இடுகைகள்

மதவாதம் சார்ந்து உருவாகும் அரசதிகாரம் அச்சமூட்டும் ஒன்று! - வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பர்

படம்
  ரொமிலா தாப்பர், வரலாற்று ஆய்வாளர் இந்துத்துவா அரசியலை விமர்சனம் செய்பவர்களில் முக்கியமானவர், வரலாற்று ஆய்வாளரான ரொமிலா தாப்பர். இந்தியாவின் பன்மைத்துவ தன்மைக்காக குரல் கொடுத்து இந்துத்துவ சிந்தனைகளுக்கு எதிரான குரலாக ஒலித்து வருகிறார். தற்போது, ‘தி ஃப்யூச்சர் இன் தி பாஸ்ட்’ என்ற நூலை எழுதியிருக்கிறார். வரலாற்று ஆய்வாளராக அவரை மாற்றிய விவகாரங்கள், பல்வேறு பிரச்னைகள் பற்றிய தனது கருத்துகளை கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அவரது கட்டுரைகளின் தொகுப்புதான் மேற்சொன்ன நூலாக வெளிவந்திருக்கிறது. வரலாற்றை இந்துத்துவா எப்படி அணுகுவதாக நினைக்கிறீர்கள்? வரலாற்றை அணுகுவது என்பது பொதுவாக நிகழ்ச்சிகளுக்கு விளக்கம் கொடுப்பதுதான். ஆதாரங்களை சேகரித்து, அதை ஆய்வு செய்து, கடந்த கால நிகழ்ச்சிகளுக்கு பொருத்தமான விளக்கங்களை கொடுப்பது என புரிந்துகொள்ளலாம். இந்துத்துவா கருத்தியலுக்கு இதெல்லாம் தேவையில்லை. அவர்கள் கடந்த காலத்தைப் பற்றிய சிறு குறிப்பை வைத்திருக்கிறார்கள். அதைக் கொண்டு கருத்தியலை உருவாக்கி நடைமுறைக்கு கொண்டு வருகிறார்கள். ஆதாரங்கள் நம்பகத் தன்மை கொண்டவையா, வாதங்கள் ஏற்புடையவையா என்றெல்லாம...

மறுசுழற்சி செய்யப்படாத ஆடைகளால் ஏற்படும் சூழல் பாதிப்பு!

படம்
  மறுசுழற்சி செய்யப்படாத ஆடைகள் உலோகங்கள், வேதிப்பொருட்கள், சிமெண்ட் ஆகிய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் முக்கிய பொருட்கள் கரிம எரிபொருட்களை சார்ந்தே இருக்கின்றன. இவற்றை உற்பத்தி செய்யும் செயல்முறையில் பெருமளவு பசுமை இல்ல வாயுக்கள் வெளியாகின்றன. 0.98 டன்   ஸ்டீலை உற்பத்தி செய்யும்போது 1.87 டன் கார்பன் டை ஆக்சைடு வாயு வெளியாகிறது. இப்படி வெளியாகும் வாயுவை குறைக்க முடியாது. ஏனெனில் ஸ்டீல், சிமெண்ட் என இரண்டுமே நகரங்களைக் கட்டமைப்பதில் முக்கியமானவை. இவற்றுக்கு மாற்று இன்றுவரை வெற்றிகரமாக அமையவில்லை. எனவே, காற்றில் வெளியாகும் கார்பன் என்பது மென்மேலும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.   கனரக தொழில்துறைக்கு இப்போதைக்கு கையில் உள்ள மாற்று முறை ஸ்டீம் மீத்தேன் ரீஃபார்மிங் எனும் முறைதான். இதில் ஹைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது. உலகளவில் கனரகத் தொழில்துறை 22 சதவீத கார்பன் டை ஆக்சைடு வெளியீட்டிற்கு காரணமாக உள்ளது. இதை மட்டுமே குறையாக கூற முடியாது. ஜவுளித்துறையிலும் அதிக சூழல் பாதிப்பு உள்ளது. ஆடைகளைப் பற்றிப் பார்ப்போம். இங்கிலாந்தில் விற்கப்படும் எண்பது சதவீத ஆடைகள் மறுசுழற்...

ஹாங்காங்கின் சுதந்திர பேச்சுரிமைக்கு போராடிய ஜிம்மி லாய்க்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கலாமா?

படம்
  ஜிம்மி லாய், நிறுவனர், ஆப்பிள் டெய்லி நாளிதழ் ஆப்பிள் டெய்லி நாளிதழ், ஹாங்காங் அமைதிக்கான நோபல் பரிசை ஜிம்மி லாய்க்கு வழங்கலாம்! நான் ஒரு பத்திரிகையாளர். எனவே, இதை சொல்வது பாகுபாடாக தோன்றலாம். இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு ஹாங்காங்கைச் சேர்ந்த பத்திரிகை உரிமையாளர் ஜிம்மி லாய்க்கு வழங்கப்படலாம் என நினைக்கிறேன். ஹாங்காங்கில் உள்ள ஆப்பிள் டெய்லி என்ற நாளிதழின் உரிமையாளர் ஜிம்மி லாய். கருத்து சுதந்திரம், மனித உரிமைகளுக்காக போராடும் மனிதர். பொதுவாக தொழிலதிபர்கள் அரசியல்வாதிகளோடு ஒத்துப்போய்விடுவார்கள். அவர்களை மீறி உண்மையை பேசுவதால் இழப்பது அதிகமாகவும் பெறுவது குறைவாகவும் இருக்கும். ஜிம்மி லாய் தனது சொத்துக்களைக் கூட இழந்து சிறைக்குச் செல்ல துணிந்துவிட்டாரர். பிரிட்டன் ஹாங்காங்கை சீனாவிடம் ஒப்படைத்தபோது ஒரு நாடு இரண்டு சட்ட அமைப்பு முறை என்ற அடிப்படையில் அன்றைய அதிபர் டெங் ஜியாவோபிங் அதை ஏற்றார். அதன்படி ஐம்பது ஆண்டுகள் ஹாங்காங் செயல்படுவது ஒப்பந்த விதிமுறை. அந்த வகையில் அதன் குடியுரிமைகள், சுதந்திரமான அமைப்புகள் செயல்படும். உண்மையில் டெங் கொடுத்த வாக்குறுதி, அதாவது உ...

சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு வயது 70! - அடுத்த சீன அதிபர் யார்?

படம்
  ஷி ஜின்பிங், சீன அதிபர் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு வயது 70 சீன அதிபர் ஷி ஜின்பிங், மூன்றாவது முறையாக அதிபராக பொறுப்பேற்று ஆட்சியை நடத்திவருகிறார். இது அவருக்கு மூன்றாவது ஐந்தாண்டு. மார்ச 2023இல் ஆட்சியை தக்கவைத்துள்ளவர், வாழ்நாள் முழுக்க அதிகாரத்தில் இருப்பதற்கு ஏற்றபடி கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள தனது ஆதரவாளர்களை தனது அணியில் திரட்டியுள்ளார். தனக்கு எதிராக உள்ளவர்களை முற்றாக விலக்கியுள்ளார் என அசோசியேட் பிரஸ் தனது செய்தியில் கூறியுள்ளது. கடந்த ஜூன் பதினைந்தாம் தேதி அதிபர் ஷி ஜின்பிங் எழுபது வயதை எட்டினார். அமெரிக்கா, இங்கிலாந்து என பல்வேறு நாடுகளுடன பகை ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டில் பொருளாதாரம் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது. அந்த நேரத்தில் அழுத்தத்தை சமாளித்து அதிகாரத்திலும் இருக்கிறார் ஷி ஜின்பிங். ஷி ஜின்பிங்கிற்கு எழுபது வயதாகிவிட்டது. அடுத்த அதிபராக யார் வருவார் என்ற கோணத்தில் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையாளர்   சுன் ஹான் வாங் பார்டி ஆஃப் ஒன் என்ற நூலை எழுதியிருக்கிறார். அதில் அடுத்து அதிபராக வருபவரின் சாத்தியங்களை அலசியிருக்கிறார். உண்மையில், சீனாவில் அட...

உணவு வீணாவதால் உருவாகும் மீத்தேன் வாயு!

படம்
  ஆண்டுதோறும் 1.4 பில்லியன் டன் உணவுப்பொருட்கள் வீணாகி வருகின்றன. உற்பத்தியாகும் மூன்றில் ஒரு பங்கு உணவுப்பொருள், வீணாகிவருவதாக ஐ.நா அமைப்பு கூறுகிறது. உணவு வீணாவது எந்தெந்த நிலையில் நேரிடுகிறது? உற்பத்தி, அதை ஓரிடத்திலிருந்து சந்தைக்கு கொண்டு செல்வது, விற்பனை, வீட்டு பயன்பாடு என பல்வேறு செயல்களில் உணவு வீணாகிறது. உலக நாடுகளில் நாற்பது சதவீதம் உணவுப்பொருட்கள் அதன் விற்பனை நிலையில்தான் வீணாவது தெரிய வந்துள்ளது. மனிதர்கள் சாப்பிட உற்பத்தியாகும் உணவுப்பொருட்கள் வீணாவது, பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. இந்த உணவுப் பொருட்கள் பட்டியால் தசை உருகி கிடக்கும் மக்களுக்கு சென்று சேருவது பல்வேறு உலகளவிலான பொருளாதார கொள்கைகளால் தடுக்கப்படுகிறது.   மக்களுக்கு பயன்படாமல் கெட்டு அழுகிப்போகும் பொருட்களால் வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுவான மீத்தேனின் அளவு கூடுகிறது. உணவு வீணாவதால் உலகளவில் 28 சதவீத வேளாண்மை நிலங்களின் பயன்பாடு சீர்கெடுகிறது.   60 க்யூபிக் கி.மீ அளவு நீர் வீணாகிறது. வீணாகும் உணவை உற்பத்தி செய்யும் செயல்முறையில் வெளியாகும் கார்பன் அளவு 3.6 பில்லியன் டன் ஆகும். உணவை உற...

பணம் விரயமாகும் வழித்தடம்! - முருகானந்தத்திற்கு எழுதிய கடிதங்கள்

படம்
  பணம் விரயமாகும் வழி 27.1.2022 அன்புள்ள நண்பர் முருகுவிற்கு, வணக்கம். நலமா? நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களைத் தொகுத்து ‘நீரெல்லாம் கங்கை’ என   பெயரிட்டு அமேஸான் தளத்தில் பதிப்பித்திருக்கிறேன். ஜானகிராமம் நூலை படிக்க நினைத்தேன். நூல் 806 பக்கம். போனில் படிக்க முடியாது. எனவே, அமீஷின் ராமாயண புனைவுக்கதையை படித்துக்கொண்டு இருக்கிறேன். பவித்ரா ஶ்ரீனிவாசனின் மொழிபெயர்ப்பில் நூல் நன்றாக உள்ளது. கவிதக்கா, அண்மையில் பெங்களூருவில் இருந்து ஈரோட்டுக்கு வந்துவிட்டார். ஈரோடு போகும் வேலை இருந்தால் சென்று பாருங்கள். நீங்கள் பேசவில்லை என வருத்தப்பட்டார். ‘சாங் ஷி’ என்ற ஆங்கிலப்படத்தைப் பார்த்தேன். பத்து வளையங்களின் சக்தி என படத்தின் கதையை விளக்கினால் சலவைத்தூள் விளம்பரம் போலவே இருக்கும்.   சீன கலாசாரம் சார்ந்து அமெரிக்க படத்தை எடுத்திருக்கிறார்கள். இவரின் பாத்திரத்தையும் அவெஞ்சரில் சேர்ப்பார்கள் என நினைக்கிறேன். பள்ளிகள் இனியும் திறக்கவில்லை என்றால், நான் துளிர் இதழுக்கு கட்டிய ஆண்டு சந்தா முழுக்க வீண்தான். பணம் வீணாவது ஏதோ ஒருவகையில் நடந்துகொண்டே இருக்கிறது. வினோத் மேத்தா பற்...

உரையாடல்களில் வல்லவரான தேவன் - முருகானந்தத்திற்கு எழுதிய கடிதங்கள்

படம்
  24.1.2022 அன்புள்ள நண்பர் முருகு அவர்களுக்கு, வணக்கம். உடல்நலமும் மனநலமும் மேம்பட்டிருக்க பேரிறையை வேண்டுகிறேன். பத்து நாட்களுக்கு முன்னர் ஆர்டர் செய்த வினோத் மேத்தா பற்றிய நூல் இன்றுதான் கைக்கு வந்தது. டிஹெச்எல் ப்ளூடர்ட் ஆட்கள் கூரியரில் கிடைத்தது. அவுட்லுக் பத்திரிகை நிறுவனர், ஆசிரியரின் சுயசரிதை நூல். இனிமேல்தான் படிக்கவேண்டும். அரசின் மின்நூலகத்தில் மறைமலையடிகள் கடித நூலை தரவிறக்கிப் படித்தேன். தமிழ் சொற்களின் பயன்பாடு நன்றாக உள்ளது. அவர் எழுதிய கடிதங்கள் அனைத்தும் ஆண்டு அடிப்படையில் தொகுக்கப்படவில்லை. கடிதத்ததில் உரிய பெயர்களும் கூட இல்லை. மிஸ்டர் வேதாந்தம் நூலின் இரண்டாம் பாகத்தை படித்துக்கொண்டு இருக்கிறேன். மனிதரின் குணத்தை உடனே வெளிப்படுத்தும் தெரிந்துகொள்ளும் வகையிலான உரையாடல்கள் எழுத்தாளர் தேவன் வல்லவராக இருக்கிறார். உறவினர்களால் ஏமாற்றப்பட்டு சொத்துக்களை இழந்த வேதாந்தம் எப்படி சென்னைக்கு வந்து பத்திரிகையாளராகி வாழ்வின் மீது நம்பிக்கை கொள்கிறார் என்பதே கதை. உடலைப் பார்த்துக்கொள்ளுங்கள். நன்றி அன்பரசு படம் - ஞானசம்பந்தன் வலைத்தளம்