பெண்களின் கௌரவத்திற்காகத்தான் உழைக்கிறேன்
பெண்களின் கௌரவத்திற்காகத்தான் உழைக்கிறேன் ஆங்கிலத்தில்: எஸ்எஸ் தமிழில்: கார்த்தி ஸ்வப்னில் சதுர்வேதி தலைமை ஏற்று நடத்தும் சமக்ரா கழிவறைப்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் சூழல் அறிவியல் மற்றும் பகுப்பு வடிவமைப்பு முறையில் கழிவறைகளை நகரில் வாழும் ஏழை மக்களுக்காக, பயன்தரும் விதத்தில் கட்டணம் குறைவாக அமைத்துத் தருகிறார். இந்தப்பணியை முன் வந்து செய்வதற்கு ஒரே காரணம் பெண்களின் கௌரவத்தைக் காக்கவேண்டும் என்கிற விருப்பமும், கடமை உணர்வும்தான் காரணம். ஒரு பெண்குழந்தைக்கு தந்தையாக நான் அவளின் எதிர்காலத்திற்கு பொறுப்பாகிறேன். அதை செம்மையாக கட்டமைக்க முயற்சிக்கிறேன் என்று வார்த்தைகள் கோர்த்து நெஞ்சிற்கு நெருக்கமாக உரையாடுகிறார் ஸ்வப்னில் சதுர்வேதி. சமக்ரா நிறுவனத்தைத...