வங்கிகள் இணைப்பு பயன் தருமா?
வங்கிகளை இணைக்கலாமா? –
நாட்டிலுள்ள 21 அரசு பொதுத்துறை
வங்கிகளின் எண்ணிக்கை பரோடா, விஜயா, தேனா ஆகிய மூன்று வங்கிகளின் இணைப்பினால் 19 ஆக
மாறவிருக்கிறது. அதற்கு Vijay Denanath Baroda Bank என பெயர் சூட்டுவார்களோ என்று சோஷியல்தளங்களில்
கிண்டல்கள் கொடி கட்டிப்பறக்கின்றன.
வாராக்கடன்களால் தள்ளாடும் வங்கிகளை
ஒன்றாக இணைப்பதால் அவை எப்படி வலிமையாகும் என்ற கேள்வியை 2014 ஆம் ஆண்டில் முன்னாள்
ரிசர்வ் வங்கி ஆளுநரான ரகுராம்ராஜன் எழுப்பியிருந்தார்.
நிதி சீர்திருத்தங்களை அமுல்படுத்தி
மக்களின் டெபாசிட்டுகளை வைத்துள்ள வங்கிகள் திவாலாவதிலிருந்து காப்பதைவிட, வாராக்கடன்சுமையால்
தடுமாறும் வங்கிகளை ஒன்றாக இணைப்பது வீழ்ச்சியை ஒத்திப்போடும் முயற்சியாக நிதிவல்லுநர்கள்
கருதுகிறார்கள்.
“வங்கிகளை ஒன்றாக இணைக்கும் முயற்சியை
கவனமாக பரிசீலிக்கவேண்டும். வாராக்கடன் சுமையால் திவாலாகும் நிலையிலுள்ள வங்கிகளை சீர்திருத்தாமல்
ஒன்றாக இணைக்ககூடாது” என்பதை 2014 ஆம் ஆண்டு தன் நிதிசார்ந்த உரையில் கறாராக கூறிவிட்டார்
முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் ரகுராம்ராஜன். நல்ல நிதிநிலைக்கு வராத வங்கிகளை ஓருங்கிணைப்பது
வராக்கடன் பிரச்னைகளை அதிகரிப்பதில் முடியும் என நிதிவட்டாரங்களில் தற்போது விவாதங்கள்
பொறி பறக்கின்றன.