எரித்தால் லாபம் , விற்றால் நஷ்டம்

எரித்தால் லாபம் , விற்றால் நஷ்டம் - விவசாயிகளின் தேர்வு என்ன?



Image result for haryana crop burning




பஞ்சாப், ஹரியானா பகுதி விவசாயிகள் இரண்டு ரூபாய்க்கு தீப்பெட்டி வாங்கி கோதுமை, நெல் விளைந்த வயலை கொளுத்தி அதனை தூய்மையாக்குவது வழக்கம். காற்றுமாசு என அரசு கூக்குரலிட்டு பல்வேறு பிரசாரங்களில் மூலம் அதன் அளவு 30% குறைந்துள்ளது. 

எரிப்பதை விட காகித தொழிற்சாலைகளுக்கு கொடுக்கலாமே என்ற குரல்கள் கேட்கின்றன. ஆனால் விவசாயிகள் ஏன் இதனை ஏற்பதில்லை. "அரசு சொல்வது போல எரிக்காமல் நெல், கோதுமை வயல்களை மெஷின் வைத்து வெட்டினால் கழிவுகள் மட்க இருபது நாட்கள் தேவை. அதேசமயம் இவற்றை காகித தொழிற்சாலைக்கு கொடுப்பதில் விவசாயிகளுக்கு ஒரு நயாபைசா லாபம் கிடையாது. எதற்கு அலைச்சல்? ஒரு ஏக்கருக்கு மெஷின்களை பயன்படுத்தினால் ரூ.4 ஆயிரம் செலவு. இது அனைவருக்கும் சாத்தியமா சொல்லுங்கள்" என ஆவேசப்படுகிறார் கர்னால் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி தில்பாக் சிங்

இந்திய அரசு இதற்கு 50 சதவிகித மானியத்தில்  மெஷின்களை வழங்கி விவசாயிகள் இதனை பெற்றுவிட்டார்கள் என சாதனைப்பட்டியலில் போட்டுக்கொண்டாலும் பயிர்களை எரிக்கும் பழக்கும் குறையவில்லை. இதற்கு லஞ்சம் வாங்கும் கீழ்மட்ட அதிகாரிகளும் முக்கியகாரணம் என்பதை பெயர் வெளியிடாத விவசாயி தெரிவிக்கிறார். 

நன்றி: எகனாமிக் டைம்ஸ்(நிதி சர்மா)

பிரபலமான இடுகைகள்