உழைத்தும் அங்கீகாரம் கிடைக்காத பறவையியலாளர்!


மறக்கப்பட்ட பறவையியலாளர்!

Image result for the ornithology of francis willughby



இங்கிலாந்தில் 1635 ஆம் ஆண்டு நவ.22 அன்று பிறந்த ஃபிரான்சிஸ் வில்லூக்பி பறவை மற்றும் மீன் ஆராய்ச்சியாளர். இயற்கையியலாளரான ஜான் ரேவின் மாணவராக இருந்த வில்லூக்பி பறவை, பூச்சிகள், மீன்கள் குறித்த அற்புத ஆராய்ச்சியாளர்.

டிரினிட்டி கல்லூரி மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலையில் படித்த வில்லூக்பி, 36 வயதில் இறக்கும் முன்பே அவரும்,  ஜான்ரேயும் இணைந்து பறவைகள், மீன்கள், பூச்சிகள் குறித்த தகவல் களஞ்சியத்தை 3 நூல்களாக்கியிருந்தார்.  கிரேக்க மக்கள் அனைத்தையும் கண்டுபிடித்தனர் என்பதை ஆங்கிலேயர் நம்பவில்லை. அப்போது கண்டறியப்பட்ட வட அமெரிக்கா, இயற்கையில் கண்டறிய பல விஷயங்கள் உள்ளன என்பதை ஆய்வாளர்களுக்கு உணர்த்தியது.

500 க்கும் மேற்பட்ட பறவைகளைப் பற்றிய தகவல்களை வில்லூக்பியும் ரேயும் தொகுத்திருந்தனர். பறவை நூலை ரே நிறைவு செய்து The Ornithology of Francis Willughby by John Ray என்ற பெயரில் லத்தீனில் 1676 அன்றும், இரண்டு ஆண்டுகள் கழித்து ஆங்கிலத்திலும் வெளியிட்டார். 1686 ஆம் ஆண்டு மீன்களைப் பற்றியும், 1710 ஆம் ஆண்டு பூச்சிகளைப் பற்றிய நூலும் வெளியாயின. பூச்சிகள் குறித்த நூலை ரே எழுதியதாக ராயல் சொசைட்டி தொகுத்து வெளியிட, ஜான் ரே புகழ்பெற, வில்லூக்பி மக்களது நினைவிலிருந்து மறைந்துபோனார்.