இடுகைகள்

ஆகஸ்ட், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இறப்பை ஏற்படுத்தும் பாக்டீரிய நச்சு!

படம்
        அறிவியலால் வெல்வோம் மிஸ்டர் ரோனி உணவில் நச்சுத்தன்மை எப்படி ஏற்படுகிறது? உங்களின் ஜென்ம எதிரிகள் மதிய சோறு வாங்கித் தருகிறேன் என்று கூப்பிட்டு சோற்றில் விஷம் வைக்கலாம். எனவே, உங்களின் நண்பர் என்ற போர்வையில் யார் அழைத்தாலும், அவர்களுக்கு நீங்கள் செய்த செயல்களை நன்றாக நினைத்துப் பாருங்கள். இல்லையெனில் பெரும் நஷ்டத்தை, அவமானத்தை, உயிரபாயத்தை சந்திக்க நேரும். இது தெரிந்து ஏற்படுவது. தெரியாமல் பல்வேறு எதிரெதிர் உணவுப்பொருட்களை உணவில் தாறுமாறாக சேர்த்து சாப்பிடும் பழக்கம் பிரபலமாகி வருகிறது. இது வயிற்றுக்குள் கலவரத்தை ஏற்படுத்தும். நிலப்பரப்பு சார்ந்து உணவுகள் மாறும். அதற்கேற்ப நீங்களும் மாறிக்கொள்ளவேண்டும். அனைத்து இடங்களிலும் ஒரே வகையான உணவு என்பது நச்சுத்தன்மையை ஏற்படுத்தக்கூடும். தெரியாமல் உணவில் நச்சுத்தன்மை சேர்வது குழந்தைகள் வளருகிற வீட்டில் ஏற்படுகிற விபத்து. இதற்கு கவனமாக விழிப்புணர்வுடன் இருப்பதே ஒரே வழி. இயற்கையில் இறப்பை ஏற்படுத்தும் வகையிலான நச்சு எது? பாட்டுலினல் என்ற நச்சு, குளோஸ்டிரிடியம் பாட்டுலினம் என்ற பாக்டீரியத்திலிருந்து பெறப்படுகிறது. இந்த நச...

கொடியை நகல் எடுக்க கூடாது!

படம்
          தனித்துவம் கொண்ட கொடி! வாகைப்பூவோ, தூங்குமூஞ்சி பூவோ உருவாக்கும் கொடி தனித்துவமாக சொல்ல வரும் கருத்தை தெளிவாக கூறவேண்டும். இணையத்தில் நிறைய கொடி வடிவமைப்புகள், டெம்பிளேட்டுகள் உள்ளன. அதையெல்லாம் எடுத்து இசைக்கலைஞர் அனிருத் போல சாம்பிள் பார்த்து கடன் வாங்கி வெற்றியடையலாம் என நினைக்காதீர்கள். எல்லோருக்கும் அந்த அதிர்ஷ்டம் கிடைக்காது. நாட்டின் கொடி என்றால் அங்கு வசிக்கும் மக்கள், கலாசாரம், பெருமை, நிலப்பரப்பு என நிறைய விஷயங்களை கருத்தில் கொண்டு வடிவமைக்கவேண்டும். இன்னொரு நாட்டின் கொடியைப் பார்த்து அப்படியே நகல் எடுப்பது விபரீதத்தில்தான் முடியும். கானா நாட்டின் கொடியைப் பாருங்கள். இதில் சிவப்பு, மஞ்சள், பச்சை ஆகிய நிறங்களோடு நடுவில் கருப்பு நட்சத்திரம் உள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள பிறநாட்டு கொடிகளை அடிப்படையாக கொண்டு கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தனித்தன்மையாக உள்ளது. இந்தோனேசியா நாட்டின் கொடியைப் பார்த்தால் அப்படியே மொனாக்கோ நாட்டு கொடியைப் போலவே உள்ளது. ஆனால் இரு நாடுகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. கொடியை அப்படியே தலைகீழாக்கினால் ஸ்பெயின், போலந்த...

கொடிகளை வடிவமைப்பதில் நிறம், இலச்சினைக்கு முக்கிய பங்குண்டு!

படம்
      கொடிகளை வடிவமைப்பதில் நிறங்களுக்கு முக்கியப் பங்குண்டு! சிவப்பு, நீலம், பச்சை, கறுப்பு, மஞ்சள், வெள்ளை ஆகியவை கொடிகளில் பயன்படுத்தும் முக்கியமான நிறங்கள். இவை தவிர, கருநீலம், ஆரஞ்சு, பழுப்பு ஆகிய நிறங்களையும் பயன்படுத்தலாம். ஆனால், நல்ல வடிவமைப்பு இருந்தால்தான் எடுபடும். மேற்சொன்ன நிறங்களை மென்மையான, அழுத்தமான இயல்பில் பயன்படுத்துவதும் உண்டு. சிறந்த கொடி கிரேஸ்கேல் முறையிலும் தெளிவாக தெரியவேண்டும். மூன்று நிறங்கள் போதுமானது. அதற்கு மேல் உள்ள நிறங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும். அப்படியான நிறங்களை பயன்படுத்தி கொடிகளை உருவாக்குவது நடைமுறையில் செலவையும் அதிகரிக்கும். நெதர்லாந்தின் ஆம்ஸ்டெர்டாம் கொடியைப் பார்ப்போம். பின்னணியில் சிவப்புநிறம் உள்ளது. அதன்மேலே கருப்புநிறப்பட்டை. அதில் வெள்ளை நிற பெருக்கல் குறி. எளிதாக அடையாளம் காண முடிகிற இயல்பில் உள்ள கொடி. இதற்கு எதிர்மாறாக சைனீஸ் அட்மிரல் கொடி உள்ளது. ஐந்து நிறங்கள் கொண்டுள்ளதோடு இதில் இடதுபுறத்தில் இலச்சினை ஒன்று உள்ளது. நினைவுபடுத்திக்கொள்ள கடினமான கொடி. டொமினிய குடியரசு கொடி நீலம், சிவப்பு, வெள்ளை ஆகிய நிறங்களைக் கொண்டு...

இதயத்தை மீண்டும் இயங்க வைக்கும் சிபிஆர் முறையைக் கண்டறிந்தவர் - மிஸ்டர் ரோனி

படம்
                      அறிவியலால் வெல்வோம் மிஸ்டர் ரோனி திடீரென நின்றுபோன இதயத்தை துடிக்க வைக்கும் சிபிஆர் முறையை கண்டறிந்தது யார்? சிபிஆர் என்றால், கார்டியோபல்மொனரி ரீசஸ்டிகேஷன் என்பது விரிவாக்கம். ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த அறுவை சிகிச்சை வல்லுநரான வில்லியம் டோசாக், வாய் வழியாக பிராணவாயுவை செலுத்தி ஒருவரைக் காப்பாற்ற முயலும் முறையைக் கண்டுபிடித்தார். அக்காலகட்டத்தில் இம்முறை, பெரிதாக மேம்படுத்தப்படவில்லை. பின்னாளில், எட்வர்ட் ஸ்காஃபர், மூச்சு விடுவதற்கு மார்பில் அழுத்தம் கொடுக்கும் முறையை உருவாக்கினார். 1910ஆம் ஆண்டு அமெரிக்க செஞ்சிலுவை சங்கம், எட்வர்டின் மார்பில் கைகளை வைத்து அழுத்தம் கொடுக்கும் முறையை செயல்படுத்த முன்வந்தது. ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த ஆர்த்தெல்லோ ஆர் லாங்வொர்த்தி, ஆர் டி ஹூக்கர், வில்லியம் பி குவென்ஹோவன் ஆகியோர் இணைந்து மார்பில் அழுத்தம் கொடுக்கும் இதயத்தை இயங்கச் செய்யும் முறையை மேம்படுத்தினர். இதயத்தில் நின்றுபோன ரத்த ஓட்டத்தை மார்பில் அழுத்தம் கொடுப்பது, மீண்டும் தடையை நீக்கி சீராக ஓடவைக்...

திருமணமாகாமல் நூறு குழந்தைகளுக்கு தந்தையானவர்!

படம்
            திருமணமாகாமல் நூறு குழந்தைகளுக்கு தந்தையானவர்! ஒன் இந்தியா, எஸ்எஸ் மியூசிக், பிகைண்ட்வுட்ஸ் யூட்யூப் தளங்கள் போல சல்லித்தனமாக தலைப்பு அமைந்துவிட்டது. அதை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். டெலிகிராமின் நிறுவனர், இயக்குநர் பாவெல் துரோவ், பிரான்சில் கைதாகி விடுவிக்கப்பட்டிருக்கிறார். டெலிகிராமில் பாலுறவு வீடியோக்கள் பகிரப்படுவது, தவறான சட்டவிரோதப் பயன்பாடு ஆகியவை கைதுக்கான காரணம் என கூறப்படுகிறது. உண்மையில் ஒரு ஆப்பை குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒருவர் தொடங்குகிறார். ஆனால், அதன் பயன்பாடு நாளடைவில் கட்டற்றதாக கட்டுப்படுத்த முடியாததாக மாறுகிறது. இந்த செயல்பாடு, அதைப் பயன்படுத்தும் மக்களின் கைகளில் உள்ளது. இதற்காக எதற்காக ஆப் தொடங்கினாய், உன்னால்தான் நாட்டில் குற்றங்கள் அதிகரிக்கிறது என ஆப் உரிமையாளரை கைது செய்வது சின்னப்பிள்ளைத்தனமாக உள்ளது அல்லவா? அப்படி பார்த்தால் கோடிங் எழுதுகிறவர்கள் அனைவரும் தேசதுரோக குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்படுவார்கள். எதிர்காலத்தில் இதுவும் சாத்தியம்தான். 1984ஆம் ஆண்டு ரஷ்யாவில் பிறந்து, இத்தாலியில் வளர்ந்தவர் துரோவ். இன்றை...

உடல் பருமன் ஆபத்து, ரத்தத்தில் கலக்கும் ஆல்கஹால் விளைவுகள் - மிஸ்டர் ரோனி

படம்
            அறிவியலால் வெல்வோம் மிஸ்டர் ரோனி உடல் பருமன் என்னென்ன ஆபத்துகளை ஏற்படுத்துகிறது? பொதுவாக, குழந்தைகள் கொழு கொழுவெ இருப்பதை ரசிக்கிறார்கள். ஆனால் வயதுக்கு மீறிய உடலின் செழுமை எப்போதுமே ஆபத்தானது. உயர் ரத்த அழுத்தம், டைசிலிபிடெபியா, இரண்டாம் நிலை நீரிழிவுநோய், இதயநோய்கள், வாதம், ஆஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ், மூச்சு விடுவது தொடர்பான நோய்கள், புற்றுநோய் ஆகியவை உடல்பருமனால் உண்டாகின்றன. ஒருவரின் ரத்தத்தில் அதிகரிக்கு்ம ஆல்கஹால் அவரின் உடல், இயல்பில் மாற்றம் ஏற்படுத்துமா? ரத்தத்தில் அதிகரிக்கும் ஆல்ஹால் என்பது ஒருவரின் உடல் எடையை அடிப்படையாக கொண்டது. மதுபானம், மதுபானம் சார்ந்த பல்வேறு பானங்களும் இந்தளவில்தான் உடலைப் பாதிக்கிறது. ஆல்கஹால் என்பது எத்தில் ஆல்கஹால் என்று புரிந்துகொள்ளவேண்டும். இதன் தூய்மையான தன்மையைப் பொறுத்து ஒருவரின் இயல்பு மாறும். இப்போது அதன் அளவு ஏற்படும் விளைவுகளைப் பார்ப்போம். 0.02-03 சதவீதம் அதிகரித்தால் ஒருவரால் சரியாக யோசிக்க முடியாது, உடலின் ஒத்திசைவு மாறும். 0.05 சதவீதம் அதிகரித்தால், மயக்கம் உருவாகும் 0.08-0.10 என்ற அளவை அமெரிக்க மா...

இயற்கை பேரிடர்களிலிருந்து இந்திய அரசு எந்த பாடங்களையும் கற்கவில்லை! - அமிதவ் கோஷ்

படம்
            அமிதவ் கோஷ், எழுத்தாளர் காலநிலை மாற்றம் பற்றிய அக்கறைக்காக எராஸ்மஸ் பரிசை நடப்பு ஆண்டில் பெற்றிருக்கிறார். வயநாடு நிலச்சரிவு விவகாரத்தில் நாம் கற்கவேண்டியது என்ன? வயநாடு மட்டுமல்ல இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இதுபோல பேரிடர் சம்பவங்கள் நடக்கலாம். சாலைகள் அமைப்பது, காடுகளை அழிப்பது, மணல் குவாரி, கல் குவாரி, முறையற்ற கட்டுமானங்கள் என இதில் நிறைய ஆதாரப் பிரச்னைகள் உள்ளன. மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு, மேக உடைப்பு பிரச்னைகள் அதிகம் நேரும். டெல்லியில் ஏற்பட்ட அதீத வெள்ளத்தால் மூன்று மாணவர்கள் இறந்துபோனதை நாம் மறந்துவிடக்கூடாது.அந்த மாணவர்கள் பயிற்சி மையத்தின் கீழ்த்தளத்தில் வெள்ளநீரில் சிக்கி இறந்துபோனார்கள். புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்றத்திலும் வெள்ளம் புகுந்துவிட்டது. இதற்கு காரணம், நாம் சூழலைப் பற்றி கவலைப்படாமல் கட்டிடங்களை வடிவமைத்து வருவதுதான். இதெல்லாம் நாட்டில் என்னென்ன எப்படிப்பட்ட வி்ஷயங்கள் நடந்து வருகின்றன என்பதைக் குறியீடாக காட்டும் சமாச்சாரங்கள்தான். கோவாவைப் போலவே பிற மாநிலங்களுக்கும் அச்சுறுத்தல் உருவாகி வருகிறதா? 2011ஆம் ஆண்...

சாதனை புரிந்த இளையோர் - கெயவோன் வுடார்ட் மாற்றுத்திறனாளிகளுக்கான திரை பிம்பம்

படம்
          சாதனை புரிந்த இளையோர் - கெயவோன் வுடார்ட் மாற்றுத்திறனாளிகளுக்கான திரை பிம்பம் இந்திய சினிமாக்களில் நன்றாக நடிக்க கூடிய, சினிமா குடும்ப செல்வாக்கு இல்லாதவர்களை ஓரம்கட்டும் போக்கு உள்ளது. இதை வெளிப்படையாக பெருமையாக இந்தி சினிமா ஆட்கள் செய்கிறார்கள். மற்றவர்கள் மறைவாக செய்கிறார்கள். சாதி, மதம், இனம் சார்ந்த வேறுபாடுகள் மாற்ற முடியாமல் இறுகிப்போன மனங்கள் அதிகாரத்தில் உள்ளன. எனவே, சூழல்கள் நாட்டுக்கே பேராபத்தை ஏற்படுத்தும்படி மாறியுள்ளளன. திரையில் மாற்றுத்திறனாளிகளை எப்படி காட்டுவது என நிறைய இயக்குநர்களுக்கு இன்னும் தெரியவில்லை. பெரும்பாலும் அவர்களை கேலிக்குரியவர்களாக மாற்றி நகைச்சுவை செய்கிறார்கள். பார்வையாளர்களுக்கு அவை நகைச்சுவையாக இருக்கிறதா என்று யோசிக்கத் தெரியவில்லை. தங்களது அறியாமையை உறுதியாக வெளிப்படுத்தி வருகிறார்கள். பொதுவாகவே மாற்றுத்திறனாளிகளை குறிப்பிட்ட பாத்திரத்தில் நடிக்க வைத்து வெற்றி பெற முடியுமா என்றால் அது இயக்குநரின் திறனைப் பொறுத்தது. அந்த வகையில், காது கேட்க முடியாத சிறார் நடிகரான கெய்வோன் உழைப்பும் போட்டு, அதற்கு காலமும் பயன் கொடுத்...

சாதனை புரிந்த இளையோர் - தீ விபத்து அலாரம் - சான்யா கில்

படம்
              சாதனை புரிந்த இளையோர் தீ விபத்து அலாரம் சான்யா கில் அமெரிக்காவில், கலிபோர்னியா மாகாணத்தில் பதிமூன்று வயதான சான்யா கில் வாழ்கிறார். இவரது வீட்டுக்கு பின்புறம் உள்ள உணவகம் ஸ்டவ்வை ஒழுங்காக அணைக்காமல் விட்டதால் தீப்பிடித்து எரிந்தது. அன்று தொடங்கி இன்றுவரை சான்யாவின் அம்மா, சமையல் அறையில் அடுப்பை அணைத்துவிட்டோமா என்ற இருமுறை சரிபார்க்கும் பதற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறார். சான்யா, எங்கோ நடந்த விபத்து என நினைக்காமல் தீ பற்றும்போதே பயனருக்கு செய்தி, எச்சரிக்கை தெரிவிக்கும் கருவி ஒன்றை அல்காரிதம் எழுதி உருவாக்கியிருக்கிறார். தெர்மல் கேமரா, சிறிய கணினி ஆகியவை சான்யாவின் கருவியில் இணைந்துள்ளன. இவரது கருவி, இரண்டாயிரம் போட்டியாளர்களைக் கடந்து 25 ஆயிரம் டாலர்கள் கொண்ட அறிவியல் பரிசை வென்றிருக்கிறது. இந்த அறிவியல் போட்டிக்கு 65 ஆயிரம் பள்ளி மாணவர்கள் போட்டியிட்டால் அதில் பத்து சதவீதம்பேர்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்போது அந்த அறிவியல் போட்டி எந்தளவு கடுமையாக இருக்கும் என புரிந்திருக்கும்தானே?  சொசைட்டி ஃபார் சயின்ஸ் என்ற தன்னார்வ அமைப்பு,...

எந்த விளையாட்டில் வீரர்களுக்கு அதிக காயங்கள் ஏற்படுகின்றன?

படம்
             அறிவியலால் வெல்வோம் மிஸ்டர் ரோனி      எந்த விளையாட்டில் அதிகளவு காயங்கள் ஏற்படுகின்றன? கால்பந்து, கூடைப்பந்து என இரு விளையாட்டுகளிலும் வீரர்கள் முழங்கால் வலி, காயங்களை அதிகளவு அடைகிறார்கள். இரண்டில் கால்பந்து முன்னிலை பெறுகிறது. அவசர உதவி தேவைப்படும் விளையாட்டு காயங்கள் என்றால் கூடைப்பந்து, சைக்கிள் ஆகிய விளையாட்டு போட்டிகள் பட்டியலில் முன்னிலையில் உள்ளன. இதற்கடுத்து மூன்றாவது இடத்தில் கால்பந்து உள்ளது. பேஸ்பால் விளையாட்டைப் பொறுத்தவரை 5 முதல் 14 வயதிலான சிறுவர்கள் காயமுற்று இறந்துபோவதே உண்டு. கதிர்வீச்சால் மனிதர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்? இயற்கையாக பல்வேறு பொருட்களில் இருந்து கதிர்வீச்சு வெளியாகிறது. அதெல்லாம் மனிதர்களின் திசுக்களை அழிக்கும் அளவுக்கு வலிமையானதில்லை. ஆனால், மனிதர்கள் உருவாக்கிய அணு உலைகளில் பயன்படுத்தும் யுரேனியம், புளுட்டோனியம் போன்றவை மனிதர்களின் மரபணுக்களை பாதித்து அதை மாற்ற முயல்கின்றன. இதனால் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்பட்டு மரணத்தை சந்திக்கிறார்கள். இந்தியா போன்ற கல்வி அறிவு குறைந்த மூடநம்பிக்கை...

ஒரு நாட்டின் கொடியை எப்படி வடிவமைக்க வேண்டும்? - மிஸ்டர் ரோனி

படம்
              அறிவியலால் வெல்வோம் மிஸ்டர் ரோனி கொடியை எப்படி வடிவமைக்க வேண்டும்? அண்மையில் தமிழ்நாட்டில் நடிகர் ஒருவர் தொடங்கிய கட்சியின் கொடி சார்ந்து இப்படியான கேள்விகள் வருகிறதென நினைக்கிறேன். அடிப்படையில் கொடி என்பது முடிந்தவரை எளிமையாக இருக்கவேண்டும். அதாவது, ஒரு குழந்தை அக்கொடியை நினைவில் வைத்து நோட்டில் எழுதிக்காட்டவேண்டும். குழந்தைக்கே கொடி நினைவு வரவில்லையெனில் அந்த கொடியால் எந்த பயனும் இல்லை. கொடியில் ஒற்றை அடையாளம் இருக்கவேண்டும். சில நிறங்கள் போதும். எழுத்துகள் இருக்க கூடாது. மேலாக, கீழாக எப்படிப் பார்த்தாலும் புரிந்துகொள்ளும்படியாக இருக்கவேண்டும். சொந்த நாட்டுக்காரர்களுக்கே தேசியக்கொடி அடையாளம் தெரியவில்லையென்றால், அதை வடிவமைத்தவர் புகழ்பெற்ற வடிவமைப்பாளரான கதிர் ஆறுமுகமாக இருந்தாலும் கைவிட வேண்டியதுதான். அதுவே நாட்டுக்கோ, கட்சிக்கோ நல்லது. வங்கதேசத்தின் கொடியைப் பாருங்கள். அதில் பின்னணியில் கரும்பச்சை நிறம் இருக்கும். நடுவில் சிவப்பு நிறம் இருக்கும். சிவப்பு நிறம் என்பது எழுச்சி பெறுகிற சூரியனாக புரிந்துகொண்டால் சிறப்பு. இந்தக்கொடியை எளித...

நிபந்தனைகளுக்கு உட்பட்டு வல்லுறவைக் கண்டிக்கிறோம்!

படம்
              நிபந்தனைகளுக்கு உட்பட்டு வல்லுறவைக் கண்டிக்கிறோம்! கொல்கத்தாவில் பயிற்சி டாக்டர் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டதை அறிந்திருப்பீர்கள். உடனே களமிறங்கிய கூலிப்படை ஊடகங்கள் அதை வைத்து கல்லா கட்டா தொடங்கிவிட்டன. மருத்துவர்கள் சாலையில் இறங்கி போராடத் தொடங்கினர். ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக வல்லுறவு படுகொலையை தற்கொலையாக மாற்ற முயன்ற மாநில அரசும் கூட நீதி வேண்டி பேரணி நடத்தியது.  அதிகாரத்தில் உள்ள முதல்வர் மம்தா பானர்ஜி, யாரிடம் நீதியை வேண்டுகிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆட்சியை கலைத்து மாநில ஆட்சியை பிடிக்க மதவாத கட்சியின் சார்பு கொண்ட ஆளுநர், அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்தார். குடியரசுத் தலைவரை சந்திக்கவும் விரைந்தார். இதெல்லாம் படிக்கும்போது ஏதோ நம்மைச் சுற்றி அவல நகைச்சுவை நாடகம் நடப்பது போல தோன்றுகிறதா?  இந்து பார்ப்பன பாசிச தத்துவத்தில் புழங்கிய புதிய இந்தியா இப்படித்தான் இயங்குகிறது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த அவரவர் தங்களால் முடிந்த பிரயத்தனத்தை செய்கிறா...

சீனாவின் நவீன சிற்பி - டெங் ஷியோபோபிங்

படம்
            சீனாவின் நவீன சிற்பி - டெங் ஷியோபோபிங் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள தலைவர்களை விட டெங்கின் வாழ்க்கை நிறையவே மாறுபட்டது. அரசியல், தனிப்பட்ட வாழ்க்கை என இரண்டிலும் இமாலய உயரத்தையும், பாதாள வீழ்ச்சியையும் கண்டவர். எதிரிகள் பற்றி கவலைப்படாமல் தனது செயல்பாட்டில் கவனம் வைத்து வென்றவர். அரசியல் தொடர்புகள்,தனிப்பட்ட நட்பு, திருமண உறவு ஆகியவற்றின் மூலமே தன் அரசியல் வாழ்க்கையை நீட்டித்துகொண்ட ஆளுமை. சிறுவயதில் வெளிநாடுகளுக்கு அதிக பயணம் செய்து வலம் வந்தவர். சிச்சுவானில் பிறந்தவரான டெங், 1920ஆம் ஆண்டு, பிரான்சுக்கு கம்யூனிஸ்ட் கல்வி கற்கச் சென்றார். அங்குதான் சீன கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டு எழுந்தது. பிறகு, ரஷ்யாவின் மாஸ்கோவிற்கு சென்று கல்வி கற்றார். 1927ஆம் ஆண்டு சீனாவுக்கு திரும்பியவர், தனது கட்சி சார்ந்த செயல்பாடுகளைத் தொடர்ந்தார். 1937ஆம் ஆண்டு ஜப்பான், சீனாவின் மீது போர் தொடுத்தது. இப்போர் காரணமாக எந்நாளைக்குமான ஜென்ம விரோதியாக ஜப்பான் நாடு மாறியது. இன்று, ஒலிம்பிக்கில் நடந்த சில போட்டிகளில் ஜப்பான் நாட்டு அணியிடம் சீன அணி தோற்றுப்போனது. உடனே...

விபத்தில் சிக்குவதில் முந்துவது ஆணா, பெண்ணா?

படம்
              அறிவியலால் வெல்வோம் மிஸ்டர் ரோனி ஆண்கள், பெண்கள் யார் அதிகம் விபத்தில் சிக்குகிறார்கள்? ஆண்களை விட சாலைகளை கடப்பதில் பெண்கள் விவரமானவர்கள். 1980ஆம் ஆண்டு தகவல்படி, ஆண்களே சாலைகளை கடப்பதில் அதிக விபத்துகளில் மாட்டுகிறார்கள் என தெரிய வந்துள்ளது. பதினெட்டு தொடங்கி நாற்பத்தைந்து வயது வரையிலான பிரிவில் பார்த்தாலும் ஆண்களே விபத்தில் அதிகம் சிக்குகிறார்கள். நெருப்பு, நீரில் மூழ்குவது, துப்பாக்கி, வெடிகுண்டு, கீழே விழுவது என அனைத்து விவகாரங்களிலும் ஆண்களே முன்னிலை வகித்து மாட்டிக்கொண்டு காயமடைகிறார்கள் அல்லது இறந்துபோகிறார்கள். புகைப்பிடிப்பதில் உள்ள ஆபத்துகள் என்னென்ன? சினிமா பார்க்கும்போது முகேஷ் விளம்பரத்தை அனைத்து ஆட்களும் பார்க்கிறார்கள்தானே? அப்புறம் என்ன தனியாக ஆபத்துகளை பட்டியலிடுவது? புகைபிடிப்பதால் புற்றுநோய் வருவது அனைவருக்கும் தெரிந்த செய்திதான். சிகரெட்டை புகைப்பதால் உடலிலுள்ள அனைத்து உறுப்புகளும் பாதிப்படைகின்றன. பெண்களும் சிகரெட்டை புகைத்து வருகிறார்கள். அவர்களுக்கும் ஆண்களுக்கு நேரும் அனைத்துவித நோய்களும் வரும். கூடுதலாக, கருப்பை ...

ஆன்மிக குருவின் பாலியல் இச்சையை தீர்ப்பது கூட பெண் துறவிகளுக்கான சேவைதான்!

படம்
         ஆன்மிக குருவின் பாலியல் இச்சையை தீர்ப்பது கூட சேவைதான்! இந்தியத் தலைநகரில் நடந்த சம்பவங்களைப் பார்க்கப்போகிறோம். அத்ஹியாத்மிக் விஷ்வ வித்யாலயா என்ற ஆசிரமம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வட இந்தியாவில் இந்த ஆசிரமங்கள் இன்றும் செயல்பாட்டில் உள்ளன. அண்மையில் கோவையில் இருந்து கூட பதினாறு வயது சிறுமி, ஒருவர் ஏவிவி எனும் இந்த ஆசிரம கிளைக்கு ஓடிப்போனார். ஆம். நகைகளுடன் சென்று துறவியானார். இப்போது அந்த இளம்பெண்ணின் அம்மா, மகளை மீட்க சட்ட உதவியை நாடியிருக்கிறார். நீதிமன்றத்தைப் பொறுத்தவரை ஆசிரமத்தை நடத்தும் வழக்குரைஞர் அமோல் கோகனேவை ஒன்றும் செய்யவில்லை. மாறாக, துறவியான மகளை தினசரி நாற்பத்து ஐந்து நிமிடங்கள் சந்தித்துக்கொள்ளலாம் என கருணை காட்டியது. நீதிமன்றத்தில் கூட மாட்டு மூத்திரத்தை குடிக்கும் ஆட்கள்தானே நியமிக்கப்படுகிறார்கள். பெரிதாக பயன் ஒன்றும் இருக்காது. மக்களே ஒன்று திரண்டு ஏதாவது செய்தால்தான் பயனுண்டு. ஏவிவி என்ற ஆசிரமம் எப்படி இருக்கும் என்பதை கவனிப்போம். நான்கு மாடி கட்டிடங்களைக் கட்டி அதில் கன்னி கழியாத பெண்களை நேர்காணல் வைத்து குரு தீக்சித் தேர...

நவீன காலத்தில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் காரணிகள்! - மிஸ்டர் ரோனி

படம்
              அறிவியலால் வெல்வோம் மிஸ்டர் ரோனி ஒருவரின் ஆரோக்கியத்தை என்னென்ன விஷயங்கள் பாதிக்கும்? ஒருவரின் வயது, பாலினம், வேலை, குடும்ப வரலாறு, குணம், உடலின் வளர்சிதை மாற்றம் ஆகிய அம்சங்கள் மாறுபாடாக அமைந்தால், குளறுபடியானால் உடல், மனம் என இரண்டுமே கெட்டுப்போகும். இதில் சில அம்சங்கள் மாறாதவை. மற்றவை மாறக்கூடியவையாக இருக்கும். எப்போதும் இன்பத்தை குடும்பத்தோடு பகிர்ந்துகொண்டு சோகமான துக்க கதைகளை பகிரும் நண்பர்களை விட்டு விலகுங்கள். சாதி, மதம், இனம் என பற்று கொண்ட ஆட்கள் இக்காலத்தில் மட்டுமல்ல எப்போதும் ஆபத்தானவர்கள். இவர்களோடு பேசுவது நேரத்திற்கு கேடு, உங்கள் மூளையிலும் பூஞ்சை படர வாய்ப்புள்ளது. குறிப்பாக மெட்டா நிறுவனத்தின் ஆப்களை பயன்படுத்தினால், அதிலிருந்து விலகுங்கள். நாய், பூனையை வளர்க்க முயலுங்கள், குடும்பத்தினரோடு கிடைக்கும் நேரங்களில் வாயாடுங்கள். உங்கள் தன்னம்பிக்கை, அறிவு என இரண்டுமே வளரும். மன அழுத்தத்தை ஏற்படுத்துவது எது? சுற்றியுள்ள சைக்கோ சாடிஸ்டுகள்தான் என இன்ஸ்டன்டாக காரணம் கூறலாம். இருந்தாலும் அறிவியலில் காரணம் தேடுவோம். அமெரிக்காவின் ...

கேரளத்தில் பிரார்த்தனை மூலம் மக்களுக்கு உதவுகிற நாடகம் நடத்தும் கிறித்தவ கோவில்!

படம்
          இந்துக்களின் வாழ்வில் அதிசயத்தை நடத்தும் கிருபசனம் கோவில்! சாமியார் விவகாரங்களில் முதலில் காஷ்மீருக்கு போனோம். இப்போது கேரளத்திற்கு செல்வோம். இன்றைக்கு மத அடிப்படைவாதிகள், தம் சித்தாந்த எதிரிகளான கம்யூனிஸ்டுகளை குறிவைத்து இயங்கி வருகிறார்கள். பள்ளிகளில் இறைவணக்கத்திற்கு அனுமதிக்க வேண்டுமென அடிப்படைவாதிகள் கோரிக்கை வைத்து மிரட்டி வருகிறார்கள். மதச்சார்பற்ற, கல்வி அறிவு கொண்ட மாநிலத்தை தரைமட்டமாக்க வலதுசாரி மதவாத சக்திகள் முயன்று வருகின்றன. இந்த நேரத்தில்தான் நாம் கிருபசனம் கிறித்தவ கோவிலைப் பார்க்கப்போகிறோம். இந்த கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கண்டிப்பாக ஆன்மிக அருள் தரும் எண்ணெய், உப்பு, ஒரு பண்டல் கிருபசனம் செய்தித்தாள் ஆகியவற்றை வாங்கியே ஆகவேண்டும். ஒரு பண்டல் நாளிதழ் கட்டின் விலை ரூ.100. இந்த நாளிதழ் பதினைந்து மொழிகளில் வெளியாகிறது. அப்படியொன்றும் செய்திகள் ஏதும் இருக்காது. எல்லாம் அதிசய நிவாரண செய்திகள்தான். கடனைத் தீர்த்தார். நோயைத் தீர்த்தார், கல்யாணம் கைகூடியது, மகன் செத்த துக்கம் நீங்கியது, வேலை கிடைத்தது என ஏராளமான அதிசயங்களைப் பற்றி கோவில் நி...