மறுசுழற்சியில் என்ன பிரச்னை?




Image result for plastic pollution


பிளாஸ்டிக் மறுசுழற்சி!

அதிகரிக்கும் பிளாஸ்டிக்குகளை மறுசுழற்சி செய்வது நல்ல ஏற்பாடுதான் என்றாலும் அதிலுள்ள பல்வேறு வகைகள் காரணமாக அனைத்தையும் மறுசுழற்சி செய்வது எப்படி குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஷாம்பூ பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள், கேரி பேக்குகள் அதிகம் மக்கள் பயன்படுத்துபவை. இவற்றில் PET, HDPE, PVC, LDPE, PP, PS ஆகியவை பயன்பாட்டிலுள்ள பிளாஸ்டிக் வகைகள். பிளாஸ்டிக்கிலுள்ள நிறங்களை நீக்கமுடியாது என்பதால் அவை மறுசுழற்சிக்கு ஏற்கப்படுவதில்லை.  

பிளாஸ்டிக் பொருட்களை விட கண்ணாடி பொருட்கள் வாங்கும்போது விலை அதிகமாக இருந்தாலும் உடல்நலனுக்கும் சூழலுக்கும் அதிக பாதிப்பு ஏற்படுத்தாதவை. எடைகுறைவாக எடுத்துச்செல்ல எளிதாக இருந்தாலும் பிளாஸ்டிக்கில் நேரடியாக வெப்பம் படும்போது அதிலுள்ள உணவுப்பொருளின் தன்மை மாறுவது உறுதி. 40 சதவிகித ஆற்றலைப் பயன்படுத்தி கண்ணாடியை மறுசுழற்சி செய்யலாம் என்பதோடு அதன் தன்மையும் மாறாது.

பிளாஸ்டிக் பாட்டில்களின் மறுசுழற்சி முறை சூழலைக் கெடுப்பதால், சீனா, தாய்லாந்து நாடுகள் பிளாஸ்டிக் பாட்டில்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்துள்ளன. மலேசியா தடைவிதிக்க ஆலோசித்து வருகிறது.  



பிரபலமான இடுகைகள்