காதலியின் உடம்பில் புகுந்துகொண்ட கொடூரமான பேய் - பிரேம கதா சித்திரம்







Premakatha Chitram Photos, Premakatha Chitram Movie Pictures ...



பிரேம கதா சித்திரம்

இயக்கம் பிரபாகர் ரெட்டி

ஒளிப்பதிவு பி. உத்தவ்

இசை ஜேபி

 

தனியிசை ஆல்பங்களை உருவாக்கிவரும் இளைஞன், ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். அவளை திருமணம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிடுகிறான். அப்போதுதான் அவள் நகரிலுள்ள 90 சதவீத இளைஞர்களோடு ஏ டூ இசட் மாய்மாலங்களை செய்துவருவது தெரிய வருகிறது. இதனால் டிப்ரஷன் அப்ரஷன் என அனைத்து மனநல பிரச்னைகளுக்கும் உள்ளாகுபவன், மானம் போய்விட்டது என்று தற்கொலைக்கு முயல்கிறான். அப்போது அவன் நண்பன் இவனை எப்படியாவது தற்கொலையிலிருந்து விடுவிக்க முயல்கிறான். அதற்காக அவனைப்போலவே தற்கொலை எண்ணத்துடன் இருப்பதாக ஒரு பள்ளி மாணவியை கூட்டி வருகிறான். மூவரும் வீடு ஒன்றில் தங்குகிறார்கள். விரைவில் தற்கொலை செய்துகொண்டு இறப்பதாக முடிவு எடுக்கும்போது, ஹோட்டலில் இருந்து இன்னொருவரும் அவர்களுடன் சேர்ந்துகொள்கிறார். எதற்கு சேர்ந்து சாகத்தான். தனியாக செத்தால் பயமாக இருக்கும் அல்லவா?

ஆஹா

சுதீர் பாபு, காதல் தோல்வியில் தவிப்பவராக நன்றாகவே நடித்திருக்கிறார். சண்டைக்காட்சிகளும் வேகம் காட்டியிருக்கிறார். ஆனால் என்ன படம் முழுக்கவே நந்திதாவே ஆதிக்கம் செலுத்துகிறார். அவரின் நடிப்புதான் நினைத்துப் பார்க்கும்படி இருக்கிறது. அடுத்து சப்தகிரி படம் நெடுகிலும் கவனிக்க வைக்கும் காமெடியை செய்திருக்கிறார்.

ஐயையோ

பெண்ணின் உடலில் புகுந்த பேய் அபார சக்தி கொண்டது என்றால் சுதீர் பாபுவிடம் ஏன் உதவி கேட்கவேண்டும். நேராக பேயே போய் தன்னைக் கற்பழித்துக்கொன்றவர்களை கொன்று விடலாமே? நந்திதாவின் விருப்பத்துடன்தான் அவரை முத்தமிட சுதீர் நினைக்கிறார். இதில் பேய்க்கு கோபம் வருவதில் என்ன லாஜிக்கோ? படத்திற்கு பாடல்களின் உபயோகம் எதற்கென்றே புரியவில்லை.

கோமாளிமேடை டீம்

 

 




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்