இதயமற்ற சாத்தான் - டெட் பண்டி

Ted Bundy Murder Victims

டெட் பண்டி - தேவ அசுரன்!

அசுரன் என்ற பெயர் இங்கு தீவிரத்தன்மையைக் குறிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

டெட் பண்டிக்கு விநோத பழக்கமிருந்தது. பெண்கள் கல்லூரி பக்கம் வண்டியை விட்டு ஏதோ உதவி கேட்பது போல நடித்து காருக்குள் மயக்கமுறச்செய்து தள்ளுவான். அவ்வளவுதான் அவர்களுக்குத் தெரியும். பிறகு நடக்கும் சித்திரவதை அவர்கள் உயிர்பிரியும் கடைசி நொடிவரை மறக்க முடியாது.

நல்ல இரும்பு ராடால் அடித்து வீழ்த்துவான். பிறகு வேட்கையோடு செக்ஸ் வைத்துக்கொண்டு பின்னர் கொல்லுவான். ஆளற்ற மரங்கள் நிறைந்த இடத்தில் உடலை புதைப்பான். அதேசமயம் செக்ஸ் ஆசை தோன்றினால் புதைத்த பிணங்களைத் தோண்டிக்கூட செக்ஸ் வைத்துக்கொண்டிருக்கிறான். அப்படி ஒரு வெறியாட்டம். கேட்டவுடனே போலீசுக்கே தலை கிறுகிறுத்தது.


மேலே நீங்கள் பார்க்கும் பெண்கள் எல்லாரும் டெட்டால் பொட்டலமாக கட்டி தூக்கி எறியப்பட்டவர்கள். செக்ஸ் முடிந்ததும் உருக்குலைக்கப்பட்டு கொல்லப்பட்டவர்கள். டெட் பண்டிக்கு பெண்களின் மீது ஆசையும் வெறியும் தணியவேயில்லை.

பசிஃபிக் நார்த்வெஸ்ட் பகுதியில் மட்டும் டெட் பண்டி தன் பீட்டில் கார்களை நிறுத்தி மாதம் ஐந்து பெண்களை வேட்டையாடினான். இதனால் காவல்துறைக்கு அவனைக் கைது செய்யும் நெருக்கடி உருவானது. அவன் என நான் சொன்னாலும் போலீசுக்கு அந்த அவன் எவன் என்று தெரியவில்லை.

அப்போது டெட் பண்டியின் தோழியாக பழகிய கிலோபர் என்ற பெண் மட்டும் இரண்டாவது முறையாக அந்த கொலைகாரன் டெட் பண்டியாக இருக்கலாம் என்று துப்பு கொடுத்தார். போலீஸ் மெல்ல பண்டியை கவனிக்க தொடங்கியது.


பண்டி இதைப் பற்றியெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை. கொலராடோ, உடா என போகும் இடமெல்லாம் பெண்களை நில், சிதை கொல் என்ற மந்திரத்தை ஜபித்து வந்தார். 1975 ஆம் ஆண்டு இந்த போலீஸ் திருடர் விளையாட்டு முடிவுக்கு வந்தது. அன்று சால்ட் லேக் நகரம் அருகே, பண்டியின் காரிலிருந்து அவர் பயன்படுத்தி மரணாயுதங்களைக் கைப்பற்றினர். கைவிலங்குகள், முகமூடிகள், கயிறு என வித்தியாசமான சமாச்சாரங்களைக் கைப்பற்றினர்.


Serial Killer Ted Bundy's Weapons





அவர் அப்போதுதான் விற்றிருந்த பீட்டில் காரை சோதித்து இறந்த பெண்களின் முடிகளைக் கைப்பற்றி டெட் பண்டி குற்றவாளி என உறுதி செய்தனர். அப்போது பண்டியிடமிருந்து உயிர் தப்பிய பெண் ஒருவர் சொன்ன வாக்குமூலமும் பண்டியை உறுதியாக அரஸ்ட் செய்யலாம் என்ற நம்பிக்கையை போலீசுக்கு கொடுத்தது.


ஆனால் கைது செய்தால் சைக்காலஜி படித்த குற்றவாளி பண்டியை தடுத்து நிறுத்திவிட முடியுமா? ம்ஹூம் 1977 ஆம் ஆண்டு ஆஸ்பன் சிறையிலிருந்து தப்பித்தார். தனக்குத்தானே வழக்குரைஞராக மாறிய பண்டி, அதுதொடர்பான நூல்களை படிக்கவே ஆஸ்பனிலுள்ள நூலகத்திற்கு வந்தார்.  தப்பிக்கவே முடியாத வழக்கு. உடனே 2 வது மாடியிலிருந்து குதித்து விட்டார். போலீஸ் வருவதற்குள் காடுகளில் பதுங்கி ஆஸ்பன் நகருக்கு சென்று காரைத்திருடி சிட்டாக பறந்து விட்டார்.

பிறகு போலீஸ் ஆறு நாட்களுக்கு பிறகு பண்டியை கைது செய்தது. அப்புறம் என்ன நையப்புடைத்தனர். ஆனால் பண்டியின் மன உறுதி அசைக்க முடியாது என்ற பின்னர் போலீஸ் உணர்ந்து கொண்டது. ஆம் அடுத்த முறை சிறையின் அறையிலிருந்து தப்பித்துப் போனார்.


தனது அறைக்கும் ஜெயிலர் அறைக்கும் தொடர்பிருப்பதை வரைபடம் மூலம் அறிந்தார் பண்டி. ஆக்சா பிளேடு வாங்கி அறையின் சீலிங்கை மெல்ல அறுத்து ஜெயிலர் அறைக்குச் சென்று தப்பித்து விட்டார். பின் என்ன? காரைத் திருடியவர் வேலை தேடியும் கிடைக்கவில்லை. ஏன்? இவர் முகம்தான் உலகம் முழுக்க கொலைகாரர் என்று சொல்லிவிட்டார்களே?



Ted Bundy's Sorority Victims





ஆனால் இம்முறை அந்த கோபம் அவரின் செயல்களில் எதிரொலிக்க ரத்த களறி தொடங்கியது. புளோரிடா மாநில பல்கலைக்கழக வளாகத்தில் நுழைந்த பண்டி, அங்கு மார்க்கரேட் போமன், லிசா லெவி என்ற இரு பெண்களை பதினைந்தே நிமிடங்களில் வல்லுறவு செய்தார். பின் தன் அடையாளமாக ஷூ லேஸ்கள் மூலம் கழுத்தை இறுக்கி கொன்றார். அதன் பிறகு கேத்தி, காரன் என இரு பெண்களை தாக்கினார். பண்டி இருந்த வெறியில் அடித்து தாடையைப் பெயர்த்து பற்களையும் உடைத்தெறிந்தார். உயிர்பிழைத்தாலும் இருவருக்கும் கேட்கும் திறன் கிடைக்கவில்லை.

அடுத்து, பனிரெண்டு வயது சிறுமியைக் கொன்றார். இறந்த மூன்று பேரின் உடல்களை எடுத்துக்கொண்டு ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் வேகத்தில் வர போலீஸிடம் மாட்டிக்கொண்டார்.

நீங்கள் என்னை என்கவுண்டர் செய்ய காத்திருந்த தாக  நான் நினைத்தேன் என்று பின்னர் சொல்லியிருக்கிறார் பண்டி. அதேசமயம் அவர் சிறையிலிருந்தபோதுதான் கரோல் ஆன் பூன் என்ற பெண், இவரைக் காதலித்து இவரது குழந்தையை வயிற்றில் சுமந்திருந்தார். இவர்தான் சிறையிலிருந்தபோதே பண்டியை மணம் செய்தவர்.

பின் பண்டிக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. மின்சார நாற்காலியில் மின்சாரம் பாய்ச்சி மரணம். ஜனவரி 24, 1989 ஆம் ஆண்டு பண்டி கொல்லப்பட்டார்.

இவர் எத்தனை பெண்களை கொன்றார் என்பது இன்றும் மிஸ்ட்ரிதான்.

இதயமற்ற சாத்தான் என சைக்கோ வரலாற்றில் இவருக்குப் பெயர்.


ஆக்கம்: பொன்னையன் சேகர்

நன்றி: க்ரைம் அண்ட் இன்வெஸ்டிகேஷன்