வான்டட் லிஸ்ட்!


FBI பிட்ஸ்!




Image result for fbi wanted list


குற்றவாளிகளின் புகைப்படத்தை டிவியில் காட்டி, சுவற்றில் நோட்டீஸ்களாக ஓட்டி அவர்களை பிடிப்பது தமிழ்நாடு மட்டுமல்ல அமெரிக்காவிலும் உண்டு. அதிலுள்ள சில சுவாரசியங்கள் இங்கே.

தேவை என நோட்டீஸ் ஒட்டி அடிமை ஆட்களை பிடிப்பது அமெரிக்காவில் 1700 ஆம் ஆண்டிலிருந்தே புழக்கத்திற்கு வந்துவிட்டது. 1949 ஆம் ஆண்டு பத்திரிகை ஒன்றில் குற்றவாளிகளை புகைப்படமாக்கி வெளியிட்டதை எஃப்பிஐ இயக்குநர் ஜே.எட்கர் ஹூவர் பார்த்து, 1950 ஆம் ஆண்டு தாமஸ் ஹால்டன் என்ற கிரிமினலை பிடிக்க நாளிதழில்
 விளம்பரம் கொடுக்க, ஹால்டன் பிடிபட்டார்.

2018 ஆம் ஆண்டுவரையில் தேடப்படும் குற்றவாளி என விளம்பரம் கொடுத்த 519 குற்றவாளிகளில் புலனாய்வு, மக்களின் உதவி கோரி 486 பேர்களை எஃப்பிஐ கண்டுபிடித்துள்ளது. டாப் 10 குற்றவாளிகள் என்றில்லை; கூடுதல் குற்றவாளிகளையும் விளம்பரத்தில் பிரசுரித்துள்ளது.

1983 ஆம் ஆண்டு 7 மில்லியன் டாலர்களை திருடிய வழக்கில் விக்டர் கெரினா என்ற கொள்ளையரை பிடிக்க எஃப்பிஐ 32 ஆண்டுகள் முயற்சித்தும் முடியாமல் அவரை வான்டட் லிஸ்ட்டிலிருந்து 2016 ஆம் ஆண்டு நீக்கியது. 


பிரபலமான இடுகைகள்