சிம்பன்சிகளின் அபாரமான நினைவுத்திறன்- ஆராய்ச்சியில் தெரியவந்தது என்ன?






Photo, Photographer, Old, Photos, Memory, Nostalgia

ஏழுவயது சிறுவனின் ஞாபகசக்தி

சிம்பன்சிகள் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஞாபகசக்தி சோதனையில் ஏழுவயது சிறுவனின் நினைவுத்திறனைக் கொண்டுள்ளதாக கண்டுபிடித்துள்ளனர்.

பொதுவாக விலங்குகளுக்கு நீண்டகால நினைவுகள் சிறப்பாகவே இருக்கும். இல்லையெனில் பூமியில் அவை வாழ முடியாது. குறிப்பிட்ட இடத்தில் குளம், ஏரி, உணவு கிடைக்கும் இடங்கள் தெரியாதபோது வாழ்க்கையை பூமியில் எப்படி நடத்துவதாம்? இதனால் ஆராய்ச்சியாளர்கள் அதன் தற்காலிக நினைவுத்திறனை சோதிக்க முயற்சித்தனர். தற்காலிக நினைவுத்திறன் என்றால் வேறொன்றுமில்லை. இந்த கட்டுரையின் முதல் பத்தியை உங்களால் நினைவுகூர முடிகிறதுதானே? அதுதான்.

செயின்ட் ஆண்ட்ரூஸ் மற்றும் மேக்ஸ் பிளான்க் இன்ஸ்டிடியூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த ஆராய்ச்சியை நடத்தின. சிம்பன்சிகளின் கண்முன்னே பல்வேறு பெட்டிகளில் உணவுப்பொருட்களை அடைத்து மறைத்து வைத்தனர். அவை எப்படி உணவுப்பொருட்களை கண்டுபிடிக்கின்றன என்று பார்த்தன. வயது முதிர்ந்து குரங்குகள் பத்துக்கு நான்கு பெட்டிகளையும், இளம் குரங்குகள் பத்துக்கு ஏழு பெட்டிகளையும் மிகச்சரியாக கண்டுபிடித்து நினைவுத்திறனை நிரூபித்துள்ளன.

எந்த பயிற்சியும் கொடுக்காமல் சிம்பன்சிகள் ஏழு வயது சிறுவனின் நினைவுத்திறனைக் கொண்டுள்ளன என்பதை அடையாளம் கண்டுகொண்டோம். இது அதனைப் புரிந்துகொள்ள இன்னும் உதவும் என்றார் ஆராய்ச்சித் தலைவர் கிறிஸ்டோபர் வோல்ட்.

நன்றி: பிபிசி எர்த்

 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்