தந்தையைக் கொன்ற மாமாவை பழிவாங்கும் மருமகனின் கதை! - பன்னி - வி.வி. வினாயக்
online telugu cinema பன்னி இயக்கம்: வி.வி.வினாயக் ஒளிப்பதிவு: சோட்டா கே நாயுடு இசை: டிஎஸ்பி தன் தந்தையை சொத்துக்காக கொன்ற மாமனை மருமகன் எப்படி காதல் மூலம் பழிவாங்குகிறான் என்பதுதான் கதை. பன்னி, கல்லூரியில் சேர்ந்து முதல்நாளே அந்த கல்லூரியே பயப்படும் மகாலஷ்மிக்கு காதல் கடிதம் கொடுக்கிறான். அதாவது ராக்கிங் மூலம் அப்படி கொடுக்கும்படி நேர்கிறது. உடனே மகாலஷ்மியின் பாதுகாப்புக்கு வந்த ரவுடிகள் பன்னியை அடித்து துவைக்கின்றன. பதிலுக்கு பன்னி, ராக்கிங் செய்தவர்களை அடித்து பிரிக்கிறான். அப்புறம் என்ன? மகாலஷ்மிக்கு காவிரி ஆற்று வெள்ளமாக காதல் நுரையுடன் பொங்குகிறது. காதல் கைகூடும் நேரத்தில் காதலியின் அப்பாவிடம் உங்கள் மகளைக் கல்யாணம் செய்துகொள்கிறேன். ஆனால் அதற்கு முன்பே உங்கள் சொத்தை எனக்கு எழுதி வைக்கவேண்டும் என்று கண்டிஷன் போடுகிறான் பன்னி. அசந்து போகிறார் மகாலஷ்மியின் தந்தையான சோமராஜூ . ஏன் பன்னிக்கு காதல் முக்கியம் இல்லையா? சொத்தை ஏன் எழுதித்தர கேட்கிறான் என்று கேட்டீர்கள் என்றால் கதை பின்னோக்கு போகும். ஆஹா வி.வி. வினாயக்கின் காரசாரமான சினிமா. அல்லு அர்ஜூன் காதல், காமெடி எல்லாமே பார்க்க சுவாரசியமாக இருக்கிறது. ஆனால் படத்தின் முக்கியமான அம்சம், வெட்டு குத்து என தொடங்கும் வன்முறைதான். வேணு மாதவ்வின் காமெடி ரசிக்க வைக்கிறது. மற்றபடி படத்தில் முக்கியமான விஷயம், பொல்லாவரம் திட்டம் என ந்திகளை விவசாய நிலங்களுக்கு பயனளிக்கும் படி திட்டம் ஒன்றைச் சொல்லுகிறார்கள். இது ஆர்வமூட்டுகிற விஷயமாக இருக்கிறது. ஐயையோ கௌரி முன்ஜால், பாடலுக்கு மட்டும் டெடிகேட் செய்யலாம். அதைத்தவிர வேறென்ன என்று கேட்கும்படி நடித்திருக்கிறார். காரை விட்டு இறங்குவதும், நடப்பதும்தான் இவர் இந்த படத்தில் செய்த விஷயம். சொத்துக்காக தனது மாமாவைக் கொன்ற பிரகாஷ்ராஜ் மகளுக்காக டைடு சோப்பு வெளுக்கும் துணி போல பளீரென நல்லவராவது நம்பவே முடியவில்லை. அல்லு அர்ஜூனுக்காக மட்டும் பார்க்கலாம். டிஎஸ்பியின் பில்ட் அப் பிஜிஎம்மை குறைத்து வைத்துவிட்டு பாருங்கள். இதயத்துக்கு நல்லது. கோமாளிமேடை டீம் |
கருத்துகள்
கருத்துரையிடுக