கிரிப்டோகரன்சியை இந்தியா ஏற்கத்தயங்குவது ஏன்?
கிரிப்டோ கரன்சி:
தயக்கம் என்ன?
கிரிப்டோ கரன்சி என்பது டிஜிட்டல் கரன்சி.
இதனை உலகிலுள்ள யாரும் வாங்க முடியும்.
இந்தியா கிரிப்டோகரன்சியை ஏற்கவில்லை என்றாலும் உலகம் முழுக்க இக்கரன்சியில் கட்டற்ற வியாபாரம் ஜரூராக நடந்துவருகிறது. பதுக்கல்களுக்கு உதவும் என
இதனை குற்றம்சாட்டினாலும் அரசு, வங்கி என
யாராலும் கட்டுப்படுத்த முடியாத டிஜிட்டல் பணம் என்பது பலரையும் இவ்வணிகத்தில் ஈர்க்கும் முக்கிய காரணம்.
ஐ.நா சபை, சிரியா அகதிகளுக்கு உணவு வழங்கும் திட்டத்தில் கிரிப்டோகரன்சி வவுச்சர்களை ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தியாவில் இன்றுவரை கிரிப்டோகரன்சி சட்டப்பூர்வமாக ஏற்கப்படாத நிலையிலும் 69 பில்லியன் அளவுக்கு பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. வெனிசுலா தன் எண்ணெய் வியாபாரத்தை பெட்ரோ எனும் கிரிப்டோகரன்சி மூலமாக உலக நாடுகளிடையே நடத்திவருகிறது.
இந்தியாவில்
1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று இன்டர்நெட் வர்த்தகரீதியாக அறிமுகமானது. இன்று இணைய பயனர்களின் எண்ணிக்கை
500 மில்லியன். க்யூவில் நின்று ஜியோ வாங்கி டேட்டாவை உணவுபோல இளைஞர்கள் செலவழித்துக்கொண்டு இருக்கின்றனர். டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதை ஏற்றாலும் கிரிப்டோகரன்சி உபயோகத்தை ஆர்பிஐயும்,
நிதியமைச்சகமும் சந்தேகத்துடன் பார்க்கின்றனர்.
அமெரிக்கா கிரிப்டோகரன்சியை தடைவிதிக்காமல் விதிகளை இயற்றி முறைப்படுத்தி இணைந்து பயணிக்கிறது. ஆனால் சீனத்தில் கிரிப்டோகரன்சிக்கு தடை உள்ளது.
பிற இணையசேவைகளைப் போலவே கிரிப்டோகரன்சியையும் சீனஅரசே உள்நாட்டில் உருவாக்கக்கூடும். இதற்கு மாறாக, ஐரோப்பாவில் எந்த கட்டுப்பாடுகளும் இன்றி கிரிப்டோகரன்சி சொர்க்கபுரியாக உள்ளது.
இந்தியாவில் கடந்த ஏப்ரல்
6 அன்று கிரிப்டோகரன்சியை நிதிவணிகத்தில் பயன்படுத்த ஆர்பிஐ தடைவிதித்துள்ளது. Alluma.io, Koinex, Wazirx ஆகிய கிரிப்டோகரன்சி நிறுவனங்களில் அரசின் தடைகளால் வியாபாரம் குறைந்துவிடவில்லை. "இன்று அனைத்து நிறுவனங்களுக்கும் மரபான முறையில் முதலீடு கிடைப்பதில்லை.
கிரிப்டோகரன்சி அந்த வாய்ப்பை அளிக்கிறது"
என்கிறார் வாசிர்எக்ஸ் நிறுவனத்தின் இயக்குநரான நிஸ்சால் ஷெட்டி. அனைத்து பரிவர்த்தனைகளும் பிளாக்செயின் முறையில் பதிவாகும்போது டிஜிட்டல் கரன்சி,
காகிதத்தை விட நம்பகமானது என்பது எஸ்ட்காயின் நிறுவனரான கோர்ஜூஸின் கருத்து.
விரைவில் இந்தியா லஷ்மி என்ற பெயரில் கிரிப்டோகரன்சியை வெளியிடலாம் என்பது டெக் உலக கிசுகிசு.