இடுகைகள்

ஜூன், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கொலையைத் துப்புதுலக்கும் போக்குவரத்து அதிகாரி

படம்
            கபடதாரி தெலுங்கு இயக்கம் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இசை சைமன் கே கிங் மூலம் - கன்னடப்படம் காவலுதாரி நடிப்பு சுமந்த், நந்திதா சுவேதா குற்றத்தை துப்பறியும் சாகச திரைப்படம். கதை, 1975 தொடங்கி 2019 வரை இரு காலகட்டங்களில் நடைபெறுகிறது. போக்குவரத்துதுறை துணை ஆய்வாளர், குற்றப் பிரிவுக்கு மாற முயல்கிறார். ஆனால் எழுத்து தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றதால் மாற முடியாத சூழ்நிலை. தன்னை நிரூபிக்க வழக்கு ஒன்றைத் தேடுகிறார். அப்படி கிடைத்த வழக்கு அவரது வாழ்க்கையையே தலைகீழாக மாற்றுகிறது. சில உயிர்பலிகளும் நடக்கிறது. எடுத்த லட்சியத்தை நாயகன் முடித்தாரா இல்லையா என்பதே கதை. படத்தில் நாயகதுதி, நாயகிக்கான பாடல், காதல் காட்சிகள், குத்துப்பாடல் என தெலுங்கு படத்தின் அத்தியாவசிய அம்சங்கள் ஏதுமில்லை. படத்தில் அனைத்து காட்சிகளுமே குறியீடுகளாக உள்ளன. ஆனால் ஒரு பார்வையாளராக அதை பெரிதுபடுத்தவேண்டியதில்லை. கதையை மட்டும் கவனித்தால் போதும். குறியீடுகளை அறிய யூட்யூபில் தேடினால் பதில்கள் கிடைக்கும். அகழாய்வு நடைபெறும் இடத்தில் ஆண், பெண், சிறுமி என மூன்று நபர்களின் எலும்புக் கூடுகள்...

கண்களை மூடாமல் வாராது உறக்கம்? - ஸ்லீப் ஃபிட்னஸ் மோகம் பெருகுகிறது

படம்
            கண்களை மூடாமல் வாராது உறக்கம்? இந்தியாவில் இப்போது முக்கிய பிரச்னையாக உருவாகி இருப்பது, தூக்கமின்மை. வேலையின்மை அளவு கூடிக்கொண்டே செல்வது, வேலையில் உள்ளவர்களுக்கு பெரும் அழுத்தம் தருகிறது. குறைந்த சம்பளத்திற்கு அதிக நேரம் உழைக்கும் நெருக்கடி உருவாகியிருக்கிறது. இதன் நேரடி விளைவு, தூங்கும் நேரம் குறைவது. இதனால் தூங்கினாலே போதும். உடற்பயிற்சி கூட அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என மருத்துவர்கள் கூறத்தொடங்கியுள்ளனர். அந்த வகையில் ஸ்லீப் ஃபிட்னெஸ் என்ற வார்த்தை புழக்கத்திற்கு வந்திருக்கிறது. காலையில் எழுந்து அனடோலி(யூட்யூப் பிரபலம்) போல உடற்பயிற்சி செய்வதும் ஒன்றுதான். உழைத்து களைத்த உடலுக்கு, மனதுக்கு ஓய்வளிக்கும் தூக்கமும் ஒன்றுதான் என முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.  மார்க் ஷூக்கர்பர்க், ஜெஃப் பெசோஸ் ஆகியோர், தூங்கும் வசதிகளைக் கொண்ட நவீன தொழில்களுக்கு முதலீடுகளை வழங்க தொடங்கியிருக்கிறார்கள். தூக்கம்தான் இனி முக்கியம். அதுதான் எதிர்காலம் என உடற்பயிற்சியை கைவிடக்கூறுவது எமது நோக்கமல்ல. உறக்கமின்மை கொண்டவர்கள், ஏழு மணிநேரத்திற்கும் குறைவாக உறங்குப...

சீனாவின் வெளியுறவுக்கொள்கை!

படம்
  சீனாவின் வெளியுறவுக்கொள்கை! அமைதியான நல்லுறவு நோக்கத்தை அடிப்படையாக கொண்ட ஐந்து அம்சங்களை அடிப்படையாக கொண்ட வெளியுறவுக்கொள்கை உருவாக்கப்பட்டு எழுபது ஆண்டுகள் ஆகிவிட்டன. 1954ஆம்ஆண்டு ஜூன் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று, சீனாவும், இந்தியாவும் வெளியுறவு கொள்கையை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தமிட்டன. அண்மையில், இதை நினைவுகூறும் வகையில், பெய்ஜிங் நகரில் விழா நடத்தப்பட்டது. இதில், சீனாவின் பிரதமர் லீ குவாங், அதிபர் ஷி ச்சின்பிங் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். மனித குலத்தின் எதிர்காலத்திற்கான அமைதியான ஒத்திசைவு கொண்ட வாழ்வை உருவாக்குவது என கொள்கைகள் பற்றி கூறப்பட்டது. உண்மையில் சீனா, இந்த கொள்கைகள் வழியாக என்ன நினைக்கிறது, உலகம் பற்றிய அதன் பார்வை என்ன என்பதைப் பார்ப்போம். இந்தியாவில் சீனாவின் வெளியுறவு கொள்கையை பஞ்ச சீல கொள்கை என்று அழைப்பார்கள். இக்கொள்கையை முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு, நடைமுறைப்படுத்தி இயங்கினார். அண்டை நாடுகள் மற்றும் மேற்கு நாடுகள் தொடர்பான உறவுகளை தீர்மானித்த கொள்கை இது. பிரிட்டிஷாரின் காலனி ஆதிக்கத்தில் இருந்து இ்ந்தியா போராடி மீண்ட  ஆண்டு, 1947. இதற்கு காந்தி தல...

ஐரோப்பாவில், ஏடிஸ் கொசுக்கள் இனப்பெருக்கம் அதிகரித்து வருகிறது!

படம்
  டெங்கு மலேரியா பரவலை காலநிலை மாற்றம் ஊக்கப்படுத்துகிறதா? நவீன மருத்துவத்தின் உதவியால் டெங்கு, மலேரியா இறப்புகள் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டன. அதைத் தாண்டி அவை பரவுகின்றன, உயிர்ப்பலி வாங்குகின்றன என்றால் அதற்கு காரணம் மருத்துவ வசதிகள் கிடைக்காமல் இருக்கும் பகுதிகளாக இருக்கலாம். ஆனால், ஐரோப்பாவில் ஏடிஸ்  மூலம் பரவும் டெங்கு வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் பரவுவதற்கு தட்பவெப்பநிலையும் முக்கியமான காரணம்.  ஒருவர் வெளியில் பயணித்து டெங்கு, மலேரியாவுடன் வந்தாலும் கூட ஐரோப்பாவில் உள்ளவர்களுக்கு நோய் பெரிய பாதிப்பை தருவதில்லை. வீட்டில் ஓய்வெடுத்தாலே அவர் நோயிலிருந்து மீண்டு வந்துவிட முடியும். கடந்த 2015 -19 காலகட்டத்தில் மூன்றாயிரம் டெங்கு நோயாளிகள் பற்றிய பதிவுகள் உள்ளன. இவை அனைத்துமே பயணம் சார்ந்து ஏற்பட்டவை. இதில் ஒன்பது நோயாளிகள் மட்டுமே உள்ளூர் அளவில் நோய் வந்து பாதிக்கப்பட்டவர்களாக இருந்தனர். ஆனால் நிலைமை அப்படியே இருக்கவில்லை. கடந்த 2022, 2023 ஆண்டுகளில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை கூடத் தொடங்கியது. 2022இல் மட்டும் பிரான்சில் 65 நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இத...

பௌத்தம் அறிவோம் - வழிகாட்டும் புத்தரின் நெறிகள்

படம்
புத்தர் காலமாகிவிட்ட நிலையில் அவர் எப்படி நமக்கு உதவி செய்ய முடியும்? மின்சாரத்தை கண்டறிந்த பாரடே இறந்துவிட்டார்தான். ஆனால் நாம் இன்றும் மின்சாரத்தைப் பயன்படுத்திக்கொண்டுதானே இருக்கிறோம். ஆன்டி பயாடிக் மருந்தைக் கண்டுபிடித்து லூயி பாஸ்டர் இன்று நம்மோடு இல்லை. ஆனாலும் கூட அவரின் கண்டுபிடிப்பு மக்களின் உயிரைக் காத்துக்கொண்டுதானே உள்ளது. ஓவியத்துறையில் பல உன்னத படைப்புகளை உருவாக்கிய லியனார்டோ டாவின்சி காலமாகி பல்லாண்டுகள் ஆகிறது. அவரது ஓவியங்களைக் காணும்போது மகிழ்ச்சி கிடைக்கிறது. ஊக்கம் பெற்றுக்கொண்டேதான் இருக்கிறோம் அல்லவா? வரலாற்று நாயகர்களும், நாயகியரும் இறந்து பல நூறு ஆண்டுகளானாலும் கூட அவர்களின் லட்சியங்கள், நம்பிக்கை நமக்கு ஊக்கம் கொடுப்பவை. நீங்கள் கூறியதுபோல புத்தர் காலமாகி இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் ஆகிவிட்டதுதான். ஆனால், அவர் கற்பித்த கொள்கைகள், நெறிகள், கூறிய அறம், காட்டிய பாதை இன்றும் பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு ஊக்கம் தந்து வருகிறது. வழிகாட்டியாக அமைந்துள்ளது. புத்தரின் வார்த்தைகள் பல நூறு மக்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. இறந்து பல நூறு ஆண்டுகளாயினும் புத்தருக...

தேசநலனை லட்சியமாக கொண்ட பத்திரிகையாளர் ஏ என் சிவராமன்!

படம்
        ஏ என் சிவராமனின் பத்திரிகை உலகம் பொன் தனசேகரன் விலை ரூ.30 உலக தமிழாராய்ச்சி நிறுவனம் தினமணி நாளிதழில் நாற்பது ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றியவர் பத்திரிகையாளர் ஏ என் சிவராமன். தனது எண்பத்து மூன்று வயதில் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவரது நாளிதழ் செயல்பாடுகளை நூல் கவனம் குவித்துப் பேசுகிறது. நூல் வழியாக ஏ என் சிவராமன் தமிழுக்கென செய்த முக்கியமான செயல்பாடுகள், மொழியாக்கம், எழுதிய கட்டுரைகள், என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்தினார் என்பதைப் பற்றி பத்திரிகையாளர்கள் அறிந்துகொள்ள முடியும். ஏ என் சிவராமன், டிஎஸ் சொக்கலிங்கம் என்ற தனது உறவினர் மூலம் பத்திரிகைத்துறைக்கு வந்தார். காந்தியின் ஒத்துழையாமை போராட்டத்தில் பங்கேற்க கல்லூரி படிப்பை கைவிட்டுவிடுகிறார். கல்லூரி படிப்பை கைவிட்டாலும் பல்வேறு நூல்களை வாசிப்பதை கைவிடவில்லை. அதனால்தான் தினமணி நாளிதழில் ஆசிரியராக பொறுப்பேற்று நடத்த முடிந்திருக்கிறது. ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் அந்த பொறுப்பில் இருந்திருக்கிறார். வெறுமனே அறைக்குள் இருந்தபடியே கட்டுரைகளை எழுதவில்லை. ஆசிரியராக இருந்தாலும் பல்வேறு அயல்நாடுகளுக்கு பயணித்து ...

மழைப்பேச்சு பாட்காட்ஸ்டை சப்ஸ்டாக் தளத்தில் கேட்கலாம்!

படம்
               மழைப்பேச்சு பாட்காஸ்டை பிற வலைத்தளங்களில் கொண்டு வருவது கடினமான செயல்முறையாக உள்ளது. கணக்கு தொடங்கி, அதில் ஆர்எஸ்எஸ் முகவரியை இணைத்து என செயல்பாடுகள் நீண்டுகொண்டே செல்கிறது. சப்ஸ்டாக் தளம் எளிதாக ஸ்பாட்டிபையுடன் ஒத்திசைவு கொண்டுள்ளதால், மழைப்பேச்சை சப்ஸ்டாக்கில் கொண்டு வர முடிந்தது. சப்ஸ்டாக் தளத்தில் கட்டுரைகளோடு, மழைப்பேச்சு பாட்காஸ்டையும் கேட்கலாம்.    https://anbarasushanmugam.substack.com/p/18a?r=396v6

திண்டுக்கல் பயண புகைப்படங்கள்!

படம்
       

ஆண்டுக்கு நூறு பில்லியன் - காலநிலை மாற்ற திட்டங்களுக்குத் தேவை நிதி!

படம்
  ஆண்டுக்கு நூறு பில்லியன் - காலநிலை மாற்ற திட்டங்களுக்குத் தேவை நிதி! ஜெர்மனியின் போன் நகரில் நடைபெற்ற காலநிலை மாற்ற மாநாடு எதிர்பார்த்த இலக்கை அடையவில்லை. இதில், பொருளாதார இலக்கு ஒன்றை தீர்மானிக்க இருந்தனர். 2024ஆம் ஆண்டு இறுதியில் ஆண்டுக்கு நூறு பில்லியன் டாலர்கள் என்ற இலக்கு தாண்டி செல்லவேண்டும் என்பதே லட்சியம். அப்போதுதான் காலநிலை மாற்ற திட்டத்திற்கு வளரும் நாடுகளுக்கு உதவ முடியும். வரும் நவம்பர் மாதம் அஜர்பைஜானில் நடைபெறவிருக்கும் காலநிலை மாற்ற மாநாடுக்கு முன்னதாக நிதி இலக்கை திட்டமிட இருந்தனர். ஆனால் நோக்கம் நினைத்த திசையில் செல்லவில்லை. காலநிலை மாற்ற அறிக்கையில் நாற்பத்தைந்தாவது பக்கம், இன்புட் பேப்பர் என்ற சொல் உள்ளது. இதில், நாடுகள் வழங்கும் நிதி, அது செலவழிக்கப்படும் விதம், அதை அமைப்பினர் கண்காணிப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு நாடுகளும் தங்கள் கருத்துகளை அழுத்தம் கொடுத்து கூற வாய்ப்புள்ளது. காலநிலை மாற்றத் திட்டங்களில் நிதியாதாரமே முக்கியப் பங்கு வகிக்கிறது. பணம் செலவிடப்படும் விதம், ஏற்பட்ட தாக்கம் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படுவது 2015ஆம் ஆண்டு பாரிஸ் காலநிலை...

வாயை மூடு! - விமர்சனங்களை மௌனமாக்கும் ஊபா சட்டம்

படம்
      வாயை மூடு! - விமர்சனங்களை மௌனமாக்கும் ஊபா சட்டம் அரச நீதி என்பது தனது அதிகாரத்தை எப்படியேனும் தக்கவைத்துக்கொள்ள முயல்வது. நீதி,நிர்வாகம் தாண்டி சுயதோல்விகளைப் பற்றி விமர்சிக்கும் எவரையும் சர்வாதிகாரி விட்டுவைப்பதில்லை. அந்த வகையில் பிரிட்டிஷ் அரசும் தனது காலத்தில் போராட்டக்காரர்களை தேசதுரோக சட்டத்தின்படி தண்டித்தது. தலைவர்கள் பலரை சிறையிலிட்டது. நேதாஜி வழியில் சென்றவர்களை தூக்கிலிட்டது. இப்படி நடைபெற்ற சம்பவங்கள் அனைத்துமே அதற்கென உருவாக்கி வைத்த சட்டங்களின்படிதான் நடந்தன. அதே சம்பவங்களை ஒன்றிய ஆட்சியாளர்கள் நினைவுபடுத்துகிறார்கள். ஜனநாயகத்தின்படி கேள்வி கேட்பவர்களின் குரலை நசுக்க கூலிப்படை தொடங்கி அரசின் புலனாய்வு அமைப்புகள் வரை பயன்படுத்துகிறார்கள். அப்படி அரச பயங்கரவாதத்தைப் முறைப்படுத்தும் சட்டங்களில் ஒன்று ஊபா. எழுத்தாளர் அருந்ததி ராய், அவரது நாவல் எழுத்துக்காக உலகளவில் புகழ்பெற்றவர். அவரது எழுத்துகள், பேச்சுகள் அனைத்துமே பல லட்சம் பேரால் வாசிக்கப்படுபவை. கேட்கப்படுபவை. பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் ஆற்றிய உரை ஒன்றுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அர...

டைம் 100(2024) - சுகாதாரத்தில் இனவேறுபாடு தொடங்கி கருத்தரித்தல் ஆராய்ச்சி வரை - நான்கு சாதனையாளர்கள்

படம்
    டைம் 100 செல்வாக்கு பெற்ற மனிதர்கள் சுகாதாரத்தில் இனவேறுபாட்டை எதிர்ப்போம் ரேச்சல் ஹார்டேமன் rachel hardeman அமெரிக்காவில் கர்ப்பிணிகள் பிரசவத்தின்போது இறந்துபோகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதிலும் இனவெறி சார்ந்து இயங்குபவர்களால், கருப்பின பெண்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். சிலர் இதைக் கூற தயங்கினாலும் ரேச்சல் தைரியமாக உண்மையைக் கூறி அதற்கான தீர்வைத் தேட முயன்று வருகிறார். இனவெறியை எதிர்த்து செய்யும் ஆராய்ச்சி சார்ந்து சுகாதாரத்துறையில் உள்ள ஆழமான பிரச்னைளை அடையாளம் கண்டு மக்களுக்கு கூறுகிறார். அவர் உருவாக்கியுள்ள மாம்னிபஸ் மசோதா மூலம் கர்ப்பிணிகள் இனவேறுபாடின்றி பயன் பெற முடியும். குழந்தை பிறப்பால் ஏற்படும் மன அழுத்தத்தை சமாளிக்கவும் இதில் வழியிருக்கிறது. லாரன் அண்டர்வுட் 2 போராட்டம் வழியாக நன்மை - ஷான் ஃபைன் shawn fain கடந்த ஆண்டு செப்டம்பரில் மிச்சிகன் நகரில், யூஏடபிள்யூ சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு தலைமை தாங்கி நடத்தியவர், ஷான் ஃபைன். முறையான ஒப்பந்த அடிப்படையில் சம்பளம் வழங்கப்படவேண்டும் என்பதே உழைப்பாளர்களின் வாதம். சங்கத்தில் உறுப்பி...

தூமகேதுவுக்கு கிடைக்கும் சாமந்திமாலை சொல்லும் செய்தி! - இடக்கை - எஸ் ராமகிருஷ்ணன்

படம்
            இடக்கை எஸ் ராமகிருஷ்ணன் தேசாந்திரி பதிப்பகம் ப.318 ஒளரங்கசீப்பின் இறுதிக்காலம், அவரது இறப்பு, புதிய பாதுஷா ஷா ஆலம் பதவியேற்பது, மெல்ல இந்தியா பல துண்டுகளாக பிளவுபடுவது, ஆங்கிலேயர்கள் வணிகத்திற்காக வருவது, ஆட்சியைப் பிடிப்பது என நாவல் பயணித்து நிறைவடைகிறது. உண்மையில் இந்த நூல் அரசர்கள்,சமூகத்தில் கீழ்மட்டத்தில் உள்ள தீ்ண்டத்தகாதவர்கள் அதாவது இடக்கையர்கள் ஆகிய இருவரின் அக புற பிரச்னைகளைப் பேசுகிறது. நூலிலுள்ள முக்கியமான பாத்திரங்கள் என அஜ்யா, தூமகேது, சக்ரதார், படகோட்டி சம்பு, பிஷாடன், மந்திரி முக்தலன், மகாபிரஜா சபை, கவிஞர் ஜமீல் ஆகியோரைக் கூறலாம். இந்த பாத்திரங்கள் அனைவருமே அதிகாரத்தின் அருகே நின்று அதன் சாதக, பாதக விளைவை அடைந்தவர்கள். அதிகாரத்தின் அருகில் நிற்பவர்கள் எவருமே அந்த அதிகாரத்தால் எப்போது வேண்டுமானாலும் பலி கொடுக்கப்படலாம். ஆனால், அதை பலரும் பின்னாளில்தான் உணர்வார்கள். ஆனால் என்ன பயன்? அதிலிருந்து மீள வழி கிடைக்காது. அஜ்யா, ஒளரங்கசீப்பின் பணிப்பெண். காலை அமுக்கிவிடுவதுதான் வேலை. ஆனால் அவர் இறந்தபிறகு, மன்னருக்கு நெருக்கமாக இருந்த காரண...

சினிமா பற்றிய இரு நூல்கள் - ஒளி ஓவியம், சினிமா கோட்பாடு

படம்
             ஒளி ஓவியம் - சி ஜெ ராஜ்குமார் டிஸ்கவரி புத்தக நிலையம் விலை ரூ.350 புத்தகம் ஒளிப்பதிவாளர்களுக்கானது. நூலும் அதற்கேற்ப வண்ணத்துடன் வழுவழுப்பான தாளில் தயாரிக்கப்பட்டதால் விலையும் கூடுதலாக உள்ளது. உண்மையில் நூல் விலைக்கு நியாயம் செய்துள்ளதா என்றால் ஒளிப்பதிவாளர்கள்தான் கூறவேண்டும். ஒளிப்பதிவாளர்களுக்கு தேவையான விளக்குகள், ஒளியைக் குறைக்கும் கருப்புத் துணிகள், ஒளியை அளவிடும் மீட்டர், படப்பிடிப்பில் பயன்படுத்தும் விளக்குகள், அதிலுள்ள வகைகள் என நிறைய விளக்கங்கள் படங்களுடன் உள்ளன. இவற்றைப் பயன்படுத்துவதைப் பற்றிய புகைப்படங்கள் இருப்பதால் விளக்கு, அதிலிருந்து வரும் ஒளியின் தன்மை ஆகியவற்றை நாம் புரிந்துகொள்ள முடியும். வெளிப்புற படப்பிடிப்பு, உட்புற அரங்கில் படப்பிடிப்பு ஆகியவற்றுக்கு உதவும் ஏராளமான விளக்குகள், ஒளியின் வீச்சை தடுக்கும் பொருட்கள், குறிப்பிட்ட கேமரா கோணங்களில் நடிகர்கள் புகழ்பெற்ற விதம், அதற்கான உதாரண திரைப்படங்கள் என நிறைய உதாரணங்கள் உள்ளன. ஒருவகையில் ஒளிப்பதிவில் ஆர்வம் கொண்டவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் நூல் என்றே கூறலாம். கோமாளிமேடை...

மழைபேச்சு - உங்களுடன் ரோனி - புத்தக விமர்சனங்களுக்கான பாட்காஸ்ட்

படம்
  மடிக்கணினி பழுதாகி கிடந்தபோது தொடங்கிய முயற்சி. லினக்ஸ் மின்டில் பழுது என நினைத்தேன். அதில் பழுதேதும் இல்லை. கணினியின் சார்ஜிங் பாய்ண்டில்தான் பிரச்னை. அதை சிப்டிரானிக்ஸ் நிறுவனத்தினர், பழுதுபார்த்து கொடுத்துவிட்டனர். அந்த நேரத்தில் தொடங்கிய வேலை இது. இப்போது மழைப்பேச்சு பாட்காஸ்டில் மொத்தம் பதினாறு குரல் பதிவு கோப்புகள் உள்ளன. அவை அனைத்துமே படித்த நூல்களைப் பற்றியவை. நூல் விமர்சனங்களை படிக்க நேரமில்லை என்பவர்கள் ஸ்பாட்டிஃபை சென்று அதன் வழியாக மழைப்பேச்சு பாட்காஸ்டை கேட்டுக்கொள்ளலாம்.  நூலைப் பற்றி எழுதுவது எளிது. ஆனால் பேசுவது என்பது கடினமான ஒன்று. நேர்த்தி கைகூடி வர முயல்கிறேன். வாய்ப்பிருப்பின் கேளுங்கள். https://podcasters.spotify.com/pod/show/arasukarthick நன்றி செபியா நந்தகுமார் கார்ட்டூன் கதிர் கன்வா.காம் சிப்டிரானிக்ஸ் குழு

திண்டுக்கல் டூர் புகைப்படங்கள்!

படம்
  இடம் - கச்சைகட்டி, எல்லையூர் திண்டுக்கல் பேருந்து நிலையம் சென்று அங்கு மதுரை செல்லும் பேருந்தில் வாடிப்பட்டி செல்லுமா என்று கேட்டு ஏறவேண்டும். டிக்கெட் ரூ.31. வாடிப்பட்டி பேருந்து நிலையத்தில் இறங்கி, எல்2 என்ற பாலமேடு செல்லும் அரசு பேருந்தைப் பிடித்து நடத்துநர் கையில் ஒன்பது ரூபாய் கொடுத்தால் ஆறு கி.மீ. தூரத்தில் உள்ள எல்லையூரில் இறங்கிக்கொள்ளலாம். thanks prithivi jeeva adthidev varman

மனித பலத்தில் மூளைக்கும் சற்று பகிர்வு தேவை! - யாவரும் ஏமாளி அனுபவம்

படம்
              மதிப்பிற்குரிய அன்னை உணவுப்பொருட்கள் தயாரிப்புக் குழுமத்திற்கு, வணக்கம். கடந்த 21.6.2024 வெள்ளிக்கிழமை அன்று தாராபுரம் செல்லவேண்டிய பணி. அங்கு சென்று பணியை முடித்துவிட்டு, மாலை நேரத்தில் ஶ்ரீ கண்ணன் ஸ்டோர் என்ற சூப்பர் மார்க்கெட்டிற்கு சில பொருட்களை வாங்கச் சென்றேன். அன்னை பிராண்ட் பேரீச்சம்பழம் நூறு கிராம் பாக்கெட் வாங்கினேன். விலை ரூ.51 என்று அச்சிடப்பட்டிருந்தது. ஆனால், அதை கணினியில் பில் போடும்போது 100 கிராம் ரூ.54 என்று காட்டியது. பில் போட்டவர், விலை அதிகமாக காட்டுகிறது. வேறு பிராண்ட் எடுத்துக்கொள்ளுங்கள் என பரிந்துரைத்தார். அதற்கு பதிலாக இருந்தது லயன் என்ற பிராண்ட். அந்த பாக்கெட்டின் விலை நூறு ரூபாய்க்கும் மேல். அன்னை பிராண்ட் நூறு கிராம் பாக்கெட்டின் விலை ரூ.54தான். வேண்டுமென்றால் வாங்கிக்கொள்ளுங்கள் என விற்பனையாளர் நெருக்கடி கொடுத்தார். எனவே, வேறுவழியின்றி அன்னை பிராண்ட் வேண்டாம் என்று சொல்லி பாக்கெட்டை செல்ஃபிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டேன். உண்மையில், அன்னை நூறு கிராம் பேரீச்சைப்பழம் பாக்கெட்டில் வரி உள்பட அதிகபட்ச விலை அச்சிடப்...

Time 100 - செல்வாக்கு பெற்ற மனிதர்கள் - ஐகான்ஸ் பாலியல் சுரண்டலுக்கு எதிரான குரலிலிருந்து மலிவான விலை மருந்து விற்பனையாளர் வரை...

படம்
  டைம் 100 செல்வாக்கு பெற்ற மனிதர்கள் - ஐகான்ஸ் பாலியல் சீண்டலுக்கு எதிரான போர் - ஜென்னி ஹெர்மோஸா jenni hermosa 2023ஆம்ஆண்டு பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்றது. அதன் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் நாட்டின் பெண்கள் அணி சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றியை விட பரிசு பெறும் மேடையில், நடந்த அவலமான விஷயம் உலகமெங்கும் பிரபலமானது. ஸ்பானிஷ் நாட்டு கால்பந்து கூட்டமைப்பின் தலைவரும், பெண்கள் கால்பந்து அணியின் தலைவருமான லூயிஸ் ரூபியேல்ஸ், கேப்டன் ஜென்னியின் முகத்தை பலவந்தமாக பிடித்து இழுத்து முத்தம் கொடுத்தார். அதை பல நூறு டிவி சேனல்களின் கேமராக்கள் பதிவு செய்தன. அதற்குப் பிறகுதான் லூயிசுக்கு மண்டகப்படி தொடங்கியது. உலகம் முழுக்க பெண் விளையாட்டு வீர ர்கள் மீது பாலியல் சீண்டல்கள், சுரண்டல் நடந்து வருகிறது. நான் அமெரிக்காவில் நடைபெற்ற அத்தகைய விஷயங்களை வெளியே கொண்டு வந்தேன். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கால்பந்து அணியின் கேப்டனான ஜென்னி, தனக்கு நேர்ந்த அச்சம்பவத்தை வெளிப்படையாக கூறி, தனக்கு எதிராக செய்யப்பட்ட தடைகளை உடைத்தார். லூயிசுக்கு எதிராக அவர் உண்மையைப் பேசக்கூடாது என அதிகார மட்டம் பல்வே...

ஆராய்ச்சியாளர்களின் பிணங்களைத் திருடி அழிவு சக்தியாக்கும் சதிகாரக்கூட்டம்!

படம்
            லாரன்ஸ் மற்றும் டேவிட் மிரட்டும் திகிலூட்டும் நிமிடங்கள் லயன் காமிக்ஸ் நன்றி -ஆர்எம் அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெறும் கதை. அங்குள்ள பிளாஸ்டிக் பொருட்களை ஆராய்ச்சி செய்பவருடன் லாரன்ஸ் அண்ட் டேவிட் ஆகிய இருவரும் விடுமுறைக்காக சென்று தங்கியிருக்கிறார்கள். அப்போது ஒருநாள் காட்டு வாத்து வேட்டைக்காக செல்கிறார்கள். அங்கு, ஆராய்ச்சியாளர் மர்மமான முறையில் மாரடைப்பு வந்து இறந்துபோகிறார். இறந்த அடுத்தநாளே அழைக்காமல் இருவர் வந்து சவப்பெட்டி செய்பவர்கள் என்று கூறி உடலை அடக்கம் பண்ணலாமா என்று கேட்கிறார்கள். இது லாரன்ஸ், டேவிட்டிற்கு சந்தேகத்தை தருகிறது. பிறகு, உடலை ஆராய்ச்சியாளரின் கடைசி ஆசைப்படி அவரின் சொந்த ஊருக்கு கொண்டு செல்கிறார்கள். செல்லும் வழியில் ஜீப்பின் பிரேக் பிடிக்காமல் வண்டி விபத்துக்குள்ளாகிறது. அதில், லாரன்ஸ் டேவிட் அடிபட்டு மயக்கமாகிறார்கள். சவப்பெட்டிக்கு மட்டும் ஏதும் ஆகவில்லை. இவ்வளவு பெரிய விபத்தில் எப்படி சவப்பெட்டி அப்படியே இருக்கும் என்று திறந்து பார்த்தால் அதில் செங்கற்கள் இருக்கிறது. ஆராய்ச்சியாளரின் உடலைக் காணவில்லை. இரு புலனாய்...