செக்ஸ்& கிரைமில் கல்லா கட்டும் நெ.1 இந்திய மாதஇதழ்!
தூள் கிளப்பும் க்ரைம் இதழ்!-
30 ஆண்டு சாதனை –
நாளிதழை பிரிக்கிறீர்கள்; உடனே
எதனை படிப்பீர்கள்? நிச்சயம் குற்றம் தொடர்பான செய்தியை முதலில் தேர்ந்தெடுப்பீர்கள்.
ஏன் என்ற கேள்விக்கு நீங்கள் கூறும் பதில்தான், க்ரைம் அண்ட் டிடெக்ட்டிவ் இதழ் ஜெயித்ததற்கான
காரணமும் கூட.
அதற்காக இதழ் முழுக்க அலங்கார
எழுத்து, அசத்தும் டிசைன் என நினைக்காதீர்கள். இவை எதுவும் கிடையாது. முழுக்க கிளுகிளு
ஸ்டில்கள், ஜிலுஜிலு எழுத்து, க்ரைம் கிசுகிசு, மாடல்களின் கிறங்கவைக்கும் காமிக்ஸ்
கதை என ரூ.40 ரூபாயில் மாதம் 2 லட்சம் பிரதிகள் விற்று அசர வைக்கிறது க்ரைம் அண்ட்
டிடெக்ட்டிவ் இதழ்.
1986 ஆம் ஆண்டு தில்லியில் செக்ஸ்
க்ரைம் கதைகளை இந்தியில் கொஞ்சலாக பேசியபடி
ரிலீசான மாத இதழான மதுர் கதாயின், தூள் விற்பனை. காதல், காமம், கொலை ஆகியவற்றை கதம்பமாக்கி
லீலாவின் லீலை, ஆணைக் காதலிக்கும் இரு பெண்கள் என பரவச தலைப்புகளோடு ஜில் மாடல்களின்
சூடேற்றும் படங்களோடு விற்பனையில் இன்றும் மாஸ் கிளப்பிவருகிறது. வெளிமாநிலங்கள் மற்றும்
தென்மாநில ரசிகர்களை திருப்திபடுத்த 1992 ஆம் ஆண்டு உருவானது மதுர் கதாயின் இந்தி இதழின்
ஆங்கில பதிப்பான க்ரைம் அண்ட் டிடெக்ட்டிவ்.
“குற்றச்சம்பவங்களை அறிய விரும்பும் வாசகர்களின்
தீராத ஆர்வம்தான் எங்கள் வெற்றிக்கு காரணம்” என லே-அவுட் டிசைனரிடம் கரெக்ஷன்களை சுட்டிக்காட்டியபடி
பேசுகிறார் இதழாசிரியரான ஷைலப் ராவத். ராவத்தின் நய் சதி பிரகாசன் பதிப்பகத்தில் உடல்நலம்,
பெண்கள் குறித்த இதழ்கள் வந்தாலும் அதற்கு மெகா வெற்றி தந்தது செக்ஸ்-க்ரைம் மாத இதழ்கள்தான்.
25 நிருபர்களின் உதவியுடன் க்ரைம் செய்திகளுடன்
ஜிலேபி பாபா முதல் கலா ஆன்ட்டி வரையிலான இளமை துள்ளும் கதைகளுக்கு வடகிழக்கு மாநில
வாசகர்கள் ஜாஸ்தி.
கிளுகிளுப்புடன் தொடங்கி கனமான அட்வைஸ்களை சொல்லி இடைவேளை போட்டு
சுபமாக இதழை முடிப்பதே எடிட்டர் ராவத்தின் வின்னிங் பாணி. 5ஜி இன்டர்நெட்டுக்கு ட்ரெய்லர்
விடும் காலத்திலும் கடைகளில், ரயில்வே நிலையங்களில் 30 ஆண்டுகளாக ஒரே மாத இதழை சுடச்சுட
வாங்கி படிக்க மக்கள் விரும்புகின்றனர் என்பது அந்த இதழாசிரியரின் பிராக்டிக்கல் சாதனைதானே!
உத்தர்காண்ட் மாநிலத்திலிருந்து
சிவில் சர்வீஸ் தேர்வு எழுத தில்லிக்கு வந்து பத்திரிகையாளரான ராவத்தின் அசத்தல் சாதனை
இது. டிவிகளில் க்ரைம் தொடர்கள் அத்தனை வந்தும் எப்படி ஜெயிக்கிறீர்கள்? என்று கேட்டபோது,
“அவர்கள் வெறும் க்ரைம் செய்திகளை மட்டுமே பேசுகிறார்கள். ஆனால் நாங்கள் அதில் மனிதநேயத்தை
இணைத்து உணர்ச்சிகரமான கதைகளாக்கி எங்களது வாசகர்களுக்கு தருகிறோம்” என்கிறார் க்ரைம்
அண்ட் டிடெக்ட்டிவ் இதழ் ஆசிரியரான ஷைலப் ராவத். க்ரைம் கிங் அல்ல; எடிட்டர்!