இடுகைகள்

செப்டம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பரஸ்பர வளர்ச்சிக்காக ஆப்பிரிக்க நாடுகளோடு இணைந்து நடைபோடும் சீனா - மக்கள் சீன குடியரசு 75 ஆண்டுகள்

படம்
      மக்கள் சீன குடியரசு - 75 ஆண்டுகள் உலக நாடுகள் சிறப்பாக இயங்கினால்தான் சீனா நன்றாக செயல்பட முடியும். சீனா நன்றாக செயல்படும்போது, முழு உலகமும் இன்னும் மேம்படும் என 2023ஆம் ஆண்டு சீன அதிபர் ஷி ச்சின்பிங், மூன்றாவது பாதை மற்றும் சாலை திட்டத்தின் உரையில் கூறினார். சீனாவில் 1.4 பில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இவர்களோடு, பல்வேறு சவால்களை சந்தித்து பயணிப்பது சாதாரண காரியமல்ல. 2049ஆம் ஆண்டு சீன நாட்டை புத்துயிர்ப்பு செய்வதுதான் லட்சியமாக கொண்டு சீன அரசு இயங்கி வருகிறது. அந்த ஆண்டில் மக்கள் சீன குடியரசு, தனது நூற்றாண்டைக் கொண்டாடும் நாள். மக்கள் சீன குடியரசு நிலப்பரப்பு ரீதியாக, மக்கள்தொகை ரீதியாக பெரிய நாடு. இப்படி பல்வேறு சவால்களைக் கொண்ட நாடு எப்படி ஒரே திசையில் பயணிக்கிறது என ஆச்சரியமாக உள்ளது. 1978ஆம் ஆண்டு சீனாவில் நடந்த பொருளாதார மாற்றங்கள், சீர்திருத்தங்கள் முக்கியமான சாதனைகள் என்று கூறவேண்டு்ம். அவை அனைத்து பிரிவு மக்களுக்கும் வளமை சேர்ப்பதாக மாறியுள்ளது. இதன் கூடவே கிராம, நகர வளர்ச்சி போதாமைகள், காற்று, நீர் மாசுபாடு, கோவிட், ரஷ்யா உக்ரைன் போர்  ஆகிய சவால்களையும...

இறந்துபோன மரத்தின் எமோஜி!

படம்
      இறந்துபோன மரத்தின் எமோஜி! இனி போன்களில் இறந்துபோன மரத்தின் எமோஜியை நாம் பயன்படுத்தலாம். ஆனால் இதை மகிழ்ச்சியான செய்தி என்று கருதமுடியாது. பகிரவும் முடியாது. 2022ஆம் ஆண்டு இறந்து மரத்தின் எமோஜி சிந்தனை உருவானது. அது அண்மையில் செயலாக்கம் பெற்றுள்ளது. யுனிகோட் கன்சோர்டியம் என்ற தன்னார்வ அமைப்பு, புதிய எமோஜியை ஏற்றுக்கொண்டுள்ளது. இறந்த மரத்தின் எமோஜி, காலநிலை மாற்ற பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வுக்கானது. இயற்கையாகவே வறட்சி என்பது உலக நாடுகளின் பல பகுதிகளில் ஏற்பட்டு வருகிறது. மனிதர்கள் தங்கள் செயல்பாட்டால் ஏற்படுத்துவது வேறுவகையானது. புதிய எமோஜியை யோசித்தது சற்று முன்னரே என்றாலும் பல்வேறு பிரச்னைகளை பேசும்போது இன்றைக்கும் அது பொருத்தமாகவே உள்ளது என்றார் எமோஜி கமிட்டி தலைவரான ஜெனிபர் டேனியல். துருவத்தில் பனி உருகுவது, பிளாஸ்டிக் மாசுபாடு, கடல்நீர்மட்டம் உயர்வது, பன்மைத்தன்மை குறைவது என பல்வேறு பிரச்னைகளை எமோஜி மூலம் பேசலாம். 1970 தொடங்கி இன்றுவரை வறட்சியால் ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் மக்கள் இறந்துள்ளதாக ஐ நா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. இன்று, 2.3 பில்லியனுக்கும...

சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் - மொழிபெயர்ப்பில் இணையத்தின் தாக்கம், பல்வேறு பிரச்னைகள் பற்றி கவனம் கொள்ளவேண்டும்!

படம்
      சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் உலகளவில் ஆக்ஸ்போர்ட் பிரஸ் பதிப்பு நிறுவனம் முக்கியமானது. இந்த நிறுவனம், தனது நூல்களை பல்வேறு உலக மொழிகளில் பதிப்பித்து வருகிறது. பழைய இந்தியாவில் முதல் பிரதமரான நேருவால் தொடங்கப்பட்ட சாகித்திய அகாதெமி நிறுவனம், பத்துக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் படைப்புகளை மொழிபெயர்த்து வெளியிட்டது. இந்து பேரினவாத அரசியலில் சாகித்திய அகாதெமி, நேஷனல் புக் ட்ரஸ்ட் ஆகிய நிறுவனங்கள் சிக்கி, தங்களது ஆக்கப்பூர்வத் திறனை எப்போதோ இழந்துவிட்டன. இணையத்தில் ஆங்கில வழியாக மொழிபெயர்ப்பவர்கள் அதிகம் உள்ளனர். குறிப்பிட்ட மொழியைக் கற்று அதன் வழியாக தமிழுக்கு மொழிபெயர்ப்பவர்கள் அல்லது உள்ளூர் மொழியில் மொழிபெயர்ப்பு செய்வது குறைந்துவிட்டது. இதுபோல மொழிபெயர்ப்பை செய்வதை குறிப்பிட்ட மொழியை திணிக்க முயலும் ஒன்றிய அரசு ஊக்குவிப்பதில்லை. தாய்மொழியை வளர்க்க வேண்டுமெனில் குறிப்பிட்ட மாநில அரசுகள்தான களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும். தெற்காசியாவில் சால்ட் என்ற மொழிபெயர்ப்பு திட்டம் உருவானது. திட்டமாக இப்படி உருவானாலும் அமைப்பு ரீதியாக ஐஎல்டி கொரியா அல்லது கோத்தே இன்ஸ்டிடியூட...

சீனமொழி பேசுவதற்கான இலவச நூல் - கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை கொண்டது!

படம்
          இனிய நண்பர்களுக்கு வணக்கம் முன்னாள் விகடன் மாணவப் பத்திரிகையாளரான பயணிதரன் எழுதியுள்ள இலவச நூல் இது. இந்த நூலை அவரது பயணி என்ற வலைத்தளத்தில் சென்று தரவிறக்கிக் கொண்டு படிக்கலாம். வலைத்தளத்தில் சந்தாதாரராக இணைந்தால் நூலை இலவசமாக அளிக்கிறேன் என அறிவிப்பு வெளியிட்டிருந்தார். வலைத்தளத்தை விளம்பரப்படுத்த சிறந்த யோசனை. ஆனால், நூலை உடனே தரவிறக்க முடியவில்லை. வலைத்தளத்தில் இணைந்து ஏறத்தாழ சில மாதங்கள் கழித்து மின்னஞ்சலில் நூலை அனுப்பி வைத்தார். அனேகமாக அறிவிப்பை வெளியிட்டுவிட்டு நூலை எழுதிக் கொண்டிருந்திருக்கக்கூடும். கிரியேட்டிவ் காமன் உரிமையில் நூல் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, நூலை பிறருக்கும் நீங்கள் பகிர்ந்து வாசிக்கலாம்.    

இந்தியாவை விட்டு தப்பித்து ஓடும் மக்கள்!

படம்
          இந்தியாவை விட்டு தப்பித்து ஓடும் மக்கள்! எதற்காக ஓடுகிறார்கள்? எல்லாம் ஒரு ஜாண் வயித்துக்காகத்தான் அய்யா. கடந்த ஆண்டு மட்டும் அமெரிக்காவிற்கு கள்ளத்தனமாக சென்று, தங்குவதற்கு அனுமதி பெற முடியாமல் காவல்துறையில் மாட்டிக்கொண்டவர்களின் எண்ணிக்கை 96, 917. கொரோனா லாக்டவுன் சீரானவுடன் எவனாவது இந்த நாட்டில் இருப்பானா என மக்கள் தலைதெறிக்க மேற்கு நாடுகளைப் பார்த்து ஓட்டம் பிடித்திருக்கிறார்கள். 7,25, 000 இந்தியார்கள் அனுமதி வாங்காமல் அமெரிக்கா, மெக்சிகோ, எல் சால்வடோர் எல்லையில் சுற்றித் திரிந்து வருகிறார்கள் என ப்யூ நிறுவனம் ஆய்வில் தெரிவித்துள்ளது. பைத்தியக்காரர்களின் கையில் தீப்பந்தத்தைக் கொடுத்துவிட்டு உயிருக்கு தப்பி ஓடுவது என்ன புத்திசாலித்தனமோ? அமெரிக்காவில் அகதிகளைப் பற்றி எப்போது தேடுதல் நடத்தினாலும் அதில் மாட்டிக்கொள்பவர்களில் இந்தியர்களே அதிகம். இவர்கள் அமெரிக்காவில் ஆதார அடையாள அட்டைகள் இல்லாமலே வாழ்ந்து வருகிறார்கள். எல்லைகளிலும் இப்படித்தான் மக்கள் உள்ளே நுழைய முயன்று வருகிறார்கள். காசு கொடுத்தால் சட்டவிரோத பாதை வழியாக ஏஜண்டுகளே மேற்கு நாடுகளில் உள்ள...

உயிர்களை பலிவாங்கும் பணியிட நச்சு கலாசாரம்!

படம்
         பெங்களூருவில் அன்னா செபாஸ்டியன் என்ற இளம்பெண், வேலை சார்ந்த மன அழுத்தம் காரணமாக இறந்துபோயுள்ளார். பொதுவாக, வலதுசாரி இந்து பேரினவாத கட்சி ஆட்சியில் வல்லுறவு செய்யப்பட்டவர்கள், வீடுகளை புல்டோசர்களுக்கு பறிகொடுத்தவர்கள், இந்துத்துவ குண்டர்களால் தாக்கப்பட்டவர்கள் என அனைவரையுமே அவதூறு செய்து இழிவுபடுத்துவது வழக்கம். பாதிக்கப்பட்டவர்களையே குறை சொல்வது புதிய மனுநீதி. இந்த அநீதிக்கு அன்னாவும் இலக்காக மாறினார். அந்த வகையில் இம்முறை ஆட்சித்தலைவரின் வழிகாட்டலில் நிதியமைச்சர், வரி ஏய்ப்பில் கொழிக்கும் நிறுவனங்களைப் பற்றி ஏதும் கூறாமல் அவர்களின் சுரண்டலை தாங்கிக்கொள்ளும் வகையில் பணியாளர்கள் ஆன்மிகத்தன்மையை மனவலிமையை வளர்த்துக்கொள்ளவேண்டும் என திருவாய் மலர்ந்தருளியுள்ளார். மூன்று சதவீத இனக்குழுவின் ஆணவமும், நாட்டை இழிவுபடுத்தி அதில் குளிர்காய்வதும், அதை பிறர் அடையாளம் கண்டால் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதும் புதிதல்ல. அந்தமான் சிறையில் இருந்த வலதுசாரி பேரினவாத இயக்கத் தலைவரே, பிரிட்டிஷாரின் ஷூக்களுக்கு நாக்கால் பாலிஷ் போட்டு விடுதலைப் பிச்சை பெற்ற ஆள். அந்த முட்டா...

அரிய நோய்களுக்கான மருந்துகள்!

படம்
    அறிவுப்பற்று மிஸ்டர் ரோனி ஆர்பன் ட்ரக் என்றால் என்ன? மக்கள்தொகையில் குறைவான எண்ணிக்கை கொண்டவர்களை தாக்கும் நோய்களுக்கான மருந்துகளை ஆர்பன் ட்ரக் என்று கூறுகிறார்கள். இந்த மருந்துகள் அதிக லாபத்தை மருந்து கம்பெனிகளுக்கு கொடுப்பதில்லை. ஆனால், அரிய நோய்களுக்கு மருந்துகள் அவசியம் தேவை. எனவே, அமெரிக்க அரசு ஆர்பன் ட்ரக் ஆக்ட் 1983 என தனிச்சட்டம் போட்டு மருந்து நிறுவனங்களுக்கு நிதி உதவியை அளிக்கிறது. மருந்துகளை தயாரிக்க வைத்து வெளியிட உதவுகிறது. ஆன்டிபயாடிக் என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியவர் யார்? செல்மன் வாக்ஸ்மன் என்பவர், நோய்க்கு பயன்படுத்தும் பாக்டீரிய நுண்ணுயிரிகளை ஆன்டி பயாடிக் என்று கூறினார்.கூறிய காலம் 1940களின் மத்தியில் என வைத்துக்கொள்ளலாம். இவருக்கு முன்னதாக ஆன்டிபயாசிஸ் என்பதை கூறியவர், பால் வுயில்மன். இவர் பாக்டீரியங்களின் வளர்ச்சிக்கு உதவும் ப்யோசைனின் என்ற வேதிப்பொருளைக் கண்டுபிடித்து தனியாக பிரித்தெடுத்தார். இந்த வேதிப்பொருள் ஆய்வகத்தில் சோதனைக்குழாயில் பாக்டீரியா வளர்வதை ஊக்கப்படுத்துகிறது. மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விஷம் இது.    

காங் குடும்பத்தை உளவாளிகளை அனுப்பி படுகொலை செய்ய முயலும் வுபெங் கூலிப்படை!

படம்
          மை ஜர்னி டு யூ சீன டிராமா 24 எபிசோடுகள் யூட்யூபில் இலவசமாக கிடைக்கும் சீன தொடர். காங் என்ற மருத்துவத்தை அடிப்படையாக கொண்ட குடும்பம் தனியாக நகரத்தை உருவாக்கி இயங்கி வருகிறது. மருந்துகள், விஷம், மேலும் பல பொக்கிஷங்களை வைத்திருக்கிறார்கள். இவர்களை வுபேங் என்ற கூலிக்கொலைகாரர்கள் இயக்கம், தாக்கி அழித்து பொக்கிஷங்களை கைப்பற்ற முயல்கிறது. அவர்களின் உளவாளிகள் திருமண மணப்பெண் போர்வையில் ஊடுருவுகிறார்கள். அதை காங் குடும்பம் எப்படி எதிர்கொண்டது என்பதை கூறியிருக்கிறார்கள். காங் குடும்பம், அதன் உறுப்பினர்கள், அவர்களுக்குள் உள்ளே உள்ள பிணக்குகள், பிரச்னைகள் ஆகியவற்றை நிதானமாக காட்சிபடுத்தியுள்ளனர். இதனால், தற்காப்புக்கலை சார்ந்த சண்டைகளை எதிர்பார்ப்பவர்கள் இருபத்து நான்காவது எபிசோடு வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இதிலேயே அடுத்த சீசன் எடுக்கும் ஐடியாவும் உள்ளது. அதற்கான காட்சிகளையும் இறுதியாக சேர்த்திருக்கிறார்கள். காங் இசு, தாயில்லாமல் தந்தையில் கண்டிப்பில் வளர்ந்து வரும் பாத்திரம்.இவர்தான் நாயகன். அப்பா, அண்ணன் திடீரென இறந்துபோக இனக்குழு தலைவர் பொறுப்பை ஏற்று அதை எ...

அரோமா தெரபி நோய்களைத் தீர்க்குமா?

படம்
      அறிவுப்பற்று மிஸ்டர் ரோனி அரோமா தெரபி என்றால் என்ன? உடல், மனம், ஆன்மா சார்ந்து குறிப்பிட்ட வாசனைகளைக் கொண்டு நோய்களைத் தீர்க்கும் முறை. பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர் ரெனே மாரிஸ் கட்டஃபோஸ், அரோமா தெரபி என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தினார். ஒருமுறை ஆய்வகத்தில் பணியாற்றியபோது விபத்துக்குள்ளாகி அவரது கையில் நெருப்பு பற்றியது. அப்போது லாவண்டர் எண்ணெய் மூலம் நிவாரணம் கிடைத்தது. அதுமுதல் பல்வேறு எண்ணெய்களை எரித்து வாசனை வழியாக ஒருவரின் நோய்களைத் தீர்க்க முடியுமா என ஆராயத் தொடங்கினார். இந்த வகையில் மூச்சு, தோல் வழியாக ஒருவரை குணப்படுத்த முடியும் என அரோமோதெரபி மருத்துவர்கள் நம்புகிறார்கள். இந்த செயல்முறை, மனநலனில் நிறைய மாறுதல்களை ஏற்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தை அளக்க பயன்படும் கருவியின் பெயர் என்ன? ஸ்பைக்மோமானோமீட்டர் என்ற கருவியை 1881ஆம் ஆண்டு ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த வான் பாஷ் என்பவர் கண்டுபிடித்தார். இன்றைக்கும் இதே கருவிதான், ஒருவரின் ரத்த அழுத்தத்தை அளக்க பயன்பட்டு வருகிறது. ஒருவரின் புஜத்தில் பட்டை ஒன்றை சுற்றப்பட்டு, ரப்பர் குமிழ் மூலம் அழுத்தம் க...

போதைப்பொருள் கடத்தலில் மாட்டிக்கொள்ளும் அப்பாவி கால்டாக்சி டிரைவர்!

படம்
        டாப் கியர் தெலுங்கு ஆதி, ரியா, மைம் கோபி போதை மாபியா குழுவின் விவகாரத்தில் கால் டாக்சி டிரைவர் சிக்கிக்கொள்கிறார். அவரது மனைவி உயிரைக் காப்பாற்ற போதைப்பொருளைக் கண்டுபிடிக்க செல்கிறார். இறுதியில் என்னவானது என்பதே கதை. படத்தில் காதல் காட்சி, நகைச்சுவை என எதுவும் கிடையாது. முழுக்க ஆக்சன் திரில்லராக எடுக்க நினைத்த இயக்குநர், அதை படத்தின் பாதியிலேயே மறந்துவிட்டார். நிறைய காட்சிகளில் பிஜிஎம் உறுமலோடு காட்சி மெதுவாக நகர்கிறது. எலிவேஷனுக்கு வெறும் இசை மட்டும் போதாது அல்லவா, காட்சியில் ஏதேனும் இருக்கவேண்டுமே? அப்படி ஏதும் இல்லை. நாயகன் டாக்சி டிரைவர். காதலித்து மனைவியை சார்பதிவாளர் அலுவலகத்தில் மணம் செய்கிறார். ஆனால், அவரின் கூட நிற்க எந்த நண்பர்களுமே இல்லை. அப்புறம் எப்படி சாட்சி கையெழுத்து போடுவது? இப்படியான லாஜிக் இடரல்கள் படம் நெடுக உண்டு. நேரடியாக கதைக்கு போகவேண்டும். எனவே, நாயகனுக்கு காதலி கிடையாது. மனைவி உண்டு. நாயகன், நாயகி தரப்பில் எந்த நண்பர்களும் இல்லை. ஏன், வீட்டில் கூட அவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இந்த செட்டப் ஒருவித செயற்கையான தன்மையை ஏற்படுத்துகிறது....

பெண்களுக்கு எதிரான பாலியல் சுரண்டலைப் பேசியதால், துரோகிகள் என வசைபாடுகிறார்கள்! பீனாபால், படத்தொகுப்பாளர்

படம்
         bina paul திரைப்பட படத்தொகுப்பாளர், பெண்கலைஞர்கள் அமைப்பின் நிறுவன உறுப்பினர் ஹேமா கமிட்டியின் முக்கிய சாதனை என்னவென்று கூறுவீர்கள்? மக்களிடம் திரைக்கலைஞர்களின் பாலினத்தை நாங்கள் கவனிக்க வைத்தோம். 2017ஆம் ஆண்டுக்கு முன்னர் நடந்த சந்திப்பில், பாலினம் என்பது திரைப்படத்துறையில் உள்ளது என கூறியபோது, பலரும் ஆச்சரியப்பட்டனர். பாலினம் என்றால் என்ன என கேள்வி எழுப்பினர். பெண் கலைஞர்கள் அமைப்பு உருவாக்கப்பட்ட பிறகு, திரைப்படத்துறையில் உள்ள பல்வேறு பிரச்னைகள் வெளிச்சத்திற்கு வந்தன. பெண்கள் பங்களிப்பு, பணியிட பாலியல் சீண்டல்கள், பெண்கள் கதைகள், மையப்பொருள் என பல அம்சங்கள் பல்லாண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வந்தன. இப்போது ஹேமா கமிட்டி பெண்களின் பிரச்னைகளை மக்களின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளது. இதை பெண் திரைக்கலைஞர்களும் ஏற்றுள்ளனர். இந்த எதிர்வினைதான் முக்கியமான சாதனை என்று நினைக்கிறேன். பெண்களில் தொழில்நுட்ப கலைஞர்களும், நடிகர்களும் உள்ளனர். இதில் வேறுபாடு உள்ளதா? இது கொஞ்சம் சிக்கலான கேள்வி. கலைத்துறை சார்ந்த உதவியாளரோடு ஒப்பிடும்போது கேமராவின் முன்னே நிற்கும் கலைஞர...

ஜம்மு காஷ்மீர் பிரச்னையில் உதவ காங்கிரஸ் தவிர்த்தும் ஏராளமான கூட்டணி கட்சிகள் உள்ளன! - அகா மெக்தி

படம்
        அகா சையத் ருஹூல்லா மெக்தி ஶ்ரீநகர் நாடாளுமன்ற உறுப்பினர் 370ஆவது சட்டப்பிரிவு நீக்கம் பற்றி காங்கிரஸ் கட்சி மௌனம் காக்கிறதே? அச்சட்டப்பிரிவை திரும்ப கொண்டுவருவதாக காங்கிரஸ் கூறிவிட்டதே போதுமானது. அக்கட்சியின் நிலைப்பாட்டிற்கு நாடு முழுக்க ஆதரவான மனநிலை இல்லை என்பதால், அதைபற்றி அதிகம் பேசவில்லை என நினைக்கிறேன். மதவாத சக்திகளுக்கு எதிராக நாடு முழுக்க போராடி வருகிறோம். அந்த சமயத்தில் காங்கிரஸ் 370ஆவது பிரிவு பற்றி பேசவில்லையென்றால் பார்த்துக்கொள்ளலாம். காங்கிரஸ் கடந்து திமுக, திரிணாமூல் காங்கிரஸ் என பல்வேறு கட்சிகளிடம் பேசி வருகிறோம். கூட்டாட்சி முறையை உறுதிப்படுத்த அக்கட்சிகள் ஆதரவு தந்துள்ளன. எனவே, கூட்டாட்சி முறையை ஆதரிக்கும் நிறைய கட்சிகள் தேசிய மாநாட்டு கட்சிக்கு ஆதரவாக உள்ளன. பிடிபி ஏன் உங்களோடு இணையவில்லை? பாஜகவிற்கு எதிராக நிற்க பிடிபியை அழைத்தும் அவர்கள் வரவில்லை. பழைய விவகாரங்களை மனதில் வைத்துக்கொண்டு எங்களை வசைபாடத்தொடங்கியது. மெக்பூபா முஹ்தியின் மகள் , என்சி கட்சியை, கடுமையான விமர்சித்தார். முன்னாள் பிரதமரான ஷேக் அப்துல்லாவையும் விட்டு வைக்காமல் வசைப...

டெக் நிறுவனங்கள் அதீத பணபலத்தை வைத்து அரசை, ஒழுங்குமுறை அமைப்புகளை வளைத்து வருகின்றன!

படம்
      amba kak ai researcher இந்தியாவில் இணைய சமத்துவம், அந்தரங்க பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் பணியாற்றியிருக்கிறீர்கள். இப்போது ஏஐ தொடர்பான கொள்கையில் சர்வதேச அளவில் செயல்பட்டு வருகிறீர்கள். டைம் இதழின் ஏஐ செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் இடம்பெற்றது ஆச்சரியமளிக்கிறதா? தொழில்நுட்ப கொள்கை தொடர்பாக பத்தாண்டுகளுக்கு மேலாக வேலை செய்து வருகிறேன். இப்போது என்னைப் பற்றி இதழ்களில் செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. பொதுமக்களின் நலன் கருதிய கொள்கையில் வேலை செய்கிறேன். ஏஐ நவ் இன்ஸ்டிடியூட், டெக் நிறுவன உரிமையாளர்களை நோக்கி கடுமையாக கேள்விகளை முன்வைத்துவருகிறது. பல்வேறு அரசுகளிடம் லாபி செய்து வருவதால், முறைப்படுத்தும் அமைப்புகள் டெக் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. டெக் உலகில் ஜனநாயகத்தன்மையை கொண்டு வர நினைக்கும் பலருடன் இணைந்து கொள்கைகளை வடிவமைக்க உழைத்து வருவதில் மகிழ்கிறேன். சாம் ஆல்ட்மனை, மேசியா என்று டெக் தளத்தில் புகழ்கிறார்களே? இங்கு நாம் ஓப்பன் ஏஐ பற்றி பேசவேண்டியதில்லை. மேசியா என ஒருவரை புகழ்வதெல்லாம் மார்க்கெட்டிங் உத்திகள்தான். டிரேட் கமிஷன்...

அமெரிக்காவின் முதல் பெண் மருத்துவர், ஆழ்கடல் டைவர்களுக்கு ஏற்படும் அழுத்த பாதிப்பு

படம்
            அறிவுப்பற்று மிஸ்டர் ரோனி கொடிகளை வடிவமைப்பதில் உள்ள நுட்பங்கள் என்ன? தேசியக்கொடியோ, கட்சிக்கொடியோ, ராணுவப்பிரிவு கொடியோ அதை கம்பத்தில் கட்டி இறக்கவேண்டும் என்பதை மனதில் இருத்திக்கொள்ளுங்கள். எனவே, அதை செவ்வகமாக இருந்தால்போதும் என வடிவமைக்கக்கூடாது. கொடியாக கம்பத்தில் பறக்கும்போது தெளிவாக தெரிய வேண்டும். கொடியை எளிமையாக வடிவமைக்கவேண்டும். எளிமை என்பதில் அதை நினைவுகூர்ந்து தாளில் யாரேனும் வரையும் விதமாக இருப்பதும் அடங்கும். அதை பல்வேறு வடிவங்களில் சுருக்கினாலும் வேறுபாடு வரக்கூடாது. நல்ல விஷயங்களை பிறரிடம் இருந்து காப்பி அடிக்கலாம் என்று கூறுவார்கள். ஆனால் கொடிகளைப் பொறுத்தவரை இன்னொரு நாட்டைப் போல இருந்தால் சொந்த நாட்டு மக்களே பாதிக்கப்படுவார்கள். கொடியில், நிறங்கள் தெளிவாக தெரியவேண்டும். நிறங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது நல்லது. வெள்ளை நிற பின்னணியில் நீலநிறம் என கொடி தெளிவாக இருப்பது நல்லது. கொடியில் குறிப்பிட இனக்குழு அல்லது தனித்துவத்தை உணர்த்தும் விஷயங்கள் இருக்கவேண்டும். குழப்பத்தை தருவதாக மாறிவிடக்கூடாது. வார்த்தை, இலச்சினை என ஒன்றையே ...

பத்திரிகையாளர்களின் பத்திரிகையாளர் - ஏ ஜி நூரானி - அஞ்சலிக் குறிப்பு

படம்
      அஞ்சலி ஏஜி நூரானி 1930-2024 காபூர் பாய் என அழைக்கப்படும் நூரானி, அரசியலமைப்பு சட்டத்தை அறிந்த கூர்மையான மனிதர்களில் ஒருவர். கல்வியாளர், வழக்குரைஞர், சுயசரிதையாளர், வரலாற்று அறிஞர், அரசியல் விமர்சகர், சிந்தனையாளர் என பல்வேறு தளங்களில் இயங்கி வந்தவர், அப்துல் காபூர் மஜீத் நூரானி. தனது தொண்ணூற்று மூன்று வயதில் ஆகஸ்ட் 29 ஆம் தேதி இயற்கை எய்தினார். முன்னாள் உச்சநீதிமன்ற வழக்குரைஞராக பணியாற்றிய நூரானி, சட்டம், அரசியல், வெளிநாட்டு உறவுகள் என பன்முகத்தன்மை கொண்ட தளங்களில் இயங்கி வந்தார். பாம்பே உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பயிற்சி செய்தார். எகனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி, தைனிக் பாஸ்கர், தி இந்து, பிரன்ட்லைன் ஆகிய நாளிதழ்களில் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். பிரன்ட்லைனில் காஷ்மீர் பற்றி நுட்பமான பல்வேறு தகவல்களோடு கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தார். இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு காரணமாக அரசியல் சூழல்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதியுள்ளார். மனிதகுல வரலாற்றில் பத்து முக்கிய சம்பவங்களில் ஒன்று என இந்திய பாகிஸ்தான் பிரிவினையைக் குறிப்பிட்டார். குடிமகன்களின் உரிமை, பேச்சுரி...

தனிமையில் உள்ளவர்களை இணைக்கும் நட்பு கம்யூனிட்டிகள்!

படம்
        சமகாலத்தில் நட்பு எப்படி இருக்கிறது? இன்று நட்பு என்பது தொடர்ச்சியாக பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகத்திலிருந்து அப்படியே தொடர்வதில்லை. அலுவலக நட்பு என்பது பெரும்பாலும் ஆபத்திலும், நமக்கு நாமே குழிவெட்டிக்கொள்வதிலுமே முடியும். எனவே, பெரும்பாலான அலுவலக பணியாளர்கள், வேலையை செய்துவிட்டு வந்து தனியாகவே இருக்கிறார்கள். நட்பு வேறு, திருமண வாழ்க்கை உறவு வேறு. அவர்களுக்கு ஒரே நட்பாக ஸ்மார்ட்போன் உள்ளது. சிலர் புத்தகங்களை கிண்டிலில் படித்துக்கொண்டு பொழுதை ஓட்டுகிறார்கள். என்னுடைய விதியை நானே தீர்மானிப்பேன் என துணிச்சலாக உள்ளவர்கள், பம்பிள் போன்ற ஆப்பை தரவிறக்கி அதன் வழியாக புதிய நண்பர்களை, காதலை தேட முயல்கிறார்கள். டேட்டிங் ஆப் என கூறப்பட்டாலும் அதில் நீங்கள் நண்பர்களையும் தேடலாம். பெறலாம். ஒருவர் இருக்கும் இடத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ளவரோடு நட்பு சாத்தியமாவதில்லை. குறிப்பிட்ட வட்டாரத்தில் உள்ளவர்களோடு நட்பு பூண முயல்கிறார்கள். அறிமுகமில்லாத நண்பர்கள் எனும்போது உயிருக்கு ஆபத்து, பெண்களுக்கு வல்லுறவு அபாயம், கொள்ளையடிக்கப்படுதல், தாக்கப்படுதல் ஆகிய பிரச்னைகளை சிலர் எ...

ஆப்பிரிக்காவில் அடிப்படை கட்டமைப்பிற்கு உதவி வளர்ச்சியை பகிர்ந்து கொண்ட சீனா!

    ஆப்பிரிக்காவை நவீனமயமாக்கும் சீனா! உங்கள் நண்பரோடு செல்லும் பாதையை பகிர்ந்துகொள்ளுங்கள் என்று ஆப்பிரிக்க பழமொழி ஒன்றுண்டு. யார் நம்புகிறார்களோ இல்லையோ சீனா அதை நம்புகிறது. சீனாவும், ஆப்பிரிக்காவும் பரஸ்பர நலன்களுக்காக இணைந்தே பயணிக்கின்றன. அண்மையில் சீனா, ஆப்பிரிக்காவுக்கான ஒத்துழைப்பு மாநாடு சீனாவில் நடைபெற்றது. இதில் ஐம்பது ஆப்பிரிக்க நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். 1970ஆம் ஆண்டு சீனாவில் இருந்து ஐம்பதாயிரம் தொழிலாளர்கள், பொறியாளர்கள் ஆப்பிரிக்காவின் தான்சானியா, ஜாம்பியா நாடுகளுக்கு இடையிலான ரயில்பாதை திட்டத்தை செயல்படுத்த வந்தனர். கடந்த ஐம்பது ஆண்டுகளில் ரயில்பாதை பணியில் ஏற்பட்ட பல்வேறு விபத்துகளில் மொத்தம் எழுபது சீன தொழிலாளர்கள், பொறியாளர்கள் இறந்துள்ளனர். இவர்களுக்கென நினைவுத்தூண்களை தான்சானியாவில் எழுப்பி உள்ளனர். 1,860 கி.மீ தொலைவுக்கு ரயில் பாதையை சீனா, ஆப்பிரிக்காவில் உருவாக்கியுள்ளது. அப்பாதை இரு நாடுகளின் நல்லுறவுக்கான சாட்சியாக உள்ளது. சீனா ரயில்வே கன்ஸ்ட்ரக்சன் கார்ப் நிறுவனம், நைஜீரியாவில் நாற்பத்து மூன்று ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அதில் இஸ்ஸா பாத்திமா அப்லோ...

தான்சானியாவில் நிலவிய ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்க உதவிய சீன வேளாண்மை உத்திகள்!

      சீனா  - ஆப்பிரிக்க வேளாண்மை ஒப்பந்தத்தால் வலிமை பெறும் பெண்கள், குழந்தைகள்! ஆப்பிரிக்காவின் ஜாம்பியா, டான்சானியா, மலாவி ஆகிய நாடுகளில், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டு வருகின்றன. 2023ஆம் ஆண்டு செய்த ஆய்வில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் முப்பது சதவீதம் பேர் ஊட்டச்சத்து இன்றி வளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது. மேற்கு நாடுகள் ஆப்பிரிக்காவிற்கு உதவி செய்கிறோம் என வெற்றுப்பேச்சு பேசி வந்த நிலையில் சீனா செய்த உதவியால், ஆப்பிரிக்க நாடுகள் மெல்ல வளர்ச்சியை நோக்கி நடைபோடத் தொடங்கியுள்ளன. இதற்கான முதல்கட்டமாக 2019ஆம் ஆண்டு, சீனாவும், ஆப்பிரிக்க நாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்தன. இதன்படி சீன வேளாண்மை பல்கலைக்கழகம், வேளாண்மை சாந்த முறைகளை, தொழில்நுட்பத்தை ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழங்கி வருகிறது. ஆப்பிரிக்க மாணவர்கள் சீனாவுக்கு வந்து புதிய வேளாண்மை முறைகளை வீரிய பயிர்களைப் பற்றி பயிலத் தொடங்கியுள்ளனர். இந்த மாணவர்களின் எழுச்சியால், ஆப்பிரிக்க நாடுகளான மலாவி, தான்சானியாவில் சோளம், சோயாபீன்...

புரோஜெரியா எனும் சிறுவயது முதுமை நோய்!

படம்
        அறிவுப்பற்று மிஸ்டர் ரோனி அவசியமான சத்துகள் எவை? மாவுச்சத்து, புரதம், நீர், வைட்டமின், கனிமச்சத்து ஆகியவை உடலுக்கு அவசியமானவை. மாவுச்சத்து, புரதம், கொழுப்பு என்பதை ஆற்றல் சத்துகள். இவை உடலின் தினசரி செயல்பாட்டிற்கு முக்கியமானவை. வைட்டமின் சப்ளிமென்டுகள் அவசியமா? உணவில் இருந்து போதுமான சத்துகள் கிடைக்கவில்லை என்று கூறுபவர்கள் வைட்டமின் சப்ளிமென்டுகளை எடுத்துக்கொள்ளலாம். இதற்கென ஊட்டச்சத்து நிபுணர்கள், மருத்துவர்கள் உள்ளனர். அவர்களிடம் வழிகாட்டுதல் பெறுவது நல்லது. லாக்டோஸ் இன்டாலரன்ஸ் என்றால் என்ன? மாட்டின் பாலில் உள்ள சர்க்கரைக்கு லாக்டோஸ் என்று பெயர். இதை செரிமானம் செய்ய லாக்டேஸ் என்ற என்சைம் தேவைப்படுகிறது. மனிதர்களுக்கு மாட்டுப்பால் செரிமானம் வயதாக வயதாக குறைந்துகொண்டே வரும். இப்படி பால் செரிமானம் ஆகாதபோது, உடலில் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பொருமல், அதிகளவு வாயு உருவாவது ஆகிய தொந்தரவுகள் ஏற்படும். இதையே லாக்டோஸ் இன்டாலரன்ஸ் என்று மருத்துவர்கள் கூறிப்பிடுகிறார்கள். இதற்கு ஒரே வழி, பால் பொருட்கள் உண்பதைக் குறைத்துக்கொள்வதுதான். முற்றாக பால் பொருட்...

பேசுவது என்பது தேவையை நிறைவேற்றும் கோரிக்கை!

படம்
           அகிம்சை மொழி 3 பேசுவது என்பது தேவையை நிறைவேற்றும் கோரிக்கை! புகழ்பெற்ற கோவிலில் லட்டு, மாட்டு கொழுப்பில் செய்யப்பட்டுள்ளது என கோவில் தலைவர் கூறுகிறார். இந்த வாசகத்தைப் பார்த்தால் அவர் என்ன எதிர்பார்க்கிறார், என்ன வேண்டுகிறார் என்றே தெரியாது. நெய், தாவர நெய்யில் செய்யப்படவேண்டுமா?, மாட்டுக் கொழுப்பில் செய்ததற்காக யாரையாவது தண்டிக்க வேண்டுமா என நிறைய கேள்விகள் நமக்குள் எழுகின்றன. ஆனால், எதற்கும் எந்த பதிலும் இல்லை. இவற்றை இழிவான மலிந்த அரசியல் நோக்கங்களை மையமாக கொண்டு கூறப்படும் குற்றச்சாட்டு என கூறலாம். பொதுவாக ஒன்றைக் கூறுவது என எதையும் கூற முடியாது. ஒருவர் ரயில் மெதுவாக போகிறது என சலிப்புடன் கூறுகிறார். அவருடன் அருகில் உள்ள மனைவி அதற்கு எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. அதே வாக்கியத்தை மூன்று முறை உரக்க கூறுகிறார். உடனே மனைவி, இப்போது நான் என்ன செய்யட்டும்? கீழே இறங்கி தள்ளனுமா என்று கேட்டால், அந்த உரையாடலில் பிழை உள்ளது என்று அர்த்தமாகிறது. கணவர், ரயில் தாமதமாக சென்றால், விமானத்தை பிடிக்க நேரமாகிவிடும் என்பதைக் கூற நினைத்திருக்கலாம். ஆனால், அதை மன...