கல்விமுறை பற்றிய அறிமுகம் - வகுப்பறை உலகம் - நூல் விமர்சனம்

வகுப்பறை உலகம் விஜய பாஸ்கர் விஜய் அகரம் அறக்கட்டளை வெளியீடு விலை ரூ.150 இந்த நூல், 29 உலக நாடுகளின் கல்விமுறைகளை மேலோட்டமாக அணுகி நமக்கு அறிமுகப்படுத்துகிறது. சுருக்கமாக என்று ஆசிரியர் கூறியிருப்பார். எனக்கு தெரிந்து அனைத்து நாடுகளைப் பற்றியும் நான்கைந்து பக்கங்கள் எழுதியிருந்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும். காரணம், கல்வியை எளிதாக நீங்கள் வரையறை செய்து எழுதிவிட முடியாது. அதில் அரசியல், சமூக, பொருளாதார ஒடுக்குமுறை காரணிகள் என ஏராளம் உண்டு.  கனடா பற்றிய கல்விமுறையில் நூல் தொடங்குகிறது. இதில் அடிப்படையாக கல்வி என்பது பள்ளி அளவில் இலவசம். ஆனால், பல்கலைக்கழகம் என்றால் தனியார் என அங்கு வசிக்கும் நண்பர் கூறினார். அதாவது பள்ளிக்கல்வி இலவசம் என்றாலும் மேற்படிப்பை அதாவது கல்லூரி படிக்கும்போது கல்வி செலவு கூடுதலாகிவிடும். பள்ளிக்கும் சேர்த்து வசூலித்துவிடுவார்கள் என்று கூறினார். அதுபோன்ற தகவல்களை நூலில் ஆசிரியர் எழுதவில்லை. அதையும் கூறவேண்டும்தானே? நேர்மறையாக எழுதுவது சரி. நிதர்சனமான நிலையையும் கூறலாமே?  இதில் வளர்ந்த நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் என இரண்டு பிரிவாக பிரித்துவிடல...