முஸ்லீம்களின் உரிமைகளை பறிக்கும் சீன அரசு!
நேர்காணல்
"முஸ்லீம்களின் வெளிநாட்டு தொடர்பை சீன அரசு விரும்பவில்லை"
மாயா வாங், சீன ஆராய்ச்சியாளர்
தமிழில்: ச.அன்பரசு
சீனாவின் ஷின்ஜியாங் பகுதியில்
வாழும் 1.3 கோடி துருக்கி முஸ்லீம்களை சீன அரசு அடக்குமுறைக்கு உட்படுத்தி மாண்டரின்
மொழியை வலுக்கட்டாயமாக கற்பித்து வருகிறது. இதோடு கம்யூனிச கட்சியை புகழும் பாடல்கள்,
அறிக்கையை வாசிப்பது உள்ளிட்ட கொடுமைகளுக்கான வகுப்புகளும் நடத்தப்படுகிறது. இது பற்றி
மாயா வாங் பேசுகிறார்.
முஸ்லீம்கள் வாழும் ஷின்ஜியாங்கில்
என்னதான் நடக்கிறது?
சலாம் அலைக்கும்(As-Salaam-Alaikum) என்று சொல்லிப்பழகிய உய்குர், கசாக் இன முஸ்லீம்களை வலுக்கட்டாயமாக
அரசியல் வகுப்புகளுக்கு அனுப்பி மாண்டரின் மொழியில் வணக்கம் சொல்ல வைக்கிறார்கள்.
24 மணிநேரமும் நிகழும் வகுப்பில் கூறியதை செய்யாதவர்களுக்கு தண்டனை(நிற்கும், சாப்பிட
அனுமதிக்காத தண்டனைகள்) உண்டு. கடந்த 5 ஆண்டுகளாக சீன அரசு துருக்கி முஸ்லீம்களின்
மீது நிகழ்த்தும் கைது கொடுமையால் உய்குர், கசாக் இனத்தினர் வெளிநாடுகளுக்கு சென்றுவிடுகின்றனர்.
இங்குள்ளவர்களும் பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் வெளியே செல்லமுடியாமல் தவிக்கிறார்கள்.
பிற முஸ்லீம்களிடம் இவர்கள் தொடர்புகொள்வதை சீன அரசு வரவேற்கவில்லை.
திடீர் அடக்குமுறைகளுக்கு காரணம்
என்ன?
2016 ஆம் ஆண்டு திபெத்திலிருந்து
ஷின்ஜியாங்கிற்கு திரும்பிய சீன கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சென் க்வாங்கோ, அடக்குமுறை
விதிகளுக்கு காரணம். இவர் திபெத்தில் பல்வேறு மனித உரிமைகளுக்கு எதிரான விதிகளை தீட்டிய
அனுபவம் கொண்டவர். இவரது வருகைக்கு பின் சீன அரசு சிறுபான்மையினரை இரும்புக்கரம் கொண்டு
முடக்கி கண்காணிப்பில் கொண்டுவந்துள்ளது.
சாதாரண மக்களுக்கு எதற்கு அரசியல்
வகுப்புகள்?
கஜகஸ்தான், இந்தோனேஷியா, துருக்கி
செல்லும் மக்களை அரசு குறிவைக்கிறது. வாட்ஸ்அப் மூலம் வெளிநாடுகளை தொடர்புகொள்வோருக்கும்,
வெளிநாடுகளுக்கு சென்று இரு வாரங்களுக்கு மேல் தங்கியிருந்து திரும்புபவர்களுக்கு அரசியல்
வகுப்புகள் கட்டாயமாகி உள்ளது. அரசியல் வகுப்பில் முஸ்லீம்களின் தாடிக்களை சவரம் செய்யச்சொல்லும்
நிர்பந்தமும் உள்ளது. 10 நாட்கள், 3 (அ) 6 மாதங்கள் என அரசியல் வகுப்புகள் திட்டவட்ட
விதிமுறைகளின்றி நீளும். கருத்தியல் பிரச்னைகளை தீர்க்கவே இவ்வகுப்புகள் என உள்நாட்டு
அரசு ஊடகங்கள் இதனை பேசுகின்றன. ஆனால் சீனாவின் வெளிநாட்டு அமைச்சகம் அரசியல் வகுப்புகள்
நடைபெறுவதில்லை என மறுத்தே வருகிறது. ஐ.நா சபையின் விசாரணையில் தொழில்கல்வி மையம் என
சீன அரசு கூறிவிட்டது.
அரசியல் வகுப்புகளுக்கு என்ன காரணத்தை சீன அரசு கூறுகிறது?
துருக்கி முஸ்லீம்களிடையே எழுந்துள்ள
அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றை காரணங்களாக அரசு அடுக்குகிறது. ஷின்ஜியாங்
பகுதியிலும் பிற இடங்களிலும் நடந்த குற்ற சம்பவங்களுக்கு தீவிரவாதத்தை காரணமாக முன்னிறுத்தி
தன் நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டு வருகிறது. அரசின் மூர்க்கம் முஸ்லீம் மக்களின் அடிப்படை
மனித உரிமைகளை நசுக்குமளவு வளர்ந்துள்ளது. முஸ்லீம் மக்கள், வெளிநாடுகளிலுள்ள உறவினர்களை
மட்டுமல்ல மருத்துவர்களை கூட அணுக அரசு அனுமதிக்க மறுக்கிறது. பாதுகாப்பு சாவடிகள்,
ஏராளமான கேமராக்கள், அறைக்கதவில் QR கோட் என
கண்காணிப்பதோடு மாதத்திற்கு ஐந்து நாட்கள் அதிகாரிகளின் விசிட்டும் இப்பகுதியில் உண்டு.
மசூதிகளை அடைத்து தொழவும் அரசு தடைவிதித்து அச்சுறுத்தி வருகிறது.
அரசின் நடவடிக்கையால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்?
இங்குள்ள மக்களைவிட வெளிநாடுகளிலுள்ளவர்கள்
தம் குடும்பத்தை சீனாவிலிருந்து மீட்க முடியாமல் தடுமாறி வருகிறார்கள்.
நன்றி: Nazish Dholakia,
hrw.org