இடுகைகள்

தமிழ் மென்பொருட்கள்!

 தமிழ் மென்பொருட்களை ஒரே இடத்தில் பயன்படுத்த வேண்டுமா? கீழே உள்ள வலைதளத்தை அணுகலாம். https://tamilpesu.in/ta/kural/

மின்னூல் வெளியீடு....

படம்
நூலை வாசிக்க...https://www.amazon.com/dp/B0FX7WC8YV

தீபாவளி 🎁

படம்
தீபாவளியன்று காலையில் வயல்களில் குத்தகை ஆட்கள் வேலை செய்கிறார்கள். இந்திய ஆட்சித்தலைவரின் தீபாவளி பரிசு இம்மக்களுக்கு கிடைக்கவில்லையோ? பலரும் வாண வேடிக்கைகளுக்கு மாறிவிட்டனர். திரி பட்டாசு குறைந்துவிட்டது.

அதிமேதாவியின் பார்வையில் உலகம்!

படம்
இந்த நாயகன், 12 ஆண்டுகள் அடைத்து வைக்கப்பட்டு கொத்தடிமையாக வேலை செய்ய வைக்கப்பட்டவன். பின்னர், போலீசாரால் மீட்கப்படுகிறான். மெல்ல உலகை புரிந்துகொண்டு சாதுரியமாக வாழத் தொடங்குகிறான். இதற்கு அவன் 12 ஆண்டுகளாக படித்த ஏராளமான நூல்கள் உதவுகின்றன. இக்கொரிய காமிக்ஸில் குழந்தை கடத்தலுக்கு எதிராக நாயகன் போராடுகிறான். நாயகன் வூஜின், ஆளுமை பிறழ்வு கொண்டவன். ஒருவன் இரக்கமானவன். இன்னொருவன் இரக்கமில்லாதவன். குற்றவாளிகளை தண்டிப்பவன். தனது அறிவை பயன்படுத்தி ஜிசாட் தேர்வில் வெல்கிறான். பல்கலையில் வணிக மேலாண்மையில் சேர்கிறான். யூட்யூப்பில் கடத்தப்பட்டு உதவிகோரும் இளம்பெண் பற்றி அதிகாரி கிம்முக்கு தகவல் சொல்கிறான். அவர் அதை விசாரித்து பார்த்து உண்மையை அறிகிறார். அச்சம்பவம் தொடங்கி வூஜின் சிக்கலான குற்ற வழக்குகளில் உதவி செய்யத் தொடங்குகிறான். பதிலுக்கு உணவும், பணமும் கிடைக்கிறது. பல்கலை நண்பனின் உறவினருக்கு உணவக வணிகத்தில் உதவி தன்னுடைய புத்திசாலித்தனத்தை சோதித்து பார்க்கிறான். இதற்காக தனது கதையை பத்திரிகைகளில் வருமாறு செய்கிறான். நாயகனின் நோக்கம், எளிமையாக சாதாரணமாக வாழ்வது.... இதை அவன் கூறுவ...

நவம்பரில் வெளியீடு....

படம்
புதிய மின்னூல் வெளியீடு....

மினி டிராமா பெண்களின் பாத்திரம்

படம்
சீனா நாடகங்களுக்கு அரசு பெரும் இடவசதியில் தொன்மை அரசு கட்டடங்களை உருவாக்கித் தந்துள்ளது. பாராட்ட வேண்டியதுதான்.ஆனால் கதை என்றால் அப்படியே ஒரே ஐடியாவை தொடர்கிறார்கள். காப்பி அடிக்கிறார்கள். குடும்பம் என்றால் அடித்து உதைத்தாலும் அதை மகன் மகள் ஏற்கவேண்டும். பெண்ணை பாம்பு கடித்தால் அதுதான் சிறந்த காதல் காட்சி. 70,80களில் தமிழில் வரும் பாம்பு விஷத்தை வாயில் எடுத்து துப்புவது...இதை கம்யூனிச அரசு எப்படி அனுமதிக்கிறது.....

புதிய மின்னூல் வெளியீடு -அட்டைப்படம் இப்போது....

படம்
ஸ்டார்ட்அப் மந்திரம இஎக்ஸ்டி நூலின் அட்டைப்படம்.... விரைவில் நூல் அமேசானில் வெளியீடு.

உப்பு தின்றால்....

தூத்துக்குடி யில் தயாரித்து வரும் ****ன் என்ற பிராண்டில் சிறு கற்கள் எப்போதும் காண கிடைக்கின்றன. கமிஷன் கொடுத்து கடையில் பொருட்களை சரியாக தரமாக கொடுக்க முடியவில்லை. இனி உப்புக்காக வேறொரு பிராண்டை தேடிப்பிடிக்க வேண்டும். நிறுவனங்கள் லாபத்தை பற்றி மட்டுமேயும் மக்கள் ஏமாற்றப்பட்டு காசுக்கான மதிப்பு குறையாத பொருட்களை தேட வேண்டியுள்ளது. உப்பை தூய்மை செய்யக்கூட கருவிகள் இல்லையா? எப்போதும் போல உள்ள இந்திய அலட்சியமா என்று தெரியவில்லை.

இந்தியவரலாறு - காந்திக்கு பிறகான காலகட்டம்

இந்த நூலை காங்.கின் வீழ்ச்சி பற்றிய வரலாறு அல்லது பார்ப்பன பாசிச கட்சியின் வரலாறு என்றும் கூறலாம். இனப்படுகொலை என தில்லி சீக்கியர்கள் படுகொலை -ராஜிவ் காந்தி மற்றும் முஸ்லீம் படுகொலை - நடப்பு பாசிச இயக்க இந்திய ஆட்சித்தலைவர் என துணிச்சலாக எழுதி உள்ளார். அடிப்படையில் இந்திராகாந்தி பற்றிய சம்பவங்களே அதிகம். வட இந்தியாவையே முழுக்க மையப்படுத்தி உள்ளது. தமிழ் மொழிபெயர்ப்பாளர் சாரதி சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார்.

காதல் மீட்டர் - திருமண உறவைக் காப்பாற்ற என்ன செய்வது?

படம்
  காதல் மீட்டர்  4 பொதுவான திருமணங்களில் நிச்சயம் செய்வது முக்கியமான சடங்கு. இவரை இன்னாரை திருமணம் செய்துகொள்வதாக உறுதி செய்துகொள்வது. உறுதி செய்துகொண்டவரைத்தான் ஒருவர் திருமணம் செய்வார் என்று நிச்சயமில்லை. காலம் மாறிவிட்டது. கிராமங்களில் பெரும்பாலும் கொடுத்த வாக்குறுதியை யாரும் காப்பாற்றாமல் விடுவதில்லை. ஏனெனில் ஒருவரின் நம்பிக்கை தொலைந்துவிட்டால் அவர் பேசுவதை யார் கேட்பார்கள்.?  இந்த நிச்சய காலத்தில் இணையர்கள் உரையாடலாம். இன்று ஸ்மார்ட்போன் உள்ளது. போன் உயிரோடு இருந்தே ஆகவேண்டும். அதன் வழியாக பேசலாம். நிறைய விஷயங்களைப் பகிரலாம். பொதுவாக கல்யாணம் செய்துகொள்ளப்போகும் ஆட்கள் வெட்டி அரட்டைதானே அடிப்பார்கள். அதுவும் எதிர்கால உறவைப் பற்றி அறிவதற்கான வழிதான்.  ஜோதிடம், திருமண பொருத்தம் என்பதை பொதுவான பலரும் நம்புகிறார்கள். குறிப்பாக திருமணம் எனும்போது... ஆனால் இதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் என்னுடைய நேரத்தை நானே உருவாக்குவேன் என இருப்பவர்கள் தங்களுக்கு பிடித்த ஒருவரை மணந்துகொள்ளலாம். நிச்சயத்திலும் மோதிரத்தை போடுவதுண்டு. இது ஒரு ஒப்பந்தம் போல செயல்படுகிறதாக கொள்ளலாம். இன்...