புத்தகங்களுக்கு தடை எதற்கு?








Image result for LOLITA




கிளாசிக் தடை!
THE CALL OF THE WILD - Jack London(1903)

எழுத்தாளர் ஜாக்லண்டன் இடதுசாரி என்பதால் நாஜி தொண்டர்கள் இந்நூலை நெருப்பிட்டு கொளுத்தினர். இத்தாலி, யூகோஸ்லேவியா ஆகிய நாடுகளில் தீவிரவாதத்தை வளர்க்கிறது என்று கூறிய அரசுகள் இந்நூலை தடை செய்தன.

THE GRAPES OF WRATH - John Steinbeck(1939)

கலிஃபோர்னியாவில் ஓக்லஹாமாவில் வாழும் விவசாயக்குடும்பம், விவசாயம் தோல்வியுற்றதால் அங்கிருந்து இடம்பெயரும் வேதனையை பேசியது. தேசிய புத்தக விருது, புலிட்சர் விருது உள்ளிட்டவற்றை வென்றாலும் நூலில் கம்யூனிச வாடை அடித்ததால் சில மாநிலங்களில் தடைக்கு உள்ளானது.

THE CATCHER IN THE RYE- J.D. Salinger(1951)

1951 ஆம் ஆண்டு வெளியாகி நியூயார்க் டைம்ஸின் நெ.1 நூலாக மாறிய நாவல், பதினாறு வயது இளைஞரின் மூன்று நாள் வாழ்வை பேசியது. பெரும்பாலான சிறுவர்கள், இளைஞர்களுக்கு இந்நூலை படிக்க தடை இருந்தது.

LOLITA- Vladimir Nabokov(1955)

நடுத்தர வயது பேராசிரியர் 12 வயது சிறுமியின் மீது காதல்வசப்படுவதுதான் கதை. பிரான்ஸ், இங்கிலாந்து என பல நாடுகளிலும் தடையான பெருமை இந்நூலுக்குண்டு.

 



பிரபலமான இடுகைகள்