கம்யூனிசக் காதலிக்கு காதல் வலை வீசும் முதலாளித்துவ காதலன்! - சீமா டபாக்கை -
சீமா டபாக்கை - தெலுங்கு 2011
இயக்கம்: நாகேஸ்வர ரெட்டி
ஒளிப்பதிவு அடுசுமிலி விஜயகுமார்
இசை வந்தேமாதரம் ஸ்ரீனிவாஸ்
பணக்காரர்கள்தான் ஏழைகளை உருவாக்குகிறார்கள். அவர்களின் மக்கள் நலன் இல்லாத லாபவெறி, கருப்பு பணம் பதுக்கும் நோக்கம்தான் ஏழைகளை உருவாக்குகிறது. என நம்புகிறவள் சத்யா. இவளைப் பார்த்ததும் இந்த சமூக சேவகிதான் நமக்கு மனைவியாக வரவேண்டும் என தோன்றுகிறது பணக்கார இளைஞன் ஸ்ரீக்கு. ஆனால் கான்செஃப்டே ஒத்துவராதே என யோசிக்கிறான் எப்படி பிளான் செய்து சத்யாவை காதல் செய்ய வைக்கிறான் என்பதுதான் படத்தின் இறுதிக்காட்சி
ஆஹா
அல்லரி நரேஷ்தான். படம் முழுக்க இவரின் நடிப்பும் உடல்மொழியும், வசனங்களும்தான் படத்தை பார்க்கலாம் என நம்பிக்கை தருகிறது. வெறும் பார்த்த உடனே பொண்ணை பிடிச்சிருக்கு என்று சொல்லாமல் ஏன் அவளை காதலித்தேன் என்று அப்பாவிடம் விளக்குவது, அப்பா ஷாயாஜி ஷிண்டே ஏற்காதபோதும் அதற்காக போராடுவது , குடும்பத்தையே அதற்காக நாடகம் ஆட வைப்பது என பின்னியிருக்கிறார். தான் ஒரு நாடகம் போட்டால் அவர் காதலியின் தந்தை இன்னொரு நாடகம் போடுகிறார். அவர் தான் வன்முறையான ஆள் என்பதை மறைக்க முயன்று தடுமாறும் இடங்களை நன்றாக நடித்திருக்கிறார் சத்தியாவின் அப்பா, அவரது தம்பியாக வரும் ராவ் ரமேஷ்.
ஐயையோ
பாடல் காட்சிகள்தான். இன்னொன்று, சத்யாவின் நோக்கம் பணக்காரர்களை ஒழிப்பதா, வன்முறையைக் கைவிடுவதா, ஏழைகளுக்கு உதவி அவர்களை மேம்படுத்துவதா என குழப்பம் இருக்கிறது. அல்லரி நரேஷ் படத்தில் லாஜிக் பார்த்தில் மேஜிக்கான காமெடி மிஸ் ஆகிவிடும். பாடல்கள் படத்திற்கு தேவையா எனும்படியாக உருவாக்கப்பட்டிருக்கின்றன.
பிறரின் கஷ்டங்களை நாம் புரிந்துகொண்டு நடக்கவேண்டும், வன்முறை வாழ்க்கைக்கு ஆகாது என்ற செய்தியை சொல்லுகிற நகைச்சுவை படம்.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக