இடுகைகள்

மாட்டிறைச்சியின் வரலாறு! - நூல் விமர்சனம்

படம்
  பீப் - எ குளோபல் ஹிஸ்டரி லோர்னா பியாட்டி ஃபார்னெல் கட்டுரை நூல்  மாட்டிறைச்சி என்பது உலகளவில் பல கோடி மக்கள் உண்ணும் உணவு. மக்களில் அதிகம் எதை பயன்படுத்துகிறார்களோ, அதையே அரசியல்வாதிகள் தங்களுடைய ஆயுதங்களாகப் பயன்படுத்துவார்கள். அந்த வகையில் தேசியவாத தன்மையில் மாட்டிறைச்சியும் கூட முக்கிய அடையாளமாக பயன்படுத்தப்பட்டது. இந்த நூலில், மாட்டிறைச்சியின் வரலாறு, அதை ஏன் ஃபீப் என ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்,இறைச்சியை சமைக்கும் விதம்,இறைச்சியைச் சுற்றிச் சுழலும் அரசியல், கோழி இறைச்சி கடைகள், மாட்டிறைச்சியை வைத்துஎப்படி விளம்பரம்செய்து கல்லா கட்டின என ஏகத்துக்கும் ஏராளமான தகவல்கள் உள்ளன.  மாட்டிறைச்சி பற்றிய ஓவியங்கள், இலக்கியங்கள் என நிறைய தகவல்களை ஆராய்ச்சி செய்து எழுத்தாளர் எழுதியிருக்கிறார். மாட்டிறைச்சி என்பது கால்நடைகள் அதிகம் வளர்க்கும்நாடுகளில் எப்போதுமே இருக்கிற ஒன்று. நியூசிலாந்தில் மாட்டிறைச்சி வளர்ப்பு பற்றி எழுதியுள்ளது சிறப்பானது. பொய்யான போலியான சுயநல அரசியலுக்குள் மாடுகளை இழுத்துவிட்டு மக்களை ஏமாற்றுவது இந்தியாவில் சாத்தியமாகிறது. உலக நாடுகளில் அப்படி தந்திரங்கள் ...

தொடுகிறேன்.. வருடுகிறாய்...

படம்
  தொடுகிறேன்.. வருடுகிறாய்... எஸ் ஜே சூர்யா போல செய்தாலும் சரி. அப்படி இல்லையென்றாலும் சரி. அடிப்படையில் ஒருவரைத் தொட்டாலே, அவரது தோலின் மென்மை, கடுமை, காய்த்துப்போனது, கன்றிப்போனதை அறியமுடியும். தொடும்போது கைகளிலுள்ள உணர்விகள், அத்தகவலை மூளைக்கு கொண்டு செல்கின்றன. இதற்கு மோட்டார் நியூரான்கள் உதவுகின்றன. அடுத்து என்ன செய்யலாம் என்பதை மூளை மோட்டார் நியூரானுக்கு கூறுகிறது. இந்த தகவல்கள் தசை வழியாக கடத்தப்படுகின்றன.  ஒரு வயது குழந்தை நீருக்கடியில் விடப்பட்டால், அதன் உடலிலுள்ள தசைகள் தானியங்கியாக இயங்கி நுரையீரலுக்குச் செல்லும் நீரைத் தடுக்க முயல்கின்றன. இதை ரெஃப்ளக்ஸ் செயல்பாடு என வரையறுக்கலாம்.  நம்முடைய தோலில் வலியை உணரும் நியூரான்கள் 3 ட்ரில்லியன்களுக்கும் மேல் உண்டு.  மருந்தகங்களில் வாங்கி சாப்பிடும் வலிநிவாரணிகள் தனி. அவையெல்லாம் இன்றியே உடலே வலிநிவாரணி ஒன்றை உருவாக்கியுள்ளது. அதை நம்மில் பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். அதுதான் எண்டார்பின். ஒரு பொருளைத் தொட்டால் அது எப்படியிருக்கிறது? மென்மையா, வன்மையான, வழுவழுப்பா, வெப்பமாகவா என தொடுதல் உணர்விகள் மூலம் மூளை அறிகி...

கௌரவமற்ற படுகொலைகள்

படம்
கௌரவமற்ற படுகொலைகள் - கர்நாடகத்தில் அதிகரிக்கும் ஆணவப் படுகொலைகள் கர்நாடகம் இந்திய மாநிலங்களில் முதலாக வெறுப்பு பேச்சுக்களை தடுக்கும் விதமாக சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. இதை வலதுசாரி பார்ப்பன பாசிச கட்சிக்ககு எதிரான நகர்வு என்று கூறலாம். எளிதாக மனித கீழ்மைகளை தட்டி எழுப்பி வாக்குகளாக மாற்றும் மதவாத கட்சிக்கு இப்படியான சட்டங்கள் பெரிய தடையல்ல. ஏனெனில் அவர்கள் எந்த சட்டங்களையும் மதிப்பதில்லை. அவர்களுடைய ஒரே சட்டம் முஸ்லீம், கிறித்தவர்கள், பட்டியல் இனத்தவர்கள் ஆகியோரை அடித்து உதைத்து உரிமைகளைப் பறித்து சொத்துகளை அபகரிப்பதுதான். அப்படித்தான் ஆரிய சம்பத்து இதுவரை செயல்பட்டிருக்கிறது.  2022-2023 ஆம் ஆண்டு வரை கர்நாடகத்தில் 13 ஆணவக்கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் பனிரெண்டு நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆம் நீங்கள் நினைத்தது சரிதான். இறந்தவர்கள் அனைவருமே மேல்சாதியைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக பெண்கள். கொலை செய்தவர்கள் அந்நியர்களல்ல. அந்தப் பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான்.  அடிப்படையில் மக்கள் பெண்களை சொத்தாக கருதுகிறார்கள். அவர்கள் சாதி மறுப்பு திருமணம் செய்தால், தங்களுக்கு ...

நோய் எதிர்ப்பு சக்தி, மூளை - அறிவியல் அறிவோம்

படம்
  திருப்பி அடிப்பேன் முதுகில் குத்திய துரோகிகளை நண்பர்களைப் பற்றியல்ல நாம் பேசவிருப்பது. உடலுக்குள் நிறைய கிருமிகள் புகுகின்றன. அவற்றை உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பே எதிர்கொண்டு தாக்குகிறது. அதில் முக்கியமானது, வெள்ளை அணுக்கள். தமிழ்நாடு காவல்துறையில் பல்வேறு குற்றங்களைத் தடுக்க பல்வேறு பிரிவுகள் உண்டோ, அதேபோல்தான் கிருமிகளை அழிக்கவும் சண்டையிடவும் நிறைய வேறுபட்ட வெள்ளை அணுக்கள் உண்டு. எடுத்துக்காட்டு. காசநோய் கிருமிகளோடு மேக்ரோபேஜ் எனும் வெள்ளை அணுக்கள் போரிடுகின்றன.  கிருமிகள் உடலுக்குள் புகுவதை தடுக்க கண்களில் கண்ணீர், மூக்கில் சளி, வாயில் எச்சில், காதில் மெழுகு போன்ற திரவம், வயிற்றில் அமிலம் உருவாகிறது. இவற்றையும் மீறி கிருமி உடலுக்குள் வந்துவிட்டால், நீங்கள் மருத்துவரை சந்தித்து, அவர் கமிஷன் வாங்கும் இடத்தில் ஸ்கேன் எடுத்து, அவரது சொந்த மருந்தகத்தில் உள்ள விற்காத மாத்திரைகளை வாங்கி சாப்பிடும் நிலை வரலாம். காற்றில் உள்ள தூசி, பூவில் உள்ள மகரந்தம் ஒருவரின் உடலுக்குள் செல்லும்போது, அதை நோய் எதிர்ப்பு சக்தி எதிரியாக கிருமியாக நினைக்கிறது. அப்போது அதை எதிர்த்து தாக்குத...

டெல்லி காற்று மாசுபாட்டை தீர்ப்பது எப்படி?

படம்
  டெல்லி காற்று மாசுபாட்டை தீர்ப்பது எப்படி? தந்தூரி சிக்கன் செய்யாமல் இருந்தால் காற்று மாசுபாட்டைக் குறைக்கலாம். நாளடைவில் தடுக்கமுடியும் என டெல்லி முதல்வர் தீர்க்கதரிசனத்தை கனவில் கண்டு செயல்படுத்தியிருக்கிறார். ஏற்கெனவே,அவர் மேக விதைப்பு எனும் திட்டத்தில் ஈடுபட்டு தோல்வி கண்ட ஆர்எஸ்எஸ் முரட்டு தற்குறி. அவரை இப்படி இருந்தால் அவரது அமைச்சரவை எப்படி இருக்கும்? பிரச்னையைத் தீர்ப்பதா, பிரச்னை என்று சொல்லும் மக்களைத் தீர்ப்பதாக என மதவாத கட்சி முடிவு செய்ய முடியாமல் தவிர்த்து வருகிறது.  இப்போதைக்கு சங்கிகள் நீதிமன்றத்தில், காவல் துறையில் இருப்பதால் கொலை, கொள்ளை, திருட்டு, வல்லுறவு, கடத்தல் செய்தவர்களை பிணையில் அல்லது நிரந்தரமாக விடுதலை செய்து வருகிறார்கள். இந்த வகையில் மக்கள் சொத்துகளை, தங்கள் பெண் பிள்ளைகளை பாதுகாப்பதில் நிறைய நேரம் செலவிடு்ம தேவை உருவாகியுள்ளது. எனவே, நீங்கள் காற்று மாசைப் பற்றி கவலைப்படும் தேவையே இல்லை. அப்படி காற்று மாசு அதிகம் என உலக நாடுகள் கண்டுபிடிக்கிறார்களா? அதை எதிர்த்து நாம் இந்திய அளவுகோல் ஒன்றைக் கண்டுபிடித்து அப்படியெல்லாம் கிடையாது என்போம். யாரும் ...

2025ஆம் ஆண்டில் மக்கள் அதிகம் விரும்பிய உணவு - பிரியாணி!

படம்
  2025ஆம் ஆண்டு மக்களால் அதிகம் விரும்பப்பட்ட உணவுகள் தமிழ்நாட்டில் உணவு என்றால் பஞ்சாய்ப் பறப்பார்கள். கோவிலில் உணவு, இருபது ரூபாய் உணவு, பௌர்ணமி, அமாவாசை உணவு என எப்படி உணவு போட்டாலும் அதை வாங்கித் தின்ன பெரும் கூட்டம் திரள்வது வாடிக்கை. தார்ச்சு கட்டிடம் கட்டியவனும் இலவச சோறு வாங்க மாரியம்மன் கோவில் வாசலில் காத்திருப்பான். ஒரு வேளை சோறு வீட்டில் ஆக்கவேண்டியதில்லை என குடும்பத்தையே கூட்டிவந்து புதிதாக மணமாகி வந்த மருமகளைக் கூட லைனில் இணைத்துக்கொள்ளும் தாராளமனம் கொண்ட மக்கள் வாழும் தேசமிது. ஸ்விக்கி நிறுவனம் மக்கள் அதிகம் விரும்பிய உணவுகள் என தன்னுடைய ஆர்டர் லிஸ்டை ஆராய்ந்து புள்ளிவிவரம் ஒன்றை தயாரித்துள்ளது. இது அவர்களுடைய வணிகத்திற்கானதுதான். இருந்தாலும் அதை நாமும் பொருட்படுத்தலாம். நம்மிடம் என்டிஏ அரசைப் போல உணவைப் பற்றிய எந்த தகவலும் இல்லை. பிரியாணி 93 மில்லியன் அளவுக்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இதில் கோழி, ஆடு, மாடு, பன்றி எத்தனை என்று தெரியவில்லை.பர்கர் 44 மில்லியன் அளவுக்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. பர்கர் சாப்பிடும் மக்களை இனி மதவாத குண்டர் குழுக்கள் என்ன செய்வார்களோ.... இ...

சிறுவயது முதலே குழந்தைகளை அடிமைத்தனத்தில் வைத்திருக்க பெருநிறுவனங்கள் விரும்புகின்றன! - டேவிட் டி கோர்ட்ரைட்

படம்
  நேர்காணல் டேவிட் டி கோர்ட்ரைட் வடக்கு புளோரிடா பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் அடிமையாக்குதல் பற்றி எழுதியுள்ளீர்கள். இதில் முதலாளித்துவம் எப்படி உள்ளே வருகிறது? நமது மூளையில் லிம்பிக் என்ற பகுதியில், மகிழ்ச்சி, ஊக்கம், நீண்டகால நினைவுகள் உள்ளது. இதை அடையாளம் கண்டுகொண்ட நவீன தொழிலதிபர்கள், மூளையை நேரடியாக பாதிக்கும், செல்வாக்கு செலுத்தும் விதமாக பொருட்களை வடிவமைத்து வருகிறார்கள். இந்த செயல்பாடு தனிநபர்களையும், சமூகத்தையும் கூட பாதிக்கிறது. மூளையில் அதிகளவு டோபமனை சுரக்க வைக்கும் விதமாக பொருட்களை வடிவமைக்கிறார்கள்.இந்த வேதிப்பொருள் மகிழ்ச்சி ஏற்படும்போது சுரக்கிறது. பெருமளவு முதலீட்டை, இத்தகைய பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார்கள் அல்லவா? அதைத்தான் முதலாளித்துவம் என்று கூறினேன். இதில், பெரியளவு லாபம் உள்ளது.  அடிமையாக்குதலின் சில வடிவங்களைக் கூறுங்கள். முதலில் ஒருவரை அடிமையாக்குதல் என்றால் மது, ஹெராயின், புகையிலை ஆகிய பொருட்களையே சுட்டிக்காட்டுவார்கள். இன்று, டிஜிட்டல் பொருட்களின் மீதான அடிமைத்தனம், சர்க்கரை, கொழுப்பு, காரம் சார்ந்த உணவுப்பொரு...