இடுகைகள்

ராணுவத்தில் உள்ள சூது செய்யும் கொலைகாரர்களை பழிவாங்கும் வழக்குரைஞர்கள்!

படம்
  மிலிட்டரி பிராசிகியூட்டர் டாபர்மேன் - கே டிராமா   மிலிட்டரி பிராசிகியூட்டர் டாபர்மேன் கொரிய டிராமா தொடர் ராக்குட்டன் விக்கி ஆப்   கொரிய ராணுவத்தில் நடைபெறும் ஊழல்கள், அதற்கான சூத்திரதாரிகளை இரு ராணுவ வழக்குரைஞர்கள் சேர்ந்து சுளுக்கெடுப்பதுதான் பதினாறு எபிசோடுகளின் கதை. நாயகன் பெயர்தான் டாபர்மேன். அப்படியல்ல டோ பே மன். அவனது எதிரிகள் அவனது பணத்திற்கான விசுவாசத்தைப் பார்த்து அவனை டாபர்மேன் என்ற அழைத்து மகிழ்கிறார்கள். ஒருகட்டத்தில் நாயகன் , தன்னைப் போலவே உள்ள டாபர்மேன் நாயை வளர்க்கிறார். தொடரின் தலைப்பு வந்துவிட்டதல்லவா? பள்ளியில் படிக்கும் டோ பே மன்னின் பெற்றோர் ராணுவத்தில் வழக்குரைஞர்களாக இருந்து கார் விபத்தில் மர்மமாக இறந்துபோகிறார்கள். அதிலிருந்து ராணுவம் , சேவை என்றாலே கசப்பாக இருக்கிறது டோவுக்கு. எனவே, ராணுவ சேவை வயது வந்தாலே தன்னை ஏதாவது குற்றங்களில் ஈடுபடுத்திக்கொண்டு பள்ளியில் இருந்து வெளியே வந்துவிடுவான். ஆனாலும் கூட வழக்குரைஞர் தேர்வில் விரைவில் வெற்றி பெற்றுவிடுகிறான். ஆனால், பள்ளி சிறுவனான அவனை எந்த நிறுவனமும் வேலைக்கு சேர்த்துக்கொள்வதில்லை. அ...

தீயணைப்புப்படை கேப்டனுக்கும், மருத்துவருக்கும் இடையே எரியும் காதல் நெருப்பு !

படம்
    யாங் யாங் - வாங் சுரான் (ஃபயர்வொர்க்ஸ் ஆப் மை ஹார்ட்) ஃபயர்வொர்க்ஸ் ஆப் மை ஹார்ட் சீன டிவி தொடர் ராக்குட்டன் விக்கி ஆப் சீனர்கள் எதையும் சுருக்கமாக சொல்லாமல் இழுப்பதில் வல்லவர்கள் என்பதால், தொடர் நாற்பது எபிசோடுகள் நீள்கிறது. ஆனால் பெரிதாக சலிக்காமல் இருக்க ஏராளமான கதைகளை உள்ளே சேர்த்தியிருக்கிறார்கள். ஏழை, பணக்காரன் காதல் கதை. அதை இருவரின் பின்னணியாக தீயணப்புத்துறை, மருத்துவம் என மாற்றி கம்யூனிஸ்ட் கட்சி விசுவாசம், தேசப்பற்று ஆகியவற்றை மழைச்சாரல் போல சேர்த்து பரிமாறினால் டிவி தொடர் அமோகமாக ரெடி. தொடரைப் பார்க்க வைக்க நாயகன்,, நாயகியின் அழகுதான் பெருமளவு உதவுகிறது. நாயகன் வெளிவயமானவன், நாயகி அகவயமானவள். அவளுக்கு வரும் பிரச்னைகள் அனைத்துமே அவளது குண இயல்பு சார்ந்த அதை புரிந்துகொள்ளாத அம்மா, மருத்துவமனை சார்ந்த ஊழியர்களால் வருகிறது.   நாயகன், சோன் யான். நேர்மையானவன். சிறுவயதில் குடும்பத்தை தொலைத்தவன். அவனது அப்பா, நல்லவர். அதனால் பிழைக்கத் தெரியாதவராக இருக்கிறார். காசு இல்லாத காரணத்தால் மனைவி அவரை பிரிந்து சென்று இன்னொருவரை மணந்தது, கட்டுமான வேலை பறிபோனது ...

வாழ்க்கையின் அழகு - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி உரையாடுகிறார் விக்டர் காமெஸி ஒருவர் அமரத்துவம் கொண்ட களங்கமற்ற புனிதம் என்ற ஒன்றை அடையாளம் கண்டார் என்றால் அவர் உலகிலுள்ள வேதனைகளை புரிந்துகொண்டார் என்று பொருள். வேதனை என்பது தனிப்பட்ட ஒருவரின் அதாவது உங்களுடையது மட்டுமல்ல. உலகம் முழுக்க உள்ள வேதனை பற்றியது. இது உணர்ச்சிகரமான, காதல் உணர்வு கொண்டதாக இல்லை. நம்முடன்தான் இருக்கிறது. வேதனையுடன் வாழ்வதில் உள்ள சிக்கல், அதிலிருந்து தப்பித்து ஓடாமல் இருப்பதுதான். நீங்கள் தப்பித்து ஓடாமல் இருந்தால், வேதனையை எதிர்கொள்ள அதிக ஆற்றல் தேவை. வேதனையைப் புரிந்துகொண்டால் நீங்கள் அதனால் பாதிக்கப்பட மாட்டீர்கள். இந்த முறையில் தியானம் செய்து அமரத்துவமும், புனிதமுமான தீர்வை அடையாளம் காண்பீர்கள். சானென் 3 ஆகஸ்ட் 1975   கடவுள், உண்மையை தேடுவது நிச்சயமாக முழுமையாக சிறந்ததுதான். நன்மைக்கான வேண்டுதல், அவமானம், கண்டுபிடிப்புகள், மனதின் பல்வேறு தந்திரங்களைக் கடந்து தேட வேண்டும். இதன் அர்த்தம் இவற்றைக் கடந்த பின்னும்   உள்ள தன்மைதான். அதுதான் உண்மையான மதம். நீங்கள் தோண்டியுள்ள நீச்சல் குளத்தை கைவிட்டு ஆற்றின் போக்கில்...

நான் என்னோடு போட்டியிட்டு மேம்படுத்திக்கொள்ள முயல்கிறேன் - ஷனாயா கபூர், இந்தி திரைப்பட நடிகை

படம்
  ஷனாயா கபூர் ஷனாயா கபூர் இந்தி திரைப்பட நடிகை கரண் ஜோகரின் இந்தி படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்துவிட்டு இப்போது நடிகை ஆகியிருக்கிறார். 23 வயதில் அவர் பேசும் விஷயங்கள் சற்று ஆச்சரியமாகவே இருக்கின்றன. ஷனாயா என்பவர் தனிப்பட்ட மனிதராக எப்படி?   என்னுடைய ஆளுமை என்பது வேலையை அடிப்படையாக கொண்டது. நடிப்பதை நான் வேலையாக பார்ப்பதில்லை. சில சமயங்களில் வேலையை அதீதமாக எடுத்துக்கொள்வதுண்டு. எனது குழுவினருடன் இணைந்து கேமரா முன்னே வேலை செய்வது வேடிக்கையான ஒன்று. இதை என்னுடைய நீட்சியாகவே பார்க்கிறேன். காலையில் எழும் பழக்கமுடையவரா? இல்லை. நான் இரவில் விழித்துக்கொண்டு இந்தி, ஆங்கில, கொரியன் படங்களைப் பார்த்துக்கொண்டிருபேன். வீட்டில் எல்லோரும் தூங்கிக்கொண்டிருக்க நான் விழித்துக்கொண்டு ஏதேனும் செய்துகொண்டிருப்பேன்.இப்போது மைசூரில் விருசபா படப்பிடிப்பு நடக்கிறது. அங்கு இரவில் தேவதாஸ் படத்தை இரவில் பார்த்துக்கொண்டிருந்தேன். ஏனென்று எனக்கு தெரியவில்லை. ஆனால், உறுதியாக காலையில் வேகமாக எழும் பெண் நானில்லை. உங்கள் குடும்பத்தில் புகழ்பெற்ற தயாரிப்பாளர்கள். நடிகர்கள் உள்ளது , அழுத்தம் ...

தெரிஞ்சுக்கோ - இசை, நாடகம்

படம்
  தெரிஞ்சுக்கோ – இசை பியானோ கீபோர்டில் 88 கீகள் உண்டு. இதில் 52 கீகள் வெள்ளை நிறமானவை. கறுப்பு நிறமான கீகளின் எண்ணிக்கை 32 2019ஆம் ஆண்டு தனியிசை பாடல்களின் விற்பனையில் வினைல் ரெக்கார்டுகளின் பங்களிப்பு 26 சதவீதம். தனியிசை பாடல் ஒரு கோடி என்ற   எண்ணிக்கையில் விற்றால் அதற்கு பிளாட்டினம் என்ற அந்தஸ்தை அமெரிக்காவில் வழங்குகிறார்கள். ஜெர்மனியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட புல்லாங்குழலின் வயது 43 ஆயிரம் ஆண்டுகள் ஆகும். இசைக்கலைஞர் வோல்ஃப்கேங் மொசார்ட் தனது முதல் சிம்பொனி இசைக்கோவையை இயற்றியபோது அவருக்கு வயது எட்டு. முதல் ஓபராவை இயற்றியபோது   அவருக்கு பனிரெண்டு வயதுதான் ஆகியிருந்தது. 2019ஆம் ஆண்டு, உலக இசைத்துறையின் மதிப்பு 20.2 பில்லியன் ஆகும். நொடிக்கு   4,186 மடங்கு வேகத்தில் வாசிக்கப்படும் பியானோ நோட் சி8 ஆகும். அடால்ஃப் சாக்ஸ், பதினான்கு வகையான சாக்ஸ்போன்களை உருவாக்கினார். அவர் 1846ஆம் ஆண்டு உருவாக்கி காப்புரிமைக்கு பதிந்தார். அதில் நான்கு மட்டும் தற்போது பயன்பாட்டில் உள்ளது.   நாடகம் பிரிட்டிஷ் நாட்டில் அரங்கேற்றப்படும் புகழ்பெற்ற நாடகத்தின் பெயர், த...

தெரிஞ்சுக்கோ - திரைப்படம்

படம்
  திரைப்படம் லார்ட் ஆஃப் ரிங்க்ஸ் (2001-2003)   படத்தில் 19 ஆயிரம் உடைகள், 48 ஆயிரம் கவசங்கள், ஹாபிட் பாத்திரத்திற்கான ஆயிரம் ஜோடி   கால், காதுகள் பயன்படுத்தப்பட்டன. 2005ஆம் ஆண்டு வெளியான ஜெர்மானிய திரைப்படமான மெட்ரோபோலிஸின் போஸ்டர், 6,90,0000 டாலர்களுக்கு விற்றது. 1939ஆம் ஆண்டு, ‘தி விஸார்ட் ஆஃப் ஆஸ்’ திரைப்படம் வெளியானது. இதில் டெர்ரி என்ற பாத்திரத்தில் நடித்த நாய்க்கு வார சம்பளமாக 125 டாலர்களை அளித்தனர். இது அந்த படத்தில் நடத்த பிற நடிகர்களுக்கு வழங்கிய ஊதியத்தை விட அதிகம். 1973ஆம் ஆண்டு’ பேப்பர் மூன்’ என்ற திரைப்படம் வெளியானது. இதில், டாடும் ஒ நீல் என்ற பத்து வயது சிறுமி நடித்திருந்தார். இவருக்கு 1974ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. ‘மான்ஸ்டர் இன்க்’ படத்தில் வரும் சல்லி பாத்திரத்தின் உடலில் உள்ள 2.3 மில்லியன்மயிர்க்கற்றைகள் அனிமேஷன் கலைஞர்கள் முழுக்க வரைந்துள்ளனர 2012ஆம் ஆண்டு ‘சைனீஸ் ஜோடியாக்’ என்ற திரைப்படம் வெளியானது. இதில் பதினைந்து மடங்கு அங்கீகாரத்தை ஹாங்காக் நடிகரான ஜாக்கிசான் பெற்றார். 1928ஆம் ஆண்டு மிக்கி மௌஸின் எ...

அயோத்திதாசரின் பெயரை மறைத்து விமர்சித்த ஆளுமைகளைப் பற்றிய நூல் - பெயரழிந்த வரலாறு - ஸ்டாலின் ராஜங்கம்

படம்
  பெயரழிந்த வரலாறு - அயோத்திதாசர்  பெயரழிந்த வரலாறு அயோத்தி தாசரும் அவர் காலத்திய ஆளுமைகளும் ஸ்டாலின் ராஜாங்கம் காலச்சுவடு தமிழ் வழியில் படித்து ராயப்பேட்டையில் சித்த மருத்துவமனைச்சாலை நடத்தி வந்த அயோத்திதாசர், பௌத்த மதத்தை பட்டியலின மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவர்களை அதைநோக்கி ஈர்த்தார். இதற்கென தனது நாளிதழில் பல்வேறு தொடர்களை எழுதி அதை நூல்களாக தொகுத்து வெளியிட்டார். இதேபோல இரட்டைமலை சீனிவாசன், சிங்கார வேலர், லட்சுமி நரசு ஆகியோர் பட்டியலின மக்களுக்கு பல்வேறு பங்களிப்புகளை ஆற்றினர். அன்றைய காலத்தில் மக்களிடையே புகழ்பெற்றிருந்த பிராமண கவிஞர்கள், எழுத்தாளர்கள் பட்டியலின மக்களுக்காக பாடுபட்ட அயோத்திதாசரின் செயல்பாடுகளை எங்குமே குறிப்பிடவில்லை. அப்படி குறிப்பிட நேர்ந்தாலும் கூட பெயரைக் கூறவில்லை. இந்தவகையில் அவரது செயல்பாடு குறிப்பிடப்படாமல் அழிந்துபோனது. இதை ஸ்டாலின் ராஜாங்கம், அன்றைய போக்கு அப்படித்தான் இருந்தது. உவேசா, பாரதி மட்டும் அயோத்திதாசரின் பெயரைக்குறிப்பிடாமல் இல்லை. அயோத்திதாசரும் மேற்சொன்னவர்களின் பெயர்களை குறிப்பிடாமல் விமர்சித்தார் என்று கூறுகிறார்...