கிரிப்டோகரன்சியை நம்பும் சிறிய நாடுகள்!




Image result for cryptocurrency

கிரிப்டோகரன்சி பொருளாதாரம்!
தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகள் கிரிப்டோகரன்சியில் நம்பிக்கை வைத்திருந்தாலும் அதனை ஒழுங்குமுறைப்படுத்த தொடங்கியுள்ளன. அமெரிக்கா, இந்தியா அதனை வணிகரீதியாக பயன்படுத்த தடை விதித்துள்ளன. ஆனால் பெர்முடா, லிபர்லேண்ட், மார்சல் ஐலேண்ட், லிப்ரால்டர், லைசெடன்ஸ்டனை் உள்ளிட்ட நாடுகள் தங்களுக்கான கிரிப்டோகரன்சியை வெளியிடும் முயற்சியில் இறங்கிவிட்டன.
லைச்டென்ஸ்டைன் நாட்டு மன்னர் அலோய்ஸ், கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களை வரவேற்பதோடு தன்னுடைய குடும்ப சொத்துக்களையும் டிஜிட்டல் கரன்சியாக மாற்றிவைத்துள்ளார். மால்டா, பிளாக்செயின் முறையில் முதலீடுகளை பெறுவதை சட்டப்பூர்வமாக மாற்றியுள்ளது. பினான்ஸ் எனும் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச், மால்டாவில் பிளாக்செயின் வங்கியான ஃபவுண்டர்ஸ் வங்கியை தொடங்கியுள்ளது. இங்கு நடந்த பிளாக்செயின் மாநாட்டில் 5 ஆயிரம் பேர்களுக்கும் அதிகமான தொழில்முனைவோர் பங்கேற்றுள்ளனர். கிரிப்டோகரன்சியான ஈதிரியத்தை உருவாக்கிய யானிஸ் மாலஹோவ் லைச்டென்ஸ்டைன் நாட்டில் பிளாக்செயின் நெட்வொர்க்கை எடர்னிட்டி என்ற பெயரில் உருவாக்கி தந்துள்ளார். இதில் பாதகங்களும் இல்லாமலில்லை. கடந்த ஜூனில் 40 மில்லியன் டாலர்களை தென்கொரியாவில் ஹேக்கர்கள் கொள்ளையடித்தனர். விலையின் சமமின்மை 6 ஆயிரம் –- 20 ஆயிரம் டாலர்கள் வரை மாறிவருவது கிரிப்டோகரன்சியின் பிரச்னை.