இடுகைகள்

அல்ஸீமர் ஆராய்ச்சியில் புதுமை!

படம்
அல்ஸீமரை தடுக்கலாம் ! ஆல்கஹால் அமெரிக்காவில் 9 ஆயிரம் பேர்களிடம் நடத்திய ஆய்வில் , குடிப்பழக்கம் இல்லாதவர்களுக்கு 74% அல்ஸீமர் ஏற்படும் வாய்ப்பு உள்ளது தெரியவந்துள்ளது . ஆல்கஹால் மூளையிலுள்ள நியூரான்களை தாக்கி உடல் இயக்கங்களை பாதிக்கிறது என்பது அறிவியலாளர்களின் உறுதியான நம்பிக்கை . ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது என்ற வகையில் இதனை அல்ஸீமருக்கு உதவும் என பரிந்துரைக்கிறது ஆய்வாளர்கள் குழு . போதைப் பொருட்கள் மூளையில் அமிலாய்டு புரதத்தை தடுத்து சிந்திக்கும் திறனை அதிகரிக்க BAN2401 என்ற மருந்து பயன்படுகிறது . இதற்கடுத்து நம்பிக்கை அளிக்கும் மருந்தாக aducanumab உள்ளது . அடுத்தடுத்த சோதனைகளில் இம்மருந்துகள் சிறப்பாக செயல்பட்டால் உடலின் ரத்த அழுத்தத்தை குறைத்து யோசிப்பதையும் , இயங்குவதையும் கட்டுப்படுத்தும் அல்ஸீமரை சமாளிக்கலாம் . பிரசவம் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் பெற்ற பெண்கள் , ஒரே ஒரு குழந்தையைப் பெற்ற பெண்களை விட அல்ஸீமரால் தாக்கப்படும் வாய்ப்பு 12 சதவிகிதம் குறைவு . இதற்கு பெண்களின் உடலிலுள்ள அவர்களின் ஆதார ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் விகிதம் மாறுபடுவதும்...

பிரிவினை நினைவுகளை மீட்கும் மியூசியம்!

படம்
பிரிவினை மியூசியம் ! பாகிஸ்தானின் லாகூரில் வசிக்கும் தன் பாட்டியிடம் பேசியபோதுதான் 1947 ஆம் ஆண்டு பிரிவினை பற்றிய வேதனை நிரம்பிய வரலாறு மல்லிகா அலுவாலியாவுக்கு தெரிய வந்திருக்கிறது . பஞ்சாபில் அமிர்தசரசில் பிரிவினை நினைவுகளுக்கான அருங்காட்சியகத்தை மல்லிகா அலுவாலியா அமைத்து வேதனை நினைவுகளை அடுத்த தலைமுறை அறிய உதவியிருக்கிறார் . 1947 ஆம் ஆண்டு நூல்கள் , திரைப்படங்களில் பிரிவினைக்கால கற்பழிப்புகள் , படுகொலைகள் ஆகியவை பற்றிய சம்பவங்கள் இடம்பெற்று நம்மை இன்றுவரையும் குற்றவுணர்வுக்கு உள்ளாக்கி வருகின்றன . " எந்த பதிலும் அளிக்கப்படாத சம்பவம் அது " எனும் மல்லிகா , கேட்ஸ் பவுண்டேஷனில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் . அருங்காட்சியகத்தில் உடைந்த பெட்டிகள் , சமையல் பாத்திரங்கள் , திருமண சேலை , டைரி ஆகியவற்றை சேகரித்து அதன்மூலம் சொல்ல மறந்த கதைகளை மக்களின் மனதோடு பேசுகிற மல்லிகா , அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலையில் இயற்பியல் பட்டதாரி . ஹார்வர்டில் எம்பிஏ பட்டம் வென்ற மல்லிகா , அக்டோபர் 2016 அன்று மியூசியத்தை தொடங்கியுள்ளார் . இதனை பார்வையிட்ட பிரிவினை அகதிகளில் ஒருவரான முன்...

புயலை எப்படி கணிக்கிறார்கள்?

படம்
புயலை கணிக்கலாம் ! தகவல் சேகரிப்பு செயற்கைக்கோள்களிலிருந்து பெறும் காற்று , ஈரப்பதம் குறித்த தகவல்களை பூமியிலுள்ள மையங்கள் சேகரித்து தொகுப்பாக்குவது முதல் பணி . தட்பவெப்பநிலை கணிப்பு உலகமெங்கும் உள்ள தட்பவெப்பநிலையை ஆறுமணிநேரத்திற்கு ஒருமுறை கணிப்பது முக்கியம் . உலகிலுள்ள அனைத்து பகுதிகளும் சிறுதுண்டுகளாக அட்டவணைப்படுத்தப்பட்டு தகவல்களை உடனே பெறுகிறார்கள் . மாற்றங்கள் அநேகம் சூப்பர் கம்ப்யூட்டர்கள் மூலம் மாற்றங்களின் பரவல்களை கண்காணித்து விளைவுகளை யூகிப்பது அடுத்தகட்டப்பணி . புயல் வேகம் , மழை அளவு , கடல் அழுத்தம் ஆகியவற்றை காட்சிப் படங்களாக உருவாக்குவதும் அதனை மக்களுக்கு ஆராய்ச்சியாளர்கள் உடனடியாக அறிவிப்பதும் இறுதிப்பணிகள் . தட்பவெப்பநிலையை துல்லியமாக கவனிப்பதன் மூலம் புயல் , வெள்ள அபாயங்களால் ஏற்படும் உயிரிழப்பு , சொத்துக்கள் இழப்பையும் தடுக்க முடியும் .  

உர்சல் திட்டம் தெரியுமா?

படம்
பிரேசிலை கலக்கும் கரடி ! பிரேஸிலில் விரைவில் அதிபர் தேர்தல் தொடங்கும் நிலையில் உர்சல் (Ursal-Union of the Socialist Republics of Latin America) எனும் கம்யூனிஸ்ட் கரடிதான் இணையத்தை கால்பந்துக்கு அடுத்தபடியாக கலக்கி வருகிறது . பல்வேறு மீம்களின் வழியாக இதனை கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக வலதுசாரி கட்சிகள் தங்களின் இணையப்பிரசாரத்தில் இக்கரடியை பயன்படுத்தி வருகின்றனர் . பிரேஸிலின் பேட்ரியாட்டா எனும் சிறிய வலதுசாரி கட்சியைச் சேர்ந்த காபோ டேசியாலோ , " உர்சல் திட்டப்படி நாட்டை கம்யூனிய நாடாக மாற்றும் முயற்சி நடைபெறுகிறது . இந்த முயற்சி நிறைவேற அனுமதிக்கக்கூடாது " என அதிபர் தேர்தல் விவாதத்தில் கொளுத்திப்போட விஷயம் சூடுபிடித்தது . உர்சல்என்றால் கரடி என்பது போர்ச்சுக்கீசிய அர்த்தம் . உர்சல் கரடியின் வரைபடம் , லோகோ , சுலோகன் , தேசியகீதம் , கால்பந்து அணி என இணையத்தில் பலரும் உருவாக்கி குவிக்கத் தொடங்கினர் . உர்சல் புரோஜெக்ட் என்பது 2001 ஆம் ஆண்டு பேராசிரியர் மரியா லூசியா விக்டர் பார்போஸா என்பவர் சாவோ பாலோ நகரில் நடைபெற்ற லத்தீன் அமெரிக்க , கரீபியன் இடதுசாரிகளின் மாநாட்டை கிண்டல...

உலக ஆரோக்கிய திட்டங்கள்!

படம்
ஆரோக்கிய திட்டங்கள்! இந்தியாவின் ஆயுஷ்மான் பாரத் போல அரசு மருத்துவத் திட்டங்கள் உலகம் முழுக்க உண்டு . இங்கிலாந்து வரி செலுத்தும் மக்களுக்கு சிகிச்சை , ஆலோசனைக்கட்டணம் அனைத்தும் அரசின் பொறுப்பு . தேசிய ஆரோக்கியத்திட்டத்தின் கீழ் மக்களின் உடல்நலன் பராமரிக்கப்படுகிறது . கனடா அரசின் நிதியுதவியோடு மருத்துவ சிகிச்சைகளை தனியார் நிறுவனங்கள் மக்களுக்கு அளிக்கின்றனர் . அடிப்படையான மருத்துவ உதவிகளை மட்டும் தனியார் மருத்துவர்கள் மக்களுக்கு வழங்குகின்றனர் . பிரான்ஸ் பிரான்ஸ் அரசின் கட்டாய காப்பீட்டுத்திட்டம் அனைத்து மக்களுக்கும் உண்டு . அதிலிருந்து ஆலோசனை , சிகிச்சை ஆகியவற்றுக்கு மக்கள் செலவழிக்கும் 80 சதவிகித தொகையை அரசு திருப்பித் தந்துவிடுகிறது . சிங்கப்பூர் அரசின் தேசிய ஆரோக்கியத்திட்டம் மக்களை நோய்களிலிருந்து காக்கவும் சிகிச்சை செலவுகளை கட்டுப்படுத்தவும் உதவுகிறது . மானிய உதவிகளையும் சிங்கப்பூர் அரசு வழங்குகிறது . ஜப்பானும் இதே மாடலோடு காப்பீட்டை கட்டாயமாக்கி சிகிச்சை செலவுகளை கட்டுப்படுத்தியுள்ளது .  

ஃபாலோ செய்யும் கூகுள்!

படம்
பின்தொடரும் கூகுள் ! ஆண்ட்ராய்டு ஓஎஸ்ஸில் தனது ப்ரௌசர் மற்றும் சர்ச் எஞ்சினை பதிப்பதோடு இணையத்திலுள்ள பல்வேறு சேவைகளையும் நீக்க முடியாதபடி செட் செய்வது கூகுளின் வின்னிங் தந்திரம் . தற்போது கூகுள்மேப் வசதி , போனில் ஜிபிஎஸ் வசதியை நிறுத்தினாலும் பயனரின் இடத்தை பதிவு செய்யும் அதிர்ச்சி விஷயத்தை அசோசியேட் பிரஸ் பகிரங்கப்படுத்தியுள்ளது . சில ஆப்களை போனில் தரவிறக்கி பதிக்கும்போதே பல்வேறு தகவல்களை பெறுவதற்கான அனுமதிகளை பெற்றுவிடுகின்றன . ஜிபிஎஸ் , தொடர்புவிஷயங்களை பெறுவதற்கு மறுத்தால் அவற்றை நாம் பயன்படுத்தமுடியாது . கூகுள் மேப்ஸ் இவ்வகையில் பயனர்களின் இடம் குறித்த தகவல்களை அவர்களின் அனுமதியின்றி சேகரித்து வைக்கிறது . போனில் இடம் அறியும் வசதியை ஆஃப் செய்தால் கூகுள் உங்களது இடம் பற்றிய செய்திகளை சேகரிக்காது என்பது சர்ச்சைகளுக்கு கூகுள் சொன்ன பதில் . இடமறியும் வசதியை அணைத்தாலும் இணைய ஆப் வழியாக கூகுள் தொடர்ச்சியாக கண்காணிப்பதை பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் குனெஸ் அகார் உறுதிபடுத்தியுள்ளார் ." கூகுள் தன்னுடைய மென்பொருள் சேவையை மேம்படுத்தவே இவ்வகையில் செயல்படுகிறது ...

அமைதி திட்டங்கள் பயனளிக்குமா?

படம்
கொரியாவில் அமைதி திட்டங்கள் ! அணு ஆயுத திட்டங்களை கைவிட ஒப்புக்கொண்ட வடகொரியாவுடன் இணைந்து செயல்படும் பல்வேறு பொருளாதார திட்டங்களை மூன் ஜே இன் உருவாக்கியுள்ளார் . இதில் இரு கொரிய நாடுகளையும் இணைக்கும் ரயில்பாதை திட்டமும் , பொருளாதார மையங்களும்   அடங்கும் . எழுபது ஆண்டுகளாக பிரிந்து வெறுப்புணர்வு சூழ வாழும் கொரிய நாடுகளிடையே இத்திட்டங்கள் புது மறுமலர்ச்சியை ஏற்படுத்தக்கூடும் . வடகொரியாவுடன் இணைந்து தென்கொரியா செய்யும் திட்டங்களுக்கு அமெரிக்காவின் ஆதரவு கிடைக்குமா என்பது சந்தேகமே . ஜூன் மாத சந்திப்பிற்கு பிறகு கிம் ஜாங் உன் , ஆயுதங்களை குறைப்பது தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுத்தார் என்பதை இன்னும் அவர் தெரிவிக்கவில்லை . ஜப்பானின் பிடியிலிருந்து விடுபட்டு இரு கொரிய நாடுகளும் விடுதலை பெற்ற தேசிய சுதந்திரதினத்தில் அமைதி பொருளாதாரதிட்டங்களை அறிவித்துள்ளார் மூன் . " அரசியல்ரீதியான ஒற்றுமைக்கு முன்பு பொருளாதாரரீதியிலான வளர்ச்சியால் இருநாடுகளும் தம்மை தக்கவைத்துக்கொள்வது குறித்து யோசிக்கவேண்டும் " என்கிறார் அதிபர் மூன் . ரயில்பாதை அமைந்தால் தென்கொரியாவிற்கு ரஷ்யா...