காதலியைக் கரம்பிடிக்க பாக்ஸிங் பழகும் பக்கோடா ராஜூ - டுன்டரி -2016
துன்டரி
இயக்கம் குமார் நாகேந்திரா
இசை சாய் கார்த்திக்
ஒளிப்பதிவு
நர ரோகித்தின் மற்றொரு பரிசோதனை
முயற்சி. இவர் ஐட்ரீம் வலைத்தளத்திற்கு கொடுத்த பேட்டியில் டான்ஸ், சண்டை போன்றவற்றைவிட
கதைதான் முக்கியம் என்று கூறியிருந்தார். இதனால் நாம் அவரை இதற்கு லாயக்கில்லை என்று
சொல்வதை நிறுத்திக்கொள்வோம்.
மான்கராத்தே படத்தின் தெலுங்கு
ரீமேக் என்பதால் கதை பற்றி சொல்ல ஒன்றுமில்லை. ஏ.ஆர்.முருகதாஸின் கதை எடுத்து திரைக்கதை
எழுதி படம் செய்திருக்கிறார்கள்.
முனிவரின் வரத்தால் நான்கு
ஐடி ஆட்களுக்கு ஒரு வரம் கிடைக்கிறது. அதனை அவர்கள் எப்படி பயன்படுத்திக்கொண்டு காசு
பார்க்கலாம் என நினைக்கிறார்கள். செய்தியில் ராஜ் என்பவர் அவர்களுக்கு 5 கோடி ரூபாய்
தருவதாக செய்தி. அதனை நிஜமாக்க என்ன செய்யலாம் என யோசிக்கிறார்கள். அதனால் ஏற்படும்
கோக்குமாக்கு விஷயங்களும், விளைவுகளும்தான் கதை.
ஆஹா
நர ரோகித், சங்கர காமெடி
காம்போ வொர்க் அவுட் ஆகியுள்ளது. படத்தின் சீரியஸ் மேட்டர்கள் இறுதிப்பகுதி என்பதால்
அதைச் சொல்ல ஏதுமில்லை. காமெடிக்காக படம் பார்க்கலாம். ஐடி கூட்டத்தில் வெண்ணிலா கிஷோர்தான் காமெடியில் கவனிக்க வைக்கிறார்.
ஐயையோ
லதா ஹெக்டே அழகாக இருக்கிறார்.
அதைத்தவிர வேறு எதற்கும் அவர் முயற்சிக்கவில்லை. பல ஆண்டுகளாக முயற்சிக்கும் ஆட்களே
பாக்ஸிங்கில் பகோடா ராஜ் சாரி கில்லர் ராஜூவை ஜெயிக்க முடியவில்லை. இவர் ஒரு வாரம்
பயிற்சி செய்து, காதலியை ஓரிரவுக்கு கூப்பிட்டான் என்பதற்கு கோபம் வந்து அடித்து..
ச்சே நமக்கே ஆயாசமாகிறது.
காமெடி கராத்தே
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக