கிராமத்து சொத்தை விற்று பிஸினஸ் செய்ய முயற்சிக்கும் சுயநல இளைஞனின் பேராசை! - சுகுமாருடு
சுகுமாருடு
இயக்கம் அசோக் ஜி
திரைகதை: அவரேதான்.
இசை அனுப் ரூபன்ஸ்
ஒளிப்பதிவு சாய் ஸ்ரீராம்
வெளிநாட்டில்
வாழ்ந்து வரும் சுகுமாருக்கு காதல், கல்யாணம், கசமுசா என எதிலும் ஆர்வமில்லை. ஒரே ஆர்வம்
நிறைய பணம் சம்பாதிக்கவேண்டும் கூடுவே பலரும் போற்றிப்புகழும் பெருமையும் தேவை. இப்படி
நினைப்பவருக்கு சோதனைக்காலம் வருகிறது. இதன் காரணமாக அவரின் சொந்த ஊருக்கு செல்ல நினைக்கிறார்.
அங்குள்ள தாத்தாவின் சொத்தை விற்று தொழிலை நடத்தும் ஆசை எழ ஊருக்கு கிளம்புகிறார்.
சொத்தை விற்கிறேன் என்று பாட்டியிடம் சொன்னால் செருப்பைக் கழட்டி அடிப்பார் என்பதால்
பாசமாக பாட்டியைப் பார்க்க வந்ததாக நாடகமாடுகிறார்.
இறுதியில்
அவர் பாட்டியின் சொத்தை விற்று தொழிலை மேம்படுத்தினாரா, ஊருக்குள் அவர்களது குடும்பம்
கீழே போன நிலையை அறிந்து மாற்றினாரா, வேலை, கடின உழைப்பு என்பதிலிருந்து மாறி இயல்பான
நிலைக்கு மாறினாரா என்பதையெல்லாம் படம் சொல்லுகிறது.
ஆஹா
படம்
முழுக்க உற்சாகமாக வலம் வருகிறார் ஆதி சாய்குமார். படத்தில் காமெடி நன்றாக வேலை செய்திருக்கிறது.
கிராம காட்சிகள் அனைத்தையும் காப்பாற்றுவது காமெடி மட்டுமே. அனுப் ரூபனின் இசையில்
பாடல்களை கேட்க முயற்சிக்கலாம்.
ஐயையோ
வெளிநாட்டில்
அத்தனை வசதிகளை அனுபவித்துவிட்டு வரும் ஆதி, கிராமமே பாழுங்கிணற்றில் விழுந்தது போல
கிடப்பது கிளைமேக்ஸில்தான் உணருகிறார். நிஷா அகர்வால் படத்தில் பாடல்களுக்கு மட்டும்தான்
உள்ளேன் ஐயா என்கிறார். மற்ற நேரங்களில் எங்கேயிருக்கிறார் என்றே தெரியவில்லை. படத்தின்
நோக்கத்திற்கும் கிராமத்தில் ஆதி செய்யும் விஷயங்களுக்கும் எந்த தொடர்புமில்லை. திரைக்கதை
அலைபாய்தலில் படம் முடிந்தால் போதுண்டா சென்னகேசவா என மனம் இறைஞ்சுகிறது. என்னவோ சொல்ல
நினைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால் விஷயம் தொண்டையில் மாட்டிக்கொண்டுவிட்டது.
கம்பீரம்
இல்லாத சுகுமாரன்
கோமாளிமேடை
டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக