செவ்வாய் தகவல்கள்!
செவ்வாய் தகவல்கள்!
சூரியனை சுற்றிவர செவ்வாய் எடுத்துக்கொள்ளும்
காலம் 687 நாட்கள். செவ்வாயில் ஒருநாள் என்பது 24.6 மணிநேரம்.
ரெட் ஆக்சைடு நிறைந்த செவ்வாயின்
வெப்பம் 70 டிகிரி பாரன்ஹீட், -225 டிகிரி பாரன்ஹீட்டும் உடையது. மேலும் ஒருமாதம் வரை
வீசும் தூசுப்புயல்களும் இங்குண்டு.
செவ்வாயில் இறங்கி ஆழமாக மூச்சை
உள்ளிழுத்தால் 95.32% அங்கு நிறைந்துள்ள கார்பன்டை ஆக்சைடு வாயு, உங்களுடைய நுரையீரலில்
நிறையும். கார்பன்டை ஆக்சைடு தவிர நைட்ரஜன் வாயு அங்கு சிறிதளவு உள்ளது.
செவ்வாய்க்கு போபோ,டெய்போ என இரு
நிலவுகள் உண்டு. செவ்வாயில் நின்றால், பூமியில் நாம் காணும் நிலவின் சைசில் மூன்றில்
ஒருபங்காக போபோவை பார்க்கலாம்.
பூமியிலுள்ள புவியீர்ப்பு விசையில்
37% மட்டுமே செவ்வாயில் உண்டு. சூரியனிலிருந்து நான்காவது கோளான செவ்வாய், புதனுக்கு
அடுத்த சிறியகோள்.
வட்டப்பாதையில் 25.19 டிகிரியில்
சாய்ந்துள்ளதால் பூமியைப்போலவே பருவநிலை மாறுதல்கள் உண்டு.