இடுகைகள்

இருளர் குழந்தைகளை படிக்க வைக்க அரும்பாடுபடும் ஆசிரியர்!

படம்
  கிருஷ்ணகிரியிலிருந்து அறுபது கிலோமீட்டர்களைக் கடந்தால் கேளமங்களம் கிராமத்தை அடையலாம்.இங்கு, மலை மீது அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஒன்பது பிள்ளைகள் படிக்கிறார்கள். இங்கு ஆசிரியராக இருந்தவர், அதிக தூரம் பயணித்து வந்து மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதை சித்திரவதையாக நினைத்து பணிமாறுதல் வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார். இதனால், ஓராசிரியர் பள்ளியாக செயல்பட்ட தொடக்கப்பள்ளியை அப்படியே விட்டுவிட முடியாது அல்லவா? அப்படித்தான் ஓசூரிலிருந்து டி ஜான்சன் என்ற ஆசிரியர் இங்கு மாறுதல் செய்யப்பட்டார். கடந்த ஆண்டு மார்ச் மாதம், ஆசிரியராக பொறுப்பேற்றவர், இன்றுவரை அங்கிருந்து கிளம்புவதற்கான வழியைத் தேடாதது ஆச்சரியம். பள்ளியில் படிக்கும் இருளர் குழந்தைகளுக்கு கல்வியை சிறப்பாக சொல்லித் தரவே முயன்றார். ஜான்சன், ஓசூரைச் சேர்ந்தவர். அங்கிருந்து இரு நாட்களுக்கு சோறு கட்டிக்கொண்டு பள்ளிக்கு வருகிறார். ஒருமுறை வந்துவிட்டால், பிறகு அந்த வாரம் முழுக்க ஊருக்கு செல்லமாட்டார். அங்கேயே தங்கி பாடம் கற்றுக்கொடுத்துவிட்டு வகுப்பறையில் தங்கிக் கொள்கிறார். பிறகு, வார விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்று வருகிற...

கூத்துக்கலைஞர்களை அடையாளப்படுத்தும் மருதம் கலைவிழா! - விழுப்புரத்தில் புதிய முயற்சி

படம்
  புதிய தலைமுறையினருக்கான மருதம் கலைவிழா பொங்கல் என்றால் பலருக்கும் தனியார் தொலைக்காட்சியில் போடும் சினிமாக்களைப் பார்ப்பதும், இன்ஸ்டா ரீல்ஸ் செய்வதிலும் பொழுது கழியும். அந்த நேரத்தில் விழுப்புரத்தில் நாட்டுப்புற கலைஞர்களை வரவைத்து மருதம் விழாவை இருநாட்கள் நடத்துகிறார் ஏ கார்த்திகேயன் என்ற சமூக செயல்பாட்டாளர். ‘’இன்று இளைஞர்கள் பொங்கல் போன்ற விழாக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. போனில் அல்லது டிவி முன்னே அமர்ந்து நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காகவே 15-16 என இரு நாட்களில் நாங்கள் மருதம் விழாவை நடத்த தொடங்கினோம்’’ என்றார் கார்த்திகேயன். இவர் தனது இளம் வயதில் புரட்சிகர இயக்கங்களில் இயங்கி வந்தவர். இந்த ஆண்டு நடத்தப்பட்ட விழாவில் தெற்கு ஆற்காடு பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர்கள், புத்தக விற்பனை நிலையம் ஒன்று. கலைப்பொருட்களின் அரங்கு ஆகியவை இடம்பெற்றிருந்தது. கரகாட்டம், பொய்க்கால் குதிரை, பறை, தெருக்கூத்து ஆகியவற்றை தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலிருந்து வந்தவர்கள் நடத்துகிறார்கள். மருதம் விழாவில் சமூக செயல்பாட்டாளர்களை கௌரவிக்கும் பணியும் நடைபெறுகிறது...

தங்க கடத்தல்காரர் எப்படி இறந்தார் என்று கண்டறியும் காவல்துறை! தங்கம் - வினீத் சீனிவாசன், அபர்ணா

படம்
  தங்கம் மலையாளம்  தங்கம்  தங்கம் மலையாளம் வினீத் சீனிவாசன், அபர்ணா, கலையரசன் கேரளத்தில் இருந்து தங்கத்தை கடத்தி வந்து மும்பையில் விற்று சம்பாதிக்கிறார்கள் என்பதே கதை. ஒன்லைனாக கதை நன்றாக இருந்தாலும் சொன்ன விதம் முழுக்க விசாரணை சமாச்சாரமாக இருப்பதால் ஒருகட்டத்தில் படம் எப்போது முடியும் என்று எண்ணம் தோன்றுகிறது. தவிர்க்கமுடியவில்லை. தங்கத்தை நில மார்க்கமாக மும்பைக்கு கடத்தி சென்று விற்று வருவதுதான் வினீத் சீனிவாசன் குழுவின் திட்டம். ஆனால் ஒருமுறை இப்படி செல்லும்போது தமிழகத்தில் முத்துப்பேட்டை அருகே மாட்டிக்கொள்கிறார் சீனிவாசன். அதிலிருந்து மீண்டவர் மும்பைக்கு செல்கிறார். ஆனால் சில நாட்களிலேயே அவரிடமிருந்து எந்த தகவலும் வருவதில்லை. என்ன ஆனது என விசாரிக்கும் வினீத் சீனிவாசனின் நண்பர் குழு மும்பைக்கு செல்கிறது. பார்த்தால் வினீத் அறையில் தூக்கில் தொங்கி இறந்திருக்கிறார். ஆனால் அறையில் போராட்டம் நடந்திருப்பது போல தெரிகிறது. எனவே, மகாராஷ்டிரா போலீசார், வினீத்தின் நண்பரிடம், நீங்கள் உண்மையை அறிய நினைத்தால் நாங்கள் உதவுகிறோம். ஆனால் நாங்கள் கேரளத்திற்கு வந்தால் அந்த செலவ...

வைரக்கற்களை திருடிக்கொண்டு தனித்தீவுக்கு வரும் இருபெண்களை துரத்தும் கொலைகாரர்கள்! பாடி ஆஃப் சின்

படம்
  பாடி ஆஃப் சின் (2018) ஆங்கிலம்   Directors :   Amariah Olson ,  Obin Olson அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெறும் கதை. அங்குள்ள பணக்கார தொழிலதிபர்கள், ஊதாரி பயல்கள் வரும் பார். அவர்களை வேட்டையாட நிறைய ஆட்களும் இருப்பார்களே? அப்படித்தான் எரிகா என்ற பெண் தனது தோழி லோரனுடன் அங்கு இருக்கிறாள். அங்கு வரும் பணக்கார ஆட்களை ஆசைப் பேச்சால் மயக்கி, உடலுறவு கொண்டுவிட்டு பிறகு மயக்க மாத்திரையால் நிஜமாக தூங்கவைத்துவிட்டு வேலையைத் தொடங்குகிறார்கள். அவர்களின் பணம், அணிகலன் என அனைத்தையும் திருடிக்கொண்டு கம்பி நீட்டுவதே வழக்கம். தனது அடையாளத்தை மறைத்து திருட்டு வேலையை செய்துவருகிறாள். உடலுறவு சந்தோஷமும், திருட்டில் தனது சாமர்த்தியம் மேம்படுவதையும் அவளே சிலாகித்து கொள்கிறாள். தனது தோழி லோரனுக்கும் இதுபற்றி கற்றுத் தருகிறாள். வறுமையான நிலைக்காக எரிக்காவை தேடி வந்த லோரனுக்கு, திருட்டு செய்வதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. ஆனால் அவள் எரிக்காவை நம்புகிறாள். எரிக்கா அப்படி ஒரு பணக்காரனை சந்தித்து பேசி இறுதியாக உடலுறவு கொள்கிறாள். பிறகு கிளம்பும்போது, மதுபானத்தில் மாத்திரையை கலந்துகொடுத்து அ...

12.மோசடி நிரந்தரம், முறைகேடு ஒரு சந்தர்ப்பம் - மோசடி மன்னன் அதானி

படம்
  ஆதி குழுமம், அதானி குழுமத்திற்கு நிலக்கரியை விநியோகம் செய்யும் நிறுவனமாகும். நீண்டகாலமாக அதானி குழுமத்தின் வாடிக்கையாளராக உள்ளது. ஆதி குழுமத்தின் முதலீட்டாளர் பெயர், உட்கர்ஷ் ஷா. இவர், கௌதம் அதானியின் முப்பதாண்டு கால நண்பர் என எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை கட்டுரை தகவல் கூறுகிறது. 2020ஆம் ஆண்டு கணக்குப்படி, ஆதி குழுமத்தின் வருவாய், 9 மில்லியன் டாலர்களாகும். மொத்த லாபம் 97 ஆயிரம் டாலர்கள் என்ற தகவல், நிதி தொடர்பான ஆவணங்களிலிருந்து தெரிய வருகிறது. அதானி குழுமத்தில் உள்ள நான்கு நிறுவனங்கள், ஆதி குழுமத்திற்கு 87.4 மில்லியன் டாலர்களை கடனாக வழங்கியுள்ளது. ஆனால் இதுபற்றி விசாரித்ததில் பணம் கடன் கொடுக்கப்பட்டதற்கான எந்த ஆவணங்களும் இல்லை. இத்தனைக்கும் கடன் கொடுத்த பல நிறுவனங்கள், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டவை. ஆதி குழுமத்தின் வருமானம், லாபம் அடிப்படையில் அந்த நிறுவனம், பிற நிறுவனத்திடமிருந்து கடனைப் பெற்றதே தவறான நடவடிக்கை. பொருளாதார ஆலோசகர் எவரும் கடன் வாங்கும் யோசனையை ஏற்கவே மாட்டார்கள்.   ஆதி குழுமம், வாங்கிய கடனைக் கட்ட900 ஆண்டுகள் தேவைப்படுகிறது. அப்படி கடினமாக உழைத்தாலு...

ஆன்லைன் சேவை நிறுவனங்களோடு சண்டையிடும் சங்கத்தலைவர் - ஷேக் சலாலுதீன்

படம்
  ஷேக் சலாலுதீன் இந்திய ஒற்றுமை பயணத்தில்... ஆன்லைன் சேவை நிறுவனஙளோடு சண்டையிடும்   சங்கத்தலைவர் - ஷேக் சலாலுதீன் பொதுநல விஷயங்களில் உழைக்கும் மனிதர்கள் முதலில் இழப்பது தங்கள் மனநிம்மதியைத்தான் என்று சொன்னவர் பெரியார். அவர் சொன்ன வார்த்தைகள் எதுவும் மாறவில்லை. சலாலுதீன் மீது பெருநிறுவனங்கள் 42 வழக்குகளைத் தொடுத்துள்ளன. வாரத்திற்கு மூன்று நாட்கள்,   வழக்குகளை சந்திக்கவென ஒதுக்கி உழைத்து வருகிறார். ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஷேக்   சலாலுதீன். எதற்கு அவர் மீது 42 வழக்குகள். அதுவும் பெருநிறுவனங்கள் வழக்கு தொடுத்துள்ளன. எதற்கு என்று   நினைக்கிறீர்கள்? சலாலுதீன் ஆன்லைன் வாகன சேவை மற்றும் உணவு சேவை நிறுவனங்களுக்கான தொழிலாளர் சங்கத்தை நடத்தி வருகிறார். ஊழியர்களை ஒன்று கூட்டி அவர்களின் உரிமைகளைக் கேட்டு வேலை நிறுத்தம் செய்த காரணத்திற்காகத்தான் அவர் மீது நீதிமன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உளவியல்ரீதியான தாக்குதல் நடத்தப்பட்டது.   அண்மையில்தான் சலாலுதீன், பிறந்து பதினெட்டு மாதமான மகள் ஜைனப் பேகத்தின் ஹகீக்கா விருந்து விழாவை நடத்தினார். கூட்டு குடும்பமாக வசித்து...

காதலனைப் பள்ளித்தோழியோடு சேர்த்து கல்யாணம் செய்து வைக்கும் காதலி! தி வெட்டிங் அன்பிளானர்

படம்
  தி வெட்டிங் அன்பிளானர் மெரினா, கார்லோஸின் அட்டகாச நடனம் தி வெட்டிங் அன்பிளானர்   மெரினா சிறுவயதாக இருக்கும்போதே அவளது பெற்றோர் விவகாரத்து பெற்றுக்கொள்கின்றனர். இதற்கு மெரினாவின் அப்பா, தனது வீட்டுக்கு அருகில் உள்ள பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்வது காரணமாக அமைகிறது. காதல் என்பது பைத்தியக்காரத்தனம் என அப்பா போகும்போது சொல்லும் வார்த்தை மெரினாவின் மனதில் பதிகிறது. எனவே, அவள் ஆண் தோழன் என யாரையும் ஏற்பதில்லை. திருமணமும் செய்யக்கூடாது என முடிவாக இருக்கிறாள். அவளது வாழ்க்கையில் வரும் கார்லோஸ் என்பவன் ஏற்படுத்தும் பிரச்னைகள், அதன் விளைவுகள்தான் கதை. இரண்டு பெண்கள் ஒரு ஆண் என அடிப்படையில் முக்கோண காதல் கதைதான். படத்தில் சுவாரசியமாக இருப்பது மெரினாவின் குணங்கள் பற்றி மெல்ல பார்வையாளர்களான நமக்குத் தெரிய வருவதுதான். இந்த வகையில் அவர் தனக்கு பிடித்த விஷயங்களை அவ்வளவு எளிதாக பிறருக்கு விட்டுக்கொடுப்பவர் அல்ல. தன்னை அவமானப்படுத்தியவர்களை காலம் கடந்தும் வாய்ப்புகள் அமையும்போது பழிவாங்குகிறார். இதில், அவள் நேசிக்கும் காதலன் கூட உண்டு என்பதுதான் வினோதம். மெரினா, காதலே வாழ்க்கையில் நுழ...