ஏஐ எதிர்காலம்!





Image result for ai jobs


2025 ஆம் ஆண்டு எதிர்காலம்!

இன்னும் 7 ஆண்டுகள்தான். 2025 ஆம் ஆண்டில் எந்திரங்கள் தொழில்துறைக்கு வந்துவிடும் என தீர்க்கதரிசனம் கூறியுள்ளது உலக பொருளாதார அமைப்பு(WEF).

பல்வேறு தொழிற்சாலைகள் தானியங்கி எந்திரங்களை தற்போதே இயக்கத் தொடங்கிவிட்டனர். அடுத்த நான்கு ஆண்டுகளில் உலகின் ஐம்பது சதவிகித நிறுவனங்கள் எந்திரங்களின் மூலமே பணியாற்றுவார்கள். தகவல்தொடர்பு, ஆய்வுத்துறையில் 54% பணியாளர்கள் தம் திறனை 2022 ஆம் ஆண்டுக்குள் அப்டேட் செய்துகொள்வது அவசியம் என கூறியுள்ளது உலக பொருளாதார அமைப்பு. “எதிர்கால வேலைவாய்ப்பு மாற்றங்கள் நிகழ்வதற்கு அதிக காலம் தேவைப்படாது” என்கிறார் பொருளாதார அமைப்பின் தலைவர் க்ளாஸ் ஸ்வாப். மனிதர்கள் தற்போது பணியாற்றும் நேரம் 71% என்பது 2025 ஆம் ஆண்டு எந்திரங்களின் வரவால் 48 சதவிகிதமாக குறையும். அதேசமயம் எந்திரங்களின் பணிநேரம் 52%  உயரும் என உலக பொருளாதார அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது.


பிரபலமான இடுகைகள்