வீக்எண்ட் கொண்டாட்டம் - ஜூஸ் கொலை!




Image result for kalakalappu 2 yogi babu




புகாருக்கு பதில் - இரும்புக்கம்பி அட்டாக்!

புகார்களின் மூலம் தவறை திருத்திக்கொள்வதை கைவிட்டு புகார் கொடுப்பவர்களை நையப்புடைக்கும் எதிர்க்குரல்களை களையும் வன்முறை கலாசாரம் இந்தியாவெங்கும் வளர்ந்துவருகிறது.


உத்தர்காண்டின் டேராடூன் மாவட்டத்திலுள்ள தலன்வாலா ஐந்தாம் வகுப்பு படிக்கும் ராகுல்,மதிய உணவு சாப்பிட்டு வந்தார். ஒருநாள் சாப்பிட்ட உணவின் தரம் மோசமாக இருக்க, ஹெட்மாஸ்டர் நஸ்ரின் பனோவிடம் புகார் கொடுத்திருக்கிறார். உணவு மீதான புகாரை தன் மீதான அதிருப்தியாக புரிந்து டென்ஷனான நஸ்‌ரின் இரும்புக் கம்பியால்  ராகுலைத் தாக்கினார். அலறியபடி சுயநினைவிழந்து வீழ்ந்த ராகுலை நண்பர்கள் மருத்துவமனையில் சேர்க்க உயிர்பிழைத்திருக்கிறார் ராகுல். மாணவரின் உறவினர்களின் போராட்டத்தால்   வன்முறை ஆசிரியர் நஸ்‌ரின் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


ராணுவத்திற்கு கதகதப்பு!

ஏடாகூடமாக பாக்யராஜ் சமாச்சாரங்களை நினைக்கவேண்டாம். பனிமலை முகடுகளில் பாடுபடும் இந்திய ராணுவத்திற்கு, லடாக்கைச் சேர்ந்த பிரபல கண்டுபிடிப்பாளர் சோனம் வான்சுக் சோலார் கூடாரங்களை உருவாக்கித் தந்திருக்கிறார். இதன்மூலம் குளிரை சமாளித்து கூடாரத்தில் சும்மா ஜம்மென ஓய்வெடுக்கலாம்.

 கதகதப்பு கூடாரங்கள் குறைந்தபட்சம் 10 ஆயிரம் தேவை என ஆர்மி அதிகாரிகள் கூறியுள்ளதால் இதற்கென தயாரிப்பு பட்டறையை உருவாக்கவிருக்கிறார் வான்சுக். "இந்தகூடாரங்களை எளிதில் கொண்டு செல்லமுடிவதோடு எங்கு தேவையோ அங்கேயே சட்டென செட் செய்யமுடியும். வெளியில் மைனஸ் 20 டிகிரி என்றாலும் உள்ளே கதகதப்பு குறையாது" என்பது சோனம் வான்சுக் கேரண்டி. தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட இழைகளால் இக்கூடாரங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்பதால் சூழல் பாதிக்கப்படாது.



ஜூஸ் கொலை!

டெல்லி திகார் ஜெயிலில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தின் காரணம் சிம்பிள் ஜூஸ்தான் என்றால் நம்புவீர்களா?

அண்மையில் திகார் ஜெயிலில் திருட்டு குற்றத்திற்காக அடைக்கப்பட்டிருந்த பவன்குமார், சக கைதிகளால் கடுமையாக தாக்கப்பட்டு அம்பேத்கர் மருத்துவமனையில் அட்மிட் ஆகி இறந்துபோனார். காரணம், ஜூஸ்தான். போலீஸ் விசாரணையில் சிறையில் கைதிகளின் கேங்கை பராமரித்த கிஷன் என்ற கொலைக்குற்றவாளியை மதிக்காமல் நடந்ததும், அவர் கேட்ட ஜூஸை பவன்குமார் கொண்டு வராததும் வன்முறைக் கொலைக்கு காரணம் என தெரியவந்துள்ளது. "மூன்று மாதமாக சிறையிலுள்ள பவன்குமாரை கைதிகள் திட்டமிட்டு கொன்றுள்ளதற்கு சாட்சி கை, கால், வயிறு ஆகிய இடங்களிலுள்ள காயங்கள்தான்" என புகாரை அடுக்குகின்றனர் இறந்த பவனின் பெற்றோர். கிஷன் மீது கொலைக்குற்றத்திற்காக(சட்டம் 302) மற்றொரு எஃப்ஐஆர் பதிவாகியுள்ளது.



சுத்தசைவ காந்தி!

தினந்தோறும் புதிய கலவரங்கள், அறிவிப்புகள், எரிபொருட்கள் விலை உயர்வு என மக்களை பதட்டத்தில் வைத்துள்ள இந்திய அரசின் அடுத்த பகீர் அறிவிப்பு சைவதினம்.

அக்டோபர்சைவ உணவு தினமாக அனுசரிக்கப்பட்டு அனைத்து ரயில்களிலும் சைவ உணவு மட்டுமே பரிமாறப்படும் என ரயில்வே அறிவித்ததாக ஊடகங்களில் திடீர் செய்தி வெளியானது. உடனே மக்கள் கொந்தளிக்க, "சைவ உணவு பரிந்துரைகள் வந்தாலும் அவை எங்களது தீர்மானமாக அறிவிக்கப்படவில்லை" என ரயில்வே நிர்வாக அதிகாரி ஆர்டி பாஜ்பாய் கூறியுள்ளார். இது சபர்மதி செல்லும் ஸ்வட்ச்தா எக்ஸ்பிரஸ் ரயிலுக்கும் பொருந்தும் என ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. பாஜக அரசின் கலாசாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மாவின் பரிந்துரையின் பேரில் சைவ உணவு, டிக்கெட்டில் காந்தியின் வாட்டர்மார்க் ஆகிய பரிந்துரைகள் ரயில்வே போர்டுக்கு அனுப்பபட்டுள்ளது பின்னர் தெரியவந்துள்ளது.


பிரபலமான இடுகைகள்