29 நாடுகளின் கல்விமுறை பற்றிய அறிமுகம் - வகுப்பறை உலகம் - நூல் விமர்சனம்
வகுப்பறை உலகம் விஜய பாஸ்கர் விஜய் அகரம் அறக்கட்டளை வெளியீடு விலை ரூ.150 இந்த நூல், 29 உலக நாடுகளின் கல்விமுறைகளை மேலோட்டமாக அணுகி நமக்கு அறிமுகப்படுத்துகிறது. சுருக்கமாக என்று ஆசிரியர் கூறியிருப்பார். எனக்கு தெரிந்து அனைத்து நாடுகளைப் பற்றியும் நான்கைந்து பக்கங்கள் எழுதியிருந்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும். காரணம், கல்வியை எளிதாக நீங்கள் வரையறை செய்து எழுதிவிட முடியாது. அதில் அரசியல், சமூக, பொருளாதார ஒடுக்குமுறை காரணிகள் என ஏராளம் உண்டு. கனடா பற்றிய கல்விமுறையில் நூல் தொடங்குகிறது. இதில் அடிப்படையாக கல்வி என்பது பள்ளி அளவில் இலவசம். ஆனால், பல்கலைக்கழகம் என்றால் தனியார் என அங்கு வசிக்கும் நண்பர் கூறினார். அதாவது பள்ளிக்கல்வி இலவசம் என்றாலும் மேற்படிப்பை அதாவது கல்லூரி படிக்கும்போது கல்வி செலவு கூடுதலாகிவிடும். பள்ளிக்கும் சேர்த்து வசூலித்துவிடுவார்கள் என்று கூறினார். அதுபோன்ற தகவல்களை நூலில் ஆசிரியர் எழுதவில்லை. அதையும் கூறவேண்டும்தானே? நேர்மறையாக எழுதுவது சரி. நிதர்சனமான நிலையையும் கூறலாமே? இதில் வளர்ந்த நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் என இரண்டு பிரிவாக பிரித்துவிடல...