அதி தூய மக்கள் பிரதிநிதிகள்!


குற்ற வழக்குகள்!


Image result for criminal indian politicians

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் சட்டமன்ற தேர்தலுக்கு ரெடியாகிவிட்டன. அடுத்தாண்டு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் எம்பி, எம்எல்ஏக்களின் குற்றவழக்கு விவகாரம் வெளிவந்துள்ளது.
உச்சநீதிமன்ற தகவல்படி, எம்எல்ஏ, எம்பிக்கள் மீதான 6 சதவிகித வழக்குகளில் தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எம்.பி, எம்எல்ஏக்களின் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கவென அமைக்கப்பட்ட தனிகோர்ட்டுகளுக்கான செலவு 78 மில்லியன் டாலர்கள். 40 சதவிகித குற்றவழக்குகள் இந்த ஸ்பெஷல் நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும்.

பீகாரில் 249, மேற்கு வங்காளத்தில் 226, கேரளாவில் 233 என குற்றவழக்குகள் தனி நீதிமன்றத்தில் தேங்கியுள்ளன.
பதினெட்டு மாநிலங்களிலும் இரண்டு யூனியன் பிரதேசங்களிலும் எம்எல்ஏ, எம்பிக்கள் மீது குற்றவழக்குகள்  பதிவாகவில்லை. 3,884 வழக்குகளில் சிறைதண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிட ஆறு ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது வெறும் 30 பேர்களுக்கு மட்டுமே. 560 நபர்கள் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். செ.11, 2018 அன்று தாக்கலான பொதுநல வழக்கு, குற்றவழக்கு அரசியல்வாதிகளுக்கு தேர்தலில் போட்டியிட ஆயுள்தடை கோரியது.  

பிரபலமான இடுகைகள்