வாட் எ மேன்!- டெலிவரி புயல்!
பிட்ஸ்!
வெள்ளை மலை!
சீனாவின் குவாங்ஸி சூவாங் பகுதியிலுள்ள
நானிங் நகரில் திடீரென மெகா சைசில் வெள்ளை நுரைகள் தோன்றின. வெள்ளமா? என மக்கள் அலறியடித்து
சோதித்தபோது நுரைக்கு காரணம், பிளாஸ்டிக் பாட்டில்களை கழுவ கிராமத்து மனிதர் பயன்படுத்திய
அதீத சோப்பு என தெரியவந்துள்ளது. கழிவுநீரில் கனமழைபெய்தவுடன் சோப்பு நுரைகள் பெரிதாகி
மக்களை பீதிக்குள்ளாக்கியிருக்கிறது. சோப்பை தண்ணியா கரைச்சிருக்காரே!
ஹைஜம்ப் சாதனை!
அமெரிக்காவின் மேரிலாண்டைச் சேர்ந்த
சமந்தா வாலே, தனது காப்பகத்திலுள்ள கைவிடப்பட்ட நாய்களுக்கு ஜம்ப்பிங் பயிற்சியளித்து
கின்னஸில் இடம்பிடித்திருக்கிறார். கெரோனிமோ, ஃபெதர் என இரு நாய்களும் ஒரு நிமிடத்திற்கு
91, 128 என தாவிக்குதித்து கின்னஸ் அங்கீகாரத்தை வென்றிருக்கின்றன.”ஆதரவற்ற நாய்கள்
என்றாலும் திறமை காட்டுவதில் தம்மை நிரூபித்துவிட்டன” என்கிறார் சமந்தா.
DJ பாட்டி!
ஜப்பானைச் சேர்ந்த சுமிகோ இவாமுரா
77 வயதில் டிஜே பயிற்சி பெற்றார். 83 வயதில் டிஜே பாட்டியாகி பாரிஸ், நியூசிலாந்து
டூர் சென்று திறமை காட்டி வயதான டிஜே என கின்னஸ் சாதனையையும் தற்போது சொந்தமாக்கிவிட்டார்.
தன் உணவகத்திலேயே சமையலுடன் டிஜேவாக அட்டகாசப்படுத்துபவர் “இசையும் உணவும் வாடிக்கையாளர்களுக்கு
பிடித்தால்தான் சந்தோஷம்” என புன்னகைக்கிறார் இவாமுரா. பாட்டி சொல்லை தட்டமாட்டோம்.
புயல்வேக டெலிவரி!
ஜப்பானைச் சேர்ந்த பீட்ஸா டெலிவரி மனிதர், டைபூன் ஜெபி புயல்
வேகத்திலும் டெலிவரிக்காக தயங்காமல் பைக்கில் கிளம்பும் வீடியோதான் நெட் ஹிட். ஒசாகா தெருவில் மழை, சூறைக்காற்றிலும் பீட்ஷா டெலிவரிக்காக
பைக்கை முடுக்கும் கடமை கண்ணிய மனிதரின் காட்சி உலகெங்கிலுமுள்ள மக்களை யாருப்பா இவரு?
என கேட்கவைத்துள்ளது. ஜப்பானை தாக்கிய டைபூன் ஜெபி புயல் கடந்த 25 ஆண்டுகளில் வலுவான
புயல் என கூறப்படுகிறது. கன்னாபின்னா சின்சியர் உடம்புக்கு ஆகாது!