இடுகைகள்

2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எழுத்தாளர்களின் கதையில் வரும் குழந்தைகளின் பாத்திரங்கள் - கதைகளில் பேசும் குழந்தைகள்

படம்
கதைகளில் பேசும் குழந்தைகள்  செந்தில் ஜெகன்நாதன் அகரம் ஃபவுண்டேஷன் விலை ரூ.150 ப.136 மயிலாடுதுறையை பூர்விகமாக கொண்ட எழுத்தாளர் செந்தில் ஜெகன்நாதன் எழுதியுள்ள கட்டுரை நூல். இந்த நூல், யாதும் என்ற இதழில் வெளிவந்து பிறகு நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. தொடராக வருவது, பிறகு அதை நூலாக தொகுப்பது என இரண்டுமே முக்கியமான பணிகள். தொடராக வரும்போது கூறிய தீபாவளி வாழ்த்துகள் கூட நூலில் நீக்கப்படாமல் இருக்கிறது. நூலின் அட்டைப்படமோ, நூலின் உள்பக்க கட்டமைப்போ, புகைப்படங்களோ பெரிய தாக்கம் ஏற்படுத்தவில்லை. மிகவும் சுமாராக அலட்சியத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. கொஞ்சம் சிரத்தை எடுத்து நூலை உருவாக்கியிருந்தால், நூல் நன்றாக வந்திருக்கும். பெரிய ஆறுதல், எழுத்தாளர் செந்தில் ஜெகன்நாதனின் எழுத்துகள் மட்டுமே. நூலுக்கு கொடுக்கும் காசை எழுத்துக்கு மட்டுமே நம்பி கொடுக்கலாம். அந்தளவு முக்கியமான எழுத்தாளர்கள் சிறுகதைகளில், குறுநாவல்களில் வரும் குழந்தை பாத்திரங்களைக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.  மொத்தம் 31 எழுத்தாளர்கள். இதில் நான்கு மேற்கத்திய எழுத்தாளர்கள் உண்டு. மேற்கத்திய எழுத்தாளர்களின் கதைகள் அனைத்துமே சிற...

சாணக்கியர் என்பவர் வாழ்ந்தார் என்பதற்கான சான்றுகளே இல்லை!

படம்
 சாணக்கியர் என்பவர் வாழ்ந்தார் என்பதற்கான சான்றுகளே இல்லை! சாணக்கியர் என்றதும் அவர் கூறிய அரசியல் நெறிமுறைகள், குரூரமான செயல்பாடுகள் கண்முன்னே வந்துபோகும். ஆனால், அதை எழுதியது யாரோ, அதை ஏன் சாணக்கியர் பெயரில் பிரசாரம் செய்தார்களோ தெரியாது. உண்மையில் சாணக்கியர் என்ற மனிதர் வாழவே இல்லை என்று செய்திகள் தெளிவாக உள்ளன. இன்றுமே கூட இந்தியாவில் மௌரிய வம்சத்துக்கு வழிகாட்டியவர் என்று சாணக்கியரைக் கைகாட்டுவார்கள். சாணக்கிய தந்திரம் பற்றியும் நூல்களை ஆயிரக்கணக்கில் எழுதியிருக்கிறார்கள். இதெல்லாம் வெற்று பிரசாரமே ஒழிய வேறில்லை. ஏனெனில் சாணக்கியர் ஒற்றைக் குடுமியோடு பார்ப்பனராக இருப்பதுதான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பார்ப்பனர்கள் அதிகார வெறிக்காக என்னவேண்டுமானாலும் செய்வார்கள். எப்படிப்பட்ட புரட்டையும் பேசுவார்கள், எழுதவார்கள், பரப்புவார்கள். அதை இன்று இந்தியாவே பார்த்து வருகிறது.  பொதுவாக பார்ப்பனர்கள் அழிக்கப்பட்டவர்களில் மௌரிய அரசரான அசோகரும் உண்டு.ஆனால் ஆரிய பார்ப்பனர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், தாங்கள்தான் அரசை வழிகாட்டி நடத்தினோம் என்று கூறுகிறார்கள். கி.மு 300இல் மௌரிய அரசுக்...

பெண்களின் காதல் வழியாக மூவேந்தர்களின் வீரம் வெளிப்படும் படைப்பு -- முத்தொள்ளாயிரம்

 முத்தொள்ளாயிரம் - மூலமும் உரையும் நாராயண வேலுப்பிள்ளை 100க்கும் அதிகமான பாடல்கள் நன்றி - இரா மோகனவசந்தன் முத்தொள்ளாயிரம் நூலில் மூவேந்தர்கள் பற்றிய பாடல்கள் உள்ளன. அவையும் அக்காலத்திற்கேற்ப காதல், போர், ஆட்சி, படைத்திறன், அறம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளது. இந்த பாடல்களை ஒருவர் வாசிக்கும்போது தமிழ்நாட்டை ஆண்ட மன்னர்கள் பற்றியும் அவர்களுக்கு வழங்கி வந்த  பெயர்கள் பற்றியும் அறியலாம். அதோடு, மன்னரை காதலித்த பெண்கள் தங்கள் காதலை வெளிப்படுத்த எதையெல்லாம் உவமையாக கொள்கிறார்கள் என்பதும் கூட ஆச்சரியப்படுத்தும்.  பழந்தமிழ் வார்த்தைகள் வாசிக்கும்போதே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. அதிலும் ஒரு பாடலில் சேரனைப் புகழ்ந்து வருகிறது. அதில் பெண், தனிக்கதவம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். அதாவது, மன்னர் மீதுள்ள மகளின் காதலை அறிந்த தாய், ஊரார் தூற்றுவார்களே என்று அஞ்சி வீட்டின் வாயில் கதவை அடைத்துவிடுகிறார். அந்த கதவுதான் தனிக்கதவம் என பாடலில் சுட்டப்படுகிறது. இப்படி கதவை மூடிவிட்டால், வதந்தி பரப்புபவர்கள் அமைதியாக இருந்துவிடுவார்களா என்று தோழியிடம் கேட்கிறார்....

ஜெய்பீம் - காலத்தின் சாட்சி - த செ ஞானவேல்

படம்
  ஜெய்பீம் - காலத்தின் சாட்சி த செ ஞானவேல் அருஞ்சொல் - தரு மீடியா ரூ.120 ஜெய்பீம் என்ற படம் ஓடிடியில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது. அதன் பின்னணி, இயக்குநர் ஞானவேல் அவர்களின் கருத்து, அதில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், நடிகர்கள் பற்றிய கருத்துகள் கொண்ட நூல். திரைப்படத்திற்கு கிடைத்த விமர்சனங்களை இறுதிப்பகுதியில் ஸ்க்ரீன்ஷாட்கள் போல எடுத்து சேர்த்திருக்கிறார்கள். ஜெய்பீம் படத்தின் திரைக்கதை அருஞ்சொல் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இந்த நூலோடு அதையும் கூட வாங்கிப் படிக்கலாம். அப்போது உங்களுக்கு முழுமையான உணர்வு கிடைக்கலாம்.  நூலில் இரண்டு நபர்களின் பேட்டி முக்கியமானது. ஒன்று, இயக்குநர் ஞானவேல் அவர்களுடையது. அடுத்து முன்னாள் நீதிபதி கே சந்துரு அவர்களுடையது. இந்த இருவரும்தான் ஜெய்பீம் படத்திற்கான மூலாதாரம். நீதிபதி சந்துரு, பழங்குடி பெண்ணுக்காக இலவசமாக பத்தாண்டுகளுக்கும் மேலாக வாதாடியிருக்கிறார். சந்துருவுக்கு படம் பற்றியெல்லாம் பெரிய கவலையில்லை. ஏனெனில் அவருடைய நோக்கம். தான் எடுத்துக்கொண்ட வழக்கில் பெற்றுக்கொடுத்த நீதிதான். அதில் எதிர்கொண்ட சவால்களைப் பற்றியெல்லாம...

வினோத் பாலுசாமி பற்றிய குங்குமம் கட்டுரை

படம்

அடைய முடியாத லட்சியங்களால் மனமகிழ்ச்சி குறைகிறது! உளவியலாளர் ரீ குன் ஹூ

படம்
  மொழிபெயர்ப்பு நேர்காணல் எழுத்தாளர் ரி குன் ஹூ 2024ஆம் ஆண்டு ரி குன் ஹூ எழுதிய இஃப் யூ லிவ் டு 100, யூ மைட் ஏஸ் வெல் பி ஹேப்பி என்ற நூலை எழுதி வெளியிட்டார். இந்த நூல் பெங்குவின் பதிப்பகத்தில் கிடைக்கும். ரி குன் ஹூவுக்கு வயது 90. தன் வாழ்க்கையில் இரண்டாம் உலகப்போர், கொரிய போர், வறுமை, டைபாய்டு, வங்கி திவால் ஆவது, சிறைவாசம் என நிறைய அனுபவங்களை சந்தித்து கடந்து வந்தவர். ரி, தனது இருபதுகளில் முதல் தென் கொரிய அதிபரான சிங்மன் ரீக்கு எதிராக ஜனநாயக போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டு பத்து மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். உளவியலாளராக தொழில் செய்யும் ரீ, நாடு முழுக்க பல்வேறு மருத்துவமனைகள், மனநல மையங்களில் வேலை செய்திருக்கிறார். உளவியல் ரீதியான செயல்பாடுகளை சீர்திருத்தி மாற்றங்களை உருவாக்கியிருக்கிறார். ரீக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் பிறந்தனர். இன்று அவருக்கு பேரப்பிள்ளைகளமும் உண்டு.  நீங்கள் உங்களுடைய எழுபதாவது வயதில் எழுதத் தொடங்கியிருக்கிறீர்கள். நூல்கள் வெளியாகி சிறந்த எழுத்தாளராகவும் அறியப்படுகிறீர்கள். வாழ்வில் பிந்தைய காலத்தில் எழுதுவது எப்படி இருக்கிறது? எழுதுவதில் என...

ரயில் விபத்து ஏற்படுத்தி நினைவுகளை இழக்கச்செய்தவர்களை பழி வாங்கும் மேஜிக் விண்ட்!

படம்
  ஆத்மாக்கள் அடங்குவதில்லை லயன் முத்துகாமிக்ஸ் மூலம் - செர்ஜியோ போனெல்லி பதிப்பகம் தமிழில் எஸ் விஜயன் # 49வது சென்னை புத்தக காட்சி 2026 இதுதான் மேஜிக் விண்ட் என்ற நாயகனுக்கு முதல் அறிமுக கதை. முத்து காமிக்ஸ் ஸ்டாலில் இரண்டு காமிக்ஸ்கள் இருந்தன. அதில், வேறொன்றை எடுத்தேன். அப்புறம் பார்த்தால் இதுதான் தொடக்க கதை. நாயகன் யாரென்ற புரிந்துகொண்டால்தான் அடுத்த கதைக்கு நகர முடியும். எஸ் விஜயன் அப்படி எல்லாம் கிடையாது என்று சொல்வார். அதை எப்போதும் போல கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவோம்.  இந்த நூலை கருப்பு வெள்ளையிலேயே உருவாக்கியிருக்கலாம். நன்றாக இருந்திருக்கும். காலக்கட்டாயத்திற்காக கலர் போல. அடர்த்தியான நிறங்களைக் கொண்ட பூச்சு. சியோக்ஸ் இனத்தைச்சேர்ந்த செவ்விந்தியர்களின் மாந்திரீகர் எதையோ தேடி வருகிறார். பார்த்தால், அவர் அங்கு குற்றுயிராக கிடக்கும் நாயகன் எழுவதைப் பார்த்து தூக்கி வந்து சிகிச்சையளிக்கிறார். அவருக்கு தான் யார் என்றும் தெரியவில்லை. நினைவுகள் அழிந்துவிட்டிருக்கின்றன. மாந்திரீகருக்கு அவருடைய காலம் முடிவடையும் தருவாயில் உள்ளார். ஆனால், அவருக்கு அடுத்து அவரது நிலையில் இருக்கக்கூட...

கணவரில்லாத கைம்பெண்ணான ஷெல்லி, அவளது மகனை வேட்டையாட முயலும் மர்ம பூதங்கள்!

படம்
டைலன் டாக் வேட்டையாடும் - சட்டைப்பையில் சாவு லயன் முத்துகாமிக்ஸ் - வி காமிக்ஸ் விலை ரூ.90 டைலன் டாக் என்பவர் டிஒய்டி 666 எனும் ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் வரும் அமானுஷ்ய டிடெக்டிவ். இவரது முக்கிய வேலை. ஆவிகளை வேட்டையாடுவது. அல்லது ஆவி என்று வேடமிட்டு மனிதர்களை கொல்பவர்களை அடையாளம் கண்டு கைது செய்வது...டைலன் டாக் - டிடெக்டிவ், க்ரௌச்சோ அவரது உதவியாளர். இவர்கள்தான் பெரும்பாலும் கதையில் இருப்பார்கள். மீதி வரும் பாத்திரங்கள் எல்லாமே வரும் போகும். டைலன் டாக்கின் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் எப்போதும் வருவார்.  ஷெல்லி, தனது ஒரே மகனுடன் வீட்டில் வாழ்ந்து வருகிறாள். அவளுடைய கணவர், ஜாக். சில ஆண்டுகளுக்கு முன்னர் தற்கொலை செய்து இறந்து போயிருக்கிறார். அவர் ஏன் இறந்துபோனார், எப்படி இறந்துபோனார் என்பதே மர்மம்தான். இந்த காமிக்ஸ் தொடங்குவது, ஷெல்லி வீட்டில் தனது ஃபிரிட்ஜில் தற்கொலை செய்துகொண்ட கணவர் ஜாக்கின் தலையைக் காண்கிறார். பயந்து நடுங்குகிறார். ஷெல்லியின் மகன் டேன்னி, இவன் வீட்டுக்குள் மணலைக் கூட்டி விளையாடுகிறான். அதில் இருந்தும் ஏதோ மணல் பூதம் போல எழுகிறது. ஷெல்லிக்கு ஒன்றும் புரிவதில்லை. இதனால...

''பாலியல் வல்லுறவு பற்றி உலகம் ஏற்படுத்தி வைத்திருக்கும் அவமான முத்திரை என்னைத் தடுத்தது''

படம்
  ' ''பாலியல் வல்லுறவு பற்றி உலகம் ஏற்படுத்தி வைத்திருக்கும் அவமான முத்திரை என்னைத் தடுத்தது'' -எழுத்தாளர் நீஜ் சின்னோ ---------------------------------------------------------------------------------- எழுத்தாளர் சின்னோ, 'சேட் டைகர்'(SAD TIGER-NEIGE SINNO) எனும் சுயசரிதை நூலை எழுதியுள்ளார். இந்த நூல் பிரெஞ்சில் எழுதப்பட்டது. பின்னர், அதை ஆங்கிலத்தில் நடாஷா லெஹ்ரர் மொழிபெயர்த்திருக்கிறார். இந்த நூலின் மையம், சின்னோவின் வளர்ப்பு தந்தை அவரை எப்படி பாலியல் ரீதியாக சுரண்டினார் என்பதே. சின்னோவின் ஏழு வயதிலிருந்து இத்தகைய பாலியல் சுரண்டல் இளையோராக மாறும்வரை நீண்டிருக்கிறது. ஒரு குழந்தை பாலியல் ரீதியாக சுரண்டப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்டவரின் நிலைமை, அந்த சம்பவத்தை, அவரை சமூகம் எப்படிப் பார்க்கிறது என்பதை பதிவு செய்திருப்பதே நூலின் முக்கிய அம்சம். 2023ஆம் ஆண்டு பிரெஞ்சில் வெளியான நூல், அந்த நாட்டில் பெரும் இலக்கிய விருதுகளை வென்றது.  ___________________________________________________________________________________ உங்களுடைய வாழ்பனுபவத்தை இந்த முறையில் எழுதுவது இ...

பெரியார், அண்ணா, கலைஞர் பற்றிய சுவையான சம்பவங்களைக் கொண்ட நூல்!

படம்
  பேச வைத்த பெரியார் செந்தலை ந.கவுதமன் பெரியார் திராவிடர் தமிழர் பேரவை கட்டுரை நூல் ரூ.250 இந்த நூல் பெரியார், அண்ணா, கலைஞர், பாரதிதாசன் ஆகியோரது வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கட்டுரைகளைக் கொண்டுள்ளது. நூலை எழுதியவரான கவுதமன், திராவிடர் கழகத்தைச்சேர்ந்தவர். அவருக்கு கவுதமன் என்று பெயர் வைத்ததே பெரியார்தான். பின்னாளில் தமிழில் புலவர் படிப்பு படித்தாலும் கூட அவர், திராவிடக் கொள்கைக்காக உழைத்திருக்ககிறார். உழைத்தும் வருகிறார். நூலின் இறுதியில் சைக்கிள் மட்டுமே அவருடன் இருக்கிறது என்று கூறுகிறார்கள். அதாவது சொத்து சேர்க்கும் எண்ணம் இல்லாதவர் என்று கூறுகிறார்கள். மகிழ்ச்சி.  நூலில் இருந்து நாம் பெறுவது என்ன என்றால், பெரியார் பற்றிய பல்வேறு கருத்துகள் நூல் முழுக்க உள்ளன. இதில் ஈர்ப்பது பார்ப்பனரான பாரதியின் தாசன் என்று கூறிக்கொண்ட கனக சுப்புரத்தினம் எப்படி பாரதிதாசனாக மாறி, அவரது குரு பேசவிரும்பாத, தயங்கிய கைம்பெண் மறுமணம், சாதி, இந்தி திணிப்பு பற்றியெல்லாம் பேசினார் என்பதுதான். பாரதிதாசன் வாழ்க்கையே சுருக்கமாக பதிவு செய்திருக்கிறார்கள். கொண்ட கொள்கைக்காக அவர் பட்ட பாடுக...

கோட்டை மாரியம்மன் கண்நோய் தீர்ப்பாளா? - மாயாதீதம் - என். ஶ்ரீராம்

படம்
மாயாதீதம் என். ஶ்ரீராம் தமிழ்வெளி ப.104 இது ஒரு குறுநாவல். இதில் வரும் பாத்திரங்கள் வடகிழக்கு பகுதியில் இருந்து தாராபுரம் வருகிறார்கள். பிறகு அங்கே நடக்கும் என் ஶ்ரீராமின் உலக வழக்கங்கள்தான் கதை. இந்த எழுத்தாளரின் பலமே, அசாம், குவகாத்தி என செல்வதல்ல. தாராபுரம், நல்லிமடம், ஒற்றம் புற்கள், ஊசிப்புற்கள், கிளுவை மர வேலி என மண்ணோடு இணைந்து எழுதுவதுதான். இதுவும் கூட அவருக்கு சிறுவயதில் தெரிந்த வாழ்க்கையாக இருக்கக்கூடும். கதைக்குச் செல்வோம். அசாமைச்சேர்ந்தவர், தன்னுடைய மகனின் கண்நோயைக் குணப்படுத்த முயல்கிறார். நவீன மருத்துவமனைகளுக்குச் செல்கிறார். ஆனால், எதுவும் பயனளிக்கவில்லை. இதனால், அவர் அசாமிலிருந்து புறப்பட்டு தாராபுரத்திற்கு வருகிறார். அங்கு அவரின் தம்பி வாழ்கிறார். அவரிடம் பிள்ளையை ஒப்படைக்கிறார். சித்தப்பா, தனது அண்ணன் மகனை கோட்டை மாரியம்மன் கோவிலில் தங்க வைத்து கண் சிகிச்சையை அளிக்கிறார். ஆனால், அம்மன் மனமிரங்கவில்லை. பல மாதங்கள் இப்படியே கழிகின்றன. அந்த சிறுவனுக்கு கண்ணில் வலி அதிகரிக்கிறது. அந்த சூழலில் தேசாந்திரக்காரன் என்ற பாத்திரம் வந்து வழிகாட்ட, சித்த வைத்தியரின் முகவரி கிடைக்...

புகைப்படக்காரர் வினோத் அவர்களுக்கு வாழ்த்துகள்!

படம்

சமூகநீதி பேசும் கலகக்காரி - வோக் - டைட்டானியா மெக்ரத்

படம்
  வோக் டைட்டானியா மெக்ரத் கட்டுரை நூல் ப.103 இந்த நூல் சமூக நீதியை எந்த சமரசமும் இல்லாமல் பாசாங்கு இல்லாமல் பேசுகிறது. எழுத்தாளர் டைட்டானியா மெக்ரத் நூல் முழுக்க தனது வசை கவிதைகளை எழுதியிருக்கிறார். அவை அவரது கருத்துகளை முழுமையாக சுருக்கமாக புரிந்துகொள்ள உதவக்கூடும். ஃபயர் பிராண்டு என்பார்களே, அதேதான். கட்டுரையோ, கவிதையோ, பிற எழுத்தாளர்களின் மேற்கோள்களோ அனைத்திலும் நெருப்பு பொறிகள் பறக்கிறது. இது ஒரு கட்டுரை நூல்தான். தொடக்கத்தில் இந்த நூலை படிக்கும்போது வோக் - சமூக நீதியைப் பேசுபவர்கள். இன்றைக்கு இந்த சொல்லை அமெரிக்காவில் ஒலிகார்ச் எனும் பணக்கார குழுவினர் கெட்ட வார்த்தை போல உச்சரிக்கிறார்கள். ஆனால், அப்படி ஒரு சொல்லை வைத்து என்னென்ன விஷயங்களை செய்யலாம், தான் செய்தேன் என்பதை எழுத்தாளர் டைட்டானியா மெக்ரத் கூறியுள்ளார்.  காலம் மாறும்போது சிந்தனைகளும் மேம்பாடு அடையவேண்டும். பாலை கற்களின் மேல் ஊற்றிவிட்டு மூத்திரத்தைப் பிடித்து குடிக்க கூடாது. அந்த வகையில், பழைமைவாத சிந்தனைகளை முதலில் கூறிவிட்டு அதற்கு எதிர்ப்பாக தனது சிந்தனைகளை டைட்டானியா முன் வைக்கிறார். இதில், வசைக்கவிதைகளை அவர...

பற்கள், செரிமானம், தூக்கம் - அறிவியல் அறிவோம்.

 முத்துப்பல் வரிசை இந்தியாவில் உள்ள ஊடகத்தினர் பலருக்கும் பற்கள் பறிபோய்விட்டது. முதுகெலும்பும் இற்றுவிட்டது. அதனால்தான் ஊடகத்தினர் தாங்கள் சமூகத்தில் காவல் நாய்கள் என்பதை மறந்துவிட்டு அதிகாரத்திற்கும் பணத்திற்கும் வாலை குலைத்து நிற்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் பெல்ட்டில் சிகிச்சை தேவைப்படுகிறது. சரி இருக்கட்டும். நாம் அறிவியல் பக்கம் நிற்போம். பற்களைப் பற்றி பேசுவோம்.  குழந்தையாக இருக்கும்போது ஒருவருக்கு இருபது பற்கள் இருக்கும். பிறகு, இவற்றுக்கு கீழேயே பெரிய பற்கள் முளைக்கும் தருவாயில் குழந்தை பற்கள் விழுந்துவிடும். ஈறுகளுக்கு குழந்தை பற்கள் பொருத்தமாக இருக்காது. எனவே, பெரிய பற்களே உணவை அரைக்க உதவும்.  ஒருவரின் ஆறு முதல் பனிரெண்டு வயது வரையிலான காலத்தில் குழந்தை பற்கள் விழுந்துவிடுகின்றன.  தினசரி பட்டாணி அளவு பற்பசையை பல்துலக்க பயன்படுத்தலாம். அதை இருமுறை பயன்படுத்த வேண்டுமா என்பதை, நீங்கள் சாப்பிடும் உணவில் இறைச்சி உண்டா, மாவுப்பொருட்கள் உண்டா என்பதை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கலாம். அமெரிக்க தயாரிப்பான கோல்கேட், இங்கிலாந்து நாட்டின் தயாரிப்பான பெப்சோடென்ட் ஆ...

கண்கள் சொல்லும் காதல் சேதி

  கண்கள் சொல்லும் காதல் சேதி கண்கள் காதல் சேதியை சொல்வது பிறகு, முதலில் அதன் அடிப்படை பார்வைதான். பார்வையால் பொருட்கள் தட்டுப்படும். பழக்கம் காரணமாக கண்கள் வழியாக மூளை அதன் தகவல்களை அறிந்துகொள்ளும். மேற்படி தேவையான தகவல்களை பகுத்தாய்ந்து பார்த்து கட்டளைகளை வழங்கும். நீங்கள் ஒன்றை வாசிக்கும்போது, கணிதம் போடும்போது, தீவிரமாக யோசிக்கும்போது உங்கள் கண்களில் உள்ள பாப்பா அதற்கு ஏற்ப மாறுபாடுகளை அடையும்.  ஒருவரின் கண்களின் நிறம் நீலம், பச்சை, கரும்பழுப்பு, காப்பிக்கொட்டை நிறம் என அமையலாம். இதற்கு மெலனின் என்ற நிறமியே காரணம்.  கண்கள் நீருக்குள் உள்ள ஒரு கேமரா போல. கண்களைச் சுற்றி நிறைய நீர்மங்கள் உள்ளன. கண்கள் செயல்பட ஆறு தசைகளின் உதவி தேவை.  தினசரி நாம் 9400 முறை இமைக்கிறோம். ஆறு தசைகளும் தினசரி 1 லட்சம் முறை அசைகின்றன.  இரு கண்களும் இருவேறு நிறங்களில் இருக்கிறதா? வாழ்த்துகள் உங்களுக்கு ஹெட்ரோகோமியா உள்ளது.  கண்களில் பார்க்கும் காட்சிகளில் உள்ள நிறங்களை பிரித்தறியும் வசதி உள்ளது. கண்களிலுள்ள நிறமிகள் வேலை செய்யாதபோது, நிறக்குருடு ஏற்படுகிறது. மனைவியின் அக்குள் மணம...

நாளைய நாயகர்கள் - கார்டியன் நாளிதழ் தொகுப்பு

 நாளைய நாயகர்கள்  பெண்களுக்கான அரசியல் பங்கேற்பு உரிமை - எம்பாம்பரா உகாண்டா நாட்டில் அடுத்த மாதம் பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில், போட்டியிடுபவர் நாற்பது ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள முசெவானி. அவர் வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அதிபர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் அனைவரும் ஆண்கள். பெண்கள் கிடையாது. ஒரே ஒரு பெண் மட்டுமே, தன் உடல், பாலினம் மீதான அவதூறுகள், திட்டமிட்ட கேலி கிண்டல் ஆகியவற்றைக் கடந்து போட்டியிடுகிறார். அவர்தான் நம்முடைய நாயகர். வழக்குரைஞர் எம்பாம்பரா. உகாண்டா நாட்டில் அரசியல் என்பது முழுக்க ஆண்களுக்கானது. அங்கு முசெவானிக்கு எதிராக போட்டியிடுபவர்கள் பலரும் ஆண்கள்தான். மொத்தம் எட்டுப்பேர். இதில் எம்பாம்பரா மட்டும்தான் பெண். எனவே, அவரை அரசியலில் முன்னேற பிற அரசியல்வாதிகளோடு உடலுறவு கொண்டார் என வதந்திகளை ஊடகங்கள் வழியாக இழிவான பிறவிகள் பரப்பி வருகிறார்கள். இதெல்லாம் எம்பாம்பராவை பாதிக்காமல் இல்லை. ஆனால், அவர்தான் அந்த நாட்டிலுள்ள பெண்களுக்கான முன்னோடி தலைவர். ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை என்பதை வலியுறுத்தி போராடி வருகிறார். பெண்களை உறுப்பினர்களாக கொண்ட கட்ச...

வளர்ச்சியடைந்த இ(ஹி)ந்தியா!

பொறுமையின் சிகரமாக வாழும் இந்தியர்கள்! டெல்லியில் விடுமுறைக்கு மக்கள் தயாராகிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் அங்குள்ள காற்றில் மாசுபாடு 10-2.5 என்ற அளவில் அதிகரித்தது. இரண்டு வார விடுமுறையை மக்கள் பலரும் தீர்மானித்துக் கொண்டிருந்தனர். என்னுடைய பத்திரிகையாள நண்பர் கூட பாகிஸ்தானில் உள்ள தனது நண்பர்களோடு சேர்ந்து துருக்கிக்குச் சென்றுவிட்டார். இன்னொருவர் பின்லாந்துக்கு சென்று சான்டா கிளாஸின் ஊரான லேப்லாண்டில் இருக்கிறார். அவர் சான்டா கிளாஸை நம்பாதபோதும், அப்படி வேகமாக, ஒரு வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார்.  வெளிநாடுகளுக்குச் சென்று வாழ முற்படும் இந்தியர்களின் ஆர்வத்தை ஈடுபாட்டை எதற்கு என்றே புரிந்துகொள்ள முடியாது. அதெல்லாம் பத்தாண்டுகளுக்கு முன்னர். அப்போது புரியவில்லை. இப்போது தெளிவாக புரிகிறது. இந்தியா ஒரு ஏழை நாடு.அதன் அடிப்படைக் கட்டமைப்பு படுமோசமாக உள்ளது. ஓடிபி என்பது மிக குறைவாகவே உள்ளது. பல கோடி ஏழை மக்கள் இருக்கிறார்கள். எனவே, மக்கள் இயற்கையாகவே வெளிநாடுகளுக்குச் சென்றுவிட முயல்கிறார்கள். வெளிநாடுகளுக்குச் சென்று முன்னேறிய நாட்டின் வளமை, ஆனந்தத்தை அனுபவிக்கிறார்கள். ஆனால், அ...

29 நாடுகளின் கல்விமுறை பற்றிய அறிமுகம் - வகுப்பறை உலகம் - நூல் விமர்சனம்

வகுப்பறை உலகம் விஜய பாஸ்கர் விஜய் அகரம் அறக்கட்டளை வெளியீடு விலை ரூ.150 இந்த நூல், 29 உலக நாடுகளின் கல்விமுறைகளை மேலோட்டமாக அணுகி நமக்கு அறிமுகப்படுத்துகிறது. சுருக்கமாக என்று ஆசிரியர் கூறியிருப்பார். எனக்கு தெரிந்து அனைத்து நாடுகளைப் பற்றியும் நான்கைந்து பக்கங்கள் எழுதியிருந்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும். காரணம், கல்வியை எளிதாக நீங்கள் வரையறை செய்து எழுதிவிட முடியாது. அதில் அரசியல், சமூக, பொருளாதார ஒடுக்குமுறை காரணிகள் என ஏராளம் உண்டு.  கனடா பற்றிய கல்விமுறையில் நூல் தொடங்குகிறது. இதில் அடிப்படையாக கல்வி என்பது பள்ளி அளவில் இலவசம். ஆனால், பல்கலைக்கழகம் என்றால் தனியார் என அங்கு வசிக்கும் நண்பர் கூறினார். அதாவது பள்ளிக்கல்வி இலவசம் என்றாலும் மேற்படிப்பை அதாவது கல்லூரி படிக்கும்போது கல்வி செலவு கூடுதலாகிவிடும். பள்ளிக்கும் சேர்த்து வசூலித்துவிடுவார்கள் என்று கூறினார். அதுபோன்ற தகவல்களை நூலில் ஆசிரியர் எழுதவில்லை. அதையும் கூறவேண்டும்தானே? நேர்மறையாக எழுதுவது சரி. நிதர்சனமான நிலையையும் கூறலாமே?  இதில் வளர்ந்த நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் என இரண்டு பிரிவாக பிரித்துவிடல...