மழைப்பேச்சு பாட்காஸ்ட்
மழைப்பேச்சு பாட்காஸ்டை தொடங்க நண்பர் கதிரவனின் உந்துதலே காரணம் . உரையாடும்போது நடந்தது என்ன? யூட்யூப் சேனல் பற்றி கூறினார். குற்றங்களைப் பற்றிய விவரிப்புகளைக் கொண்ட சேனல் அது.அதில் ஓவியங்கள் வரைந்து குரல் கொடுத்து பேசியிருந்தார்.என்னையும் அப்படியான சேனலை தொடங்க வற்புறுத்தினார். எனக்கு வீடியோவில் ஆர்வம் இல்லை. ஆடியோவில் பாட்காஸ்டாக முயல்கிறேன் என கூறினேன்.இதோ அது நடந்துவிட்டது. ஆன்கர் ஆப் இப்போது ஸ்பாடிபை பாட்காஸ்டர்ஸ் என பெயர் மாறி விட்டது. அதில், குரலை பதிவு செய்யலாம். குரல் பதிவு இருந்தாலும் பதிவேற்றி பின்னணி இசை சேர்க்கலாம். Check out my podcast, மழைப்பேச்சு Mazhaipechu, on Spotify for Podcasters: https://podcasters.spotify.com/pod/show/arasukarthick