இடுகைகள்

2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நோய் எதிர்ப்பு சக்தி, மூளை - அறிவியல் அறிவோம்

படம்
  திருப்பி அடிப்பேன் முதுகில் குத்திய துரோகிகளை நண்பர்களைப் பற்றியல்ல நாம் பேசவிருப்பது. உடலுக்குள் நிறைய கிருமிகள் புகுகின்றன. அவற்றை உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பே எதிர்கொண்டு தாக்குகிறது. அதில் முக்கியமானது, வெள்ளை அணுக்கள். தமிழ்நாடு காவல்துறையில் பல்வேறு குற்றங்களைத் தடுக்க பல்வேறு பிரிவுகள் உண்டோ, அதேபோல்தான் கிருமிகளை அழிக்கவும் சண்டையிடவும் நிறைய வேறுபட்ட வெள்ளை அணுக்கள் உண்டு. எடுத்துக்காட்டு. காசநோய் கிருமிகளோடு மேக்ரோபேஜ் எனும் வெள்ளை அணுக்கள் போரிடுகின்றன.  கிருமிகள் உடலுக்குள் புகுவதை தடுக்க கண்களில் கண்ணீர், மூக்கில் சளி, வாயில் எச்சில், காதில் மெழுகு போன்ற திரவம், வயிற்றில் அமிலம் உருவாகிறது. இவற்றையும் மீறி கிருமி உடலுக்குள் வந்துவிட்டால், நீங்கள் மருத்துவரை சந்தித்து, அவர் கமிஷன் வாங்கும் இடத்தில் ஸ்கேன் எடுத்து, அவரது சொந்த மருந்தகத்தில் உள்ள விற்காத மாத்திரைகளை வாங்கி சாப்பிடும் நிலை வரலாம். காற்றில் உள்ள தூசி, பூவில் உள்ள மகரந்தம் ஒருவரின் உடலுக்குள் செல்லும்போது, அதை நோய் எதிர்ப்பு சக்தி எதிரியாக கிருமியாக நினைக்கிறது. அப்போது அதை எதிர்த்து தாக்குத...

டெல்லி காற்று மாசுபாட்டை தீர்ப்பது எப்படி?

படம்
  டெல்லி காற்று மாசுபாட்டை தீர்ப்பது எப்படி? தந்தூரி சிக்கன் செய்யாமல் இருந்தால் காற்று மாசுபாட்டைக் குறைக்கலாம். நாளடைவில் தடுக்கமுடியும் என டெல்லி முதல்வர் தீர்க்கதரிசனத்தை கனவில் கண்டு செயல்படுத்தியிருக்கிறார். ஏற்கெனவே,அவர் மேக விதைப்பு எனும் திட்டத்தில் ஈடுபட்டு தோல்வி கண்ட ஆர்எஸ்எஸ் முரட்டு தற்குறி. அவரை இப்படி இருந்தால் அவரது அமைச்சரவை எப்படி இருக்கும்? பிரச்னையைத் தீர்ப்பதா, பிரச்னை என்று சொல்லும் மக்களைத் தீர்ப்பதாக என மதவாத கட்சி முடிவு செய்ய முடியாமல் தவிர்த்து வருகிறது.  இப்போதைக்கு சங்கிகள் நீதிமன்றத்தில், காவல் துறையில் இருப்பதால் கொலை, கொள்ளை, திருட்டு, வல்லுறவு, கடத்தல் செய்தவர்களை பிணையில் அல்லது நிரந்தரமாக விடுதலை செய்து வருகிறார்கள். இந்த வகையில் மக்கள் சொத்துகளை, தங்கள் பெண் பிள்ளைகளை பாதுகாப்பதில் நிறைய நேரம் செலவிடு்ம தேவை உருவாகியுள்ளது. எனவே, நீங்கள் காற்று மாசைப் பற்றி கவலைப்படும் தேவையே இல்லை. அப்படி காற்று மாசு அதிகம் என உலக நாடுகள் கண்டுபிடிக்கிறார்களா? அதை எதிர்த்து நாம் இந்திய அளவுகோல் ஒன்றைக் கண்டுபிடித்து அப்படியெல்லாம் கிடையாது என்போம். யாரும் ...

2025ஆம் ஆண்டில் மக்கள் அதிகம் விரும்பிய உணவு - பிரியாணி!

படம்
  2025ஆம் ஆண்டு மக்களால் அதிகம் விரும்பப்பட்ட உணவுகள் தமிழ்நாட்டில் உணவு என்றால் பஞ்சாய்ப் பறப்பார்கள். கோவிலில் உணவு, இருபது ரூபாய் உணவு, பௌர்ணமி, அமாவாசை உணவு என எப்படி உணவு போட்டாலும் அதை வாங்கித் தின்ன பெரும் கூட்டம் திரள்வது வாடிக்கை. தார்ச்சு கட்டிடம் கட்டியவனும் இலவச சோறு வாங்க மாரியம்மன் கோவில் வாசலில் காத்திருப்பான். ஒரு வேளை சோறு வீட்டில் ஆக்கவேண்டியதில்லை என குடும்பத்தையே கூட்டிவந்து புதிதாக மணமாகி வந்த மருமகளைக் கூட லைனில் இணைத்துக்கொள்ளும் தாராளமனம் கொண்ட மக்கள் வாழும் தேசமிது. ஸ்விக்கி நிறுவனம் மக்கள் அதிகம் விரும்பிய உணவுகள் என தன்னுடைய ஆர்டர் லிஸ்டை ஆராய்ந்து புள்ளிவிவரம் ஒன்றை தயாரித்துள்ளது. இது அவர்களுடைய வணிகத்திற்கானதுதான். இருந்தாலும் அதை நாமும் பொருட்படுத்தலாம். நம்மிடம் என்டிஏ அரசைப் போல உணவைப் பற்றிய எந்த தகவலும் இல்லை. பிரியாணி 93 மில்லியன் அளவுக்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இதில் கோழி, ஆடு, மாடு, பன்றி எத்தனை என்று தெரியவில்லை.பர்கர் 44 மில்லியன் அளவுக்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. பர்கர் சாப்பிடும் மக்களை இனி மதவாத குண்டர் குழுக்கள் என்ன செய்வார்களோ.... இ...

சிறுவயது முதலே குழந்தைகளை அடிமைத்தனத்தில் வைத்திருக்க பெருநிறுவனங்கள் விரும்புகின்றன! - டேவிட் டி கோர்ட்ரைட்

படம்
  நேர்காணல் டேவிட் டி கோர்ட்ரைட் வடக்கு புளோரிடா பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் அடிமையாக்குதல் பற்றி எழுதியுள்ளீர்கள். இதில் முதலாளித்துவம் எப்படி உள்ளே வருகிறது? நமது மூளையில் லிம்பிக் என்ற பகுதியில், மகிழ்ச்சி, ஊக்கம், நீண்டகால நினைவுகள் உள்ளது. இதை அடையாளம் கண்டுகொண்ட நவீன தொழிலதிபர்கள், மூளையை நேரடியாக பாதிக்கும், செல்வாக்கு செலுத்தும் விதமாக பொருட்களை வடிவமைத்து வருகிறார்கள். இந்த செயல்பாடு தனிநபர்களையும், சமூகத்தையும் கூட பாதிக்கிறது. மூளையில் அதிகளவு டோபமனை சுரக்க வைக்கும் விதமாக பொருட்களை வடிவமைக்கிறார்கள்.இந்த வேதிப்பொருள் மகிழ்ச்சி ஏற்படும்போது சுரக்கிறது. பெருமளவு முதலீட்டை, இத்தகைய பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார்கள் அல்லவா? அதைத்தான் முதலாளித்துவம் என்று கூறினேன். இதில், பெரியளவு லாபம் உள்ளது.  அடிமையாக்குதலின் சில வடிவங்களைக் கூறுங்கள். முதலில் ஒருவரை அடிமையாக்குதல் என்றால் மது, ஹெராயின், புகையிலை ஆகிய பொருட்களையே சுட்டிக்காட்டுவார்கள். இன்று, டிஜிட்டல் பொருட்களின் மீதான அடிமைத்தனம், சர்க்கரை, கொழுப்பு, காரம் சார்ந்த உணவுப்பொரு...

ஆண்டவன் அளிப்பதல்ல; நாம் வாழும் மோசமான சூழலால் உருவாவதே நோய்!

படம்
  கிருமிகளின் ஆக்கிரமிப்பு உடலுக்குள் எப்போதும் நுண்ணுயிரிகள் உண்டு. இவற்றில் முக்கியமானது வைரஸ், பாக்டீரியா. இதில் வைரஸ் ஆபத்தானது. பாக்டீரியாவும் நோய்களை ஏற்படுத்துகிறது. ஆனால், வைரஸ் அளவுக்கு அல்ல.  உடல் நுண்ணுயிரிகளை எப்போதும் வெளியேற்றவே முனைகிறது. ஆனால், வைரஸ், பாக்டீரியா எப்படியேனும் உள்ளே வந்துவிடுகிறது.  உடலுக்கு நோய்க்கிருமி பற்றி பழக்கி, நோயைத் தடுக்க தடுப்பூசிகள் பயன்படுகின்றன. தடுப்பூசிகள் பல்லாண்டு காலம் பயன்படுத்தப்பட்டு நோய் அறிகுறிகள், மருந்தின் செயல்பாடு ஆகியவை குறித்து வைக்கப்பட்டு பக்க விளைவுகளைக் கட்டுப்படுத்த கற்கிறார்கள். ஆனால் அவசரச் சூழலில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள், அதைப் பயன்படுத்துபவர்களுககும் ஆபத்தாக மாறுகிறது.  சில போலி அறிவியல்வாதிகள் அரசியல் ஆதாயங்களுக்காக தடுப்பூசி போட்டுக்கொள்ள தேவையில்லை என்பார்கள். தடுப்பூசியின் தொடக்க காலத்தில் பக்கவிளைவுகளை பெரிதுபடுத்தி பேசுவார்கள். இப்போது கூட தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு அரசு செலுத்திய தடுப்பூசி காரணமாக பலருக்கும் நீரிழிவுநோய் வந்துவிட்டது என வதந்தி பரவி வருகிறது. ஆனால், அது உண்மையல்ல. நீங்கள...

என் ரத்தத்தின் ரத்தமே! தமிழே உயிர்மூச்சே!

படம்
 என் ரத்தத்தின் ரத்தமே! தமிழே உயிர்மூச்சே! இது அதிமுக பற்றிய கட்டுரையல்ல. நமது உடலில் ஓடும் ரத்தம் பற்றியது. ரத்தம் என்றால் என்ன? ரத்தம் சிவப்பு நிறத்தில் இருக்கும். அதற்கு காரணம், அதிலுள்ள சிவப்பு அணுக்கள் என பள்ளிகளில் படித்தறிந்திருப்போம். கூடவே, அதில் பிளாஸ்மா, வெள்ளை அணுக்கள், பிளாடேட்ஸ் ஆகியவை இருக்கும்.  உடலிலுள்ள ரத்தத்தை இதயம் பல்வேறு உறுப்புகளுக்கு பிரித்து அனுப்புகிறது. ஊரில் குடிநீரை நீருந்து நிலையம் வைத்து விநியோகம் செய்கிறார்களே அதுபோல... சிவப்பு அணுக்கள், ரத்தத்தை மட்டுமல்ல, அதனோடு உயிர்க்காற்றையும் (ஆக்சிஜனையும்) உடன் கொண்டு செல்கிறது. சிவப்பு அணுக்கள் ரத்தத்தில் உள்ள அளவு 44 சதவீதம். ஒருவரின் உடலில் காயமானால் அங்கு ரத்தம் தடைபடுகிறது. காயமான இடத்தில் ரத்தம் கூழ் போல மாறுகிறது. இதை பிளாடேட்ஸ் செய்வதால் ரத்தப்போக்கு நிற்கிறது. ரத்தம் உறைந்து போதல் என்று இதைக் குறிப்பிடலாம். இதில் ஃபிப்ரின் என்ற புரதத்தின் பங்கும் உள்ளது.  பிளாஸ்மா என்று மேலே குறிப்பிட்டோம் அல்லவா? அதை ரத்தத்தில் இருந்து பிரித்தெடுத்தால் மெல்லிய மஞ்சள் நிறம் கொண்ட நீர் போல இருக்கும்.  இ...

2025ஆம் ஆண்டை எண்களாகப் பார்ப்போம்!

படம்
 2025ஆம் ஆண்டை எண்களாகப் பார்ப்போம்! இந்தியா, மதவாத கட்சியின் ஆட்சியில் டாலருக்கு எதிராக ரூ.90 அளவுக்கு சரிவை சந்தித்திருக்கிறது. மன்மோகன்சிங் ஆட்சியில் ரூபாய் சற்றே சரிவை சந்தித்தபோது ஆர்எஸ்எஸ் அமைப்பின் தூண்டுதலில் ஊளையிட்ட நடிகர்கள், மும்பை ஊழல் தொழிலதிபர்கள் இப்போது கள்ள மௌனம் சாதிக்கிறார்கள். தனக்கு வரவேண்டிய பதினைந்து கோடி ரூபாய், இன்னொரு செய்தியாளரிடம் சென்றுவிட்டதற்காக கோஸ்சாமி மட்டுமே ஆரவள்ளி மலைத்தொடர் சுரங்கம் பற்றி தொடர்ந்து பேசி வருகிறார். ரூபாய் பற்றி இன்னும் யாரும் எதுவும் பேசவில்லை. பேசினால் வீட்டுக்கு, அலுவலகத்திற்கு ரெய்டு வரும். சோனம் வான்சுக் போல விசாரணையி்ன்றி சிறையில் வைக்கப்படுவார்கள். கிறித்தவர்கள் போல எரித்தே கொல்லப்படலாம்.  பஞ்சாபி பாப் ஸ்டார் கரன் ஆஜ்லா இந்தியாவுக்கு வருகிறார். இவரது இசைப்பயணத்திற்காக 1,00,000 டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்திருக்கின்றன.  உச்சநீதிமன்றத்தில் தேங்கியுள்ள ஒட்டுமொத்த வழக்குகளின் எண்ணிக்கை 88,417. இது இதுவரையிலான நீதிமன்ற வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கை. நேர்மையாக செயல்பட்டால் உடனே அந்த நீதிபதியை இடமாற்றம் செய்யும் சனாதன தர...

கொங்கு பகுதி, தொழில்முனைவோருக்கான வழிகாட்டி! - மைல்கல்

படம்
 மைல்கல் த செ ஞானவேல் தரு மீடியா வெளியீடு விலை ரூ.400 தொடக்கத்தில் நன்றாக வந்த இந்து தமிழ்திசை பத்திரிக்கை இப்போது ஆர்எஸ்எஸின் ஆர்கனைசர் ஆகிவிட்டது என்று பேச்சு. அதில் வெளியான கொங்கே முழங்கு என்ற தொடரே நூலாக மாறியிருக்கிறது. இந்த நூலில் மொத்தம் இருபத்தைந்து தொழிலதிபர்கள் பேசப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள், அனைவருமே தமிழ்நாட்டின் மேற்குப்பகுதியைச் சேர்ந்தவர்கள். கொங்கு மண்டலம் என்று கூறுகிறார்களே அந்த நிலப்பரப்பைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டு தொழிலதிபர்கள் பெரும்பாலும் தங்களுடைய தொழில் ரகசியங்கள், போராட்டம், நிறுவனத்தின் லாபம், கிளைகளை பத்திரிகைகளுக்கு பகிர்ந்தது கிடையாது. அதாவது முன்னர், வரி பிரச்னை வந்துவிடுமோ என நினைத்திருக்கலாம். ஆனால், இந்த நூலில் தயங்கவில்லை. பல்வேறு விஷயங்களைப் பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார்கள். இதில் நான் வாசித்தது எட்டு தொழிலதிபர்களை மட்டும்தான். மற்றவர்களை பெரிதாக பொருட்படுத்தவில்லை. ஏனெனில் மருத்துவமனை, ஆயத்த ஆடை ஆலைகளை நடத்துவது ஒப்பீட்டளவில் பெரிய சாகசம் என்று கூறமுடியாது. அதில் சிரமங்கள் உண்டு. ஆனால், பழம், உணவு விற்பது அடிப்படையில் கடினமான ஒன்று. ...

தலைமுடி, தசைகள் பற்றி அறிவோம்!

படம்
  கார்குழல் அழகியே... அழகிகளைப் பற்றியல்ல. தலைமுடியைப் பற்றித்தான் இந்த குறுங்கட்டுரை. தலைமுடி, நகம் என இரண்டுமே கெராட்டின் என்ற வேதிப்பொருளால் உருவாகுபவை. அடிப்படையில், முடி, நகம் என இரண்டுமே அதன் வேர்ப்பகுதியில் மட்டும் உயிர்த்திசுக்களைக் கொண்டவை. எனவே,தான் முடியை வெட்டினாலோ, நகத்தை வெட்டினாலோ வலிப்பது கிடையாது.  தலையில் மயிர்கள் அடர்த்தியாக உள்ளன. எந்தளவுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் என்ற எண்ணிக்கையில் தலைமயிர்கள் வளருகின்றன. உடல் முழுக்கவும் உரோமங்கள் வளருகின்றன. சிலரின் குடும்ப பாராம்பரியம் காரணமாக கூடுதலாக, குறைவாக உரோமங்கள் இருக்கலாம்.  சாதாரண நீளமுடி, சுருட்டை முடி என்பது ஒருவகையில் ஒருவரையொருவர் ஈர்க்கிறது. சாதாரணமாக முடி உள்ளவர்கள், முடியை நவீன சலூன் சமாச்சாரங்கள் கருவிகளைப் பயன்படுத்தி அதை சுருட்டையாக மாற்றுகிறார்கள். சுருட்டை முடி குழுவினர், முடியை நீளமாக மாற்றிக்கொள்கிறார்கள். அப்படி இப்படி, இப்படி அப்படி முறைதான்.  பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தலையில் அரிப்பு ஏற்பட்டால், உடனே அங்கு என்ன பிரச்னை என பாருங்கள். ஈறும் பேனும் இருக்கலாம். அதை உடனே பேன் மருந்...

மனிதர்கள் அனைவரும் ஒன்றுபோலத்தானா?

படம்
 வலிமையான பாதுகாப்பு உடலுக்கு ஒரு வடிவத்தை கொடுப்பது எலும்புகள். இவை முடி, நகம் போல உயிரற்றவை அல்ல.எலும்புகள் உடைந்தாலும், அவற்றை சரியாக பொருத்தி வைத்தால் வளரும். எலும்புகள் உயிர்திசுக்களைக் கொண்டவை. எனவே, அவை உடைந்தால் மருத்துவர் எக்ஸ்ரே பார்த்து கமிஷன் வாங்கிக்கொண்டாலும் எந்த நிலைமையில் உள்ளது என்று கூறுவார். அதைப் பார்த்து நீங்கள் சிகிச்சையை தீர்மானித்துக்கொள்ளலாம்.  குழந்தையின் உடலிலுள்ள எலும்புகள் நெகிழ்வுத்தன்மை கொண்டவையாக இருந்து பிறகே வலிமையாகின்றன.  வயது வந்தோரின் இருகை மணிக்கட்டில் தலா இருபத்தேழு எலும்புகள் உண்டு.அதேபோல முழு வளர்ச்சி அடைந்த வயது வந்தோரின் உடலில் 206 எலும்புகள் இருக்கும்.  நுரையீரலை மார்பெலும்புகள் பாதுகாக்கின்றன.கால் எலும்புகளை உள்ளே ஆராய்ந்தால் தேன்கூடு போன்ற அமைப்பு இருக்கும். இந்த அமைப்பு தோற்றத்தில் இப்படி இருந்தாலும் வலிமையானது,எடை குறைவானது.  இரண்டு எலும்புகள் சந்திக்கும் இடம் மூட்டு இணைப்பு. கை, இடுப்பு ஆகிய பகுதிகளில் அதிக அசைவுகளுக்கு ஏற்றபடி எலும்புகளின் வடிவம் கோளம், செவ்வக வடிவில் அமைந்துள்ளது.  குழந்தையின் வளர்ச்சி தா...

சூழலியல் மாறினால்,மக்களின் தினசரி வாழ்க்கையும் மாறி மேம்பாடு அடையும் - இம்மானுவேல் மாக்ரன்,அதிபர் பிரான்ஸ்

படம்
 காலநிலை மாற்றம் - தேவைப்படும் செயல்பாடுகள் என்னென்ன? காலநிலை மாற்றத்திற்கான ஐ.நா சபை மாநாடு நடைபெற்று பத்தாண்டுகள் நிறைவடைந்துவிட்டது. 195 உலக நாடுகள், மாநாட்டில் பங்கேற்று வெப்பநிலை இரண்டு டிகிரிக்கு அதிகமாக செல்லாமல் தடுப்பதாக உறுதிகூறின.அப்படி உயர்ந்தாலும் ஒன்றரை டிகிரி செல்சியஸ் அளவுதான் அதிகபட்ச அளவு. பிரான்ஸ் நாடு, இந்த விவகாரத்தில் உறுதியான நிலைப்பாடுகளை எடுத்து செயல்பட்டது. பத்தாண்டுகளுக்குப் பிறகு நாம் எவ்வளவு தொலைவுக்கு முன்னேறி வந்துள்ளோம் என்பதைப் பெருமையாக பார்க்க முடிகிறது.  தொண்ணூறுகளோடு ஒப்பிடும்போது, நாங்கள் முப்பது சதவீத பசுமை இல்ல வாயுக்களைக் குறைத்துள்ளோம். இதில், 2014-25 காலகட்டத்தில் இருபது சதவீத அளவு என்பதும் உள்ளடங்கும். 2017ஆம் ஆண்டுக்கு முன்னர், பசுமை இல்ல வாயுக்களை குறைக்கும் செயல்பாடு ஒரு சதவீதம் என்றுதான் இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு 2021ஆம் ஆண்டு வரையில், அரசு எடுத்து முயற்சி காரணமாக அந்த அளவு இரண்டு சதவீதமாக அதிகரித்துள்ளது. 22-25 ஆண்டு காலத்தில் பசுமை இல்ல வாயுக்களைக் கட்டுப்படுத்துவது நான்கு சதவீதமாக கூடியுள்ளது. இது தோராய அளவுதான்.  நம...

திராவிடர்கள் யார், திராவிடம் என்றால் என்ன என்பது பற்றி தெளிவாக விளக்கும் நூல்!

படம்
  திராவிடம் - தமிழ்தேசியம் ஒரு விளக்கம் கா.கருமலையப்பன் பெரியார் திராவிடக்கழகம் இந்த நூலில், கருமலையப்பன், தமிழ் தேசியவாதியான மணியரசனின் பார்ப்பன ஆதரவு அரசியலை கருத்துகளை சாடுகிறார்.இழிவான கருத்துகளால் அல்ல. முறையாக ஆதாரங்களை வைத்தே வாதிடுகிறார். இன்று ஒருவர் பொதுக்காரியங்களில் பொறுப்பான ஒருவரைப் பற்றி கேள்வி கேட்டுவிட்டால், தனிநபரின் அந்தரங்களை சொல்லி திட்டுவது, வசைபாடுவது வழக்கமாகிவிட்டது. இந்தசூழலில் அப்படியான இயல்பு இல்லாமல், முழுக்க ஆதாரங்களை வைத்தே எதிர்த்தரப்பை எதிர்கொள்வது எளிதல்ல.  பெரியார் கூறிய கருத்துகளின் படி, காலத்திற்கேற்ப மாறும் விஷயங்களை கருத்தில் கொண்டும் கருமலையப்பன் பல்வேறு வாதங்களை முன்வைக்கிறார். அடிப்படையில் பெரியார், இந்தியா, இந்து என்ற வகைமையை விரும்பவில்லை. எனவேதான் தனித்தமிழ்நாடு கோரிக்கை உருவானது. அந்த அடிப்படையில் திராவிடர்கள் என்ற கருத்தை உருவாக்கினார். திராவிடர்கள் என்பதும் தமிழர்கள் என்பதும் வேறு வேறல்ல.  தமிழர்கள் என்று சொல்லி திராவிடத்தை வெறுக்கும் மணியரசன், தமிழ்தேசியம் சார்ந்த பத்திரிகை ஒன்றை நடத்துகிறார். அந்த பத்திரிகையை நூலகத்தில் தம...

பெருமை தேசப்பற்று ஒற்றுமை - அரசியலாகும் எழுத்துரு சீர்திருத்தங்கள்!

படம்
  பெருமை தேசப்பற்று ஒற்றுமை - அரசியலாகும் எழுத்துரு சீர்திருத்தங்கள்! ஒரு அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தால், அதற்கு முன்னே ஆட்சியில் இருந்தவர்கள் செய்த கட்டுமானப்பணிகளை சிதைப்பது, பெயரை மாற்றுவது, செயல்பாட்டில் உள்ளவற்றை அழிப்பது என நிறைய குதர்க்கங்களை காழ்ப்புணர்ச்சியால் செய்வார்கள். தமிழ்நாட்டில் சட்டமன்ற கட்டிடம் அப்படித்தான் பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டு மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டது. அதன் பின்னே உள்ளது தனிமனிதர் ஒருவரின் அற்பமான ஆணவமும், காழ்ப்புணர்ச்சியும் மட்டுமே.   அந்த வகையில் அமெரிக்காவில் அரசு பயன்படுத்தும் எழுத்துரு மாற்றப்படுவதாக அரசு செயலர் மார்கோ ரூபியோ அறிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத்தலைவர் பைடன் ஆட்சியில், 2023ஆம் ஆண்டு 'சன்ஸ் ஷெரிஃப் காலிப்ரி' என்ற எழுத்துரு அரசு ஆவணங்களில் பயன்படுத்தப்பட்டது. இந்த எழுத்துரு, பார்வைத்திறன் குறைபாடு கொண்டவர்களுக்கும் உதவுவதாக இருந்தது. இப்போது, தொழிலதிபர் ட்ரம்ப் அதிபராகி, குடியரசுக் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளதால் வெள்ளையர்களுக்கு ஆதரவான இனவெறிப்போக்கு அதிகரித்துள்ளது. கருப்பினத்தவர்களின் வரலாற்றை மாற்றி பெர...

தமிழ் எழுத்துருக்கள் பிரச்னை!

படம்
  அன்பிற்கினிய வாசகர்களுக்கு, வணக்கம்.  தளத்தில் பதிவேற்றிய சில கட்டுரைகளில் தமிழ் எழுத்துகள் சரிவர வரவில்லை. எழுத்துகள் அந்தரத்தில் பறந்துகொண்டிருந்தன. இதற்கு காரணம், நான் பயன்படுத்தும் புதிய இணைய உலாவியி்ல் தமிழ் எழுத்துரு பிரச்னை. எங்கு எதில் பிரச்னை என கண்டறியவே நேரம் நிறைய செலவானது. எனவே, பிழை பொறுக்கவும். திரு. சீனிவாசன் (கணியம் நிறுவனர்) அவர்களின் தொழில்நுட்ப உதவியைப் பெற்று பிரச்னையை சரிசெய்ய முயல்கிறேன். கணினி அதிக நினைவக சேமிப்பு கொண்டதல்ல என்பதால், செயல்களை வரையறுக்கப்பட்ட வசதிகளைக் கொண்டே செய்யமுடிகிறது.  குறுஞ்செய்தி அனுப்பி உதவி கேட்கும்போதெல்லாம், உடனே தனது பணிச்சுமை கடந்து உதவியை வழங்கும் திரு.சீனிவாசன் அவர்களுக்கு இப்பதிவு வழியாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி சார். 

மொழி - உரையாடுவோம்!

படம்
  கோமாளிமேடை மொழி - உரையாடுவோம்! ஒருவரோடு உரையாடுவது என்பது பேச முடிந்தால்தான் சாத்தியம் என்பது கிடையாது. அப்படி நினைப்பவர்கள், பேச இயலாதவர்களிடம் மாற்றுத் திறனாளிகளிடம் உரையாட முடியாமல் தடுமாறுவார்கள். ஒருவர் பேசாதபோதும், அவரது முகபாவனைகளைப் புரிந்துகொண்டால் போதும். சொல்ல விரும்புவதை அறியலாம். அதற்கேற்ப அவரிடம் பேசலாம். உடல்மொழியும் அப்படித்தான். முகம் சொல்வது, கை,கால்கள் செயல்பாடு ஆகியவற்றைப் புரிந்துகொண்டாலே அங்கு உரையாடல் தொடங்கிவிடுகிறது.  பிறந்த குழந்தைகள் நேரடியாக பேசுவதில்லை. ஆனால், அவர்களால் பேச முடியும். அழுது, தேவை என்னவென்று தெரிவிக்க முடியும். முக பாவனைகளைப் பிறருக்கு காட்ட முடியும்.மனிதர்களுக்கு முதிர்ச்சி அதிகம் என்பதால், குழந்தைக்கு பிறந்த சில ஆண்டுகளுக்கு பெற்றோரின் பராமரிப்பு, அக்கறை, அன்பு தேவைப்படுகிறது. குழந்தை தனக்கு ஏதாவது தேவை என்றால் அழுகிறது.  காது கேளாத மாற்றுத்திறனாளிகள் சைகை மொழியில் பிறருடன் ஏன் உலகத்துடன் கூட உரையாடுகிறார்கள். இதற்கென தனி பள்ளிகள் இயங்கி வருகின்றன. கைவிரல்கள் மூலம் வார்த்தைகளைக் கற்று அதை பயன்படுத்தி உரையாடுகிறார்கள். சைகை ம...

உரையாடல் - தோல் - அறிவியல் அறிவோம்

கோமாளிமேடை மொழி - உரையாடுவோம்! ஒருவரோடு உரையாடுவது என்பது பேச முடிந்தால்தான் சாத்தியம் என்பது கிடையாது. அப்படி நினைப்பவர்கள், பேச இயலாதவர்களிடம் மாற்றுத் திறனாளிகளிடம் உரையாட முடியாமல் தடுமாறுவார்கள். ஒருவர் பேசாதபோதும், அவரது முகபாவனைகளைப் புரிந்துகொண்டால் போதும். சொல்ல விரும்புவதை அறியலாம். அதற்கேற்ப அவரிடம் பேசலாம். உடல்மொழியும் அப்படித்தான். முகம் சொல்வது, கை,கால்கள் செயல்பாடு ஆகியவற்றைப் புரிந்துகொண்டாலே அங்கு உரையாடல் தொடங்கிவிடுகிறது. பிறந்த குழந்தைகள் நேரடியாக பேசுவதில்லை. ஆனால், அவர்களால் பேச முடியும். அழுது, தேவை என்னவென்று தெரிவிக்க முடியும். முக பாவனைகளைப் பிறருக்கு காட்ட முடியும்.மனிதர்களுக்கு முதிர்ச்சி அதிகம் என்பதால், குழந்தைக்கு பிறந்த சில ஆண்டுகளுக்கு பெற்றோரின் பராமரிப்பு, அக்கறை, அன்பு தேவைப்படுகிறது. குழந்தை தனக்கு ஏதாவது தேவை என்றால் அழுகிறது. காது கேளாத மாற்றுத்திறனாளிகள் சைகை மொழியில் பிறருடன் ஏன் உலகத்துடன் கூட உரையாடுகிறார்கள். இதற்கென தனி பள்ளிகள் இயங்கி வருகின்றன. கைவிரல்கள் மூலம் வார்த்தைகளைக் கற்று அதை பயன்படுத்தி உரையாடுகிறார்கள். சைகை மொழியைக் கற்றவர்கள...

ஒருவர் சாப்பிட்ட மாட்டிறைச்சியைக் கண்டுபிடித்து அரசு அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பும் ஆப்!

படம்
24 மணி நேரத்திற்கு முன்பாக சாப்பிட்ட மாட்டிறைச்சி!- சஞ்சார் பாட்டி ஆப் பயங்கரம்! அண்மையில், ஒன்றிய அரசு ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளில் உள்ள கண்காணிப்பு ஆப்களைப் போல ஒன்றை வடிவமைத்தது. தொடக்கத்தில் இந்த ஆப், சிம்களை தவறாக பயன்படுத்துபவர்களைக் கண்டுபிடிப்பது. அதை முடக்குவது என்றே வலைத்தளமாக இயங்கியது. பிறகு, திடீரென போன்களுக்கு ஆப்பை தரவிறக்கி பதியுங்கள் என மிரட்டும் தொனியில் குறுஞ்செய்திகள் வரத் தொடங்கின. இறுதியாக, தகவல்தொடர்புதுறை அமைச்சர் புதிதாக தயாரிக்கும் போன்களிலும், பழைய போன்களிலும் கண்காணிப்பு ஆப் இடம்பெற வேண்டும் என உத்தரவிட்டார். ஆப்பிள் நிறுவனம், முடியாது என்ற ஒற்றைப் பதிலை சொல்லிவிட்டது. மற்றவர்கள் அமைதி காத்தனர். அமலாக்கத்துறை பயமாக இருக்கலாம். இணையத்தில், சர்வாதிகார நாடாக மாறிவிட்டதா இந்தியா என கேள்வி எழும்ப அமைச்சர் எப்போதும் போல ஆர்எஸ்எஸ் பாரம்பரியத்தைப் பின்பற்றி மன்னிப்பு கோரி, உத்தரவை திரும்ப பெற்றுள்ளார். காலில் விழுவது, மன்னிப்பு கோருவது ஆர்எஸ்எஸ் ஆட்களுக்கு புதிதல்ல. ஆனால், அவர்களிடம் பொறுக்கித் தின்பவர்களுக்கு இன்னும் அந்த சடங்குகள் புரிபடவில்லை. சரி, இப்போது அந்த ஆப்...

சர்வதேசியவாதி - நேரு உரைகள் - மின்னூல் வெளியீடு- அட்டைப்படம் வெளியீடு

படம்
  Thanks  for wrapper image -wikimedia commons

சர்வதேசியவாதி நூலில் இருந்து

 நேரு கூறிய கருத்துகளில் முக்கியமானவை... நாம், ஒன்றை அழிப்பதை விட உருவாக்குவதில் பெரிது்ம் கவனம் செலுத்தவேண்டும் என நினைக்கிறேன். இந்தியாவில் எதிர்காலத்தில் மதரீதியான வன்முறைகள் நடக்காமல் இருப்பது முக்கியம். இப்படி நடைபெற்றால் நான் மக்களுக்கு நன்றியுடன் இருப்பேன். மத ரீதியான வன்முறைகளுக்கு எப்போதும் மக்கள் பேச்சு அல்லது வேறு வகையில் வாய்ப்பளித்துவிடக் கூடாது.  ஹைதராபாத் மக்கள் அவர்கள் இந்துக்களாக முஸ்லீம்களாக எப்படி இருந்தாலும் அவர்களை பிற கிரகத்தைச் சேர்ந்தவர்களாக கருதமாட்டோம். அவர்களை நமது நாட்டு மக்களாகவே கலாசார தொன்மை கொண்ட இந்தியாவின் மக்களாகவே கருதுவோம்.  காஷ்மீர் மாநில மக்கள் அங்கீகாரமற்ற அத்துமீறல்களால் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். கடுமையான வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றி, அவர்களுக்கு சுதந்திரம் அளிப்பது நமது கடமை என்பதை மறந்துவிடக்கூடாது. உலகில் நடைபெறும் போர்களில் ஒரு நாடு நடுநிலையாக இருப்பது கடினம். வெளியுறவு விவகாரங்கள் தெரிந்த யாருக்குமே இந்த விஷயம் தெரிந்து இருக்கும்.  இந்தியாவைப் பொறுத்தவரை ஆசிய நாடுகள் அனைத்தும் சுதந்திரம் பெற்றவையாகவும், அ...

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னைப் பயணம்!

     சென்னைப் பயணம் - மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு... மாணவர் நாளிதழில் வேலை செய்து அதைவிட்டு விலகிய பிறகு, நேர்காணல் ஒன்றுக்கு ஒருமுறை சென்னைக்கு சென்றதோடு சரி. அதற்குப்பிறகு செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை.ஒருமுறை, பாத்திரங்களை எடுக்கச் சென்றபோது மெட்ரோ ரயில் காரணமாக மயிலாப்பூர் குதறப்பட்டிருந்தது. அப்போது, பேருந்துகள் எங்கே சென்று எங்கே திரும்புகின்றன, எது பேருந்து நிறுத்தம் என்றே தெரியவில்லை. அப்படியான நிலையில்தான் மயிலாப்பூர் அன்றைக்கு இருந்தது.அன்று அறையில் உள்ள அத்தனை பாத்திரங்களையும் முழுக்க எடுக்கமுடியவில்லை. பாதி பாத்திரங்களை அய்யங்கார் எங்கே உள்ளது என மறந்துவிட்டார். பிறகு, நாங்கள் ஊருக்கு வந்தபிறகு பாத்திரங்கள் தன்னுடைய அறையில்தான் உள்ளன என்று பொறுப்போடு தெரிவித்தார். அந்த முறை பயணத்தில் அம்மாவும் உடன் பயணித்தார். இருவருக்கும் சேர்த்து ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகியது. ஓரியண்ட் ஃபேனை எல்லாம் ஒருவழியாக சரக்கு கட்டணம் கொடுத்து கொண்டு வந்துவிட்டோம். ஆனால் சென்னையில் மிச்சமுள்ள பாத்திரங்களை போய் எடுத்துவா என்று அம்மா, சொல்லிக்கொண்டே இருந்தார். அவருக்கு சில பாத்திரங...