ஒருவரைப்போலவே இன்னொருவர் - விளையும் விபரீதங்கள்! - கௌதம் நந்தா(2017)
கௌதம் நந்தா 2017 telugu
இயக்கம்: சம்பத் நந்தி
ஒளிப்பதிவு:
இசை: தமன் எஸ்.
இப்படத்தைப் பற்றி தேடினால்
விக்கிப்பீடியாவில் தி மேன் வித் மை ஃபேஸ், என்ற படத்தின் உரிமை பெறப்படாத தெலுங்கு
படம் என்று எழுதப்பட்டிருக்கிறது. அதை படம் பார்ப்பவர்கள் உறுதி செய்துகொள்ளுங்கள்.
கௌதம் பணக்கார இளைஞன். தனது
அப்பாவின் கட்டமனேனி நிறுவனத்தை பொறுப்பேற்று நடத்துவதற்கு முன்னர், ஜாலியாக இருக்க
நினைக்கிறான். ஆனால், பணம் இருந்தாலும் மனதில் ஏதோ குறைகிறது. பப்பில் வயதான வெயிட்டரை
அறைந்துவிடுகிறான். அதற்குப்பிறகு அவர் கேட்கும் கேள்வி, அவனை தொந்தரவு செய்கிறது.
நீ யார் என்பதுதான் அந்தக் கேள்வி. இதற்கு பதில் கண்டுபிடிக்க முயலும்போதுதான் தன்னைப்
போன்ற உருவத்திலுள்ள நந்தாவைச் சந்திக்கிறான். நந்தா ஆப் ஒன்றை டெவலப் செய்து முன்னேற
நினைக்கிறான். ஆனால் வறுமை சூழ்நிலையில் ஏதும் செய்யமுடியவில்லை. தனது முன்னேற்றத்திற்கு
தடையாக குடும்பமும் உலகமும் இருப்பதாக நினைக்கிறான். நந்தாவின் கதையைக் கேட்கும் கௌதம்,
தனது இடத்தில் அவனும், அவனின் இடத்தில் தானும் 30 நாட்களுக்கு வாழ்ந்து பார்ப்போம்.
இரு விஷயங்களிலுள்ள பிரச்னையை அனுபவித்து தெரிந்துகொள்வோம் என்கிறான். பேராசைக்காரனான
நந்தாவின் சுயரூபம் அப்போது கௌதமுக்கு தெரிவதில்லை. இதன் விளைவுகள் அவன் வாழ்க்கையை
நொறுக்கிப்போடுகிறது. கொலை வழக்கிலும் சிக்க வைக்கிறது. மீண்டும் கௌதம் தன் பணக்கார
வாழ்க்கையை அடைந்தானா என்பதுதான் கதை.
ஆஹா
கோபிசந்தின் வித்தியாசமான
நடிப்பு படத்திற்கு பெரும்பலம். கௌதம் கேரக்டரிலும் நந்தா கேரக்டரிலும் அமர்க்களப்படுத்தி
இருக்கிறார். கௌதமை விட நந்தா கேரக்டர் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வாழ்க்கையை
மாற்றும் வாய்ப்பு கிடைத்தபிறகு, அதை வைத்தே கௌதமைக் கொல்ல முயல்வது, முக்தாவுடன் நெருக்கம்
காட்டுவது, முத்ராவுடன் சதிகளில் ஈடுபடுவது என வஞ்சக முகத்தை காட்டுகிறார்.
ஏழ்மையை வெறுப்பது, பணம்
மட்டுமே முக்கியம் என நினைப்பது என யதார்த்தமாக இந்த பாத்திரம் அமைந்திருக்கிறது. நந்தாவின்
அப்பா, கௌதமிடம் பேசும் வசனங்கள் நன்றாக எழுதப்பட்டுள்ளன. அவர்களின் வீட்டு சூழ்நிலையும்
மிக இயல்பாக உள்ளன. கௌதம் மெல்ல நந்தாவின் வீட்டு சூழ்நிலையைப் புரிந்துகொள்ளும் இடங்கள்
நன்றாக எடுக்கப்பட்டுள்ளன.
ஐயையோ
கௌதம் யார், நந்தா யார்
என்பதை பெற்றோரால் கண்டுபிடிக்க முடியாதா என்ன? புசுபுசு நாயை வைத்து ஒருவரைக் கண்டுபிடிக்கும்
லாஜிக் பரிதாபமாக இருக்கிறது. நந்தா வேலைக்குப் போகாமல் ஏதோ ஆப் டெவலப் செய்கிறார்
என்று அடிக்கடி பேசுகிறார்கள். ஆனால் அது எந்த ஆப் என்பதற்கு அணுவளவும் வாய்ப்பு தரவில்லை.
ஏன் சம்பத் சார் இப்படி?
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக